அருள்விழியைத் திருப்பு
பேரருட் கடலே! பரந்தாமா!
ஓரடி எடுத்துக் கொடுத்துவிட்டு
ஓடி ஒளிவதுதான் நியாயமா? (கோவிந்தா,ஹரிகோவிந்தா..)
புள்ளுக்கும் வாகனப்பதவி தந்து
கௌரவப்படுத்திய கனஷ்யாமா!
உள்ளத்திலோர்வரி சொல்லிவிட்டு
உள்ளத்திலோர்வரி சொல்லிவிட்டு
கள்ளன்போல் காணாமற்போகலாமா?(கோவிந்தா..)
புல்லுக்குன் பூவிதழில் குழலாய்
முகவரி அருளிய முரளீதரா!
முதலடி எடுத்துக்கொடுத்ததுமே
முதலடி எடுத்துக்கொடுத்ததுமே
தலைமறைவாவது முறைதானா?(கோவிந்தா..)
கன்றுக் குட்டிகளைக் குழலூதிக்
கூப்பிட்டுக் கொஞ்சிடும் கோவிந்தா!
நின்னையே நாளெல்லாம் நினைத்தேங்கும்
எந்தனுக்குமுந்தன் தரிசனந்தா!(கோவிந்தா..)
உன்பிழையே அன்றோ என் பிறப்பு?
சொள்ளையோ,சொத்தையோ,உன் படைப்பு!
நான் கடைதேறுவதுன் பொறுப்பு!
என்பக்கம் அருள் விழியைத்திருப்பு!(கோவிந்தா..)
கன்றுக் குட்டிகளைக் குழலூதிக்
கூப்பிட்டுக் கொஞ்சிடும் கோவிந்தா!
நின்னையே நாளெல்லாம் நினைத்தேங்கும்
எந்தனுக்குமுந்தன் தரிசனந்தா!(கோவிந்தா..)
உன்பிழையே அன்றோ என் பிறப்பு?
சொள்ளையோ,சொத்தையோ,உன் படைப்பு!
நான் கடைதேறுவதுன் பொறுப்பு!
என்பக்கம் அருள் விழியைத்திருப்பு!(கோவிந்தா..)
9 comments :
கோவிந்தா,ஹரிகோவிந்தா..)
அருள்விழியைத் திருப்பு"
பாட்டு கலக்கல்!
அழகான கூட்டு முயற்சி!
பாடுவது யார்? கீ போர்ட் வாசிப்பது யார்-ன்னு எல்லாம் சொல்லணும்! அப்போ தான் பதிவுக்கு அழகு! :)
கோவிந்தா ஹரி கோவிந்தா வேங்கட ரமண கோவிந்தா!
கன்று குட்டிகளை கொஞ்சும் அவன் நம்மையும் கொஞ்ச வேண்டிக் கொள்வோம் :)
ல்லுக்குன் பூவிதழில் குழலாய்
முகவரி அருளிய முரளீதரா!
முதலடி எடுத்துக்கொடுத்ததுமே
தலைமறைவாவது முறைதானா?(கோவிந்தா..)
நைஸ்:
தலைமறைவா! நல்ல காமெடி
அதெல்லாம் இல்லை
நா ஒத்துக்க மாட்டேன்
எங்கும் எப்போதும்
:)
பாடியது யார் அம்மா? பாடியதும் மிக மிக அழகாக இருக்கிறது.
லலிதா
வழக்கம் போல உங்கள் பாடலால் கவரப்பட்டு ராகம் போட்டேன். திரு கண்ணபிரான் ,குமரன் போன்ற அன்பர்களுக்கு முதலில் என் நன்றிi யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பாடுவது,கீ போர்ட் வாசிப்பது,கலா என்னும் நான் www .srisaikala. blogspot. com என்ற பதிவில் திரு சாய் பற்றி பாடல்கள் எழுதி பாடி வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி லலிதா
இராஜராஜேஸ்வரி,
வருகைதந்து ரசித்ததற்கு நன்றி!
சங்கர்,
நாமெல்லாம் கன்றுக்குட்டிகளா மாறிடக்கூடாதா என்று ஏக்கமாய் இருப்பது உன் பின்னூட்டத்திலும் எதிரொலிக்கிறது !
ந.நா,
''எங்கும் நிறைந்தாயே!எங்கு மறைந்தாயோ?''.மீராவின் உருக்கமான குரல் கேட்கிறதா?
கே ஆர் எஸ்,
குமரன் ,
கலா[ என் மாமன் மகள்]..சகல கலா வல்லி!பண் அமைத்ததும் அவளே;பாடுவதும் அவளே;கீ போர்டும் அவளே!
பி.கு:எனக்கு ப்ளாக் அமைத்துக் கொடுத்து,நான் பழங்காலத்தில் எழுதி மூட்டைக்கட்டி வைத்திருந்த பஜனைப்பாட்டுக்களை [புதைபொருள் ஆராய்ச்சி செய்து தோண்டி எடுக்க வைத்து]போஸ்ட் பண்ணக் கற்றுக்கொடுத்து,அவளுக்குத் தெரிந்த கணினி விஷயங்களை எனக்கும் கற்றுக்கொடுத்து இந்த திவ்ய தேசத்துக்கு என்னை அறிமுகப்
படுத்தியவள்!
கலா
வணக்கம்! மிக நல்ல முயற்சி! அதுவும் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது சற்று சிரமம்! தொடர்ந்து இது போல் நல்ல பாடல்களை வழங்குங்கள்! வாழ்த்துக்கள்!
கண்ணன் பாட்டில், முன்பு இது போல் பாடும் குழு முயற்சிகள் நடைபெறும்; வல்லியம்மா, குமரன், நான்...அப்பறம் எங்கள் ஆஸ்தானப் பாடகி மீனாட்சி மேடம், இப்போ நீங்க :)
ஒரு ஆலோசனை: கீ-போர்ட் குரல், பாடும் குரலை விடப் பலமாக ஒலிக்கிறது! அதை மட்டும் கட்டுப்படுத்தினால் இன்னும் நன்றாக வரும்! பின்னணி இசை முன்னணி இசையாகி விடுகிறது! :)
arumaiyaana aalosanai kannabiraan avargale.Nanri.