Sunday, March 13, 2011

ஜெபி ராம்,ராம்,ஷ்யாம்,ஷ்யாம்

[மெட்டு..ஜக்மே சுந்தர்  ஹாய் தோ நாம் by Anup Jalotaa...இந்த ஹிந்திப்பாட்டு
கேட்க மிகவும் இனிமையாக இருப்பதுடன் என்போன்ற பாட்டு
ஞானமற்றவர்களும் பாடக்கூடியவகையில் சுலபமான மெட்டோடு
அமைந்திருப்பதால் இந்தப்பாட்டைத் தழுவி ஒரு தமிழ் பஜனைப்பாட்டு
எழுத முயற்சித்தேன்;பலன் கீழே!]
தினம் ராமநாமம் ஜெபிப்போம்;
கனஷ்யாமின் நாமம் ஜெபிப்போம்;
ஜெபி ராம் ராம் ராம் ராம், ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம்;
ஜெபி ராம் ராம் ராம் ராம், ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம்


             
சபரி ருசித்த பழம் உண்டவன் ராமன்,
சுதாமாவின் அவலை உண்டான் பரந்தாமன்;
இருவருமே எளியோர்க்காதாரம், 
எளிமையின் அவதாரம் [ஜெபி ராம்......ஷ்யாம் ]





     
ராவண மர்த்தனம் செய்தவன் ராமன்;
காளிங்கனர்த்தனம்  செய்தான் பரந்தாமன்;
இருவரும் தீயரை மாய்த்திட வந்த
திருவருளவதாரம்  [ஜெபி ராம் ..ஷ்யாம் ]




        
ஏகபத்னி வ்ரதன் சீதாராமன்;
ராசலீலை செய்தான் ராதாரமணன்;  
இருவருமே திவ்ய பிரேமஸாகரம்,    
பேரன்பின் அவதாரம் [ஜெபி ராம்......ஷ்யாம்


   

      
வானரர் மகிமை உணர்த்தியவன் ராமன்;  
ஆனிரை அன்புடன் மேய்த்தான் கோபாலன்;
விலங்கிலும் தெய்வத்தைக்காட்டிய இருவரும்
கருணையின் அவதாரம் [ஜெபி ராம் ...ஷ்யாம்]

8 comments :

Sankar said...

//இருவருமே திவ்ய பிரேமஸாகரம்,
பேரன்பின் அவதாரம்//
//விலங்கிலும் தெய்வத்தைக்காட்டிய இருவரும்
கருணையின் அவதாரம்//
இரண்டு இடங்களும் மனதை தொட்டன அம்மா . :) எளிமையான வார்த்தைகளில் வலிமையான கருத்துக்கள். :) நன்றி. :)

Radha said...

எளிமை. அருமை.
ராம் ராம் ராம்.

குமரன் (Kumaran) said...

எளிமையான கருத்துகளுடன் அழகான பாடல். குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்களாக எழுதி வருகிறீர்கள் அம்மா.

Lalitha Mittal said...

சங்கர்,.ராதா,.குமரன்,
நீங்கள் மூவருமே எளிமையான என் தமிழ்நடையைப் பாராட்டி இருப்பது என் நோக்கத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கு!செந்தமிழ் புரியாத சாதாரண மக்களும்,முக்கியமாக சின்னக் குழந்தைகளும் புரிந்து பாடும்படியா பஜனைப்பாட்டுக்கள் எழுதவேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கம்.இந்த விஷயத்தில் என்னை மேலும் ஊக்கமூட்டும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்!!

Kavinaya said...

ராமனையும் கிருஷ்ணனையும் பற்றிய அருமையான அழகான பாடல் அம்மா.

ராம் ராம் ராம் ராம், ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம்.

Lalitha Mittal said...

நன்றி, கவிநயா!

நாடி நாடி நரசிங்கா! said...

சபரி ருசித்த பழம் உண்டவன் ராமன்,
சுதாமாவின் அவலை உண்டான் பரந்தாமன்;
:)

சுதாமன் அவுல் அடடே! இதுவல்லவோ பரம ருசி பரம ருசி என்றல்லவா ருசித்து ருசித்து சாப்பிட்டான் எம் பெருமான்!
எத்தனை கோடி கொடுத்தாலும் மயங்காதவன் அன்பென்னும் அம்புக்கு மயங்குவான்!

எவ்வளவு எளிமையான கவிதை!
simply superb:)

Lalitha Mittal said...

அவலை ருசிதவனைப்பற்றிய பாட்டை ரசித்து பின்னூட்டமளித்ததற்குநன்றி ராஜேஷ்!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP