Friday, May 27, 2011

ஜிரா பிறந்தநாள்! சுந்தராம்பாள் பாடிய பெருமாள் பாட்டு!

இன்று, இனியது கேட்கின் தலைமகனுக்கு இனிய பிறந்தநாள்!

எனக்கும் இன்று பிறந்தநாள் தான்! = மீண்டும் முருகனருள்/கண்ணன் பாட்டில் எழுதவொரு இனிய பிறந்தநாள்!:)
இரண்டுக்கும் ஒன்றாய்........முருகா என்று வாழ்த்துவோமா? :)

இவனுக்கு மூன்று முகம் :)
இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)


நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)
ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :) Happy Birthday Ragava :)


கே.பி. சுந்தராம்பாள் - என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு பெயர்!
காதல் மனம் என்றால் என்ன?
Kodumudi Balambal Sundarambal! அவருடைய "அக வாழ்வை" ஒட்டி, முன்பு இட்ட பதிவு இங்கே!

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்!
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டா?
அம்மா வாயில் சதா முருகா என்று மட்டும் தானே வரும்? மறந்தும் புறம் தொழுவார்களா என்ன? :)
ஒரு வகையில் KBS அம்மாவின் காதல் கெட்டிப்பட, கண்ணனே ஒரு "பாழும்" காரணமாகப் போய்விட்டான்! முன்பு குடுத்த வரலாற்றுப் பதிவைப் படிச்சிப் பாருங்க, தெரியும்!
திருநீற்றையே நீரில் குழைத்து, நெடுக்காக நாமம் போல் இட்டுக் கொண்டு, அவர்கள் நடித்த படம்: திருமலை தென்குமரி! அதில் தான் KBS கண்ணன் பாட்டு!

பிறந்த நாள் பஞ்சாமிர்தம் சாப்பிடுவோமா? இதோ பாடுறாங்க பாருங்க..."ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக் கவலை?"
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை? ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழுமலை இருக்க)


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழுமலை இருக்க)

கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
(ஏழுமலை இருக்க)


ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!
தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!
(ஏழுமலை இருக்க)

படம்: திருமலை தென்குமரி
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்


இது தான், KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டு!


அப்பா...
என் நினைவுக்குத் தெரியாத காலத்தில் இருந்து எனக்கு நின்று விட்ட திருவேங்கடமுடையானே!
நாயேன், உன் வீட்டு வாசலை வந்தடைந்தேன்....
அடியேனை அணைத்து, ஆட்கொண்டு அருளே! என் முருகனோடு என்னை ஏழேழ் பிறவிக்கும் சேர்த்தருளே!

7 comments :

thiruthiru said...

கண்ணா! பரவஸ்துகுல திலகா! பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திட அண்ணாவின் வாழ்த்துக்கள். இந்நாளைப் பாரறியச் சொன்ன ரவிஷங்கரும் உடனிருந்து மகிழ்கின்ற மற்றை உன் நண்பர்களும் வாழிய வாழிய பல்லாண்டு! உங்கள் கைங்கர்யங்கள் மேன்மேலும் சிறந்திட்டு இளைஞரெல்லாம் என்ன இல்லை எம்மதத்தில் என்றேதான் தேளிவு பெற்று வருங்காலம் சிறந்திடவே வாழிய நீ பல்லாண்டு

சிவமுருகன் said...

//தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!//

ஜீராவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நல்ல பாட்டு & பதிவு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாங்க சுவாமி ரகுவீரதயாள் ஐயா
பிறந்தநாள் அதுவுமா உங்க ஆசி! மிகவும் மகிழ்ந்தேன்! மிக்க நன்றி! :)

Sankar said...

Hey KRS.. Many more happy returns of the day.. :)

In Love With Krishna said...

//தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!//
beautiful song...ungalukku eppadi bday krs?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@சிவா - நன்றி

@சங்கர் - எனக்கு எதுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுற?:)

@ILWK - அதான் எனக்கும் சந்தேகம்-ம்மா:)

Sankar said...

as usual.. bulb adichutten.. never mind people. !

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP