Friday, May 06, 2011

உடல் நிலையில்லை! ஆனால் உலகை வெறுக்கவேண்டாம்!


கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர்? ஜியேத்
கோன் ஜெலுமவைகி? கோநொக்கி? த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி? (கோன்)


எவ்வேளையில் எங்கு விழுந்து போகுமோ இவ்வு டல்? போனால்
எந்த ஜென்மம் வருமோ? என்னவோ? இதை யாரா லும் அறிய முடியுமோ? (எவ்)

மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ!
த்4யாந் கரோ! ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல! (கோன்)


கவனமின்றிக் கேட்காமல் காது கொடுத்து கேட்பீர்!
தியானம் செய்யுங்கள்! ஹரி முக்தி தர வருவான் சத்தியம்! (எவ்)


ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா?
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா? பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா?
ஹநநவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
மொந் ஹரிஹோர் தொ2வொ! முக்திதே3யி ஸெத்ல! (கோன்)


நாய் பூனை பெருச்சாளியாய் பிறந்த நாட்கள் போதாதா?
சுக துக்க ங்கள் போதாதா? அடைந்த
சுகம் துக்க ங்கள் போதாதா?
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
மனம் ஹரி மேல் வையுங்கள்! முக்தி தருவான் சத்தியம்! (எவ்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா?
கரெ கருமுன் பு2ந்நஹா? பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா?
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
ஸிள ஹரிக் த4யாந்கரோ! ஸெய்முக்தி தே3ய் ஸெத்ல! (கோன்)


கருப்பு சிவப்பு உருவுடன் பிறந்த நாட்கள் போதாதோ?
செய்த கர்மங்கள் போதாதோ? முன்னால்
செய்த கர்மங்கள் போதாதோ?
(கழுத்தை)நெறிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
குளிர் ஹரியை தியானியுங்கள்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)



ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா?
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா? யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா?
பான்ப2ட3ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்?
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ! ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல! (கோன்)


இளைப்புடன் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணப்புழு ஆகவில்லையா? பாருங்கள் (நாம்)
சாணப்புழு ஆகவில்லையா?
சீட்டைக் கிழிக்கும் எமனை என்ன செய்யமுடியும் உம்மால்?
இளைப்பு தீரும் தியானம் செய்வீர்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்?
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3? யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3?
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ!
நடனகோ3பாலூஸ் தே3வ்! நஜ்ஜாநகோநைகொ! (கோன்)


(என்னைவிட) மூத்தவன் அவன் இவன் என்றால் விட்டுச் செல்வானா எமன்?
உடையாமல் போகுமோ பானை? எமன் வந்தால்
உடையாமல் போகுமோ பானை?
வடப த்ரார்யர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கு கிட்டியது!
நடனகோபாலனே கடவுள்! கெட்டு விடாதீர் கேளும்! (எவ்)



இயற்றியவர்: மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
மொழி: சௌராஷ்ட்ரம்

இந்தப் பாடலை ஏற்கனவே நண்பர் சிவமுருகன் மொழிபெயர்த்து இங்கே இட்டிருக்கிறார். மொழிபெயர்ப்பில் நான் சில சொற்களை மட்டும் மாற்றியமைத்து இங்கே இடுகிறேன்.

உடலின் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இயற்கையை மனிதரை உயிர்களை இறையை அன்புடன் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போதும் பாடும் போதும். ஆனால் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் சிலருக்கு வேறு வகையான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன என்று தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

8 comments :

Lalitha Mittal said...

பொருளாழம் மிகுந்த பாட்டா இருக்கே!யாராவது பாடி இணைத்தால் நன்னா இருக்கும்!

Anonymous said...

உடலின் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இயற்கையை மனிதரை உயிர்களை இறையை அன்புடன் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போதும் பாடும் போதும்.

The hymn does not speak about loving nature, fellow humans and other beings. It says only that death is immutable (or inevitable) which none can stop. So, concentrate on God so that you will get a better after-life (mukthi). How do you say it evokes the feeling of love of fellow humans, nature etc.?

ஆனால் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் சிலருக்கு வேறு வகையான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன என்று தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

The thoughts evoked by this hymn in me:

The hymn is plain and pedestrian. Very ordinary. Maybe because it is written and sung in Sautrashtra language, the people native to the language like you may feel integrated with the hymn: emotional. When emotions rule your mind, you wont care to go deep into the meaning of the hymn at all. You seem to love your mother tongue more than the meaning of the hymn!

The hymn says only two things:

1.We can’t avoid death.
2.Concentrate on the particular God Hari through mediation with the aim to get mukthi in after life.

The idea is not only ordinary and uninteresting but potentially bad for common people. Death and Birth are both created by God Hari. Both should be welcomed. During the interval between the two acts, there should be no question of thinking or worrying about the two acts or the last, respectively, and wallowing in self pity of a brief life.

Life is brief: so what Kumaran? Is it not Hari’s intention that you should have a brief life only? Why not fulfil the divine obligations cast upon you by Hari and living happily and then, when your time comes, goes in contentment and peace?

The hymn is for those who misunderstand the purpose of religion and also, the purpose of the need for God. The need for God is to fortify our minds, not weaken them.

I would have appreciated the hymn, if it had said we must welcome death when it comes and should not swine over the brevity of life. On the contrary, we must live our lives happily bringing happiness to us as well as to all others as far as we can. Our prayer should be to God not to get more and more (here, asking for mukthi, i.e. more even after life  ) but to thank God for the brief life he has given.

Thus, the hymn will have become truthful and given much needed mental strength through practical wisdom to the singer or the listeners.

- Jo.Amalan Rayen Fernando

இராஜராஜேஸ்வரி said...

இயற்கையை மனிதரை உயிர்களை இறையை அன்புடன் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போதும் பாடும் போதும்//
நிலையாமை கொண்ட உடலில் இறைவனுக்கு நிவேதிக்க வேண்டிய அழியாத ஆத்மா இருக்கிறதே என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது,

குமரன் (Kumaran) said...

டி.எம்.எஸ். பாடியிருக்கார் அம்மா. பாடியவர்ன்னு அவர் பெயரைப் போட்டிருக்கேன் பாருங்க. அவர் பேர் மேல க்ளிக்கிணீங்கன்னா பாடலைக் கேட்கலாம்.

Lalitha Mittal said...

நன்றி,குமரன்
டி எம் எஸ் இந்தமாதிரி பாட்டு கூட பாடி இருக்காரா?
கேட்டேன்.ஆச்சர்யமாகவும் ,ஆனந்தமாகவும் இருக்கு!

குமரன் (Kumaran) said...

Thanks for sharing your fine thoughts evoked by this song in you Jo. Amalan Rayen Fernando Sir.

குமரன் (Kumaran) said...

நன்கு சொன்னீர்கள் இராஜராஜேஸ்வரி. நன்றி.

குமரன் (Kumaran) said...

சௌராஷ்ட்ரரான டி.எம்.எஸ். நிறைய நாயகி சுவாமிகளின் பாடல்களைப் பாடியிருக்கிறார் அம்மா. மதுரையின் ஜோதிங்கற பதிவுக்குப் போனீங்கன்னா நிறைய இடுகைகளைப் பார்க்கலாம்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP