Saturday, January 15, 2011

அரங்கனிடம் தோழி

கோதை படும் துயரை, தாளாத அவள் தோழி, அரங்கனிடம் சென்று முறையிடும் பாவனையில் எழுதியது.
பொன்னியே பொறுத்திருக்க.. ரங்கா..
கோதைக்குத் துணை இலவு மரம் வாழும் கிளிதானோ ?


சுழித்தோடி வரும் பொன்னி நதியோ உன் திருப்பாதம்
தழுவ தவம் இயற்றி தாரணியில் யுகமாச்சே..

காத்திருந்து களையிழந்து கண்மை கசிந்துறைந்தாள்..
ஓய்வின்றி ஒழிவின்றி உன் நாமம் போற்றி வந்தாள்..
உண்பதே மறந்து உருக்குலைந்து தளர்ந்து நின்றாள்..
இன்னும் உன் மனம் இரங்க என்னனென்ன செய்வாளோ!!

29 comments :

In Love With Krishna said...

Hello!
Happy Pongal!
//இன்னும் உன் மனம் இரங்க என்னனென்ன செய்வாளோ!!//
:))
Nice lines :)
Aana ippa paartheengla...Perumal 106 tirupati-yil irukalaam,
Aanal avarukku ore Aandal dhaan :))
Aandal Perumal-kaga paadinadhu poi, ippa perumal "attract" panna try panraar Andal-ai! :))
example: Parthasarathy Perumal (PSP). If no one else noticed so far, He was wearing a lot of (actually, mostly, only) green the whole of Margazhi. :)
p.s: sorry, indha thozhi-yin feelings purinjikkira manobhaavam ippo enakku illai...koil-la PSP-Aandal- newly-weds paarthuttu vandha happiness :)))

Sankar said...

@ILWK: Thanks :)
You will get to know the feeling during when you are away from PSP. As daily you are having his darshan, it fills you with so much of bliss; I guess. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோதைக்குத் துணை இலவு மரம் வாழும் கிளிதானோ ?//

கோதையும் கிளியும் ஒரே இனத்துப் பட்சிகளாய்...ஒருவருக்கொருவர் ஆறுதலாய்...இலவு காக்கவா உன் திருவுள்ளம், ஓ ராகவா, ராகவனுக்கும் பெரிய பெரியபெருமாளே!

//உண்பதே மறந்து உருக்குலைந்து தளர்ந்து நின்றாள்..//

:((

//இன்னும் உன் மனம் இரங்க என்னனென்ன செய்வாளோ!!//

என்னென்ன செய்வாளோ...?
உயிரை மட்டும் அவனுக்கு வைத்துக் கொண்டு, மற்றெல்லாம் மறந்தும் துறந்தும்...அவனுக்கு என்னை விதிக்கிற்றியே! மற்றை நம் காமங்கள் மாற்று! அவனின் காமங்களே ஏற்று!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கோதைக்கு ஒரு தோழி இருந்தாள், அவனிடம் விண்ணப்பிக்க...
பேதைக்கு யாரோ? பேரில்லா ஊரோ?

Sankar said...

@KRS: Thanks :) .. Your comments dint express that you liked it, but ya.. Still Thanking you.. :P
"Pethaikku yaro; Perilla Ooro" Wow.. awesome man!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆறிரெண்டும் காவேரி
அதன்நடுவே ஆணழகா
பேரெனக்குச் சங்கரியே
பாழ்கோதை தோழியளே!

பொன்னியே பொறுத்திருக்க
கோதை கரை உடைந்துவிட
கண்மையில் கருப்பாறு - அவள்
கண்ணிரண்டில் இளைப்பாறு!

பெண்மயிலின் முலைமேலே
கொதி கொதி கண் நீராவி
முக்கனிகள் நிவேதனமோ
இலவுக்கனி கன்னிக்கோ?

உண்ணா வயிறதனில்
உன்னுயிரின் சத்தம் கேள்!
உள்ளம் படபடக்க
உன் பேரே நித்தம் கேள்!

அரங்கா உன்னை நம்பியவள்
எண்ணி எண்ணி வெம்பியவள்
உடல் மரிக்க உயிர் தரிக்க
இன்னும் என்ன செய்வாளோ!

பேதைக்கு இனி யாரோ
பேரில்லா உன் ஊரோ
ஆதரிக்க ஆளில்லா
அவள் உடலில் நீ யாரோ?

Sankar said...

@KRS: Awesome awesome!! No words to explain my feel. :)
Hey, I made all of them lengthy sentences, as i have tuned this song in "Ahir Bhairavi". But could not paste it here, as I am in Lanka now.
But, its just awesome. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Sorry Sankar, your nice poem triggered these feelings and I penned a few more lines based on that! avLo thaan! nothing great!

Aahir bhairavi-yaa? Pl do send the song and I will upload it, if u r not able to!

I was just mind roaming...
கோதைக்காச்சும் ஒரு தோழி இருந்தாள், அவனிடம் விண்ணப்பிக்க...பேதைக்கு யாரோ? பேரில்லா ஊரோ?

In Love With Krishna said...

//As daily you are having his darshan, it fills you with so much of bliss; I guess. :)//
@Shankar:
1) i dont see Him daily, i am yet awaiting that grace, i wish i could, but that's a little while off

////@ILWK: Thanks :)
You will get to know the feeling during when you are away from PSP.//
i am away, and it hurts.
It hurts more that He is so handsome and so wonderful in every which way.
It hurts that just about everything reminds of Him.
It hurts that He is such a cunning Creator, He leaves His mark in just about everything.
i read your poem, and KRS's addition here, and, it's wonderful though.

Sankar said...

Ya KRS, would send you by tomo! Don even try to be so humble; You can proudly say that you drew them. It has got that kind of soul into it. :) L love it.. :)

Sankar said...

@ILWK: //It hurts that He is such a cunning Creator, He leaves His mark in just about everything.
// I know :) I feel the same many a times.. :)
//i read your poem, and KRS's addition here, and, it's wonderful though.// I feel like KRS's addition ranks one step ahead of mine, as it has got evloued from mine :) :)

In Love With Krishna said...

//feel like KRS's addition ranks one step ahead of mine,//
@Shankar: There IS no rank in front of Perumal.
He wrote, and u did. That's about it. :)
To compare works written with His name on it is, imho, meaningless.
For, they are dear to Him, and He does not look for linguistical intricacies, or how well emotions get poured out through your pen (or keyboard?).
All He looks for is whether you lifted the pen to write, switched on the computer to "blog" His name into the realms of the World Wide Web, and opened our hearts to Him, and surrendered every miniscule feeling unto Him :)))

Sankar said...

@ILWK: Nice thought.. :) :)

Sankar said...

@ILWK: Writing a poem or even a word rather a letter on him, is like doing Alankaram to him, I felt mejasty in the grandness of KRS's alankaram. :) :)

In Love With Krishna said...

@Shankar: The word "rank" started me off, as i am just coming off a conversation where i was talking about how some people think they are more qualified for Perumal.
This is with no personal ref to KRS or you or anyone else, but i have been thinking some stuff lately...
But, since i need to load off my thoughts, let's take the example of a published writer with several awards to his/her credit.
He/she will DEFINITELY write better, will equate emotions to words better.
But, an ordinary illiterate may have more bhakti than him/her.
Similarly, some people may be taught how to call Perumal.
They may do so.
But, the call may be stronger from someone with no "teaching".
Perumal doesnt rank anyone.
We do.
Perumal doesnt distinguish or discriminate.
We do.
Perumal showers His grace on even someone who says His name once.
Think of those who keep talking about Him?
But, what differentiates people is whether they talk about Him "just to beget His grace".
Will they talk about Him, with the motive that others must beget His grace?
Can our bhakti be selfless, atleast to a little extent?
That is what differentiates people in front of Him.

In Love With Krishna said...

//I felt mejasty in the grandness of KRS's alankaram.//
Not denying at all :))
But, as i told u, it's stuff bottled up in my head that came tumbling out :)

In Love With Krishna said...

@KRS:
///I felt mejasty in the grandness of KRS's alankaram.//
Not denying at all :))
But, as i told u, it's stuff bottled up in my head that came tumbling out :)//
READ THIS BEFORE U READ ANY OTHER COMMENT.
Re-reading my own comment seemed like a personal backlash at u.
i wasnt referring at all to u.
But, the word "rank" got me off.
My thoughts are not of personal reference to u, or Mr, Shankar, or anyone else...

Sankar said...

@ILWK: Once again!! Nice thoughts.. We all in our blog team, meet, and I have spiritual discourse frequently. What do you say!! :)

Sankar said...

@ILWK://Re-reading my own comment seemed like a personal backlash at u.
i wasnt referring at all to u.
But, the word "rank" got me off.
My thoughts are not of personal reference to u, or Mr, Shankar, or anyone else... //
Even if you refer Shankar and me, we never mind it, as we all here to hear noble things like what you have said. So, we please you, not to stop giving any valuable comments of that sort. :) :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

:))

//rank//

சூப்பர் உரையாடல்! :)
There is only one rank and itz always 1st rank
= ran k - (ran)gan.(k)othai! my thOzhi's initials!!

In Love With Krishna said...

@KRS:i like ur rank :)
btw, please go to my blog and see the comments...i need a small favour of u, tnx! :)

ஷைலஜா said...

அரங்கனின் தோழி நான் இருக்க என்ன இது என்று ஓடோடிவந்துபார்த்தேன்! ஆஹா அழகான பாடல்! கோதைபடும்துயர் தாளாத தோழி அரங்கனிடம் முறையிடுகிறாளாமா? சங்கர் அருமையாக இருக்கிறதே!

ஷைலஜா said...

பாட்டுக்குப்பாட்டெடுத்த கோதைப்பாவையவள் தோழனுக்கும் பாராட்டு!

Sankar said...

Thanks a lot akka :) Hope you liked it.. :)
KRS's is also damn good na.. :) :)

In Love With Krishna said...

//அரங்கனின் தோழி நான் இருக்க என்ன இது என்று ஓடோடிவந்துபார்த்தேன்!//
:))
@Shailaja aunty:
அரங்கனின் தோழி-yaa??
Sollave illai! :)
Ungakitta niraya pesanum, aunty. :))
Unga friend-ai purinjikkave mudiyala. :((
Neenga eppadi avarkitta pesuveenga?
Avar dhaan eppodhum "sleep-acting" panraare?

கவிநயா said...

//காத்திருந்து களையிழந்து கண்மை கசிந்துறைந்தாள்..
ஓய்வின்றி ஒழிவின்றி உன் நாமம் போற்றி வந்தாள்..
உண்பதே மறந்து உருக்குலைந்து தளர்ந்து நின்றாள்..
இன்னும் உன் மனம் இரங்க என்னனென்ன செய்வாளோ!!//

பிடித்த வரிகள் சங்கர்...

//உண்ணா வயிறதனில்
உன்னுயிரின் சத்தம் கேள்!
உள்ளம் படபடக்க
உன் பேரே நித்தம் கேள்!

அரங்கா உன்னை நம்பியவள்
எண்ணி எண்ணி வெம்பியவள்
உடல் மரிக்க உயிர் தரிக்க
இன்னும் என்ன செய்வாளோ!//

கண்ணன் கலக்கியதில் இந்த வரிகள் மிகவும் பிடித்தன...

வாழ்த்துகள், இருவருக்கும்! :)

Sankar said...

@Kavinaya akka: Thanks a lot :) :)

Radha said...

@சங்கர்,
அற்புதமான பாடல். அருமையான ராகம் தெரிவு செய்துள்ளீர்கள் என்று தோன்றுகிறது. பாடலை வீட்டிற்கு சென்று கேட்க ஆவலாக இருக்கிறேன். :-)
சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்
சக்கரவாக பறவை ஆவேனோ !
ஆஹிர் பைரவி = சக்கரவாகம் என்று இன்று அறிந்தேன். நன்றி.

//காத்திருந்து களையிழந்து கண்மை கசிந்துறைந்தாள்..
ஓய்வின்றி ஒழிவின்றி உன் நாமம் போற்றி வந்தாள்..
உண்பதே மறந்து உருக்குலைந்து தளர்ந்து நின்றாள்..//
கிணறு, குளம், குட்டை, ஏறி, ஆறு, கடல் முதலிய நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி இருந்தாலும்...நா வறண்டு உயிரே போகிற நிலையிலும், மழை நீரை மட்டும் எதிர்ப்பார்த்து இருக்கும் நிலை. கிடைக்க பொன்னி நதி போல தவம் செய்தாலும்...

Sankar said...

நன்றி ராதா ! கேட்டீங்களா? பிடிச்சிருந்ததா ?

மற்றொரு ஆணை வேண்டாது, அரங்கனையே வேண்டிய அவளுக்கு, சக்கரவாஹ பறவையை தவிர வேறு யாரை உவமை ஆக்க இயலும் .

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP