Thursday, January 06, 2011

I saw Trip-Liq-Cane! திருவல்லக்கேணி கண்டேனே!

டிரிப்ளிக்கேன்! ஆகா, என்ன அழகா வெள்ளைக்காரன் பேரு வச்சிருக்கான்!
Trip போனா Liquor & Cane Juice எடுத்துக்கிட்டு போகணும் - அப்போ தான் சரக்கு ஏறும்! அதான் Trip, Liq, Cane என்று வைத்தானோ? :)

இந்த மார்கழி வெள்ளிக் கிழமை, சும்மா காலாற, திருவல்லிக்கேணி போவலாம், வாரீகளா?
திருவல்லிக்கேணி = அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!
தொட்டணைத்தூறும் மணற் கேணி - குறள் ஞாபகம் வருதா?
108 திருத்தலங்களுள் ஒன்று! ஆழ்வார்கள் பாசுரம் பெற்ற தலம்! இராமானுசர் பிறக்க, அவர் பெற்றோர்கள் வேண்டிக் கொண்ட தல

அட, "கூவம் மிகு" சென்னைக்கு இவ்வளவு பெருமையா-ன்னு ஆச்சரியமா இருக்கு-ல்ல? :)
திருஞானசம்பந்தர், ஆழ்வார்கள், அருணகிரி, வள்ளலார்-ன்னு சென்னையைப் பாடாதவர்களே இல்லை-ங்கிறேன்!

அந்தச் சென்னையின் கடலோரத்தில், நெய்தல் நிலத்தில், முல்லை நிலத் தலைவன் மாயோனுக்கு ஒரு பழமை வாய்ந்த ஆலயம்!
அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!


இப்போ கொஞ்சம் பராவாயில்லை! குளத்தில் தண்ணீர் உள்ளது!
சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுச் சுத்தமாகவும் உள்ளது! அல்லி மலர்கள் தான் காணோம்!
ஆறுதலான விடயம்: பேருந்துகள், தொடர்வண்டி நிலையம் எல்லாவற்றிலும் ட்ரிப்ளிக்கேன் என்று எழுதாமல், திருவல்லிக்கேணி என்றே எழுதி இருக்கிறார்கள்!

அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், Arrest-ஆகும் குளம், எல்லாம் இது தான்!:)

மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால், ரத்னா கபே...
இப்படிப் பல பிரபலங்கள் உள்ள இடம் திருவல்லிக்கேணி! சென்னையின் மிகப் பெரிய "சேவல் பண்ணை", அதாங்க Mens Mansion-உம் இங்கே தான்! :)

மும்பை - Gateway of India போல், Gateway of Chennai = TiruvallikENi! :)


திருவல்லிக்கேணி ஆலயத்துக்குள் போலாமா?நான் சென்னை வரும் போதெல்லாம் - அல்லிக்கேணி & வடபழனி - Never Miss! ஒன்னு என் பொறந்த வீடு, இன்னொன்னு என் புகுந்த வீடு! :)


முதலில் முக்கியமான விஷயம் சொல்லிடறேன்! அப்பாலிக்கா பெருமாளைப் பார்ப்போம்!

1. இந்த ஆலயத்து சர்க்கரைப் பொங்கல் சூப்பர் டேஸ்ட்! ஒரு கிலோ அரிசின்னா, அரை கிலோ நெய், அரை கிலோ முந்திரி போட்டுச் செய்யும் சர்க்கரைப் பொங்கலை - மறக்காம கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க! :)

2. திருவல்லிக்கேணிப் பெண்கள், மரபு உடையில் இருந்தாங்க-ன்னா, கொள்ளை அழகு! :) திருமங்கை ஆழ்வாரே நோட் பண்ணிச் சொல்லி இருக்காரு! :) = மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!! :)

சரி, சரி, விளையாட்டு போதும்! ஒருவனாய் நின்ற ஒருவனைப் பார்க்கலாமா?அடியார்கள் எல்லாரும் பெருமாளைச் சேவித்துக் கொள்ளுங்கள்!
பிருந்தாரண்யம், துழாய்க் காடு என்னும் தலத்திலே....சேவை சாதிக்கும்....

இதோ..............மூலவராகிய எம்பெருமான் வேங்கடகிருஷ்ணன்!பெரிய மீசை வைத்த நெடியோன்! மாயோன்! ஒன்பதடி உசரம்!
கீதை சொல்லும் கோலத்திலே, எம்பெருமான் நின்று சேவை சாதிக்கின்றான்!
பெரிய திருமுடி! வஜ்ர கிரீடம்!
அகன்ற நெற்றியிலே துலங்கும் திருமண் காப்பு!
நம்மைப் பார்த்து, "வா வா...குழம்பித் தவிக்கும் தோழா, கலியுக அர்ச்சுனா" என்னுமாப் போலே குறு குறு தோழமைக் கண்கள்!

அழகிய மேல் சுருக்கு மீசை!
மார்பிலே "அவள்" திகழ,....
தேரோட்டியின் கவசம் அணிந்து,
இடுப்பிலே குதிரை ஓட்டும் உழவு கோல்!

இப்படியாக, எடுத்துக் கொண்ட பொறுப்பிலே, சுய கெளரவம் பார்க்காது,
தேரினை ஓட்டியும், குதிரைகளைக் குளிப்பாட்டியும், புல் பிடுங்கிப் போட்டும், சாணம் அள்ளியும்,
குல வழக்கப்படி மீசை வைத்தும், தன் திருவுடம்பிலே உழவுகோல் தரித்தும்,
தோழனுக்காகக் கொண்ட கோலத்தைப் பெருமையோடு காட்டி நிற்கிறான்!

இடுப்புக் கச்சை! மேனியெங்கும் தவழ்ந்தோடும் சாளக்கிராம மாலை!
கருவறையெங்கும் அவன் வாசமா அல்லது துளசீ வாசமா அல்லது இரண்டும் கலந்த வாசமா?

வலது கையில் சங்கு மட்டுமே! சக்கரம் இல்லை! போரில் ஆயுதம் ஏந்தேன்-ன்னு சொன்னதால்!
இடது கை, மொத்த கீதையின் சாராம்சத்தையும் உணர்த்தி நிற்கிறது! = மாம்-ஏகம்-சரணம் வ்ரஜ! என்னையே சரணமெனப் பற்றுக!
= பற்றுக பற்றற்றான் பற்றினை!

அப்பற்றை பற்றுக என்று வாழ்க்கைக்குப் பற்றுக்கோடாய், தாமரைத் திருவடிகள்! திருவடி எங்கும் துழாய் மலர்கள்!

அப்படியே குடும்ப சகிதத்தையும் சேவித்துக் கொள்ளுங்கள்! இதோ...
கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது.....பாரத பூமியில், இந்த ஒரே தலத்தில் தான்!

வலப்புறம் ருக்மிணி பிராட்டி! இடப்புறம் கண்ணனின் தம்பி, சாத்யகி!
இன்னும் வலப்புறம் அண்ணன் பலராமன்! இன்னும் இடப்புறம் மைந்தன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன்!!

உற்சவரான பார்த்த சாரதிப் பெருமாள்! இதோ...

உற்சவருக்குத் தான் பார்த்தசாரதி என்கின்ற திருநாமம்!
பக்தன் பார்த்தனைக் காப்பாற்ற, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, முகமே புண்ணாகிப் போன கண்ணனின் கரு முகத்தை (உற்சவர்) இங்கே கண்கூடாகப் பாருங்கள்!

தோழனின் தற்கொலையைத் தடுக்க, தன் சத்தியம் மீறினாலும் பரவாயில்லை என்று...,
நட்புக்காகச் சக்கரம் ஏந்தியும், பீஷ்ம வடுக்களோடும் ஒருங்கே காட்சி அளிக்கின்றான்!
* மூலவர் = போருக்கு முந்தைய திருக்கோலம்!
* உற்சவர் = போரின் இடையே ஆன திருக்கோலம்!

பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை மன்னனுமாய்,ஆளவந்தார்,
இவனை வேண்டிக் கொண்டு பிறந்த இராமானுசர்,
தேசிகன், மணவாள மாமுனிகள் என்று ஆசார்ய மங்களாசாசனங்களையும் ஒருங்கே பெற்று...

இதோ, கர்ப்பூர தீப மங்கள ஜோதியில் ஜொலிக்கும் பிரான்...!

இனிக்க இனிக்க உங்களைப் பார்த்துச் சிரிக்கும் எம்பெருமானை...
Paartha Saarathy PerumaaL - PSP என்று செல்லம் கொஞ்சிடும்...


எந்தை, எனக்கு உயிர் குடுத்த வித்தினை - அப்பா.....
என்று கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்!
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!

கோதில்-இன் கனியை, நந்தனார் களிற்றை,
குவலயத்தோர் தொழுது ஏத்தும்,
ஆதியை, அமுதை, என்னை ஆளுடை....அப்பா......
திருவல்லிக் கேணிக் கண் டேனே!
திருவல்லிக் கேணிக் கண் டேனே!!


கோவிந்தா! கோவிந்தா!
கோவிந்தா! கோவிந்தா!!

இதோ, மணக்க மணக்க, துளசீ தீர்த்தம் பருகிக் கொள்ளுங்கள்! = நாரணம் என்னும் நீர் என்று அவனையே பருகிக் கொள்கிறீர்கள்!
இதோ, சடாரியும் வாங்கிக் கொள்ளுங்கள்! = அவன் திருவடிகளை, மாறனாகிய நம்மாழ்வாரை, உங்கள் தலை மேல் ஏற்றுக் கொள்ளுங்கள்!
அவன் கால் பட்டு அழிந்தது, 
உங்கள் தலை மேல், பிரமன் கையெழுத்தே!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்...
முடிச் சோதியாய் உன் முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?

ம்ம்ம்ம்...தரிசனம் ஆனவர்கள்-ல்லாம், அப்படியே சேவிச்சபடியே, நகருங்க-ம்மா, நகருங்க! ப்ளீஸ், நகருங்கோ சார்! நகருங்க.....


கருவறையை விட்டு வெளியே வந்து, காற்றாட ஊஞ்சல் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்வோமா? 

இன்னொரு முக்கியமான சேதி!
கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது இந்தியாவிலேயே இந்த ஒரு தலத்தில் மட்டுமே!
கருவறையில் சற்று எக்கிக் காண வேண்டும்!
அப்பவே சென்னையில் குடும்ப ஆட்சி-ன்னு சொல்லாமச் சொல்லி விட்டானோ, இந்த பார்த்தசாரதி? :) நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்! :)

சொல்லப் போனா, இந்தத் தலம், முழுக்க முழுக்க, ஒரு குடும்பத் தலம்!
கண்ணன் மட்டும் அல்ல...,
திருவல்லிக்கேணியில் எல்லாக் கருவறையிலும், No Singular, Only Plural! :)
ஒரு கூட்டமாகத் தான் எல்லாக் கருவறைக் கடவுள்களும் இருப்பார்கள்! :)

* ஆலயத்துள் நுழைந்து, கொடிமரம் தாண்டி, கஜானனரை வணங்கி, கருடாழ்வாருக்கு ஹாய் சொல்லி...வரிசையில் சேர்ந்து கொண்டால்...

* திருக்கச்சி நம்பிகள், இராமானுசர், மாமுனிகள் என்று ஆசார்யர்களைக் கடந்து, முதலில்....என் இராகவன் வீடு! :)

அங்கும் குடும்ப சகிதம் தான்!
பொதுவாக இராமன்-சீதை-இலக்குவன்-அனுமன் மட்டும் தானே இருப்பார்கள்! இங்கோ, மொத்த குடும்பமாய், பரதனும் சத்ருக்கனனும் கூட உண்டு!

இவர்களைப் பார்த்த வண்ணம், எதிர்ப் பக்கத்தில் ஆஞ்சநேயன்...
அதே வரிசையில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள், கருடன்-அனந்தன் முதலான நித்யசூரிகள்!

* அடுத்த சன்னிதியாகிய அரங்கன் சன்னிதி!
மன்னாதன்! மன+நாதன் என்று தாயார் அழைத்த பேரில்...இங்கும் கருவறையில் ஒருவர் மட்டும் இல்லை!
தலை மாட்டில் வராகப் பெருமாளும், கால் மாட்டில் நரசிம்மப் பெருமாளும் உண்டு!

* திருவல்லிக்கேணி தனிக் கோயில் நாச்சியாரான வேதவல்லித் தாயார், இந்த அரங்கனின் தர்ம பத்தினியே!
இவளுக்கு வெள்ளி தோறும், மற்றும் அஸ்த நட்சத்திரம் அன்றும் உள் புறப்பாடு/ஊஞ்சல் உண்டு!

* அடுத்த சன்னிதி, வரதப் பெருமாள்!
கருடனும் அதே கருவறைக்குள் இருப்பான்! இறைவனைத் தாங்கிப் பிடித்தபடி! = நித்ய கருட சேவை!

* முக்கியமான பின் சன்னிதி, ஆளரிப் பெருமாள் என்னும் நரசிம்ம-அழகிய சிங்கர் சன்னிதி! மூலவர் மட்டுமே யோக நிலையில், சிங்க முகத்தோடு, "ஆ-வா" என்ற கரத்தோடு!
உற்சவருக்கு சிங்க முகம் இல்லை! சிரித்த முகம் மட்டுமே!
இந்த ஆலயத்தில் நாக்கில்லா மணிகள் தான் அத்தனையும்! கதவில் தொங்கும் மணிகள் உட்பட...

* அடுத்த சன்னிதியாக என்னுயிர்த் தோழி...கோதை...திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!
சரி சரி போதும், உனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?
ஹேய் வாடீ...அப்படியே விமானங்களைக் கண்டு, கண்ணாடியில் முகம் பார்த்து, தலைமுடி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, பிரசாதக் கடையில்...தோழனுக்கும் எனக்கும் பிடித்த அதிரசம் வாங்கித் தின்போம்! :)

கிறு கிறு புளியோ தரையில் கரைய
சுறு சுறு மிளகு வடையும் நொறுக்க
அதி ரசமான அதிரசம் தன்னைத்
அணி திருவல்லிக் கேணி கண்டேனே! :))இந்த வலைப்பூ = கண்ணன் "பாட்டு"!
ஆனால் ஷைலஜா அக்கா பண்ண மாயம்...இப்பல்லாம் ஒரே கட்டுரையாப் போயிரிச்சி! :)

வாங்க கண்ணன் "பாட்டில்", பாட்டைப் பார்ப்போம்!
திருவல்லிக்கேணி-க்கென்றே உள்ள சில பாசுரங்களைக் கேட்போமா?
Pasurams - TIRUVLLIKENI and Tiruneermalai - Aruna Sairam
கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!
பிரபல பாடகி, அருணா சாய்ராம், க்ஷேத்ரம்: சென்னைபுரி என்னும் தொகுப்பில் (Album: Ksetra Chennapuri) பாடும் பாட்டு!

திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி
வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை,விழுமிய முனிவர் விழுங்கும்
கோது-இல் இன்-கனியை, நந்தனார் களிற்றை, குவலயத்தார் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை, என்னை ஆளுடை அப்பனை, ஒப்பவர் இல்லா!
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!!
Shylajakka sent this pic of this year's maargazhi koshti at thiruvallikENi.

திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி (இது சென்னை திருநீர்மலை தலம் பற்றியது, இருப்பினும் Album-இல் உள்ளதால், இங்கு காண்போம்!)
பாரார் உலகும், பனிமால் வரையும்
கடலும் சுடரும், இவை உண்டும் - எனக்(கு)
ஆராது என-நின்றவன் எம்பெருமான்
அலைநீர் உலகுக்கு அரசாகிய - அப்

பேரானை முனிந்த முனிக்கு-அரையன்
பிறரில்லை நுனக்கு-எனும் எல்லையினான்!
நீரார்ப் பேரான், நெடுமால் அவனுக்கு
இடம் மாமலை யாவது நீர்மலையே!

பேயாழ்வார் - 3ஆம் திருவந்தாதி:
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணி-யான் சென்று.

திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி:
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீள்-ஓதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை.


Here ends the "Triplicane" Tour! :)
Pl assemble @ Marina, for a Treat of Murukku, Sundal & Maangai Bathai, sponsored by Radha Mohan, Citizen of ThiruvallikENi! :)

Also, home made vEN pongal, for pongalO pongal from ILWK aka kaLvanin kaathali :)
- alo, KK, get me some good thakkaLi kothsu and vengaaya chutney, not as prasadam, but as side-dish :) மாம் ஏகம் பிரசாதம் வ்ரஜ! :))

74 comments :

Anonymous said...

மிக அருமை!
- தியாகராஜன்

In Love With Krishna said...

Ah!!!!!!!
Ah!!!!!
Beautiful...
i have not yet read it, but it's beautiful. :)))))))))
KRS: :))))))))
Thankyou sooo much for the post!!!
MY PSP!!!
Beautiful! Beautiful! Beautiful!!!

In Love With Krishna said...

//கருவறையெங்கும் அவன் வாசமா அல்லது துளசீ வாசமா அல்லது இரண்டும் கலந்த வாசமா?//
Avan vaasam adhu!!
The Tulasi leaf celebrates the joy of being at His feet!
Andha tulasiyin vaasam avar vaasathil kalandhidum!
Avar vaasamo...
kaadhal vaasam!
He lies that He has no weapons, that unmatched fragrance is by itself a weapon!
You may think you are only smelling it, but that unseen weapon will go and haunt the very bottom of your heart!
-----
And as His enchanting smell my senses deride,
As His untalked-of weapon pierces my heart inside,
As that fragrance plays in my heart the video of love slide by slide,
No other smell these mad senses will take inside!

In Love With Krishna said...

//Also, home made vEN pongal, for pongalO pongal from ILWK aka kaLvanin kaathali :)//
en pongal ange avaridam samarpanam aagi vittadhu.
Avarukku dhaan vidhi, indha "half-cooked" meals ellam saapadanum, ungalukkuma?
Better get it from Him :)
It will taste great because He has tasted it! :))
Because He touched it with His lotus hands, and , and...
Tulasi leaf= The Nectar of His feet!
Pongal/Puliyodharai/Sarkaraiponga/...= The Nectar of His beautiful, red underlip!!!

While most people will talk about the first case, the second is as blissful.

1)Because, the first tastes wonderful due to complete surrender.
Aanalum, andha 9-foot azhagan-in vaayazhagu- adhu perazhagu!!
It tastes wonderful!
2)The second tastes great because of love.
3) i can't decide/chose between one and two, i want both!

In Love With Krishna said...

@KRS:
Pls. put up the pic i sent you.
It's Aandal sametha PSP.

In Love With Krishna said...

@KRS: Ivvalavu periya tour mudinjiruchu!!!
But, not even once have you called Him PSP!! (??????)
Full peyar pottadhellam podhum! :))
Azhaga "Hey PSP!!! Appadi-nnu oru line "editting"-la join panni vidunga pleez!"

In Love With Krishna said...

looks like only blogger has to stop me with some technical restrictions from posting comments for this post! :)))

//மும்பை - Gateway of India போல், Gateway of Chennai = TiruvallikENi! :)
//
Afterall Chennai???
No, no, no...
Tiruallikeni is Brindaranya Kshetram.
1)In Dwaraka, PSP was (is) famous for His exploits in a pond full of lilies and lotuses. (Courtesy: Srimad Bhagavatam)
2)Tiruvallikeni=Brindaranya Kshetram=Brindavanam
Yes! Tiruvallikeni is Brindavanam!
Elloraiyum paithiyam aakum Puzhangulal Kannan-in amsam indha PSP.
At the same time, Rukmini Thaayar azhaga koodave irukka, periya meesai onnu face-la irukka, Dwarakai Krishna, Kurukshetra Krishnanum kooda.


Idhellam paartha,
TIRUVALLIKENI IS GATEWAY TO VAIKUNTHA!
TIRUVALLIKENI IS GATEWAY TO BEING WITH HIM FOREVER!

In Love With Krishna said...

/@KRS: Ivvalavu periya tour mudinjiruchu!!!
But, not even once have you called Him PSP!! (??????)///
@KRS: SORRY!
Avarai paarkkum azhagu, unga post-ai vittu vittu padichutten!!
just now i saw, you HAVE called Him PSP!! :))
take back my statement!

In Love With Krishna said...

//alo, KK, get me some good thakkaLi kothsu and vengaaya chutney, not as prasadam, but as side-dish :) ///

???
@KRS:
PSP pongal-kku vengaayam ketkudha??
PSP-kku vengaayam pidikaathu!
Adhanaal, enakkum pidikaathu.
(nah, actually i like, but i dont wanna have it when He wont)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@KK

I wantonly didnt put the chellam abbreviation PSP :)
Was waiting for u to explicitly ask for it and then shall be granted :)

Now, you have asked, Itz there in the post!
ஆனா பட்டர் இப்படியா வைபவம் சொல்லுவாரு? முடிஞ்சா அவரையும் PSP-ன்னு வைபவத்தில் சொல்ல வைங்க! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//@KRS:
Pls. put up the pic i sent you.
It's Aandal sametha PSP.//

ha ha ha!
I took one request for free...
Next one has a price! :)

ஆண்டாள்-பார்த்தா சேர்த்தி படம் போட்டா, எனக்கு என்ன தருவீங்க? பொங்கல்-ன்னு சொல்லி டபாய்க்கக் கூடாது! இன்னும் சிறப்பா எதாச்சும்? The Lotus from PSPs Chest! or that Meesai Podi? :)

In Love With Krishna said...

//ஆனா பட்டர் இப்படியா வைபவம் சொல்லுவாரு? முடிஞ்சா அவரையும் PSP-ன்னு வைபவத்தில் சொல்ல வைங்க!//
:))
vendam, vendam
avar "Parthasarathy Perumal"-nnu solattum!
Adhu dhaan "avar" naamam!! Official name!
Aanal namma ellam PSP-nnu koopiduvom!
enna, adhu chella peyar! :)) Pet name!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Added a few more close-up pics, at the harati stage! Ensoy maadi! :)
Hez amazing with that close up meesai!

டேய் முருகா! அவங்கெல்லாம் மீசை வச்சிக்கறாங்க! நீயும் வச்சிக்கோடா! எனக்காக! ப்ளீஸ்! செல்லம்-ல்ல! டார்லிங்-ல்ல? என் செல்லப் பொற்க்கி-ல்ல? :)

In Love With Krishna said...

//I took one request for free...
Next one has a price! :)//

Price-a??
ok, PSP, enakku konjam panam venum. Urgently!!

Neenga next time pogarappo, ungalukku He will give...
He will give the big mala that touches every part of Him from head to toe :))
And, He will always take care of you. :))
(all this, if He accepts my request)
ok va?
aandal enge?
ange ippo thirumanjanam avangalukku.
Inge, unga blog-la "picture thirumanjanam" pannunga!

In Love With Krishna said...

//டேய் முருகா! அவங்கெல்லாம் மீசை வச்சிக்கறாங்க! நீயும் வச்சிக்கோடா! எனக்காக! ப்ளீஸ்! செல்லம்-ல்ல! டார்லிங்-ல்ல?//
hee hee...
mama parthuttu marumagan-kku style tips kudukkireengla?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

All...
Lemme know, if you are able to hear the full audio of pasuram - 1 min 45 secs. After a few uses, does it shorten to 30 secs?

In Love With Krishna said...

AANDAL PSP:
His blue complexion in Thaayar's saree...
Her green colour (Bhoomadevi Thaayar) in His vastram.
Perfect! Perfect!

In Love With Krishna said...

@KRS:
in a hurry to g2 skool. (got an eng. composition exam 2 write)
bye!
may psp bless all!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Good Luck for the exams KK!
Dont write PSP inside the composition text! The teacher might give u 150/100 :)

ஷைலஜா said...

அல்லிக்கேணி அரசர் வந்துவிட்டாரா? ஆஹா ! ரவியுடனும் ராதாவுடனும் இந்தக்கோயிலுக்குபோனதை மறக்கமுடியுமா? வரேன் பதிவைப்படிச்சிட்டு.

In Love With Krishna said...

//Good Luck for the exams KK!
Dont write PSP inside the composition text! The teacher might give u 150/100 :)//
:))
@KRS: PSP pathi pesadha oru composition paper naan submit pannuvadha?? No, no...
Only one thing: maybe, just maybe, if you are evaluating my paper, you may be able to find out what i mean, the teacher can never guess :))

In Love With Krishna said...

//வஜ்ர கிரீடம்!//
@KRS:
Vajra greedam- very beautiful.
But, imho, it doesn't let us fully see His beautiful, dense curly hair.
i know this is weird, but...
greedam illama avarai azhaga paarka enakku kollai aasai, peraasai...

sury said...

பார்த்தனை ரக்ஷித்த அந்த
பெருமாள் நம்மையும்
அரைக்கணம்
பார்ப்பார் ரக்ஷிப்பார்.

சுப்பு ரத்தினம்.

கவிநயா said...

PSP ரொம்ம்ம்ப அழகுதான்! :)

படமெல்லாம் மட்டும்தான் பார்த்தேன். அப்புறமாதான் படிக்கணும்...

ஷைலஜா said...

பஞ்சவரைப்பல வகையும் காத்தார் வந்தார்
பாஞ்சாலி குழல் முடித்தாய் வந்தார் தாமே.
என்று சுவாமி தேசிகன் அருளிச்செய்தபடி இங்கே பார்த்தசாரதிப்பெருமாள் காட்சிதருகிறார் படங்கள் அத்தனையும் அற்புதம்! ஒவ்வொரு விஷயமும் நுணுக்கமாய் எழுதி இருக்கீங்க ரவி. புதிய தகவல்கள் பல தெரிந்துகொண்டேன். வழக்கம்போல குறும்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை அதுவும் கோதை சந்நிதிவந்தால் 80வயசானாலும் குமரனாய்(நம்ம குமரன் இல்ல) ஆகிடுவீங்க போலருக்கு?:)

//இந்த வலைப்பூ = கண்ணன் "பாட்டு"!
ஆனால் ஷைலஜா அக்கா பண்ண மாயம்...இப்பல்லாம் ஒரே கட்டுரையாப் போயிரிச்சி! :)

///

என்று சொல்றீங்க ஆனா இப்படி விவரம் வர்ணனையோட வந்தாதானே கச்சேரி களை கட்டுது?:)
அருணாசயிராம் பாட்டு கேட்கலையே கவனிங்க இல்ல எனக்கு மட்டும்தானா தெரிலையே!

ஷைலஜா said...

சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மாச்சாரியாரை வென்றதும் அஸ்வத்தாமா ஹத:குஞ்சர: என்று தர்மரை சொல்ல வைத்து துரோணாச்சாரியாரை வென்றதும் மஹா வீரனான கர்ணனிடம் கவசகுண்டலங்களை யாசகமாகப்பெற்று தக்க சமயத்தில் அவனை அர்ஜுனனைக்கொண்டு போரில் வீழ்த்தசெய்ததும்,அர்ஜுனனைநாராயணநாகாஸ்திரத்தினின்றும் ரட்சித்ததும் எம்பெருமான் பார்த்தசாரதியாக இருந்த வேளையில் தானே?
போரின் கடைசி நாளன்று அர்ஜுனனைத்தேரினின்றும் முதலில் இறங்கச்சொல்லித் பிறகு தான் இறங்கி எரியப்போகும் தேரினின்றும் பக்தனை ரட்சித்தது பார்த்தசாரதிப்பெருமாள்தானே!
மிக முக்கியமான விஷயம் குருஷேத்திரத்தில் அவன் அருளிய கீதோபதேசம்!
சித்திரத்தேர்வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் என்கிறது திருவாய்மொழி.
தேரை போரில் கண்ணன் செலுத்தியவிதம் மிக விசித்திரமானது திறமையானது . அதனால்தான் சித்திரத்தேர்வலவா என்கிறார் ஆழ்வார் பெருமான்.

In Love With Krishna said...

//PSP ரொம்ம்ம்ப அழகுதான்! :) //
//இங்கே பார்த்தசாரதிப்பெருமாள் காட்சிதருகிறார் படங்கள் அத்தனையும் அற்புதம்!//
@Kavinaya aunty: @Shailaja aunty:
:))))
Yes!! Superb azhagan!!!:))))))
Neenga sonnadhai padichu enakku evalavu perumai theriyuma en PSP mela? :))))
btw, just return from PSP's home, which is my home :))
"Thiruvallikeni kandene, ippo ungalukkaga describe panrene!"
ange, aandal-kku azhaga thirumanjanam.
Hair make-up...vaadina poo ellam eduthuvittu, azhaga thirumudik-kku ennai theiychu, comb vecchu vaari vittu, face-il vilundha ennai yellam thudaithu vittu, apram azhaga mudi pinni vittu, ippo thirumanjanam nadakkudhu. (i had to come home)
---
btw, meesaiyan PSP eppodhum pola kallakings! :))
i dunno why, but He was smiling a lot today, smiling so beautifully, Wish i know the secret behind His extraordinarily happy face. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//i dunno why, but He was smiling a lot today, smiling so beautifully//

bcoz his post came in kannan songs and ppl are doing kummi on him :)

bcoz KK wanted the name of PSP in mangaLasaasanam and that stupid krs obliged for that :)

bcoz, krs wanted meesai tips for his beloved murugan, esp those curl-ups at the end of the meesai...

smile smile, psp smile, pepsodent smile :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ராதா மோகன்...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

In Love With Krishna said...

@KRS: :))
btw, i "suttified" PSP's pic from your blog (not from this post) for my blog post.
Just informing...i had nvr seen that pic before, so i copy-pasted immediately:))

Narasimmarin Naalaayiram said...

nice trip thanks:)

Narasimmarin Naalaayiram said...

Thiruvallikeni kandene, ippo ungalukkaga describe panrene!"
ange, aandal-kku azhaga thirumanjanam.
Hair make-up...vaadina poo ellam eduthuvittu, azhaga thirumudik-kku ennai theiychu, comb vecchu vaari vittu, face-il vilundha ennai yellam thudaithu vittu, apram azhaga mudi pinni vittu, ippo thirumanjanam nadakkudhu. (i had to come home)

அங்கே ஆண்டாளுக்கு அழகா திருமஞ்சனம்
ஹேர் மேக் அப் .. வாடின பூ எல்லாம் எடுத்து விட்டு,
அழகா திருமுடிக்கு எண்ணை தேய்ச்சு,
சீப்பு வச்சு வாரி விட்டு,
முகத்தில் விழுந்த எண்ணை எல்லாம் துடைத்து விட்டு,
அப்புறம் அழகா முடி பின்னி விட்டு,
இப்போ திருமஞ்சனம் நடக்குது
:)

படித்ததற்கே ஆண்டாள் தரிசனம்: அதான் ஒரு முறை தமிழில் எழுதி பார்த்தேன் .:)

குமரன் (Kumaran) said...

எனக்கு திருவல்லிக்கேணின்னா உடனே நினைவுக்கு வர்ற பாசுரம்...

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே!

ஒரு வேளை இந்த கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அழகிய சிங்கருடைய திருவாயில் வழியாவே போய் அவரை முதல்ல பாக்குறதாலேயோ என்னவோ? :-)

ச்சின்னப் பையன் said...

2 days back துளசிதளத்தில், கோயிலின் ஒரே ஒரு தூணைப் பார்த்தே என் கண்ணில் நீர் என்றால், இங்கே ஒரு முழுப் பதிவே ‘என்’ பார்த்தசாரதியைப் பற்றி..

ஆனந்தம். பரமானந்தம்.

நன்றி KRS...

In Love With Krishna said...

@NPR:
//படித்ததற்கே ஆண்டாள் தரிசனம்: அதான் ஒரு முறை தமிழில் எழுதி பார்த்தேன் .:)//
Padithadharkke ivvalava?
PSP-in Aandal-ai padicchu paarthu rasichiteenga! :)
ippo srivilliputhur aandal-ai inge paarkavum!

http://www.youtube.com/watch?v=Ykvpwu6hDyA

@Shailaja aunty: @KRS: @Radha (where r u? ur aaruyir is here):
in this video, new thoughts about "kothaiyin kili", please go check, and if possible, one of you please post it in kannan paatu this margazhi)

sury said...

As desired by IN LOVE WITH KRISHNA ,
i have posted this video in my blog
http://pureaanmeekam.blogspot.com

What a wonderful narrative ! Thanks a lot.

subbu rathinam.

ஷைலஜா said...

In Love With Krishna said...
@NPR:
//படித்ததற்கே ஆண்டாள் தரிசனம்: அதான் ஒரு முறை தமிழில் எழுதி பார்த்தேன் .:)//
Padithadharkke ivvalava?
PSP-in Aandal-ai padicchu paarthu rasichiteenga! :)
ippo srivilliputhur aandal-ai inge paarkavum!

http://www.youtube.com/watch?v=Ykvpwu6hDyA

@Shailaja aunty: @KRS: @Radha (where r u? ur aaruyir is here):
in this video, new thoughts about "kothaiyin kili", please go check, and if possible, one of you please post it in kannan paatu ...///


கேகே! இப்போதான் இந்த சுட்டில போய் பார்த்தேன்! ஆஹா என்ன அழகு எத்தனை அழகு எங்க ஆண்டாளுக்கு! என்ன ஒயில்பார்த்தியா ? சின்னதா ஒரு புன்னகை அண்ணலை ஆண்டுவிட்ட பெருமை! கிளி கொஞ்சுகிறது முகத்தில் நிஜமாகவே அங்கே கிளியைப்பார்த்ததும் மகிழ்ச்சிதாங்கவில்லை ....அருமை அருமை கேகே மிகக் நன்றி!

Narasimmarin Naalaayiram said...

Thanks this link kk:)

Narasimmarin Naalaayiram said...

குமரன் (Kumaran) said...
எனக்கு திருவல்லிக்கேணின்னா உடனே நினைவுக்கு வர்ற பாசுரம்...

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே!

nice kumaran:)

குமரன் இனிமேல் இந்த பாசுரமும் உங்க நினைவுல வரணும் Okvaa:). திருவல்லிக்கேணி அழகிய சிங்கருக்கு உரிய அழகான திருமங்கை பாசுரம்

1075
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்ப் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்* திருவல்லிக்கேணி கண்டேன்*.2.3.8

------

Narasimmarin Naalaayiram said...

குமரன் (Kumaran) said...
ஒரு வேளை இந்த கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அழகிய சிங்கருடைய திருவாயில் வழியாவே போய் அவரை முதல்ல பாக்குறதாலேயோ என்னவோ? :-)

நரசிம்மர் மேலே அம்புட்டு பாசமா:) பாச காரவங்க நீங்க:)super

Radha said...

@ராஜேஷ்,
உங்களை நேரில் கண்ட பொழுது சொல்ல முடியவில்லை. பார்த்தசாரதி கோயில் நுழைவாயில் அருகே உள்ள நூலகத்தில் பாசுரங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் உரை நூல்கள் உள்ளன.

Radha said...

@கே.ஆர்.எஸ்,
பெருமாள் திருவடியில் எனது பெயரை சேர்த்ததில் ரொம்ப சந்தோஷம். :-) அடுத்த முறை நிச்சயமா புளியோதரை முதல் மாங்காய் பத்தை வரை வாங்கி தருகிறேன். :-)

Radha said...

@KK,
i am not going to talk to you because you called Him as "IDIOT" in the previous post...He is my dearest friend...and you called Him that way in public !! :-((((

Radha said...

//ரவியுடனும் ராதாவுடனும் இந்தக்கோயிலுக்குபோனதை மறக்கமுடியுமா? //
@ஷைலஜா அக்கா,
நம்ம ராகவ்வை மறந்துட்டீங்களா? நான் யாரையும் மறக்கவில்லை.
நீங்க கொடுத்த, என் மனம் போலவே இருந்த இட்லியை கூட மறக்கவில்லை. :-)

Radha said...

என் காலை வாரனும்னு நினைக்கறவங்க இட்லி கல் மாதிரி இருந்துதுன்னு பொருள் கொள்க.
மற்ற நல்லவங்க எல்லாம் இட்லி வெண்மையான பூ மாதிரி இருந்துதுன்னு பொருள் கொள்க. :-)

Radha said...

@ஷைலஜா அக்கா,
போரில் பார்த்தசாரதியின் லீலைகள் அற்புதம். தினமும் நம் வாழ்வில் அவன் நடத்தும் லீலைகளும் அற்புதம்.இங்கு நித்யப்படி கண்ணை வந்து பார்க்கிறவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வார்கள்.

Radha said...

//ராதா மோகன்...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! //
தாமதமான வருகை தான். ஆனால் முன்னாடியே வந்தாலும் பெரிதாக என்ன சொல்லிவிட போகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மிக மிக அழகாக, மிக மிக நேர்த்தியாக செதுக்கும் சிற்பி அவன். எனக்கு வார்த்தைகள் வரவில்லை ரவி. The most friendliest, the most fun loving Lord !! He is the Friend of all ! May He bless us all !

Narasimmarin Naalaayiram said...

Radha said...
@KK,
i am not going to talk to you because you called Him as "IDIOT" in the previous post...He is my dearest friend
:)

yes iam also thinking..but iam not comenting:

how to you called idiot kk

he is my child . o parrthu nee idukkaaga kochikaatha naa. iam telling your brilliant daa kannaa ....

he is very very brilliont you know that kk ...know body else in these world.
he is only ... how how?

appaadaa kelvi kettuten:

Narasimmarin Naalaayiram said...

பார்த்தசாரதி கோயில் நுழைவாயில் அருகே உள்ள நூலகத்தில் பாசுரங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் உரை நூல்கள் உள்ளன.:)

Thanks radha :)

In Love With Krishna said...

aga PSP priyargal!!!!:
idiot means something different from the literal meaning.
it's a very common abbreviation among us school girls which means something really sweet.
but, let that be between me and psp.
if u note, i typed IDIOT not idiot, as it is an acronym which has a full form in Hindi, which is vvvvv sweet :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

IDIOT = I Do Ishq Only Tumse!

or
உனக்கு மட்டும் தான்டா என் மோகம்! :)

or
உனக்கே நாம் ஆட்செய்வோம்!

:)
சரி தானே KK? :))

Narasimmarin Naalaayiram said...

Vow! cooooooooooool:)

In Love With Krishna said...

@KRS: :))))))))
Ungakitta yaaru full-form ketta????
enakkum en PSP-kkum personal...adhai ippadi pottu odachuteenga!!!!
pogira pokku partha all my acronyms u ppl will draw out!

In Love With Krishna said...

@NPR:
//coooooool//
yes, cool...
"koodi irundhu kulindhelor empaavay"
naan psp-yai sonna ippadi dhaan solluven...
adhu ungalukkum mr. radhamohan-kum puriyalai-nna???
dear friend-aam, son-aam,....
appadi thittinaal kooda enakku thitta rights undu!
naan avarai thittaama yaarai thittavam??
kidaicha chance-il over-aaaa dhaan erureenga!!! :))))

but, we won't thittify!

unlike you, npr sir, calling Him "pilla pudikkiravan" going by His meesai.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//In Love With Krishna said...
@KRS: :))))))))
Ungakitta yaaru full-form ketta????
enakkum en PSP-kkum personal...adhai ippadi pottu odachuteenga!!!!//

:)
அலோ கேகே! என்ன ஓவரா சவுண்ட் விட்டுஃபையிங்?
IDIOT = I Do Ishq Only Tumse ஒரு இந்திப் படம்! ஊருக்கே தெரியும்! நோ பர்சனல் :)

எங்க ராதா இந்திப் புலவர், சமஸ்கிருதச் சிங்கம்! இஷ்க் இஷ்க்-ன்னு பல முறை பாடி இருக்காரு! அவரை நீங்க மிரட்டினா...என்ன நடக்கும் தெரியுமா? :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//adhu ungalukkum mr. radhamohan-kum puriyalai-nna???//

//dear friend-aam, son-aam,....//

//unlike you, npr sir, calling Him "pilla pudikkiravan" going by His meesai//

ஹா ஹா ஹா
KKக்கு கோவம் என்னமா சூப்பரா வருது? ஐ லைக் இட்! :)

புள்ள புடிக்கறவன்-ன்னு ராஜேஷ் சொன்னதை எல்லாம் ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்காங்க! வாவ்! செம மெமரி பவர்! பாத்துங்க PSP சார்! உங்க டகால்ட்டி எல்லாம் கரெக்ட்டா ஞாபகம் வச்சிக்கிட்டு, உங்களை...உங்களை..உங்களை...:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Radha said...
என் காலை வாரனும்னு நினைக்கறவங்க இட்லி கல் மாதிரி இருந்துதுன்னு பொருள் கொள்க.

மற்ற நல்லவங்க எல்லாம் இட்லி வெண்மையான பூ மாதிரி இருந்துதுன்னு பொருள் கொள்க. :-)//

இட்லி, ராதாவின் மனதில் பூத்தது போல்...
கல்லில் பூத்த பூ மாதிரி இருந்தது-ன்னு பொருள் கொண்டு விட்டேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ராதா, மேற்படி பொருளுக்கு நான் நல்லவனா? கெட்டவனா? செப்பு ராதா செப்பு! :)

Radha said...

//இட்லி, ராதாவின் மனதில் பூத்தது போல்...
கல்லில் பூத்த பூ மாதிரி இருந்தது-ன்னு பொருள் கொண்டு விட்டேன்! :)
//
:-)
"பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன்.
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய் !"
இந்த வரிகளை F.M-ல் கேட்கும் பொழுது எல்லாம் என் கிரிதாரியின் நினைவு தான் வரும்.
:-)

Radha said...

//ராதா, மேற்படி பொருளுக்கு நான் நல்லவனா? கெட்டவனா? செப்பு ராதா செப்பு! :) //
கெட்டவன்?? அப்படின்னா? :-)
உலகில் உள்ளோரை எல்லாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. உண்மையை உணர்ந்த நல்லவர்கள்
2. உண்மையை உணராத நல்லவர்கள்

mr.radhamohan is Sarada Devi's son ! :-)

Radha said...

//KKக்கு கோவம் என்னமா சூப்பரா வருது? ஐ லைக் இட்! :)
//
me too ! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//"பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன்.
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய் !"//

பார்த்தாதா ராதா, உன் நண்பன் ரவியின் உள்ளத்தை? உன் நெஞ்சில் வேர் விட்ட கொடியை/பூவைக் கரெக்ட்டா சொன்னேன் பாரு! :)

//1. உண்மையை உணர்ந்த நல்லவர்கள்
2. உண்மையை உணராத நல்லவர்கள்//

மேற்கொண்ட வாசகத்துக்கு, இப்போ சொல்லு ராதா! நான் எது ராதா #1 or #2? :))

Radha said...

//மார்பிலே "அவள்" திகழ //
@KK,
Pls go to "சாதி மாணிக்கம்" post and look at the picture for
"திருமறு மார்வன் என்கோ?" :-)

Radha said...

//இன்னும் இடப்புறம் மைந்தன் அநிருத்தன், பேரன் பிரத்யும்னன் //
Small correction. Not that it matters a great deal...பிள்ளை பேரன் பெயர்கள் மாற்றி இருக்கின்றன.
பிரத்யும்னன் = கண்ணன்-ருக்மிணி பிராட்டிக்கு பிறந்த குழந்தை.

Radha said...

//ஒரு வேளை இந்த கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அழகிய சிங்கருடைய திருவாயில் வழியாவே போய் அவரை முதல்ல பாக்குறதாலேயோ என்னவோ? :-)
//
குமரன்,
இரண்டு பக்கமும் கொடிமரம் உடைய கோயில் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். :-)

Radha said...

//நான் எது ராதா #1 or #2? :))
//
என்னை பத்தின உண்மைகள் பல தெரிந்த நீ எப்பவும் #1 தான். :-)

Radha said...

@KK,
Many many thanks for that excellent video ! :-)

Radha said...

//AANDAL PSP:
His blue complexion in Thaayar's saree...
Her green colour (Bhoomadevi Thaayar) in His vastram.
Perfect! Perfect!
//
uh ! this comment thrills me to no end !!! i remember my master quoting about radha-krishna in a similar way.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Small correction. Not that it matters a great deal...பிள்ளை பேரன் பெயர்கள் மாற்றி இருக்கின்றன//

பார்த்தியா? இதுக்குத் தான் ராதா வேணுங்கிறது! ஆனானப்பட்ட குமர நக்கீரர் கூட இதை மிஸ் பண்ணிட்டாரு! :)

பதிவில் மாற்றி விட்டேன் ராதா! நன்றி! தூங்கலையா? திருவல்லிக்கேணி கனவுகளா? :)

அந்த மீசை கனவுல வந்து உன் கூட இன்னிக்கிப் பேசட்டும்! மார்கழி முடிஞ்சி தையொரு திங்களும் வரப் போகுதே! ரவிக்கு உதவி பண்ணு-ன்னு உன்னிடம் சொல்லட்டும்! :)

In Love With Krishna said...

////Small correction. Not that it matters a great deal...பிள்ளை பேரன் பெயர்கள் மாற்றி இருக்கின்றன//
@KRS:
Partheengla?
i never saw the line in which you mentioned about Pradyumna/aniruddha.
there are so many distracting pics everywhere!!! :))
i'll tell you when i finish reading the post. :))
everytime i come to read, i end up looking at the photos!

In Love With Krishna said...

//"பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன்.
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய் !//
@Radha:
yes, beautiful!
But, the lines that make me cry:
//Maalai Andhigalil Manadhin Sandhugalil
Tholaindha Mugaththa Manam Thaedudhae
Maeyal (?) Paarozhugum Nagara Veedhigalil
Maiyal Kondu Malar Vaadudhae
Maegam Sindhum Iru Thuliyin Idaiveliyil
Thuruvith Thuruvi Unaith Thaedudhae
Udaiyum Nuraigalilum Tholaindha Kaadhalanai
Urugi Urugi Manam Thaedudhae//

The most beautiful part starts here:

//Azhagiya Thirumugam Orudharam
Paarththaal Amaidhiyil Niraindhiruppaen
Nuniviral Kondu Orumurai Theenda Nooru Murai Pirandhiruppaen//

In Love With Krishna said...

//IDIOT = I Do Ishq Only Tumse ஒரு இந்திப் படம்! ஊருக்கே தெரியும்! நோ பர்சனல் :)//
@krs:
ok let it be!
but, only i can call Him IDIOT!
it's very personal:))
IDIOT! IDIOT! IDIOT PSP!
MAD PSP, IDIOT!!!

In Love With Krishna said...

//@KK,
Pls go to "சாதி மாணிக்கம்" post and look at the picture for
"திருமறு மார்வன் என்கோ?" :-)//
yes, but why?
(i don't mind seeing that pic anyways, i did, but neenga edhukku paarka sonneenga? naan poi picture-ai nalla rasichuttu vandhutten!) :))

Narasimmarin Naalaayiram said...

குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,

உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!

இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்
:)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP