தொலைவில்லிமங்கலம் - காதல் பெண்ணைக் கைவிட்ட பெற்றோர்!
இன்றைய கண்ணன் பாட்டில், தை வெள்ளிக் கிழமை - நேயர் விருப்பமாக, InLoveWithKrishna என்னும் கள்வனின்காதலி விருப்பப் பாடல்!
தமிழ் வேதம் - திருவாய்மொழியில், நம்மாழ்வார் எழுதும் காதல் கவிதை! ஆறாம்(6ஆம்) பத்து! மனம் ஆறாத பத்து!
மகளின் காதலைக் கண்டு, பெற்றோர் அவளை அம்போ என்று இந்த ஊரில் விட்டுவிட்டு வந்து விட்டார்கள்!
இனி அவள் கதி? = அதோ கதி! அதோ, அவனே கதி!
வழுதி நாட்டு நெல்லைச் சீமையில் உள்ள திவ்யதேசம் (108 திருத்தலம்) - இரட்டைத் திருப்பதி என்னும் தலம்! திருச்செந்தூர், என் முருகனிடத்தில் இருந்து ரொம்ப கிட்டக்க! தாமிரபரணி ஆறு சிலுசிலு என்று கொஞ்சும் தலம்!
கோயில் ரெண்டு இருந்தாலும், இரண்டும் சேர்த்து ஒரே திவ்ய தேசம்! தனித்தனியாக எண்ணக் கூடாது! எண்ணினால் 109 வந்து விடும்! :)
தென் திருப்பேரை அருகிலேயே உள்ள ஊர்கள் இவை! இரட்டைக் கோயில்கள் (Twin Tirupathi)
#1.1 - துலைவில்லி மங்கலம் - தேவப் பிரான் (ஸ்ரீநிவாசன்-அலர் மேல் மங்கை)
#1.2 - இரட்டைத் திருப்பதி - அரவிந்த லோசனன் (கருந்தடங் கண்ணித் தாயார்-செந்தாமரைக் கண்ணன்-தொலைவில்லிமங்கலத் தாயார்)
துலை=தராசு; வில்லி=தராசின் வில்! துலை-வில்லி மங்கலம்!
இப்போது தொலைவில்லி மங்கலம் என்று ஆகி விட்டது! காட்டில் அமைந்துள்ளது! வீடுகள் இல்லை!
பாண்டி நாட்டு நவகிரக தலங்களில் ராகு-கேது என்ற நிழல் கிரகங்களுக்கு உரிய தலங்கள்! ஆனால் கிரக பூசைகள் இல்லை! எம்பெருமானுக்கே அனைத்தும்!
தமிழ் வேதம் - திருவாய்மொழியில், நம்மாழ்வார் எழுதும் காதல் கவிதை! ஆறாம்(6ஆம்) பத்து! மனம் ஆறாத பத்து!
அரையர் ஸ்ரீராமபாரதி கொடுக்கும் முன்னுரையைக் கேட்டு கொண்டே பதிவை வாசிக்கலாம்!
துலைவில்லி மங்கலப் பெருமானிடம் ஈடுபட்ட தலைவியின் நிலை பற்றித் தாய்மாரிடம் தோழி கூறுதல்!
துவள் இல் மாமணி மாடம் ஓங்கு, தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க, நின்று நின்று குமுறுமே. 6-5-1
மென்மை இல்லாத மாடங்கள் உள்ள தொலைவில்லி மங்கலத்தைத் தொழுது நிற்கும் இவள்!
ச்சே...இவளுக்கு நீங்களா அம்மா?
உங்களுக்கு இவள் மேல் பாசம் இல்லை! விட்டு விடுங்கள்! எப்படியோ போய் ஒழிகிறாள்!
வெண் சங்கு-சக்கரம், தாமரைக் கண் என்றெல்லாம், தன் குவளைக் கருமலர் கண்ணீர் பொழிய, இவள் குமுறி விட்டுப் போகட்டும்! உங்களுக்கு என்ன போச்சு? நீங்கள் "பெற்றவர்கள்" அல்லவா?
--------------------------------------------------------------------------------------
குமுறும் ஓசை விழவு ஒலி, தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர், உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்; மற்று இவள் தேவதேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க, நெக்கு ஒசிந்து கரையுமே. 6-5-2
விழா ஓசை நிரம்பிய தொலைவில்லிமங்கலம் புகுந்தவளை...மெல்லப் பேசும் பேதையை...ஆசையில்லாமல் அகற்றி விட்டீர்களே! தகுமா?
இவள் திமிர் பிடித்துப் போய் (மரத்துப் போய்) நிற்கிறாள்! தேவ தேவா தேவ பிரானே என்று!
உதட்டைச் சுருக்கி (நிமிந்து) குழந்தை போல் அழுகிறாளே! நெக்கு உருகி நிற்கிறாளே! ஐயோ!
--------------------------------------------------------------------------------------
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ, இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை, மணிவண்ணாவோ என்று கூவுமால்;
துரங்கம் வாய் பிளந்தான் உறை, தொலைவில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும், அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னையே! 6-5-9
மனம் இரங்கி, தினமுமே வாய் உலர்ந்து, கண் பனிக்க.....இவளோ மணிவண்ணா என்று கூவுகிறாள்! அசையாத மரம் கூட அசைந்து அய்யோ என்று கூவிடுமே இவளைப் பார்த்து!
குதிரை வாயைப் பிளந்த (கேசி என்னும் கம்சனின் ஆளைக் கொன்ற) பிரான், துலைவில்லியில் இருக்கிறான்! அவன் ஊரை இவள் அறிந்து கொண்டாள்! அங்கேயே கைகூப்பி, அம்மா-அப்பா என்று நின்று விட்டாள்!
--------------------------------------------------------------------------------------
பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல், பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ! இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்;
முன்னி வந்து அவன், நின்று இருந்து உறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும்; அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே! 6-5-10
ஆசை நப்பின்னையோ? கருணை நிலமகளோ? எம்பெருமாட்டி திருமகளோ? - யாராய் வந்து இவள் பிறந்தாளோ தெரியலையே!
என்ன மாயமோ? இவள் திருமாலே என்று கூவுகிறாளே!
முன்னால் வந்து, நின்றும்-இருந்தும் அருள் பாலிக்கும் தொலைவில்லி மங்கலத்தில்...(நின்று = தேவப்பிரான், இருந்து = அரவிந்த லோசனன்)
தலையால் வணங்கி...அந்த ஊரின் பேரையே இவளின் சிந்தனைக் காது கேட்கிறதே!
--------------------------------------------------------------------------------------
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் அவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை, தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார், அடிமை செய்வார் திருமாலுக்கே! 6-5-11
சிந்தை-சொல்-செயல் (காயேன வாசா மனசி இந்திரியேர்வா) முழுக்க தேவபிரான் ஒருவனையே....அம்மா-அப்பாவாக அடைந்த குருகூர் மாறக் குழந்தை!
ஆயிரத்துள் இப்பத்தான தொலைவில்லிமங்கலச் செந்தமிழ்ப் பாசுரங்களை...அனுபவித்தவர்கள்...திருமாலுக்கு அடியவராய் சுகப்படுவார்கள் என்பது திண்ணம்!
மாறன் என்னும் நம்மாழ்வார், தன் "தாய்-தந்தை" என்று பாசுரத்தில் காட்டியது, இந்த திவ்யதேச எம்பெருமான்-பிராட்டியையே!
இன்றும்....தாமிரபரணி விடையாற்று விழா முடிந்து திரும்பும் போது, ஆழ்வார், இந்த அம்மா-அப்பாவையே ஏங்கி ஏங்கிப் பார்த்து, நெடு நேரம் நிற்பார்!
"அம்மா-அப்பா கைவிட்ட தன்னை.....,
தொலைவில்லி அம்மை-அப்பனாக இருந்து,
கண்ணனிடம் மணமுடித்து வைப்பீர்களா?"
47 comments :
துலைவில்லி மங்கலம் - தேவப் பிரான் (ஸ்ரீநிவாசன்-அலர் மேல் மங்கை தாயார்
திருவடிகளே சரணம்
இரட்டைத் திருப்பதி - அரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன் - கருந்தடங் கண்ணி தாயார்
திருவடிகளே சரணம்
தெரியாத விஷயம் தெரிய வைத்ததற்கு நன்றி:)
துலைவில்லி மங்கலப் பெருமானிடம் ஈடுபட்ட தலைவியின் நிலை பற்றித் தாய்மாரிடம் தோழி கூறுதல்!:)
ஏனுங்கண்ணா! பாசுரம் விளக்கம் சொன்னாதானே எதோ நம்மாழ்வார் அளவுக்கு இல்லாட்நாளும் ஓரளவுகாச்சும் எங்கள மாதிரி பாமர மக்கள் அனுபவிச்சு படிக்க முடியும் . இப்படி ராவா போட்டா எப்படி புரியும் சொல்லுங்கோ!
இந்த கமெண்ட் type panni போடுவதற்குள் விளக்கம் கொடுத்து விட்டீர்கள்! ரொம்ப நன்றி:)
அரையர் ஸ்ரீராமபாரதி கொடுக்கும் முன்னுரையைக் கேளுங்கள்! கேட்டு விட்டு, தொடர்ந்து பதிவை வாசிக்கலாம்!://
ஸ்ரீ ராம பாரதி என்று சொன்னவுடன் ஒரு விஷயம்
Radha நீங்க
முன்பு நீங்க முன்பு கொடுத்த அரையர் cd முன்னுரை பற்றி ..,... ஆண்டாள் பாசுரத்திற்கு முன்பு ஒரு முன்னுரையை சொல்வார். சிறு தெய்வங்கள் என்று சொல்ல வந்து உடனே சில்லறை தெய்வங்கள் என்று சொல்லியிருந்தார் . அந்த தெய்வங்களையும் படைத்தவர் எம்பெருமானே . அப்படியிருக்க சில்லறை தெய்வங்கள் என்று சொல்வது எப்படி சரி:
@ராஜேஷ்,
ஸ்ரீ ராமபாரதி சுவாமி அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே. :-) [we always have the freedom to ignore. உங்களுக்கு சரி என்று படுவதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்களேன்! ]
:)))))))))))))))))))))
//பிரான், துலைவில்லியில் இருக்கிறான்! அவன் ஊரை இவள் அறிந்து கொண்டாள்! அங்கேயே கைகூப்பி, அம்மா-அப்பா என்று நின்று விட்டாள்!
தேவ தேவா தேவ பிரானே என்று!
உதட்டைச் சுருக்கி (நிமிந்து) குழந்தை போல் அழுகிறாளே! நெக்கு உருகி நிற்கிறாளே! ஐயோ!//
அப்பாப்ப்பா என்ன உருக்கத்தோடு இருக்கு:
நமக்கே கொஞ்சம் கண்ணு கலங்குதே:(
இப்படியெல்லாமா பெருமாளை அனுபவிப்பாங்க!
இதெல்லாம் படிச்சாதான் நமக்கு தெரியுது .
மிக்க நன்றி KRS நடு இரவிலும் பதிவு போட்டதுக்கு:)
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்:
பாத்தீங்களா பாசுரத்தோடு விளக்கம் போட்டால்தான் எங்களால அனுபவிச்சு படிக்க முடியுது.
so BIG Thanks for your:)
//#1 - துலைவில்லி மங்கலம் - தேவப் பிரான் (ஸ்ரீநிவாசன்-அலர் மேல் மங்கை)
#2 - இரட்டைத் திருப்பதி - அரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன் - கருந்தடங் கண்ணி)
துலை=தராசு; வில்லி=தராசின் வில்! துலை-வில்லி மங்கலம்!//
"Irettai thirupathi" enbadhu irendu koilgalaiyum serndhu sollum oru peyar dhaan, same for thulaivillimangalam.
No.1, no.2 ellam poda mudiyaadhu.
Iruvargalum annan-thambi enbadhaal "kudumba koil".
Navathirupathi kanakkil mattum irendaaaga eduthupaanga.
//இப்போது தொலைவில்லி மங்கலம் என்று ஆகி விட்டது! காட்டில் அமைந்துள்ளது! வீடுகள் இல்லை!//
:))
Kaadu ippo dhaan vandhudhu.
Alwar solraar kelunga:
" துவள் இல் மாமணி மாடம் ஓங்கு, "
"nokkum pakkam ellam karumbodu chenallongu vayal, thamarai"
ippadi "karumbu vayal" azhagai paadi irukaaru.
But, oru bayangaramaana vellam (flood) ellavattraiyum azhithu kaadu aaki vittadhu enbadhu first-hand information from generations back. :)
@KRS: Thanks a tonne for the post! :)
////PSP didn't have the privilege of having my darshan yesterday.//
:)))
********
@KK,
எனக்கு தரிசனம் கிடைக்கலென்னு அவ்ளோ சந்தோஷமா ! என்ன ஒரு வில்லத்தனம் !//
:))
@Radha: :))))
ippadi vaanga vazhikku!
PSP-kku bhagyam illai-nnu sonnadhu dhaan en sirippukku kaaranam!
Adhu ennavo, kesari mention panna udane neenga "haiyyo darishanam kidaikavillaye"-nnu line-la vandhuteenga! :))
//Adhu ennavo, kesari mention panna udane //
தெள்ளிய சிங்கர் என் தாயும் தந்தையும் ஆவார். :-) you know what? yesterday i opened google reader and immediately saw the words "i miss you" and PSP's picture adjacent to those words ! :-) thanks for that post KK. :-)
//PSP-kku bhagyam illai-nnu sonnadhu dhaan en sirippukku kaaranam!
//
நாலு நாள் முன்னாடி அதிரசம் வாங்கி சாப்டுட்டு கண்ணன் என்ன சொல்றான்னு பார்க்கலாம்னு பேப்பர் கவரை பார்த்தேன். பெரிய எழுத்துக்களில் "நண்பேண்டா! " என்ற வாசகம். :-) உண்மையாவே நான் பீத்திக்க ஆரம்பிச்சேன்னா நாடு தாங்காதும்மா. அதனால அடக்கி வாசிக்கறேன். :-)
//துலைவில்லி மங்கலம் - தேவப் பிரான் (ஸ்ரீநிவாசன்-அலர் மேல் மங்கை தாயார்
திருவடிகளே சரணம்
இரட்டைத் திருப்பதி - அரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன் - கருந்தடங் கண்ணி தாயார்
திருவடிகளே சரணம் //
one correction...
thollaivillimangala thaayar, karundhadangkanni thaayar sametha aravindalochanar....
devarpiran-kku utsavar thaayar mattume!
Namma PSP meesai illaamal, konjam usaram chinnadha ninaichu paarunga: devarpiran appadiye.
But, kooda thaayar kidaiyaadhu.
Aravindalochanar veetirundha thirukolam.
Adisheshan mela utkaarndhirukkum Perumal. :)
//இப்படியெல்லாமா பெருமாளை அனுபவிப்பாங்க!//
:)))
@All:
enga devarpiran kollai azhagu!
avarukku thirumanjanam pannuvaanga paarunga...adhai paarthu kallu kooda urugi pogidum!
adhu ennavo, kudam kudam-aa paal-il thirumanjanam ivarai pol endha ooru Perumaal-um rasithu paarthadillai!
Avar karumeni-yil irundhu paal azhaga keezhe valiya, en kangal orangalil neer valiyum! !!!!
Indha paasurangal-il varum "sirumi"-yaaga ennai ninaithu ivarai koopiduvadhu oru thani sugam!
chinna vayadhil koil-il enga ninnu ippadi yosithu paasuram ezhudhirupaanga-nnu ovuru idam-aaga ninnu paarthu "play-act" ellam panni irukken! :))
@KRS: Thanks for the post!
//மரங்களும் இரங்கும் வகை, மணிவண்ணாவோ என்று கூவுமால்;
அசையாத மரம் கூட அசைந்து அய்யோ என்று கூவிடுமே இவளைப் பார்த்து!
//
:-(((
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
@KRS:
//அம்மா-அப்பா கைவிட்ட தன்னை.....,
தொலைவில்லி அம்மை-அப்பனாக இருந்து,
கண்ணனிடம் மணமுடித்து வைப்பீர்களா?//
Inge, kaadhal kannan avanga thambi devarpiraan dhaano?? :))
@கள்வனின் காதலி
நீங்க சொன்ன தகவல்களைப் பதிவிலும் சேர்த்து விட்டேன்! சொந்த ஊர்த் தகவல்களுக்கு நன்றி! :) அந்தப் பக்கம் போகும் போது, Tour Guideஆன உங்களிடமே, அனைத்தும் விசாரிக்கப்படும் என்பதை...அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)
//ஏனுங்கண்ணா! பாசுரம் விளக்கம் சொன்னாதானே எதோ நம்மாழ்வார் அளவுக்கு இல்லாட்நாளும் ஓரளவுகாச்சும் எங்கள மாதிரி பாமர மக்கள் அனுபவிச்சு படிக்க முடியும்//
:)
கண்ணன் பாட்டில் முதலிடம் கண்ணனுக்கு அல்ல! அடியார்களுக்கே! :)
//இப்படி ராவா போட்டா எப்படி புரியும் சொல்லுங்கோ!//
Raw-aa நான் ஒன்னும் போடலையே? Cocktail தானே எப்பமே பழக்கம்! :))
//இந்த கமெண்ட் type panni போடுவதற்குள் விளக்கம் கொடுத்து விட்டீர்கள்! ரொம்ப நன்றி:)//
நேரமில்லை! தூக்கம்! அதான் முதலில் பாசுரம் மட்டும் போட்டேன்! அப்பறம் உங்க பழைய பின்னூட்ட விதி ஞாபகம் வந்துருச்சா? பயம் வந்துருச்சி! தூக்கம் போயிரிச்சி! உடனே வெளக்கமும் போட்டேன்! :)
//அந்த தெய்வங்களையும் படைத்தவர் எம்பெருமானே . அப்படியிருக்க சில்லறை தெய்வங்கள் என்று சொல்வது எப்படி சரி//
நூறு ருபாய் என்றால்
ஒரு ஐம்பது
இரண்டு இருபது
ஒரு பத்து
இதான் சில்லறை! இந்தச் சில்லறை எல்லாம் ஒன்னாச் சேர்த்தாத் தானே நூறு கிடைக்கும்! அந்த அர்த்தத்தில் எடுத்துக்கோங்க! :) இப்பல்லாம் சில்லறை கிடைப்பது தான் ரொம்ப கஷ்டம்! :)))
மற்றபடி, அரையர் சுவாமி சொல்வது அவரளவில்! அவர் கருத்துக்கு உடன்பட மறுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது!
//No.1, no.2 ellam poda mudiyaadhu//
Changed to 1.1 & 1.2 :)
//Navathirupathi kanakkil mattum irendaaaga eduthupaanga//
:)
KK - உங்களுக்கு ஒரு கேள்வி (அ) என் ஐயம் தீர்ர்து வையுங்கள்!
1. நவ திருப்பதி ஆலயம் அனைத்தும் 108 திவ்ய தேசங்களுக்குள் வருமா?
2. ஒவ்வொரு திருப்பதிக்கும் உண்டான கிரகங்கள் யாவை?
இப்போ KKக்கு இன்னோரு கேள்வி! இது அவிங்க பதிவு தானே? :)
//Alwar solraar kelunga:
" துவள் இல் மாமணி மாடம் ஓங்கு, "
"nokkum pakkam ellam karumbodu chenallongu vayal, thamarai"//
அது எப்படி கரும்பு-செந்நெல் வயலுக்கு நடுவில் மாட மாளிகை ஓங்கும்? Cottage House okay! ஆனா துவள் இல் மாமணி மாட வீட்டை, வயலுக்கு நடுவே கட்டுவாங்களா என்ன? :))
@ராதா
//பேப்பர் கவரை பார்த்தேன். பெரிய எழுத்துக்களில் "நண்பேண்டா! " என்ற வாசகம். :-)//
நண்பேன்டா - அதிரசம் சுட்டவருக்கா? வித்தவருக்கா? சாப்பிட்டவருக்கா? :)
//chinna vayadhil koil-il enga ninnu ippadi yosithu paasuram ezhudhirupaanga-nnu ovuru idam-aaga ninnu paarthu "play-act" ellam panni irukken! :))//
Play Act Araiyar Sevai - வீடியோ ப்ளீஸ்! :))
//@KRS: Thanks for the post!//
எத்தனை வாட்டி நன்றி சொல்வீங்க? அதுக்குப் பதிலா நண்பேன்டா பேப்பரில் ஒரு பத்து அதிரசம் அனுப்பி வைக்கலாம்-ல்ல? :)
//Inge, kaadhal kannan avanga thambi devarpiraan dhaano?? :))//
நம்மாழ்வார் மூன்று நாயகி பாவத்தில் பாடுவார்!
1. காதலி - பராங்குச நாயகி
2. காதலியின் தாயார்
3. காதலியின் தோழி
மூன்றுமே நாயகி பாவம் (பெண் பாவம்) தான்!
இங்கே தோழி பாவம்! தலைவியின் தோழி, தலைவி படும் வேதனை கண்டு பொறுக்க மாட்டாமல், பெற்றவர்களைப் பார்த்து, அவள் துன்பத்தை எப்படியாச்சும் தீர்த்து வையுங்களேன் என்று திட்டுவது! :)
* நம்மாழ்வார் = பராங்குச நாயகி/காதலி
* கண்ணன் = காதலன்
* தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான்-அலர்மேல் மங்கை = தாய் தந்தையர்
* நம்மாழ்வார் மனசாட்சி = தோழி
தம்பியெல்லாம் இல்லை!
//தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் அவர் சடகோபன்// - இதான் பாசுரத்தின் கடைசி வரிகள்!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
1//. நவ திருப்பதி ஆலயம் அனைத்தும் 108 திவ்ய தேசங்களுக்குள் வருமா? //
@KRS:
yes, adhu dhaan "nava thirupati".
ellame thamaraparani aatrukarai-yil tirunelveli-to-tiruchendur route-il. :)
1)Alwarthirunagari
2)Srivaikuntham
3)Thenthiruperai
4)Irettai Thirupathi-Aravinda Lochanar
5)irettai thirupathi-Devarpiran
6)Tirukolur
7)Natham
8)Thirupulangudi
9)Thirukulandhai or, more common Perungulam
this is in no propr order.
i'll get back with order and graha :)
//தம்பியெல்லாம் இல்லை!
//தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் அவர் சடகோபன்// - இதான் பாசுரத்தின் கடைசி வரிகள்!//
aamam-la?
romba naal therinja paatum manadhil sodhapidichu!
//நண்பேன்டா - அதிரசம் சுட்டவருக்கா? வித்தவருக்கா? சாப்பிட்டவருக்கா? :)
//
எல்லோருக்கும் தான். :-) ஸ்ர்வ பூதானாம் ஸுஹ்ருத் !!
@KRS:
//தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான்-அலர்மேல் மங்கை = தாய் தந்தையர்//
i think i tried to tell NPR also...
Devarpiran-kku kooda thaayar kidaiyathu.
Utsavar thaan Sridevi Boomadev thaayar-udan irupaaru.
Devarpiran Tirupati PP pola "Single-a nikkum singam"! :)
Actually, PSP meesai illama paartha enakku Devarpiran memories dhaan.
//1. Sooriyan- Srivaikuntam
2. Chandran - Varagunamangai (Natham)
3. Angaarakan -Tirukkolur
4. Budhan- Thiruppullangudi
5. Guru- Alwar Tirunagari
6. Sukran-Thenthiruperai
7. Shani - Perungulam
8. Raghu Irattaithirupathi
9. Kethu- Irattaithirupathi
( Thirutholaivillimangalam)
Indha koilgal ellathukkum Nammazhwar Mangalaasasanam undu :)
அது எப்படி கரும்பு-செந்நெல் வயலுக்கு நடுவில் மாட மாளிகை ஓங்கும்? Cottage House okay! ஆனா துவள் இல் மாமணி மாட வீட்டை, வயலுக்கு நடுவே கட்டுவாங்களா என்ன? :))
it's tough to answer this.
//With faultless gems of purest ray adorned, rise high the stately domes of Thloivillimangalam,//
This is how one might translate the first verse.
But, there are mentions that
1)Wherever she sees thre are paddy feilds and sugarcane feilds
2)the groves of the place are endless
3) there are people here trained in the 4 vedas
---
from all this, i made my own conclusion that it was once habited, and richly so.
---
Yet again, i have heard accounts of the flood which people are said to have witnessed first-hand, so i concluded some natural calamity alone of that magnitude could have turned the beautiful place into the forest that it is now.
Intersting:
"nirkum naanmarai vaazh tholaivilimangalam endru than,
Arkum ondru arivilaar malindhaar kan ival annaimeer.
KARKUM KALVI ELLAM VAANAPIRAN KANNAN ENAVE
orkum kuzhal nindru nindru kulayume!"
---the paasuram is not very readable, i understand, i am sorry---
But
1)Tholaivillimangalam is the place where people trained in FOUR VEDAS live
2) She has left everything and has declared that "whaterver she LEARNS, ALL HER KNOWLEDGE IS THAT DARK-COMPLEXIONED LORD!"
the pun here in this paasuram is great.
People may be trained in the Vedas.
But, surrender is the greatest knowledge!
சரி தை வெள்ளி கிழமை நல்லா முடிஞ்சுது .
அத்துட்டு என்ன KK
தை அமாவசை
அமாவாசை யாருக்கு ரொம்ப விசேசம்
திருவள்ளூர் / வைத்திய வீர ராகவ பெருமாள்
அவரு என்ன MBBS படிச்சாரா! அவரை எதுக்கு வைத்தியர்னு சொல்றாங்க:)
வீர ராகவா பெருமாளுக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்
இதை பற்றிய நீண்ட பதிவை திரு ராதா அவர்கள் விளக்குவார்கள்:))
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய்தான் அவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே:)
"marangalum irangum vagai manivannaavo enru koovumal"...
kaththi inri, raththaminri ithayaththil azhamaa pathintha azhvaarin paasurachchorkkal!
vaathaththaik kilappivittu naarathavelai seiyaththudiththaapadi [kuttipotta
poonaimaathiri] alainthindiruntha en eli[comp-mouse] vaalaich churuttindu ukkaanthuduththu!hats off to aazhvaar!!
@ராஜேஷ்,
வீர ராகவரைப் பார்த்து aabaabaabaaababbaa...[long time No C. :-)] அவரைக் குறித்து பதிவு எழுத எனக்கும் ஆசை தான்.
ஆனா கொஞ்ச நாள் எல்லோரும் அரவிந்த லோசனரிடம் அரெஸ்ட் ஆகட்டும். :-)
[அலுவலகத்திலும் வெளியிலும் நிறைய ஆணி ! :-(((]
@ravi,
i have deleted the track that diverted from perumal !!
//தொலைவில்லிமங்கலச் செந்தமிழ்ப் பாசுரங்களை...அனுபவித்தவர்கள்...திருமாலுக்கு அடியவராய் சுகப்படுவார்கள் என்பது திண்ணம்!//
உண்மை உண்மை.
பாசுரங்களை கொடுத்து கோவில் படங்களை அளித்து கண் குளிர வைத்ததற்கு நன்றி.
தேவபிரான் திருவடியே சரணம்.
@KK
//i think i tried to tell NPR also...
Devarpiran-kku kooda thaayar kidaiyathu//
கரெக்ட்டு தான்-ம்மா!
மூலவருக்கு இல்லை! உற்சவருக்கு உண்டு என்பதெல்லாம் கோயில் அமைப்பு என்ற வகையில் சரி! ஆனா "தேவப்பிரான் தாயார் இல்லாமல் இருக்கிறான்"-ன்னு தனியாக் காட்ட எனக்கு மனசோ/கையோ வரலையே!
அகலகில்லேன்-ன்னு அடிச்சிச் சொல்லுறா! வாழ்வோ தாழ்வோ...அகலகில்லேன்!
மேலும், "தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன்"-ன்னு தந்தை-தாய் ன்னு ரெண்டு பேரையும் ஒரே தேவப்பிரானில் காட்டுறாரே?
தி்ருமார்பு நாச்சியார் தேவப்பிரானுக்கு உண்டல்லவா?
அதான் தேவப்பிரான்(ஸ்ரீநிவாசன்)-அலர்மேல்மங்கை-ன்னு சொன்னேன்!
அதென்னமோ தெரியலை...எத்தனையோ முறை திருவேங்கடமுடையானிடத்தில் போய் இருக்கிறேன்! ஒரு முறை கூட மேலே "தாயார் இல்லை" என்ற உணர்வே/ஃபீலிங்கே வந்ததில்லை!
அவன் முகத்தைப் பார்த்த அடுத்த நிமிடம் கண்ணு அலைபாயும்...அந்த மார்பை நோக்கி...
அதுக்குப்பறம் எதெது கண்ணுக்குப் படுதோ, திருவடியோ, வைகுந்த ஹஸ்தமோ....அதெல்லாம் addon தான்! முதலில் அவன் முகம்...அப்பறம் எனக்குன்னே இருக்கிற ஒரு ஜீவன்...திரு திரு திரு...ஸ்ரீயப் பதியாய்.....
என் மொக்கை சக்கை எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு....வாடா...அப்பறமா நீ எப்போ வருவே?-ன்னு கூட உன்னைக் கேட்கலை, உன் ஈகோவை hurt பண்ண மாட்டேன்! உனக்கு ஆயிரம் வேலை! லவ்வு...ஆனா..இம்புட்டு கூட்டத்திலேயும், ஒவ்வொரு முகமாய், நீ தானா நீ தானா-ன்னு உன்னைத் தேடிக்கிட்டே இருப்பேன்! அந்த சந்தோஷத்தில் அகலகில்லேன், அகலகில்லேன், அகலகில்லேன் இறையும்....
நீ இருக்க-ம்மா! தேவப்பிரான் கூடத் தாயார் உண்டு!
@KK
நவதிருப்பதிகள்-நவகிரகங்கள் பட்டியலை, மற்ற அடியார்கள், இங்கேயே அறிந்து கொள்ளும் வண்ணம் கொடுத்தமைக்கு நன்றி! :)
//Indha koilgal ellathukkum Nammazhwar Mangalaasasanam undu :)//
நவகிரகங்களைப் (பாடாமல்) பாடிய நம்மாழ்வார்!!:))))))
@KK
//---the paasuram is not very readable, i understand, i am sorry---
But the pun here in this paasuram is great.
People may be trained in the Vedas.
But, surrender is the greatest knowledge//
:)
நிற்கும் நான்மறை வாணர் வாழ் தொலைவில்லி மங்கலம் கண்டபின்,
அற்கம் ஒன்றும் அறிவு உறாள் மலிந் தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,
கற்கும் கல்வி எல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே,
ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே
Split the words and put the paasuram, Do u still need the meaning?
கற்கும் கல்வி எல்லாம் கண்ணபிரான்
உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே!!!
@லலிதாம்மா
@கோமதிம்மா
நன்றி, அழகாகப் பாசுரங்களை அனுபவித்தமைக்கு!
@ராஜேஷ்
திருவள்ளூரானைப் பற்றி ராதா எழுதி நம்மை மகிழ்விக்கட்டும்!
பக்தனுக்காக, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் குடந்தைப் பெருமாள் பற்றியும் சொல்லட்டும்!
//ற்கும் நான்மறை வாணர் வாழ் தொலைவில்லி மங்கலம் கண்டபின்,
அற்கம் ஒன்றும் அறிவு உறாள் மலிந் தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,
கற்கும் கல்வி எல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே,
ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே
Split the words and put the paasuram, Do u still need the meaning? //
:))
@KRS: i actually know the paasuram, and the meaning.
i think i learned this when i was 4 years old. :)
And, it's been something i repeat most days in the morning ever since:)
But, when i was trying to type in English, it got all confused. :))
//நீ இருக்க-ம்மா! தேவப்பிரான் கூடத் தாயார் உண்டு!//
:)))
@KRS:
Because i had the same line of thought, i said "Utsavar with Thaayar". :)
Bcoz saying "thaayar is nt there" wasnt right.
Subconsciously, I WAS thinking of Thirumaarbu Lakshmi when i typed that line :)
//நவகிரகங்களைப் (பாடாமல்) பாடிய நம்மாழ்வார்!!//
Surrendered devotees-kku navagraham ellam onnum porutte kidaiyaadhu.
Navagraham kooda avar udaya servants only.
They have been assigned by Him to influence people's lives.
But, when one is surrendered unto Him, then He is personally taking care of you.
So, navagraha and all can have no effect, even if they do, Perumal is there to take care :)
//கற்கும் கல்வி எல்லாம் கண்ணபிரான்
உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே!!!//
:))
@KRS: You know, these Paasurams where among the first education i ever recieved.
At that time, forget Tamil, i couldnt even read English properly.
btw, enakku irettai thirupathi aatrangkarai romba pidikkum :))
Chinna vayadhil, oothu thondi water eduthirikken. :))
பாத்தீங்களா பாசுரத்தோடு விளக்கம் போட்டால்தான் எங்களால அனுபவிச்சு படிக்க முடியுது. so BIG Thanks for your:)