பாப்பா ராமாயணம்
பாப்பா ராமாயணம்
(இது தமிழெழுதப்படிக்கத்தெரியாத தமிழ்பாப்பாக்களுக்கு தமிழ் தெரிந்த
பெரியவர்கள் படித்துக்காட்டியோ பாடிக்காட்டியோ நம் ராமரின் கதையை
அவர்களின் இதயத்தில் பதிய வைப்பதற்காக எழுதப்பட்டது. சுருக்கியதன்
விளைவாக பல சம்பவங்கள் இதில் சொல்லப்படவில்லை. விட்டுப்
போனவற்றைப் பெரியவர்கள் பாப்பாக்களுக்கு கதையாய்ச் சொல்லிக்
குறை போக்குமாறு வேண்டுகிறேன்.இதில் பெரும்பகுதியைச் சுந்தர
காண்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறேன் ராமநவமியன்று அப்பகுதியைப்
படிப்பது நல்லதெனக் கேள்விப்பட்டதால் . எம். எஸ் ஸின் 'சுத்தப்ரம்ம'
பாட்டைத்தழுவி எழுதியிருப்பதால் அதே மெட்டில் பாடமுடியுமென்று
எண்ணுகிறேன்)
ஆனைமுகா!அருள்புரிவாய்!
எழுதிடத் தொடங்கிய 'பாப்பா ராமாயணம்' ஒரு
பிழையின்றி அமைந்திட அருள்வாய் ஆனைமுகா!
---------------------------------------------------------
பாலகாண்டம்
'தசரதர் ' என்றொரு மன்னவராம்;
கோசல நாட்டினை ஆண்டனராம்.
மன்னர்க்கு மூன்று மனைவியராம்;
மகப்பேறின்றி வருந்தினாராம்.
வேள்வி புரிந்து வேண்டினாராம்;
பிள்ளைகள் நால்வர் பிறந்தனராம்.
ராமன் அவர்களில் மூத்தவராம் ;
கோசலை உதிரத்தில் பூத்தவராம்.
பரதன் அவருக்கு அடுத்தவராம்;
கைகேயி பெற்றெடுத்தவராம்.
லக்ஷ்மணன்,சத்ருக்னன் கடையவராம்;
சுமித்திரை ஈன்ற இரட்டையராம்.
குழந்தையர் நால்வரும் வளர்ந்தனராம்;
மழலைப் பருவம் கடந்தனராம்.
கலைகள் யாவும் கற்றனராம்;
ஆயுதப்பயிற்சிகள் பெற்றனராம்.
வனத்திலோர் முனிவர் வசித்தனராம்;
கௌசிகர் என்பது அவர் பெயராம்.
யாகம் ஒன்றைத் துவங்கினராம்;
அரக்கர்கள் தூய்மையைக் கெடுத்தனராம்.
யாகத்தை முனிவர் நிறுத்தினராம்;
அயோத்தி நோக்கி நடந்தனராம்.
கோசல மன்னனை நாடினராம்;
ராமனின் உதவியை வேண்டினாராம்.
அரசரும் அதற்கு இணங்கினராம்;
லக்ஷ்மணனையும் உடனனுப்பினராம்.
கௌசிகமுனி விடை பெற்றனராம்;
பாலகருடன் வனம் சென்றனராம்.
பணிதனைப் பாலர்க்குப் பகர்ந்தனராம்;
துணிவுடன் யாகத்தைத் துவங்கினாராம்.
வில்லேந்தி பாலகர் திரிந்தனராம்
விழிப்புடன் காவல் புரிந்தனராம்.
அரக்கர்கள் அவ்விடம் புகுந்தனராம்;
யாகத்தைத் தடுத்திட முயன்றனராம்.
பாலகருடன் போர் செய்தனராம்;
அரக்க அரக்கியரைக் கொன்றனராம்;
அஞ்சாமல் போரிட்டு வென்றனராம்
கௌசிகர் யாகம் தொடர்ந்தனராம்;
தடங்கலேதுமின்றி முடித்தனராம்.
பாலர்க்கு ஆசிகள் பொழிந்தனரம்;
மிதிலைக்கு அழைத்துப் போயினராம்.
மிதிலை விதேகத் தலைநகராம்;
ஜனகர் விதேக மன்னவராம்.
சீதையை மகளாய் வளர்த்தவராம்;
மகளுக்கு மணஞ்செய்ய விரும்பினராம்
சுயம்வரம் ஒன்றினை நடத்தினராம்;
சிவவில்லைச் சபையில் வைத்தனராம்.
"வில்லை வளைப்பவர் வென்றவராம்"
என்றோர் அறிவிப்பு விடுத்தனராம்.
அரசகுமரர் பலர் வந்தனராம்;
சிவவில்லருகே சென்றனராம்.
சுலபமாய் வளைத்திட விரும்பினராம்.
தூக்கவுமியலாமல் திரும்பினாராம்.
கௌசிகர் சபையில் புகுந்தனராம்;
ராமர்க்கு வில்பற்றிப் பகர்ந்தனராம்.
முயன்றிட ராமரை ஊக்கினராம்;
ராமரும் வில்லினைத் தூக்கினாராம்.
எளிதினில் வளைத்துப் பிடித்தனராம்;
நொடியினில் இரண்டாய் ஒடித்தனராம்.
ஜானகி மணமாலை சூட்டினராம்;
வானோரும் மகிழ்ந்து வாழ்த்தினாராம்.
அனைவரும் அயோத்தி சேர்ந்தனராம்;
ஆனந்தமாய்ப் பன்னாள் வாழ்ந்தனராம்.
( ராம ராம ஜெய ராஜாராம் ;ராம ராம ஜெய சீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்;ராம ராம ஜெய சீதாராம்)
---------------------------------------------------------------
13 comments :
ஆஹா. அருமை அம்மா. எனக்கு ரொம்ப நாள் ஆசை பாப்பா மொழியில் ராமாயணம் எழுத. நீங்க முந்திக்கிட்டீங்க :) அவன் மனசு வச்சா ஒரு வேளை...
ராம ராம ஜெய ராஜா ராம்.
ராம ராம ஜெய சீதா ராம்.
Pl. continue:)
its easyly understand & its too good
peaceful..............
:)))
ஒரு short summary மாதிரி இருக்கு!
அற்புதமான பதிவு!
நன்றி!
pics are also great! :)
எனக்கு ராமர்-சீதை pic ரொம்ப பிடிச்சுருக்கு!
சூப்பர் ! "சுத்தப்ரம்ம" ஸ்டைலில் வரிக்கு வரி "ராம் ராம்" என்று அருமையாக இருக்கிறது. :)
ந.நாலாயிரம்,
இன்னும் பதிநோருநாள் தொடர்ந்து படிக்கவும்.இன்றைய பாலகாண்டம் படித்து ரசித்தது எனக்கு மிக மகிழ்ச்சியளிக்கிறது.வருகைக்கு நன்றி.
ilwk,
so happy that you liked it;hope you'll enjoy reading paappaa raamayanam tobe posted in eleven parts in the next 11days [till RAMANAVAMI]and give yr feedback .thankyou.
ராதா,
படித்து ரசித்ததற்கு நன்றி.ஏதாவது குறை தென்பட்டால் உடனுக்குடன் சுட்டிக்காட்டிடு.அடுத்த பதிவில் அதை தவிர்க்க முயல்வேன்
ரொம்ப நல்லா இருக்கு!
ஒவ்வொரு வரியிலும் ராம் ராம் என்று வருவதை பார்க்கு சமயம், "ரா" எனச் சொல்ல பாவமலைகள் வாய் வாயில் வழியாக வெளிவரும், "ம்" என முடித்திட வெளிவந்த பாவங்கள் மீண்டும் உள் புகா" என்ற கபிர்தாசரின் வரிகள் ஞாபகத்திற்க்கு வருவதை நிறுத்த முடியவில்லை
கவிநயா,
அவன் மனசு வெச்சா ....பாடி இணைப்பாயா?(இது என் பேராசையோ?)
ரசித்தற்கு நன்றி.
சிவமுருகன்,
குட்டீஸ்க்காக எழுதியதை பெரியவர்களும் ரசித்துப்பாராட்டி இருப்பது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தொடர்ந்து ராமனவமிவரை படிக்கவும்.
அருமை
அருமை
வார்த்தை இல்லை