Saturday, March 19, 2011

ரங்தே சுனரியா (மீரா பஜன்)

                              ஹோலி ஸ்பெஷல்

(இந்த மீராவின் பாட்டை முதலில் ஹிந்தித்தமிழிலும்,அதன் கீழே நமது தமிழிலும் அளிக்கிறேன்;இது முழுமையான மொழிபெயர்ப்பில்லை;அனுப் ஜலோட்டா அவர்கள் பாடிய மெட்டிலேயே இதைப் பாடிப்பாருங்கள்!ஆனந்தமாக இருக்கும்!!ஹோலி வாழ்த்துக்கள்!!!)

                            

ரங்தே சுனரியா ;ரங்தே சுனரியா ;
           ஷ்யாமு பியா மோரே ரங்தே சுனரியா!

     துகிலில் வர்ணம் வீசு-என்
துணியில் வர்ணம் பூசு!
            முகில்வண்ணா!உன்நிறமென்
துகிலில் நன்றாய்ப்பூசு!

        1 )ஐஸீ ரங்தே கே ரங்க நாஹீ சூட்டே
                                        தோபியா தோயே சாஹே சாரி உமரியா (ரங்தே)

        1 )ஆயுள் பூராவும் வண்ணான்
     அடித்துத் தோய்த்தாலும்,
 ஒட்டிய உன் வண்ணம்
                                   விட்டுவிடாதவண்ணம் (துகிலில்...........)

                                   2 )லால் நா ரங்காவூமைதோ ஹரி நா ரங்காவூம்;
          அப்நேஹீ ரங்க்மே ரங்தே சுனரியா;
ஷ்யாமு பியாமொரே(ரங்தே)

      2 )செவ்வண்ணம் வேண்டாம் ;
    பச்சைநிறமும்  வேண்டாம் ;
             உந்தன் முகில் வண்ணத்தையே
                                                    என் துகிலில் பூசு!என்னன்புக்கண்ணனே!(துகிலில்)

                        3 )பினா ரங்காயே மைதோ கர் நாஹீ ஜாவூங்கி;
                         பீத் ஹீ ஜாயே சாஹே சாரி உமரியா (ரங்தே )

3 ) வாழ்நாளெல்லாமென்னைக்
 காத்திருக்கவைத்தாலும்  
       வர்ணம் பூசிக் கொள்ளாமல்
                 வீடு செல்லமாட்டேன்!(துகிலில்)

                                          ஜல் ஸே பத்லா கௌன் ஹை?
                      கௌன் பூமி ஸே பாரி?
                                    கௌன் அகன் ஸே தேஜ் ஹை?
                         கௌன் காஜல் ஸே காலி?

நீரினும் நுண்ணியது எது?
        பூமியினும் பாரமானது  எது?
                தீயினும் வெம்மையானது  எது?
                   மையினும் கருமையானது எது?

                                       ஜல் ஸே பத்லா ஞான் ஹை!
                 பாப் பூமி ஸே பாரி!
                                           க்ரோத் அகன் ஸே தேஜ் ஹை!
                                               கலங்க காஜல் ஸே காலி!(ரங்தே)

        நீரினும் நுண்ணியது ஞானம்!
        பூமியினும் பாரமானது பாபம்!
                     தீயினும் வெம்மையானது க்ரோதம்!
                                             மையினும் கறுமையானது களங்கம்!(துகிலில்)



 
                                   4)மீரா கே பிரபு கிரிதர் நாகர்
                                      பிரபு சரணன் மே,ஹரி சரணன் மே
                                      ஷ்யாம் சரணன் மே,லாகீநஜரியா(ரங்தே)

 
                                        4) மீராவின் கிரி தரன் சரணத்திலே,
                                            பிரபு சரணத்திலே,அரிசரணத்திலே,
                                           ஷ்யாம் சரணத்திலே
                                            இணைந்ததென்னிதயம் (துகிலில்)
                     --------------------------------------------------

           இந்தப்பாட்டில் வர்ணம் (வண்ணம்) என்ற சொல்லை
'குணம்'/'தன்மை'என்ற பொருள்பட புரிந்துகொண்டால்
இதிலுள்ள  தத்துவப்பொருள்  விளங்கிவிடும்.மாளிகையில்
 மகா ராணியாக இருக்க வேண்டியவள் பாமரமக்களிடையே
பிரேமை/பக்தியைப் பரப்ப பாமர பாஷையிலேயே
பாட்டமைத்துப் பாடித்திரிந்தது,கண்ணன் என்னும் கருணாகரன்
 அவளது உள்ளத்தில் நிறப்பிவைத்த பிரேமையையும்
,கருணையையும் எவ்வளவு அழகாகப் பிரதிபலிக்கிறது?!
 கண்ணனின் வண்ணத்தை வாரி வாரிப் பூசிக் கொண்டு
ஹோலி கொண்டாடுவோம்,வாங்க!!

                                           -------------------------------





17 comments :

Radha said...

பாடல் பொருள் மிக அற்புதம்.
//ஆயுள் பூராவும் வண்ணான்
அடித்துத் தோய்த்தாலும்,
ஒட்டிய உன் வண்ணம் விட்டுவிடாதவண்ணம் //
கேட்டால் இப்படி தான் கேட்கணும். :-)

Lalitha Mittal said...

பொருள்புரிந்து நீ ரசித்தது என்மனசுக்குத் திருப்தியா இருக்கு.நன்றி ராதா.

In Love With Krishna said...

Rang de chunariya:
O Mere Kanhaiyya!
Rang de Chunariyaa!
O Mere Saawariyaan!

Meri mann hai andheriyon me doobi,
Har mod mein tere hi pyar ko doondthi-
Ho Kesava! Holi ke rangon le aao!
Teri kaale mein mein sama jhaaon!

Saawan ki tyohar hai ye,
Par mere mann to tandi hathkadi mein-
Ho Parthasarathy! Teri sundar aankhon se mujhe dekho,
Aur yahaan saawan ki roshni bharo!

Ek baar teri mukhras pi gayi
Ab aur sab kuch bekar hai amrit hi sahi!
Tujhe doondthe, tujhe bulathe
O Partha Sarathy! Mein toh tere hi path pe!
(Bas, mujhe apne baahon mein le lo Acyuta!)

In Love With Krishna said...

ஹோலி ஸ்பெஷல் சூப்பெர்ர்ர்ர்!
:))

Lalitha Mittal said...

உன் பாட்டு சூப்பரோ சூப்பர்!!நேரம் கிடைக்கரச்சே இதையும் தமிழில் போடலாம்னு தோணறது!இப்போ
' பாப்பா ராமாயணம்'
ழுதுவதால் இதுக்கு டைம் கொடுக்கமுடியலை;

In Love With Krishna said...

Meerabai என்னை ரொம்ப inspire பண்ணிடாங்க! :))
Exams முடிஞ்சா குஷி...நெட்-ல வந்து பார்த்த முதல் போஸ்ட் உங்களுடையது தான்! :))
But எனக்கும் exams க்கும் ஒரு பெரிய relationship - Exams என்னை துரத்துவது போல் நான் கண்ணனை துரத்தினால் இதற்குள் Exams இல்லாம அவருடன் அவர் இடத்தில இருந்திரிப்பேன்! :((
Because, i have another set of exams coming up!

Sankar said...

அழகா இருக்கு அம்மா.. இந்த கவிதைய யாரானும் பாடிருக்களா ?

Sankar said...

லலிதா அம்மா.. எனக்கு "ஜூலத் ராதா சங்க கிரிதர் " என்று மீராவோட இன்னொரு பஜன் கூட நினைவுக்கு வந்தது. அதையும் கண்டிப்பா தமிழாக்கம் செய்து கொடுங்க. :)

Lalitha Mittal said...

ILWK,
உன் கிருஷ்ண பிரேமை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

Lalitha Mittal said...

சங்கர்,
சுனரியா பாட்டை இதுவரை யாரும் தமிழில் பாடலை;நீ முயற்சி செய்யலாமே!
சூலத் ராதா பாட்டை ராமனவமிக்குப்பின்
தமிழில் எழுதி மெயில் பண்ண முயற்சிக்கிறேன்

குமரன் (Kumaran) said...

அருமையாக இருக்கிறது மீராவின் பாடல். அதனை எளிமையாக மொழிபெயர்த்துப் புரியவைத்ததற்கு நன்றி அம்மா.

Lalitha Mittal said...

பிறமொழிப் பாடலையும் பாராட்டும் பரந்தமனம் பரந்தாமனின் அன்பர்களுக்கு இருப்பதை எண்ணிப் பெருமைப்படறேன்.
ரசித்தற்கு நன்றி,குமரன்.

Kavinaya said...

ச்சோ ச்வீட் பாடல் அம்மா :) நன்றி.

Jrk.oldshop@gmail.com said...


அருமையாக மொழி பெயர்த்துள்ளீர்கள்..

இதைக்கொண்டே எனது ஸௌந்த3ர்ய ஸௌராஷ்ட்ரத்தில் மொழி பெயர்க்க உள்ளேன்

நன்றி! வணக்கம்

Jrk.oldshop@gmail.com said...

வஸ்தரும் வர்ணு அனி லுச்சி ;
.
மொர் வஸ்தரும் வர்ணு அனி லுச்சி;
.
ஷ்யாமள வர்ணா, தொர் வர்ணு,
.
அனி மொர் வஸ்தரும் லுச்சி!
.
.

இஸான் வர்ணு அனி லுச்சி
.
பொரட்3ணு ஹனி
.
கு3ஞ்ஜெத் மெள்ள கொ2ப்3பி3ம்
.
ரெங்கு3 ஜேட்3னாத்திஸ
.
வஸ்தரும் வர்ணு அனி லுச்சி;
.
மொர் வஸ்தரும் வர்ணு அனி லுச்சி;
.
.

ரொ:வ ரெங்கு3 நொக்கோ;
.
நிள ரெங்கு3 மொகொ நொக்கோ
.
தொர் ரெங்கு பு2ஜ்ஜாய் மொகோ
.
ஷ்யாமா ! தொர் ரெங்கு3 பு2ஜ்ஜாய்.
.
.
.
கித்க தி3ன்னுன் தூ ர:க்2கடெ3த்காய் கே4ர் ஜானா

வர்ணு லவ்லுனாத்தக் மீ கொ4ம்மொ ஜானா.
.
.

பனி ஸொம்மர் ஹவ்ள காய ?
.
பொ4ய் ஸொம்மர் பா4ர் கோனெ ?
.
ஹுள ஸொம்மர் தேஜஸ் கொல்லே?
.
கஜள் ஸொம்மர் கள ஸேகீ ?
.
.

பனி ஸொம்மர் ஹவ்ள ஞானு !
.
பொ4ய் ஸொம்மர் பா4ர் பாபு !
.
ஹுள ஸொம்மர் தேஜ் க்ரோது3 !
.
கஜள் ஸொம்மர் கள களங்கு3 !
.
.
.
மீரா ப்ரபு4 கி3ரித4ரன் சரணும்
.
ஹரி தொர் சரணும். ஷ்யாம் தொர் சரணும்,
.
மிள்ளிடி3யோ மொர் மொன்னு.
.
.
.
வஸ்தரும் வர்ணு அனி லுச்சி ;
.
மொர் வஸ்தரும் வர்ணு அனி லுச்சி;
.
ஷ்யாமள வர்ணா! தொர் வர்ணு,
.
அனி மொர் வஸ்தரும் லுச்சி!

உமா said...

மிக அருமையாக பொழி பெயர்த்துள்ளீர்கள். நனறி. இதை நான் எனது ஒரு புத்தகத்தில் பயன் படுத்திக்கொள்ளலாமா உங்கள் பெயருடன். உடன் பதிலிருக்கவும். 9003014271
நன்றி.

Lalitha Mittal said...

Now only I saw ur comment
Pl go ahead & publish .
If possible I request a copy of that for me too

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP