Friday, March 25, 2011

ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி...



ராஜபுத்தானத்து அரசிகள் அந்த புரத்தை விட்டு வெளியே வந்ததாக சூரியனும் அறிகிலன். குடும்பத்து மூத்தவர்களுக்கு முன்பும் முகத்திரை அணிந்தே வலம் வந்தனர். நட்டு மக்களில் ஒருவரும் அவர்களின் வதனத்தை கண்டு அறிந்திலர்.

ஆனால், மீரா என்ற அந்த கவி படும் குயில், அரண்மனை எனும் ஸ்வர்ண கூண்டை விட்டு பறக்க வேண்டியதாயிற்று. அவளின் கிரிதரியைத் தேடி , அவளின் ஜீவதாரத்தைத் தேடி. அவளுடைய பதினாறாம் நூற்றாண்டு சமூகத்தினில், பெண்மை மற்றும் கலாச்சாரம் சார்ந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிவது ஒரு மகா பாவமாக கருதப்பட்டது.

இதற்க்கெல்லாம் மேலாக கிரிதாரியை அடையும் இயக்கத்தின் ஒரு முகமாக, தன்னை அவள் ராஜபுத்தானது சுட்டெரிக்கும் பாலைவனத்தின் நடுவே கண்டாள். மீராவின் மிருதுவான பாதங்களை மென்மையான மணல் துகள்கள் பொசுக்கியது. அலைந்தாள் திரிந்தாள், அந்த கருணையற்ற பாலையோ அவளுக்கு தர இயன்றதல்லாம் உடல் முழுதும் கொப்பளங்களும், புண்களும், முட்கீரல்களும்தான்.
தன் கிரிதாரியைத் தேடி அவள் பாலை நிலத்தில் திரிந்தது ஓர் வெப்பமான நிஜம். அந்த தருணத்திலும் அவளின் உடற் காயங்களை விட, மனக் காயங்களின் வலியானது மிகுந்தது. அழுதாள் ஆர்ப்பரித்தாள், அவன் வரவில்லை. தான் இத்துனை துயரம் எய்தியும் தன்னிடம் இரங்காத கிரிதரனின் இயல்பை எண்ணி வாடினாள்.
அவள் தன் உயிரையே உருக்கி அழும் அவ்வமயம், சூடான புழுதிப்புயல் வீசியது. எங்கும் தனிமை .. மாயவனை காணாள், மருகி நின்றாள். அவள் துன்பம் அனைத்தையும் ஒன்று திரட்டி கவிதை புனைந்தாள். அது கவிதை அல்ல, அவளின் தினக் குறிப்பு. அவள் பட்ட வேதனைகளை கூறும் ஒரு கண்ணாடி. அவள் காதல் ஆழத்தை நினைவுறுத்தும் ஒரு மேவாரி மொழிக் கிணறு.

ஹேரி மேய்ந தோ பிரேம் திவானி
மேரோ தரத் ந ஜானே கோயி..

எந்தன் வலி அறிவார் யாரும் இல்லை
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

காயல் கி கதி காயல் ஜானே
கி ஜின் காயல் ஹோய ..

ஜோஹர் கி கதி ஜோஹர் ஜானே
கி ஜின் ஜோஹர் ஹோய.. மேரோ

காயத்தின் வலியை காயமடைந்தவளே அறிவள்..
தீயின் வெம்மையை தீக்குளித்தவளே அறிவள்..
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

சூலி ஊபரு சேஜ் ஹமாரே ; சொவனு கிசு விது ஹோய ?
ககனு மண்டலு மேய்; சேஜ் பியா கே கிசு விது மீலன்னு ஹோய ? மேரோ

முட்களின் மீது மஞ்சம் எனது நித்திரை எவ்விதமே..?
முதல்வனின் மஞ்சமோ வான வெளியில், இணைவது எவ்வழியோ ?
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

தரத் கீ மாரி வனு வனு டோலூன்
வேய்த் மிலா நஹி கோயி
மீரா கி பிரபு பீர் மிடேகி
ஜப் வேய்த் சாவரியா ஹோய.. மேரோ ..

வலியையும் விஞ்சி வனம் துழாவி நின்றேன்
வைத்தியன் ஒருவனையும் காணேன்..
மீராவின் பிரபு இனிமையை கொணர்வான்..
அவனே வைத்தியனாய் வருவான்...

(அது வரை ) எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

23 comments :

sury siva said...

திவானி என்ற சொல்லை கிறுக்கி என்று தயவு செய்து மொழி பெயர்க்க வேண்டாம். தீவானி (பெண்பால்) மயங்கியவள், பிரேம் திவானி என்றால் காதல் மயக்கம் கொண்டவள் என்று தான் பொருள். கிறுக்கி என்றால் மனச் சிதைவு ஏற்பட்டு தாறு மாறாக உறளுபவள் என்று பொருள். மீரா கண்ணனின் பக்தியில், அவன் மேல் ஏற்பட்ட பிரேமையில் தன்னை மறந்து, தன்னையும் அவனாகவே கண்டவள். கண்ணனில் லயித்தவள். கண்ணனாகவே எல்லாவற்றையும் கண்டவள். கண்ணனே எல்லாம் எனக் கொண்டவள். அக்கண்ணன் இருக்கும் நிலையை தானும் அடைய துடித்தவள்.
அவளை தயவு செய்து கிறுக்கு என்றும் பைத்தியக்காரி என்றும் சொல்லி அவள் பிரேமைக்கு ஊறு கற்பிக்க வேண்டாம். The word kirukki is too slang to adapt to meera.
சுப்பு ரத்தினம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவளை தயவு செய்து கிறுக்கு என்றும் பைத்தியக்காரி என்றும் சொல்லி அவள் பிரேமைக்கு ஊறு கற்பிக்க வேண்டாம். The word kirukki is too slang to adapt to meera//

தயவு செய்து "கிறுக்கி" என்ற சொல்லை அகற்றி விடாதீர்கள்!
அது பிரேமைக்கு ஊறு அல்ல! ஊற்று!

"பிச்சி" என்ற சொல்லும் "கிறுக்கி" போலவே தான்!
ஆனால் இந்தப் "பிச்சி" யார் தெரியுமோ? ஆரூர் ஈசன் மேல் எல்லாமே வைத்து விட்ட "பிச்சி"! அவனுக்காகவே ஸ்தம்பித்து நின்று விட்ட "பிச்சி"! ஆசாரத்தையும் விட்டுவிட்ட "பிச்சி"!

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்!
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்!
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்!
பேர்த்தும் அவனுக்கே "பிச்சி" ஆனாள்!

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்!
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை!
தன்னை மறந்தாள்! தன் நாமம் கெட்டாள்!
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

The word "pichi" is too slang to adapt to appar! too slang to adapt to her thEvaaram!
But such slangs of the world, make her love more divine! = slangishly divine!
ஏடீ நானோர் காதல் "கிறுக்கி"! பாசப் "பிச்சி"! கிறுக்கன் முருகனை நாளும் மெச்சி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஏட்டி நானோர் காதல் கிறுக்கி
என்வலி அறியார்...என்னை உருக்கி

வலியின் வலியைப் பட்டவள் அறிவாள்!
கனலின் தனலைச் சுட்டவள் அறிவாள்!
என்வலி அறியார்...என்னை உருக்கி
என்வலி அறிவார் ஒருவரும் இலையே!

முள்ளினில் மஞ்சம் நான்-அதன் மேலே
முதல்வனின் மஞ்சம் விண்ணதன் மேலே
எப்படி இணைவோம் எப்படி நனைவோம்?
என்வலி அறிவார் ஒருவரும் இலையே!

வலியினில் மிஞ்சி வனந்தனில் துஞ்சி
வைத்தியன் தேடி ஒருவனும் காணேன்
அடியவள் மீரா வலிக்கென ஒலிக்கும்
வைத்தியக் கண்ணன் வாய்மொழிக் குழலே!

ஏட்டி நானோர் காதல் கிறுக்கி
என்வலி அறியார்...என்னை உருக்கி

jeevagv said...

ஹ ஹா!

sury siva said...

கண்ணபிரான் தீர்ப்பு சொல்லியாச்சு. அபப
நான் அம்பேல். இருப்பினும் பிச்சி என்னும் சொல்லை கிருக்கியுடன் ஒப்பிட இயலாது. பிச்சு என்னும் சொல் ஒரு திருபு. பிய்த்தல் என்னும் வார்த்தை திரிந்து போய் வந்தது. பிச்சிப்பூ கூட இருக்கிறது. இருந்தாலும் கண்ணன் சொல்லிவிட்டால் அதற்கு நான் அப்பீல் போடா மாட்டேன். அவர் பாட்டை மட்டும் என் மெட்டில் பாடப்போகிறேன். உஷார்.
சுப்பு

தி. ரா. ச.(T.R.C.) said...

மீராவின் பாடல்களை அர்த்தத்துடன் கேட்பதில்
மிக ஆனந்தம். பித்தா என்றும் பேயாண்டிதனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்
என்றும் இருக்கும்போது பிச்சியும் இருக்கலாம் தவறு இல்லை

Lalitha Mittal said...

சங்கர்,
மீராவின் கிறுக்கு ரொம்ப கண்டேஜியஸ்!அவள்பாட்டைப் படிக்கற நமக்கும் 'கண்ணன் கிறுக்கு'பிடிச்சுடுத்தே!உன் பாட்டையும்,கே.ஆர்.எஸ் பாட்டையும் படிச்சு அந்த கிறுக்கு இன்னும் ஜாஸ்தியாயிடுத்து;ஆனால் ரொம்ப சுகமான கிறுக்கு இது !

Sankar said...
This comment has been removed by the author.
Sankar said...

@சூரி சார்: நான் ஏன் கிறுக்கினு மொழிபெயர்தேன்னு எனக்கு தெரில. ஆனா, அந்த சமயத்துல எனக்கு அத தவிர வேற எந்த வார்த்தையும் தோணல சார். எனக்கு இப்ப ஜெயதேவர் கதைதான் ஞாபகத்துக்கு வரது. ராதையின் கால் கண்ணன் மேல் இருப்பதா அவர் எழுத முற்பட்டபோது, பரப்ரம்மத்து மேல ராதையின் கால் இருக்க கூடாதுன்னு நெனச்சு எழுதாம ஸ்நானம் செய்யறதுக்காக நதிக்கரைக்கு போய்டாராம். கிருஷ்ணனே ஜெயதேவர் ரூபத்ல வந்து ராதையின் கால் அவர் மேல இருக்கறதா எழுதிட்டு மறஞ்சுட்டாராம். ப்ரேமைல எதுவும் POSSIBLE... :)

Sankar said...

@TRC: சரியாய் சொன்னிங்க. எனக்கு கூட சிவன் மேல "பித்தன் என்றாலும் அவன் பேயன் என்றாலும் சித்தம் அவனை நாடுதடி" அப்டிங்கற பதம் ஞாபகத்துக்கு வந்தது.

Sankar said...

@KRS: //அடியவள் மீரா வலிக்கென ஒலிக்கும்
வைத்தியக் கண்ணன் வாய்மொழிக் குழலே!//
நீர் விளைந்த கவிஞர். :) நீங்க வேலையா இருக்கறதால மொழி பெயர்ப்புன்னு ஒரு விஷ பரிக்ஷ எனக்கு. :)
//But such slangs of the world, make her love more divine! = slangishly divine!//
I completely agree KRS. ! :)

Sankar said...

@லலிதா அம்மா : நிஜம் ரொம்ப சுகமான கிறுக்குதான்.. :) :)

Radha said...

பொருள் தந்தமைக்கு மிக்க நன்றி சங்கர்.

ஒரு பாசுரம் - குலசேகர ஆழ்வார் அருளியது.
“பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர்
பேயனே எவர்க்கும்; இது பேசி என்?
ஆயனே, அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே."

நமக்கு உலக விஷயங்கள் மீது மயக்கம்/கிறுக்கு. மீரா, குலசேகர ஆழ்வார், அப்பர் போன்றவர்களுக்கு உலகைப் படைத்தவன் மீது மயக்கம்/கிறுக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

I am sorry, sury sir! Didnt mean to over rule you! I apologize!

கண்ணபிரான் "தீர்ப்பு"-ன்னு நினைச்சி எல்லாம் சொல்லவில்லை! தீர்ப்பு சொல்லும் தகுதி சிறியேனுக்கு இல்லை! அது என் "வேண்டுகோளாகத்" தான் சங்கரிடம் வைத்தேன்!
அதிக நாள் ஒதுங்கியே இருந்த என்னை இழுத்து வந்ததே, "ஏட்டி நானோர் காதல் கிறுக்கி" என்னும் சுண்டிவிடும் வரிகள் தான்! அது தான் இந்தப் பாட்டின் ஜீவ வரி! அதான் மாற்ற வேணாம்-ன்னு சொன்னேன்! சங்கருக்கும் அதே போல் தான் எழுதும் போது இருந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

sury siva said...

http://www.youtube.com/watch?v=Q2QvigxnDD8
பகுதாரி ராகத்தில் மீரா பட்ட வலி இன்னும் அதிகமாக தெரிகிறதே !
இங்கே வந்து கேளுங்கள்.
கண்ணபிரான் அவர்கள் தன சொல் வளத்தினால் மீராவின் மன வலியை இன்னமும் அதிகப்படுத்தி விட்டாரோ !!
சுப்பு தாத்தா

In Love With Krishna said...

@Shankar: Thanks for posting!
This song made me cry!
//தரத் கீ மாரி வனு வனு டோலூன்
வேய்த் மிலா நஹி கோயி
மீரா கி பிரபு பீர் மிடேகி
ஜப் வேய்த் சாவரியா ஹோய.. மேரோ ..//
:((

நாடி நாடி நரசிங்கா! said...

காயத்தின் வலியை காயமடைந்தவளே அறிவள்..
தீயின் வெம்மையை தீக்குளித்தவளே அறிவள்..
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...
வைத்தியன் ஒருவனையும் காணேன்..
மீராவின் பிரபு இனிமையை கொணர்வான்..
அவனே வைத்தியனாய் வருவான்...

:)
o! nice

நாடி நாடி நரசிங்கா! said...

நமக்கு உலக விஷயங்கள் மீது மயக்கம்/கிறுக்கு. மீரா, குலசேகர ஆழ்வார், அப்பர் போன்றவர்களுக்கு உலகைப் படைத்தவன் மீது மயக்கம்/கிறுக்கு.:)


அப்படின்னா உலகை படைத்தவனுக்கு

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
:)

Sankar said...

@ILWK: This poem s making me cry whenever I listen to it.I got influenced by this long back. :)

Maalini said...

மீரா பாடல் நல்ல இருக்கு

Sankar said...

சூரி சார் பாடல் பிரமாதம்! ஒரு அமைதியான மனநிலை உருவாகியது. :)

Kavinaya said...

மீராவின் வலியை தாங்க முடியவில்லை.

அருமை, சங்கர்.

Jrk.oldshop@gmail.com said...



வணக்கம், தங்கள் மொழி பெயர்ப்பை பயன் படுத்தி

நான் எனது ஸௌந்த3ர்ய ஸௌராஷ்ட்ர மொழியில்

பாட்டினை மொழி பெயர்த்துள்ளேன், பாருங்கள்.. :-)


மீரா ப4ஜன் ( 1 )
------------------------
.

மீ ஒண்டெ ப்ராமா பிஸி
.
மொர் து3ன கோன் ஜன்லன்..?
.
.
கா4யமு து3ன பொந்தி3த்தென ஜனய்..
.
ஹுளாமு ஹுன்ன ப்ரவேஸ் கெரித்தென ஜனய்
.
மொர் து3ன கோன் ஜன்லன் ..?
.

.
க2ட ஹோர் ஹதிர்னிம் மீ கோனக் நிஞ்ஜு
.
கீஷ்டு ஹதிர்னி ஸே ஆகாஸ மண்ட3லமு

கோனக் அமி மிளன் ஹோய்
.
மொர் து3ன கோன் ஜன்லன் ?
.

.
து3ன ஹோர் மெள்ளி ராண் அஸ்க வெக்கிஸி..
.
ஒய்து3 ஒண்டெக தெ3க்கன் ஹொயெனி,
.
மீரா ப்ரபு4 ஸொம்பு அனயி..

ஒய்து3கன் தெனோஸ் ஹொயிகின் அவயி.
.

.
தெவள் லெந்து,

மொர் து3ன கோன் ஜனன்,

மீ ஒண்டெ ப்ராமா பிஸி.



Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP