அமலனாதிபிரான்
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
(அமலனாதிபிரான் -1)
மேலே உள்ள திவ்ய பிரபந்த பாசுரத்தை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை பள்ளிக்கரணை திருநாராயணன் கோயில் அரையர் சுவாமி ஸ்ரீ ராம பாரதி மற்றும் அவரது துணைவியார்.
[விளக்கம்]
(நறுமணம் கமழும் சோலைகளை உடைய) திருவேங்கட மலையின் நாதன் மிக தொன்மையான தெய்வமும், குற்றம் குறை ஒன்றும் இல்லாதவனும் ஆவான். அவன் வானில் வாழ்பவர்களுக்கு தலைவன். தூய்மையே வடிவானவன். அப்படிப்பட்ட வேங்கடநாதன் முன்னம் என்னை தன் அடியார்களுக்கு அன்பு செய்ய வைத்தான். (அடியார்களிடம் கொண்ட அன்பின் பலனாக) இன்று என் கண்களுக்குள் ஸ்ரீ ரங்கநாதனின் தாமரை பாதங்கள் தாமே வந்து வசிப்பது போல உள்ளதே !
(சொற்பொருள்)
விரை ஆர் பொழில் - பரிமளம் மிக்க சோலை
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
திருக் கமல பாதம் - பெருமை/மங்களம் பொருந்திய, தாமரை மலரினை போன்ற பாதம்
[கூடுதல் விளக்கம்]
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - இந்த பதங்களுக்கு வைணவ ஆசார்யர்கள் சில விசேஷ அர்த்தங்களை தந்துள்ளார்கள்.
அமலன் - பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.
விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.
நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்.
பாடியுள்ளோர்: சென்னை பள்ளிக்கரணை திருநாராயணன் கோயில் அரையர் சுவாமி ஸ்ரீ ராம பாரதி மற்றும் அவரது துணைவியார்.
[விளக்கம்]
(நறுமணம் கமழும் சோலைகளை உடைய) திருவேங்கட மலையின் நாதன் மிக தொன்மையான தெய்வமும், குற்றம் குறை ஒன்றும் இல்லாதவனும் ஆவான். அவன் வானில் வாழ்பவர்களுக்கு தலைவன். தூய்மையே வடிவானவன். அப்படிப்பட்ட வேங்கடநாதன் முன்னம் என்னை தன் அடியார்களுக்கு அன்பு செய்ய வைத்தான். (அடியார்களிடம் கொண்ட அன்பின் பலனாக) இன்று என் கண்களுக்குள் ஸ்ரீ ரங்கநாதனின் தாமரை பாதங்கள் தாமே வந்து வசிப்பது போல உள்ளதே !
(சொற்பொருள்)
விரை ஆர் பொழில் - பரிமளம் மிக்க சோலை
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
திருக் கமல பாதம் - பெருமை/மங்களம் பொருந்திய, தாமரை மலரினை போன்ற பாதம்
[கூடுதல் விளக்கம்]
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - இந்த பதங்களுக்கு வைணவ ஆசார்யர்கள் சில விசேஷ அர்த்தங்களை தந்துள்ளார்கள்.
அமலன் - பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.
விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.
நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்.
78 comments :
இந்த முறை நாம் முன்பு பேசிய 'அமலன், விமலன், நிமலன், நின்மலன்' உரையாடல் நினைவிற்கு வந்துவிட்டது இராதா. ஆனால் என்ன பேசினோம் என்று தான் நினைவில்லை. :-)
அமலன் வதுவிட்டாரா ஆஹா! ராதா! உபந்நியாசவிளக்கமுடன் கேட்கும்போது பரவசமாக இருக்கிறது.
ஆபாத சூடம் எனும் ஆரம்ப ஸ்லோகத்தை கணீரென ஆரம்பிக்கிறார்!அருமை அருமை!
குமரன் (Kumaran) said...
இந்த முறை நாம் முன்பு பேசிய 'அமலன், விமலன், நிமலன், நின்மலன்' உரையாடல் நினைவிற்கு வந்துவிட்டது இராதா. ஆனால் என்ன பேசினோம் என்று தான் நினைவில்லை. :-)
<>>>>>>>>>>>>>>>>>>>குமரன் அனுமதித்தால் நான் அறிந்துகொண்டதை சொல்வேன் இங்கே!
நல்லா சொல்லுங்க அக்கா. அதுல என்ன தயக்கம்?
அமனாதிபிரான் தனது அனுபவங்களை பத்து பாசுரங்களில் பாடி உள்ளார். சகல வேத சாரமான ஓங்காரத்தில் அடங்கி உள்ள அகாரம் உகாரம் மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களைக்கொண்டு முதல் மூன்று பாசுரங்களில் தொடங்குவதால் இந்தப்பிரபந்தம் ஓங்காரத்தின் சாரமானது என்று உணர்த்துகிறார். நாம் பற்ற வேண்டியது எம்பெருமானின் திருவடியான பாதுகைகளே என்பதைஐந்து ஆறு ஏழாவதான நடுப்பாசுரங்களின் முதல் எழுத்துக்களினால்( பா-து- கை) உணர்த்துகிறார். (தொடர்கிறேன்)
இனி அமலன் விமலன் நிமலன் விளக்கம்.
அமலன்--------தூய்மையானவன்
விமலன்-----பேரொளி உடையவன்
நிமலன் ----- நான் விரும்பாதிருக்குமோது எனக்கு உதவிய தூயன்
நின்மலன்------ தன்னடியார்க்கு என்னை அடியானாக்கும் செம்மையன்
மந்திபாய என்கிற மூன்றாம் பாடலில் மந்தி என்பது வானரங்களைச்சொல்லிவிட்டு ஒன்றைவிட்டு ஒன்றைத்தாவும் மனமுடைய உலகப்பொருளில் ஈடுபடும் மக்களைக்கூறுவத்ற்கே!
//குமரன் அனுமதித்தால் நான் அறிந்துகொண்டதை சொல்வேன் இங்கே! //
என்ன அநியாயம் இது ? பதிவு போட்ட என்கிட்டே அனுமதி கேட்காம பின்னூட்டம் போட்டவங்ககிட்ட அனுமதி கேக்கறீங்களே !!
//ஆனால் என்ன பேசினோம் என்று தான் நினைவில்லை. :-) //
ரொம்ப ரொம்ப நல்லது. :-)
அக்கா,
இப்போ தான் பதிவை complete செஞ்சேன். :-)
உங்கள் உபந்யாசம் நிற்காமல் தொடர அரங்கனை வேண்டுகிறேன். :-)
@ராதா : மிக அருமை... எனக்கொரு ஆசை நிறைவேத்துவிங்களா? திருக்குடந்தை ஆராவமுதன் பத்தின ஏதாவதொரு பாசுரத்த பதியுங்களேன்..
//திருக்குடந்தை ஆராவமுதன் பத்தின ஏதாவதொரு பாசுரத்த பதியுங்களேன்..//
சங்கர் ! ஆராவமுதனை பத்திய பாசுரம் ஒன்றை பதிவு செய்யாம தள்ளி போட்டுட்டு வந்தேன். ஆராவமுதனுக்கே பொறுக்காம உங்க மூலமா கேட்டுட்டார்னு நெனைக்கறேன்.
மார்கழி முடியறதுக்குள்ள நிச்சயம் போட்ரலாம். ஆராவமுதன் உங்கள் இஷ்ட தெய்வமா?
@Radha: அவர் எனக்கு இஷ்ட தெய்வத்துக்கும் மேல.. !! :)
Finally, we come to read the ten by the Tiruchi dalit saint.
Thank you for your graceful help, esp on behalf of Uraiyur residents - his birth place!
Meantime, I need a slight clarification.
Of the Azwaars, two are said to worship only the God of Srirangam. In other words, they did not move out of the places of their residence Srirangam. I am referring to Dondaraippodiyaazvaar and this Thirupaanaatru aazvaar.
This being the case, I am surprised to see வேங்கடவன் in this first passuram.
Is he referring to the God of Tirupathi or just Srirangam. If the latter, is He also addressed as வேங்கடவன்?
Being steeped in Azvaar paasurams, you will definitely make us, the Uraiyur residents, understand!
Waiting early
Jo
A vicarious Uraiyur resident
I will follow you in all the ten passurams - only - and comment.
//உபந்நியாசவிளக்கமுடன் பாசுரம் கேட்கும்போது பரவசமாக இருக்கிறது. //
i just had ur mail also
அடடா !! அடடா !!
ஆரபி ராகம் ! அற்புத சாரீரம் !!
என்ன சுகம் !! என்ன சுகம் !!
பாற்கடலின் பள்ளிகொண்ட
பரந்தாமனுக்கு பக்கத்தில் இருக்கிறேனோ !!
ஒருவேளை
தேவலோகத்து
தேவகாந்தாரியோ !! ( i mean raagam)
அவன் அங்கு அழைப்பதுக்குமுன்
இவன் இங்கு இருக்கும் இடம்.
(for sending see dee)
கொஞ்சம் பொறுங்கள். கனவு கலையட்டும்.
சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com
@ஜோ,
Thanks for your kind words. நான் அறிந்த வரையில் "வேங்கடவன்" என்பது இங்கு திருப்பதி பெருமாள்...
மூன்றாவது பாசுரத்தில் "மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர் சந்தி செய்ய நின்றான்... " என்று திருப்பாணர் மறுபடியும் திருப்பதி பெருமாளை நினைவு கூர்கிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் மட்டுமே "அரங்கனை தவிர யாரையும் பாடாத ஆழ்வார்" என்று அறிந்துள்ளேன்.
சுப்பு தாத்தா,
எனக்கு ரொம்ப சொற்ப ராகங்கள் (ஐந்து/ஆறு) தான் கண்டுபிடிக்க தெரியும்...இந்த பாசுரத்திற்கு இசை அமைத்த அரையர் சுவாமி கூடவே புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் இந்த பாசுரம் தேவகாந்தாரி என்று சொல்கிறது.
//கொஞ்சம் பொறுங்கள். கனவு கலையட்டும்//
ஒன்றும் அவசரமில்லை. :-)
@KK,
For me there isn't any confusion like that. I believe that PSP is same as Tirupathi Perumal. :-)
@Radha:
//@KK,
For me there isn't any confusion like that. I believe that PSP is same as Tirupathi Perumal. :-)//
He is same, but His appearance is different, na? :)
It's the utsava moorthy of Ranga and PP i got confused with.
i know it's stupid, but, i couldn't help it.
Like, i could instantly recognize Ranga.
But, PP, i took some time. i was so stupid-i thought it was Ranga again.
btw, ennai madhiri background-e illadha people-kkaga oru explanation: azhwar Ranga-vai paadi appo PP-yai ninaikiraara, illa PP-yai paadi Ranga-vai ninaikiraara??
i really like this post.
//நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.//
This line made me cry.
Naam ketpadhaiyum kuduthu, adharkku melum nammai ''kaiyyaga neli pol kaathalikkum'' nathan avar!!
Prahladan-kku help panna "haiyyo! enna aachu?" appadi-nnu odi vandha Perumal! :)
//For me there isn't any confusion like that. I believe that PSP is same as Tirupathi Perumal.//
Yes, but, only bcoz we see Him in different forms can we describe Him differently?
-Narasimhar: Arimugan, bhaktavatsalan, etc.
-Ramar: Bhaktan-ai kaapavar, etc.
-Krishna: Haiyyo! no comment due to lack of space. Or, i'll just say "azhagan!"
Ippo Krishna romba kovam aayidraaru-nnu vachikonga.
"Why is your face like Narasimmhar"-nnu ketkalaam.
Or, if Narasimhar is wearing a peacock feather (i think you would have noticed in PSP temple), you can say- "Narasimmhar-a? Krishna-va?"
So, only coz PP is standing on top of a temple, we can say - "Kundrin mel kallagi nirkindra varada"
And, only because PSP is with us in Triplicane can we say- "Geethacharyan, Manushya Vasudevan!"
But, doesn't mean we differentiate.
Perumal becomes the Parent (Place of Birth), owner and Lord (native place), lover (in my case, place of residence), friend, master and also everything else.
Only when i give Him different portfolios, different roles, i feel happy.
Neenga eppadi??
எனக்கும் முன்பு பேசியது மறந்து போச்சு ராகவா!
அமலன்-விமலன்-நிமலன்-நிர்மலன்-க்கு என்னென்னமோ பெரிய பெரிய விளக்கம் எல்லாம் கொடுத்தியே! அதை இங்கே மீள்பதிஞ்சா, எல்லாரும் பயன் அடைவோம்! :)
//திருக்குடந்தை ஆராவமுதன் பத்தின ஏதாவதொரு பாசுரத்த பதியுங்களேன்..//
ராதா...எனக்கும் ஒரு ஆசை நிறைவேத்துவிங்களா?
திருக்குடந்தை ஆராவமுதன் பாசுரம் சந்தமா வந்து கொஞ்சுமே! நடந்த கால்கள் நொந்தவோ? கடந்த கால் பரந்த கா விரிக் கரை குடந்தை யுள்-ன்னு! அதையும் எப்பவாச்சும் உங்க கண்ணன் பாட்டில் இடுவீங்களா?
//ராதா...எனக்கும் ஒரு ஆசை நிறைவேத்துவிங்களா?
//
ஹலோ ! என்ன? என்னை பார்த்தா ரொம்ப இளக்காரமா போச்சா ? பிளான் ஏறி அமெரிக்கா வருவேன். என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும் !!
//Only when i give Him different portfolios, different roles, i feel happy.
Neenga eppadi??//
KK, நீங்க தான் பெரும் நடிகனான எந்திரன் எம்பெருமானுக்கு, டைரக்டர் சங்கரா? :)
Giving different roles to Him, is like calling the lover...
ஹே, நீ இன்னிக்கி ரன்பீர் கபூர் போல இருக்கே!
ஹேய், நீ மீசை வச்சி இருக்கும் போது விக்ரம் மாதிரி இருக்க!
ஷேவ் பண்ணலீன்னா, பக்க வாட்டுல சூர்யா மாதிரி இருக்க!
பொறுக்கி மாதிரி ஏன்டா சிரிக்கிற? சிம்பு மாதிரியே இருக்க!
இப்படி எல்லாம் வெட்கப் படறா மாதிரி நடிக்காதே! திருவரங்க மோகினி அவதாரம் மாதிரியே இருக்க!
and so on...
அது எப்படி, ஒரே காதலன், அத்தனை பேரு மாதிரி தெரிவாங்க? சும்மா பொய் தானே?
இல்லை! எப்படின்னா, என் கண்ணில் அவன் வந்து விழுவது அப்படி!
பார்க்கும் இடத்தில் எல்லாம் அவனே தெரிவதால், அவன் இவனோ, இவன் இவனோ-ன்னு...டைப் டைப்பாகத் தெரிகிறான்! அதற்கு நான் என்ன செய்ய?
என்னுள்....நீயாய் நீ நின்றாவாறே
//Only when i give Him different portfolios, different roles, i feel happy.
Neenga eppadi?? //
sister ! i surrender ! :-)
i mentioned that PSP is same as TP as that was how He got introduced to me...venkata krishnan ! :-) otherwise i see atleast as many differences as you see.
btw, here are some people who are ardent fans of srirangam perumal - the one and only periya perumal. so, pls rethink about PP. :-)
//azhwar Ranga-vai paadi appo PP-yai ninaikiraara, illa PP-yai paadi Ranga-vai ninaikiraara??
//
சிறப்பான கேள்வி. பத்து மதிப்பெண்கள். :-)
ஜோ அமலன்...
//Finally, we come to read the ten by the Tiruchi dalit saint//
* Who is held in high esteem
* Who is the only azhwar who sang the most least of songs, only 10
* Who never sang the benefit song or the nooR payan or phala sruthi
* Who could enter the temple, even in 7th century
* Who was hit by the class priest- which was not hidden or covered up later. It was admitted that the priest hit him. But also recorded the change of heart and the same priest carried him to the shrine, realizing that he has committed bhagavatha apachaaram or adiyaar pazhithal!
அமர ஒர் அங்கம் ஆறும்
வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய
சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பார் ஆகில்
நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தான் புலையர் போலும்
அரங்க மா நகருளானே!
//Radha said...
ஹலோ ! என்ன? என்னை பார்த்தா ரொம்ப இளக்காரமா போச்சா ? பிளான் ஏறி அமெரிக்கா வருவேன்.//
வாவ்! வருக! அருள் மழை பொழிக!!
ஸ்ரீலஸ்ரீ ராதா திக்விஜயம்! போஸ்டர் அடிங்க டே! :)
//என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும் !!//
ஆறு முகம் இருக்க, ராதா முகம் கண்டு அஞ்சுவோமா? :)
@ஜோ அமலன்
//Is he referring to the God of Tirupathi or just Srirangam. If the latter, is He also addressed as வேங்கடவன்?//
தொண்டரடிப்பொடி ஆழ்வார் மட்டுமே, அரங்கன் ஒருவனையே பாடினார்! மற்ற பதினோரு பேரும், அப்படியான வரைமுறைகளை வைத்துக் கொள்ளவில்லை!
இங்கே, திருப்பாணாழ்வார், அரங்கனைக் கண்டு பாடும் போது, ஏன் வேங்கடவா என்ன வேணும்?
அதுவும், இது நாள் வரை, கோயிலுக்குள் நுழையாதவர்! வெளியில் இருந்தே வீணை வாசித்துப் பண்களைப் பாடியவர்! இன்று முதன் முதலாக அரங்கனைக் காண்கிறார்! ஆனால் அரங்கா அரங்கா என்னாது, முதலில் "விரையார் பொழில் வேங்கடவன்" என்று சொல்லி விட்டு, அப்புறம் தான் "நீள்மதிள் அரங்கத்தம்மான்" என்கிறார்! ஏன் இந்த மனப் போக்கு? என்ன ஆயிற்று பாணருக்கு?
பெரியவங்க பேசிக்கிறதெல்லாம் எனக்கு ஒண்ணும் புரியலை :) ஓரமா நின்னு கேட்டுக்கறேன்.
பாசுரம் படிக்க, கேட்க, சுகம். நன்றி ராதா.
//நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.//
இவனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :)
//பாசுரம் படிக்க, கேட்க, சுகம். நன்றி ராதா. //
இந்த கமென்ட்டை பார்த்ததில் படித்ததில் சுகம். :-)
//btw, here are some people who are ardent fans of srirangam perumal - the one and only periya perumal. so, pls rethink about PP. :-)//
When did i say am not a fan?
I AM HIS FAN!
His fan His fan His fan!
He has not given me 'straightforward' darshan in 10 years.
He has been ruling in my dreams for all this time.
Instead of Him taking the pain and logistics of coming and seeing me, He could have given me direct ticket to His presence.
But, that's His way.
So, to discount me as 'not being His ardent fan' is too much!
i will not accept this!
But, MY PP IS IN TIRUPATI.
Ungalukku Ranga PP-aga irukkalaam, enakku PP Tirupati Perumal dhaan. :))
Ranga is diferent...i was born in Tiruchi, so i was born at His feet, He is very close, but i can't call Him PP.
He is the Lord of My Dreams!
Aga!! Enakku short form kidaichiruchu!!!
Kanavu Perumal! KP!!! :))))
So, neenga PPnnu sonna naan KP-nu purinjikkiren.
Naan PP-nnu sonna neenga purinjikonga :)
@KRS:
//ஹே, நீ இன்னிக்கி ரன்பீர் கபூர் போல இருக்கே!
ஹேய், நீ மீசை வச்சி இருக்கும் போது விக்ரம் மாதிரி இருக்க!
ஷேவ் பண்ணலீன்னா, பக்க வாட்டுல சூர்யா மாதிரி இருக்க!
பொறுக்கி மாதிரி ஏன்டா சிரிக்கிற? சிம்பு மாதிரியே இருக்க!
...
and so on...//
Very nice comparison, i like it, but even if we made all these people into an assembly line, they wouldn't match even one millionth of His good looks.
So, sorry.
Maybe, if they did the role of Kannan in any of their movies, i'll consider. :)
Even then, madhippu get-up kku dhaan! :))
That is why, i like comparing Him with Him.
So, i like your last line:
//இப்படி எல்லாம் வெட்கப் படறா மாதிரி நடிக்காதே! திருவரங்க மோகினி அவதாரம் மாதிரியே இருக்க!//
//அதுவும், இது நாள் வரை, கோயிலுக்குள் நுழையாதவர்! வெளியில் இருந்தே வீணை வாசித்துப் பண்களைப் பாடியவர்! இன்று முதன் முதலாக அரங்கனைக் காண்கிறார்! ஆனால் அரங்கா அரங்கா என்னாது, முதலில் "விரையார் பொழில் வேங்கடவன்" என்று சொல்லி விட்டு, அப்புறம் தான் "நீள்மதிள் அரங்கத்தம்மான்" என்கிறார்! ஏன் இந்த மனப் போக்கு? என்ன ஆயிற்று பாணருக்கு?// - KRS
//சிறப்பான கேள்வி. பத்து மதிப்பெண்கள். :-)//-Radha
Myself: What? Kelvi ketta answer pannanum.
Adha vittuttu why are you repeating the question??????? :)))))
//@KRS:
//KK, நீங்க தான் பெரும் நடிகனான எந்திரன் எம்பெருமானுக்கு, டைரக்டர் சங்கரா? :)//
Illai, ennai nadigai-aaki aati padaikkum director avar! :))
”முதலில் "விரையார் பொழில் வேங்கடவன்" என்று சொல்லி விட்டு, அப்புறம் தான் "நீள்மதிள் அரங்கத்தம்மான்" என்கிறார்! ஏன் இந்த மனப் போக்கு? என்ன ஆயிற்று பாணருக்கு?
”
The writer Radha is addressed here, I think.
His legend says he never moved out of Uraiyur.
His going to Srirangam - a town away frm Uraiyur - was not of his own. But forced. He was aware it would be asking for the moon: the scriptures forbade people like him to enter any city or town. In Uraiyur he lived in his own dalit quarters.
But he concentrated on the God of Srirangam.
But he is referring to Tirupathi in two places. He is giving the name of Tirupathi God to Srirangan. Or calls Him as Venkatavan. Using the same name.
If he was aware of Tirupathi, why he didn't go there? Of course, he wouldnt be allowed. Still he could go as near as the Hills which could be seen from far away; or upto Keezh Tirupathi. No one could stop him.
Going on pilgrimage by walk was common in those days. Why didn't he do that?
If the answer is, he concentrated on God of Srirangam only, why so?
The writer should make us think more with her explanation. Could she?
//ven if we made all these people into an assembly line, they wouldn't match even one millionth of His good looks. //
//That is why, i like comparing Him with Him. //
@KK,
Thats an excellent reply along expected lines ! :-)
@Jo,
You are asking questions for which I don't have clear answers. :-) One can only speculate about the actions of a great soul...and in this case, we are talking about the life of a person who lived thousands of years ago...well, we can provide a zillion explanations as to why the Azhwar did like that and why he didn't do like that...but I sincerely believe that the actions of a true devotee/gnani are inscrutable...very much like the actions of the Lord. I believe that the only way to truly understand great souls is to become one !
//The writer should make us think more with her explanation. Could she? //
SHE can't. Never in this birth. :-)
~
Warms Regards,
Radhamohan
@Jo,
Regarding your other question on two Azhwars who sang only about Arangan...I was talking to my friends. They were suggesting that you might have heard about two Azhwars who didn't sing about Venkatavan or Thirupathi Perumal.
1) Thondaradipodi Azhwar - Didn't sing about any other divya desam perumal except Ranganathar
2) Madhurakavi Azhwar - Didn't sing about Perumal at all. He sang only about his guru, Nammazhvar.
Radha said...
//குமரன் அனுமதித்தால் நான் அறிந்துகொண்டதை சொல்வேன் இங்கே! //
என்ன அநியாயம் இது ? பதிவு போட்ட என்கிட்டே அனுமதி கேட்காம பின்னூட்டம் போட்டவங்ககிட்ட அனுமதி கேக்கறீங்களே !!
1:59 AM//
பின்னூட்டத்துல சாத்வீகமாகேட்டார் எங்க குமரன் அதான் சொன்னேன் நீங்க பெரியவாலா இருக்கீங்கப்பா கே ஆர் எஸ் தேவல:”:):)
//Radha said...
அக்கா,
இப்போ தான் பதிவை complete செஞ்சேன். :-)
உங்கள் உபந்யாசம் நிற்காமல் தொடர அரங்கனை
... <<<<>>.அரங்கன் சொல்லிட்டார் இந்த ராதாமோகனுக்காக அடுத்தபதிவை கே ஆர் எஸ் பாணில எழுதணும்னு பாக்லாம் வருதான்னு! ஏன்ப்பா ஏதோ அபூர்வமா நானே கொஞ்சம் சீரியசா எழுதினா உடனே உபந்நியாசம்னு சொல்லி கிண்டலா?:) நான் நானா எழுதினா அது நான்( naan)ஆகிஉங்களுடைய மண்டையப்பிச்சிடும்:))
//Radha said...
//ராதா...எனக்கும் ஒரு ஆசை நிறைவேத்துவிங்களா?
//
ஹலோ ! என்ன? என்னை பார்த்தா ரொம்ப இளக்காரமா போச்சா ? பிளான் ஏறி அமெரிக்கா வருவேன். என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும்
///
:):) hahhaahaa!!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@
தொண்டரடிப்பொடி ஆழ்வார் மட்டுமே, அரங்கன் ஒருவனையே பாடினார்! மற்ற பதினோரு பேரும், அப்படியான வரைமுறைகளை வைத்துக் கொள்ளவில்லை!
இங்கே, திருப்பாணாழ்வார், அரங்கனைக் கண்டு பாடும் போது, ஏன் வேங்கடவா என்ன வேணும்?
அதுவும், இது நாள் வரை, கோயிலுக்குள் நுழையாதவர்! வெளியில் இருந்தே வீணை வாசித்துப் பண்களைப் பாடியவர்! இன்று முதன் முதலாக அரங்கனைக் காண்கிறார்! ஆனால் அரங்கா அரங்கா என்னாது, முதலில் "விரையார் பொழில் வேங்கடவன்" என்று சொல்லி விட்டு, அப்புறம் தான் "நீள்மதிள் அரங்கத்தம்மான்" என்கிறார்! ஏன் இந்த மனப் போக்கு? என்ன ஆயிற்று பாணருக்கு?
11:45
///எனக்குத்தெரியுமே ஆனா பதிவின் உரிமையாளர் ராதா அனுமதிச்சாதான் சொல்வேன்(என்ன ராதா இப்போ கேட்டுட்டேன் ஒகேயா? அக்காவா கொக்கா?:)
"I believe that the only way to truly understand great souls is to become one !"
It is not possible for mortal souls like us to become as paramagnani or gnani as the azhwaars.
Then, what else can we be, and still be the devotees of the God we worship?
If one cant even believe like you do above, then what for Azhawaars are ? Why do we read them at all ?
These are very serious theological questions for which I do have answers, but cant write here.
Others may perhaps write a little on such questions. Pl try.
Rendering the paasurams in easy Tamil, and from the reactions here, and elsewhere, one concludes that the passurams evoke feelings of ardour of spirituality: பரவசமாக இருக்கிறது. அருமை அருமை, என்ன சுகம். அற்புதம். அடடா..அடடா.
Such words of appreciation remind me of urdu poetry conferences where the audience shake there heads saying adadaa arumai. I refer to Urdu Poetry conferences because it is customary and compulsory to show your reaction by body language.
I am not hurting anyone here who have written that. I only ask: is it for that the paasurams meant for?
Or, is it for making us, as you believe, gnani?
The second is also impossible.
In such circumstances, what are the passurams for?
If there are no benefits, are such passurams a waste?
The answer should be defintiely a NO.
But what is the answer?
You will give ten passurams one by one, and I have to read the comments:
என்ன சுகம்! அற்புதம்! அருமை..அருமை.
I am not satisfied. Like me, there may be so many.
Something seriously missing somewhere ! Where ? What ? Who will tell me that ?
I dont hope you wont like such kind of intellectual debate over Azhwaar paasurams. Let me stop.
@Jo:
i am sorry to enter your conversation thus, but i must.
You seem to refute the very purpose of this blog, and the very basis of Sri Vaishnavam by your statements.
First of all, the paasurams of Alwars cannot make anyone 'gnani', simply because if you are looking for 'gnan' alone, you have lost it, according to the Alwars.
Second of all, there is only one Tendulkar, but does that mean everyone else cannot bat? We may not make 50 test centuries, but what of the joy of playing cricket?
So, a kid learning cricket in this age may think : okay, i want to be like Tendulkar.
But, first and foremost, He must play the game, enjoy it.
So, we are all kids here, learning bhaki. The alwars and Aandal are on the highest siritual platform of purest bhakti.
We, on the other hand, are making our baby strides there.
It is not pride which makes me say nothing, except we ourself, can stop us from reaching that platform.
But, to reach there, what is important, is not seeking the tags, or celebrity, or fame attached with that platform. The Alwars sought none of it.
It was the purest of bhakti that elevated them there.
We can go on striving, yes, with diligence and determination, not for the benefit of reaching that platform, but with love, and increasing love for Perumal, by complete surrender.
Even then, there's no failure here.
Failure is non-acceptance of His greatness.
Failure is atheism and agnostic attitude.
Once you have, even once, inadvertently even maybe, utterered His name, recognized Him as your master, there is no real failure for such a soul.
@Jo:
First of all, i don't understand the focus on 'dalit' here.
Yes, Tirupaanalwar came from that society, but most alwars are from different classes of society.
Yes, maybe he was discriminated against, but it is only to refute that is he one of the epitomes of bhakti.
Bhakti is common to any man, or woman, or animal, or plant.
Bhakti elevates a person from wherever he is.
There is a reason why Alwar refers to Tirupati here.
The Lord is standing in Tirupati, while He is reclining on His adishesha here.
Note that the main focus of this paasuram is singing the willingness of Perumal to go to any extent for His devotee.
So, Perumal, is most enticing to the heart, in His majestic reclining form.
But, yet, such is His concern for His devotees that He assumes a 'standing position' to bless His devotees.
He stands, gives us joy, and has no qualms doing that.
He has no qualms being at the service of His devotees.
That's what Alwar meant to stress.
That His beautiful "கமலபாதம்" worthy of all the worship in the world, will even undergo all the pain in the world for He is விமலன், நிமலன், நின்மலன்.
That is why seeing Ranganathar's feet takes Him to thinking of Tirupati, where the same Lord stands.
Besides, none of the Alwars put foot on Tirupati, irrespective of any class or creed.
They thought it unsacred to put foot on the hill.
They confined themselves to the foothills and sang His praises from there.
It was Sri Ramanuja who was persuaded, part by his followers and part by Perumal, to climb the hill and set an example for Perumal's devotees to follow.
Even HE went on his knees, so as not to pollute Tirupati. He is said to have stopped all mortal activities temporarily before going up there.
So, contrary to what you state, while anyone could have made the journey up, if they could brave the dense forests, none of the Alwars did, out of respect for the hills.
ஷைலஜா அக்கா ! நான் சாத்வீகம் இல்லைன்னு ரொம்ப சரியா புரிஞ்சிகிட்ட ஒரே ஆள் நீங்க தான். :-)
//எனக்குத்தெரியுமே ஆனா பதிவின் உரிமையாளர் ராதா அனுமதிச்சாதான் சொல்வேன்(என்ன ராதா இப்போ கேட்டுட்டேன் ஒகேயா? அக்காவா கொக்கா?:) //
அப்பாடா ! கடைசியா என்னையும் மதிச்சி அனுமதி கேட்டதுக்கு ரொம்ப நன்றி. :-)
தங்கள் மை.பாவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :-)
Read ILWK. Hope to hear from others too.
May Radhamohan, Shailaja, Kumaran and krs who have written here, give their understanding.
Questions are:
Whether the mortal identification (of being a dalit) to be dropped by the ordinary people like us, or to be pointed out when we read the paasurams of Thiruppaanaar?
Do you agree with the statement that none of the azvaars went to Tirupathi Hill for fear they would pollute it; and all of them stayed down below and worshipped?
What benefits do you like to derive from these passurams? Just literary or spiritual pleasures only? Why do we read the paasruams then?
How does asking such questions violate the very basis of Srivaishanvaism,as ILKW says?
What is that basis, according to you? Saranakathi? Anyting more?
Pl put up your views or understandings.
//It is not possible for mortal souls like us to become as paramagnani or gnani as the azhwaars.
//
@Jo,
My belief is quite different. Through His grace, we too can realise His greatness and infinite love.
@Jo:
i'll come back to your questions a bit later, as am quite busy and preoccupied with work now.
But, before you do ask everyone for their views, i would like to know yours.
They (your views) are quite unclear, and while the blog authors' stand is more or less evident through their many posts, i don't get yours.
So, do reply: what DO you think is the benefit of the paasurams?
@Radha: How is it possible to "expect" my lines? :))
Which part of it was expected? :)
@kk,
its quite easy for me to guess as i have been with triplicane people for many years.... :-)
//I dont hope you wont like such kind of intellectual debate over Azhwaar paasurams. //
@Jo,
Its been quite some time since I stopped debating over spiritual matters....but I don't ask others to stop. Debates in spiritual matters start on a less serious note in an apparently harmless manner...but they invariably end up offending one party or the other. I leave it to you and the other members whom you have asked for comments. Hope everyone is mature enough to keep it at a generic level without personalizing things.
A small request. I have a few more posts pending to be posted in this auspicious month of Margazhi. While we all keep discussing here, I wish the other posts keep moving. Hope you will be fine with that. :-)
திருப்பாணாழ்வார், வேங்கடவனைச் சொல்லி, பிறகு அரங்கனைச் சொல்வதற்கான பார்வை மட்டும் இதோ:
இராமன் செய்ததைக் கண்ணனாகப் பாடுவதும், ஒரு திருத்தலத்தில், இன்னொரு திவ்யதேச எம்பெருமானை நினைவு கூர்வதெல்லாம் ஆழ்வார்களுக்கு வாடிக்கையே!
பொதுவாக, ஆழ்வார்கள் மற்றும் எளிய பக்தியுள்ளம் கொண்டவர்களுக்கு, இந்த ஊர்த் தெய்வம் முதலில், அப்புறம் தான் அந்த ஊர்த் தெய்வம் என்ற கணக்கு வழக்கு எல்லாம் கிடையாது! மனத்துக்கு இனியான் அவர்களுக்கு எந்த நேரத்தில் எப்படித் தோன்றுகிறானோ, அப்படிப் பாடுவதே வழக்கம்!
அப்படியே, திருப்பாணாழ்வாருக்கு, வேங்கடவனாக ஒரு தோற்றம் தோன்றிற்று முதலில்...ஏன் என்றால்...அவர் முதலில் கண்டது திருவடிகளை!
திருவடிகளை "இதோ" என்று காட்டிக் கொடுத்து நிற்பது வேங்கடவனே!
அகலகில்லேன் என்னும் திருவடிகளில் சரணாகதி ஆகும் நம்மாழ்வார் பாசுரமும், திருவேங்கடமுடையானைக் குறித்தே!
திருப்பாணாழ்வார், அவர் பிறந்த அன்றைய குல நிலைமை காரணமாக, எந்தவொரு ஆலயத்துக்கும் அது வரை சென்றாரில்லை! ஆனால் ஆர்வத்தால் பல எம்பெருமான்களையும் அறிந்தே வைத்துள்ளார்! கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன், என்னுள்ளம் கவர்ந்தானை - என்று கதைகளையும் அறிந்தே உள்ளார்!
அப்படிப்பட்டவருக்கு, முதலில் கண்ட காட்சி "திருவடிகளே"! = கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே!
நான் என் கண்ணுள் ஏற்கனவே சதா சர்வ காலமும் நினைத்து வைத்திருக்கும் பாதங்களை ஒக்கின்றதே!
அதைக் கண்ட மாத்திரத்தில், திருவடிகளைக் காட்டிக் கொடுக்கும் வேங்கடவன் நினைவுக்கு வந்து விட =
அதுவே பாட்டிலும் முதலில் வந்து வி்டுகிறது! = விரையார் பொழில் வேங்கடவன்!
தாங்க மாட்டாத மகிழ்ச்சியில், அப்புறம் தான், தான் கடந்து வந்த, அரங்க நீள் மதில்கள் லேசாக நினைவு தட்ட = நீள் மதில் அரங்கத்தமான்!
நாமெல்லாம் பல முறை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் மெய் மறந்து நிற்கிறோம்! ஆனால், இவரோ, அந்த பச்சை மாமலை போல் அரங்கனின் திருமேனியை முதன் முதலாகக் கண்டு உருகுகிறார் அல்லவா? அதான் திக்கு முக்காடிப் போகிறார்! பாதங்களைச் சொல்லி, வேங்கடம் சொல்லி, மதிலைச் சொல்லி, அரங்கனைச் சொல்லி...பின் அங்கம் அங்கமாகக் கவனம் செலுத்திப் பாடத் துவங்குகிறார்!
மூன்றாம் பாசுரத்திலும் வேங்கடவன் நினைவுக்கு வந்து விடுகிறான், ஆழ்வாருக்கு!
வைணவப் பொது வழக்கில் கோயில் = திருவரங்கம், மலை = திருமலை அல்லவா! இரண்டுமே அதிகம் யாத்திரை செய்யும் தலங்கள்! ஆழ்வாருக்கோ, ஆலயத்துள் செல்லும் நிலை இல்லை! பிற யாத்திரைக்காரர்களிடம் கேட்டுக் கேட்டே, அந்த இரண்டு பெரும் ஆலயங்களே மனதில் நின்று, பாட்டிலும் நின்று விட்டது!
//மந்தி பாய் வட வேங்கட மாமலை, வானவர்கள், சந்தி செய்ய நின்றான் = அரங்கத்து அரவின் அணையான்//
வேங்கடவன், மேல் சாதி/கீழ் சாதி, மேல் உலகம்/கீழ் உலகம், தேவர்/அசுரர் என்று எல்லாருக்குமே பொதுவானவன்! அதான் நடுவில் வந்து நிற்கிறான்!
அவனைக் காண, வானவர்கள் கீழே இறங்க வேண்டும்!
அவனைக் காண, நாமோ, மேலே ஏற வேண்டும்!
இப்படி வானவர்களை இறக்கி, நம்மை ஏற்றி விடும் குணம் வேங்கடத்தானுக்கு! அதான் குறிப்பிட்டு, வானவர்கள் கீழே இறங்கி, சந்தி செய்ய நின்றான் என்கிறார்! அப்படி நின்றவனையும் இதோ இந்த அரங்கனின் பாதக் காட்சியிலேயே முதலிலேயே கண்டு விட்டேன்! என்பதாக ஆழ்வாரின் அழுகையும், அன்பும், ஏக்கமும், ஒட்டுமொத்த காதலாய், மனமென்னும் ஏரியை உடைத்துக் கொண்டு, கரை புரண்டு ஓடுகிறது!
//Going on pilgrimage by walk was common in those days. Why didn't he do that?//
யாத்திரை சென்றால் தரிசனம் பார்க்காமல் வர முடியாது! இவருக்கோ சமூகத் தடை/சமூக அநீதி! அப்பறம் எப்படி யாத்திரை செய்யத் துணிவார்? மனத்தாலேயே ஏங்கி ஏங்கி, மனத்தாலேயே யாத்திரை செய்து, பாணர் வீணை இசைத்து, ஏக்கத்தைக் குறைத்துக் கொண்டே அல்லவோ வாழ்ந்தார்!
உறையூரில் இருந்து திருவரங்கம் வந்தால் கோபுரமாச்சும் தெரியும்! திருமலையில் ஒன்றுமே தெரியாதே! கீழ்த் திருப்பதி என்பதே அப்போது கிடையாதே! எதைக் காண்பார்? அதான் பாத யாதிரை செல்லாமல், இந்த மனசு யாத்திரை!
@ஜோ
//"I believe that the only way to truly understand great souls is to become one !"//
//It is not possible for mortal souls like us to become as paramagnani or gnani as the azhwaars//
நீங்களே இரு விதமாகவும் முரண்படுகிறீர்கள்! :)
சாதாரண ஆத்மாக்களாகிய நாம், ஆழ்வாரைப் போல் பரம ஞானியாக முடியாது என்பதே அடிப்படையில் தவறு! ஆழ்வார் உள்ளத்துக்கும் விரோதம்!
ஆழ்வாரைப் போல் ஆழ்ந்தால் யார் வேண்டுமானாலும் ஆழ்வார் ஆகலாம்! அதற்குத் தேவை "ஆழ்தல்" மட்டுமே! ஞானம் அல்ல!
ஒன்றின் பால் எப்போதும் மாறாத ஆர்வம்/அன்பு, ஆழ்வார் ஆகி விடும்! நாம் நம் ஆர்வங்களை அடிக்கடி மாற்றிக் கொள்கிறோம்! அவ்வளவே :)
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை - அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு!
//Such words of appreciation remind me of urdu poetry conferences where the audience shake there heads saying adadaa arumai//
ஹா ஹா ஹா
சுகாசினி சிந்து பைரவி படத்தில் பாடுவாங்க!
என்னமோ ராகம், என்னென்னவோ தாளம்
தலையை ஆட்டும், புரியாத கூட்டம்!
- அது போல சாயல்-ல இருக்கு உங்க பின்னூட்டம்! ஐ லைக் இட் :)
//I am not hurting anyone here who have written that. I only ask: is it for that the paasurams meant for?//
உங்கள் கேள்வியில் "தேடல்" இருக்கிறது என்று நீங்கள் நம்பினீர்களேயானால்...இதற்கான விடையை நீங்களே சொல்லி விடுவீர்கள்!
பாசுரத்தால் = பயன் என்ன?
அது யாருக்கு என்பதைப் பொறுத்து அஃது!
1. தமிழ் இலக்கியம், விவாதம், கருத்தரங்கு, வரலாற்று ஆராய்ச்சி
2. பக்தி, சமய ஆராய்ச்சி, சமய வரலாறு
2. சாஸ்திர/சம்பிரதாயம், வாயால் ஓதுதல், அப்பறம் விலகிப் போய் அன்றாட வேலையைப் பார்த்துக் கொள்ளுதல்
3. அன்பு, மனத்தால் ஓதுதல், பாசுரங்களைக் காணும் போதும் எண்ணும் போதும், ஆருயிர்த் தோழனைக் கண்டது போல் உவகை!
//If there are no benefits, are such passurams a waste?//
:)
இறைவனோடு "உறவாடுவதால்" என்ன பயன்?
(வணங்குவது, துதிப்பது என்ற சொற்களை அறிந்தே தவிர்க்கிறேன்)
"அன்பு கொள்ளுதல்" என்பதால் என்ன பயன்?
அதைப் போலத் தான் பாசுரங்களும்!
இது தான் பரிமாணம் என்று கிடையாது!
கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் போகிறேன்! மன்னிக்கவும்!
* முத்தம் கொடுப்பதால் என்ன பயன்?* அந்தப் பயன் கொடுப்பவருக்கா? பெறுபவருக்கா?
* அது ஒரு செய்கையா? இல்லை அக வாழ்வின் பரிமாணமா?
எம்பெருமானுக்கு முத்தம் = அதுவே பாசுரம்!
எதனால் இந்த முத்தம்? அதன் பயன் என்ன?
எம்பெருமானுக்கும் உயிர்களுக்கும் இடையேயான உறவு!
அதன் இயற்கையான வெளிப்பாடே இந்த முத்தம்!
இது காதல் முத்தமோ, நட்பு முத்தமோ, தாய்-சேய் முத்தமோ...ஏதோ...ஆனால் உறவு...உறவு...உறவு!
உன் தன்னோடு-உறவேல்-நமக்கு
அது இங்கு ஒழிக்க ஒழியாது!
அந்த "உறவில்" ஆழ்ந்தவர்கள் = ஆழ்வார்கள்!
அந்த "உறவில்" நம்மை ஆழ்த்துபவர்கள் = ஆழ்வார்கள்!
குலத்தால் (தலித்) என்று சொல்லி ஒதுக்கினாலும்,
ஒதுங்க மாட்டாது, ஒதுங்கத் தெரியாது....
அவனே அவனே அவனே...என்று
அவன் உறவிலேயே ஆழ்ழ்ழ்ழ்ழ்ழ்ந்து போன......
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!
@ஜோ
அடியேன் "முத்தம்" என்று மேற்சொன்னது, உங்கள் கேள்வியில் உள்ள தேடலின் பொருட்டே! அது மரபு வழியாகச் சொல்லப்படும் ஆசார்ய விளக்கம் அல்ல!
எனினும் பாசுரத்தின் பயன் = "எம்பெருமான்-உயிர்கள்-உறவு" என்பது தான் அனைத்து விளக்கங்களின் சாராம்சம்!
கீழ்க்காணும் வெண்பா, இதை மரபு வழியாக எடுத்துச் சொல்லும்!
பாசுரத்தின் பயன் என்ன? =
மிக்க இறைநிலையும், மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும், தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்(து) இயல்!
பாசுரத்தின் பயன் என்ன? =
* மிக்க இறைநிலையும் = எம்பெருமானின் தன்மையைச் சொல்வது
* மெய்யாம் உயிர்நிலையும் = உயிர்களின் தன்மையைச் சொல்வது! மெய்யாம் என்று ஏன் சொல்கிறார் என்றால் உலகம் மெய்; மாயை அல்ல!
* தக்க நெறியும் = உயிர்-எம்பெருமான் இந்த உறவை உறுதிப்படுத்திக் கொள்ள தக்க நெறிகள் யாவை? அதைச் சொல்வது!
* தடையாகித் தொக்கியலும் = இந்த உறவுக்குத் தடையாக இருப்பது எது? அதைச் சொல்வது!
* ஊழ்வினையும் வாழ்வினையும் = இந்த உறவால் அடையும் பேறு என்ன? = உறவே தான்!
இப்படி நாம்-அவன் உறவை உணர்விப்பதே பாசுரத்தின் பயன்!
தங்கள் கேள்வியின் தேடலில், இன்புற்று இருங்கள் ஜோ!
இறுதியாக...
//Whether the mortal identification (of being a dalit) to be dropped by the ordinary people like us, or to be pointed out when we read the paasurams of Thiruppaanaar?//
தலித் என்பதைச் சொல்லாமல் திருப்பாணர் கதையைச் சொல்லிவிட முடியாது!
அதனால் அதையே வலிய அழுத்துவதும் தேவையில்லை! வலிய மறைப்பதும் தேவை இல்லை! - பாசுர விளக்கங்களில்!
ஆனால், சமூக ஆய்வுக்கு, தனிக் களத்தில், கண்டிப்பாக இதை விரித்து ஆய்ந்து பேசலாம்!
//How does asking such questions violate the very basis of Srivaishanvaism,as ILKW says?//
:)
ILWK சின்னப் பெண்மணி-ங்க! மிகுந்த ஆர்வம்/அன்பு கொண்டவர்! கேள்வி கேட்பது வைணவ அடிப்படைக்கு மாறானது என்ற பொருளில், அவர் சொல்லவில்லை! உணர்வுப் பூர்வமாக, கேள்விகளை நம்மை நாமே கேட்டுக் கொள்ளலும் வேண்டும் என்ற பொருளில் தான் சொன்னார்!
அதே போல் தான் ராதாவும்! அவன் விவாதிக்கக் கூடாது என்று சொல்லவில்லை! கலந்துரையாடல் வேறு எங்கும் சென்று விடக் கூடாதே என்ற ஆதங்கமே அது!
இராமானுசர் கேட்காத கேள்விகளா? அடிப்படையையே ஆட்டி வைக்காத கேள்விகளா?
ஆனால், அவர் முதலில், தன் தேடலைத் தெளிவுறுத்திக் கொண்டு, பிறகே கேட்டார்! அதுவும் பழகிய குருவிடம், மற்றும் அன்பர் குழாங்களிடம்!
இங்கு நீங்கள் திடீரென்று தோன்றிக் கேட்டதால்...
அதுவும் உங்கள் தேடல் என்ன என்று தெளிவாக உரைக்காத பட்சத்தில்...
சற்றுமே அறிமுகம் இல்லாத ஒரு வாசகருக்கு, எப்படியான பதிலை அளிக்க வேண்டும் என்று சற்று துணுக்குறுவது உலக இயல்பே!
எனவே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது, தங்கள் தேடலைத் தெளிவுறுத்தி, வழக்கம் போல் கலந்துரையாடலாம்!
கேள்வியே வேள்வி!
வேள்வி விழைந்த உங்களுக்கு, கண்ணன் பாட்டின் குழுவின் சார்பாக, அடியோங்கள் நன்றி!
திருவேங்கடம் என்பது அர்ச்சாவதாரத்திற்கு பொற்கால் இட்ட இடம் என்பது பரமபதத்திலிருந்து திருவேங்கடமலைமேல் இழிந்து திருவரங்கம் சேர்ந்தான் என்பர். இப்படி முதலில் ஆழ்வார் திருவடிகளை சேவிக்கிறார்
krsன் விளக்கம் அற்புதம்!(கொஞ்சம் கமல் டச் என்றாலும்:):)
krsன் விளக்கம் அற்புதம்!(கொஞ்சம் கமல் டச் என்றாலும்:):)
....
Ur comments Ms Shailaja ?
Before comments, may all of you not read my blog which may prejudice ur minds.
I am neiher a dalit nor a Tamil. I have no vested interest in anything.
Take me just a free intellectual pl who wants to know all before forming his opinions on anything.
Looking forward to more comments.
Dont mistake me.
I am just curious to know how the bhaktas approach Aazhwaars, and how it differs from mine.
Regards
ஷைலஜா said...
krsன் விளக்கம் அற்புதம்:):)
அது சரி.. last post-la நீங்க விளக்கம் solrenu innum sollalaiye . narasimmar kambar paadal .:)
தவ தாஸோஹம் தவ தாஸோஹம்
தவ தாஸோஹம் தாசரதே...
அந்த நாளும் வந்திராதோ...
ஓடும் புள்ளேறி..
பொறுமா நீள் படை...
பரிவதில் ஈசனை பாடி...
இப்படி பல அருமையான பாடல்களுக்கு நன்றி
அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்!
:)
பாடல்கள் உங்களுக்கும் பிடித்தது குறித்து சந்தோஷம் ராஜேஷ். :-)
@Radha:
//ts quite easy for me to guess as i have been with triplicane people for many years....//
i am deeply attached to PSP. :)
But, i don't live in Triplicane now, not yet. :)
And, if you were to categorize me as belonging to somewhere, then my identity is Thenthiruperai. :)
But, yes, am Triplicane vaasi, in the sense that He owns me, and i live at His feet. :)
But, what do you mean 'living with Tp people'? Aren't you one of them yourself?
@Jo:
In response to your statements, i would like to clarify somethings which i did say.
//What benefits do you like to derive from these passurams? Just literary or spiritual pleasures only? Why do we read the paasruams then?
How does asking such questions violate the very basis of Srivaishanvaism,as ILKW says?
What is that basis, according to you? Saranakathi? Anyting more? //
What i meant 'violating Sri Vaishnavism' is your linking of 'intellect' with Alwar Pasurams.
Till now, you have stated that you are an intellectual without vested interests.
Perumal is the giver of intellect.
He is the Creator, Maintainer of all things our intellect can percieve, and much beyond.
Newton famously stated that 'science' and 'discovery' was like throwing a pebble into an ocean to determine it's depth.
Though we may try, it is beyond the scope of our intellects to understand Perumal.
So, in case of trying to understand the paasurams of Alwars, intellect, by itself, is a vested interest.
So, how do we really reach out?
The connection goes from the heart.
He is the Paramatma ruling all our hearts, and it is through our hearts that we can connect.
The feelings of people on this blog, you say, surprise you.
You say you are not satisfied.
Let me bring to your notice one thing: the Alwars, never set out to become gnanis.
They set out to sing His praises, to establish the connect with Him.
So, how come they are touted as gnanis?
Because, doing so, they had gained the prime most of intellectual knowledge.
In this world where change is the only constant, they had established the connect with the only Universal Constant.
He is the source of all intellect, and they had Him!
They never sought any pedestal like gnani. Not one of them.
...
So, the real enjoyment of Alwar's Pasurams is not just 'literary'.
It is where the literary aspect points.
There may be hundreds who will write about Him.
But, there's will be the gems.
Why?
Because, one word takes us to thinking about Perumal.
That is the comfort the people on the comment's page talked about.
The Paasurams directed our thoughts to Him, who will take a hundred steps towards us, if only we took one.
The Pasurams took us to Him, who is our shelter.
That, indeed, is the phala of the paasurams.
They are perhaps, to mundane eyes, a waste.
But, to the eyes that have even once set their glances on Him, they are the best of the best.
It is not LITERARY.
It is not even SPIRITUAL, if spiritual implies something other than thinking of Him.
That is what i meant by against 'Sri Vaishnavism'- the attempt to percieve Him through one's intellect. It is highly impossible (Paasurams are not intellectual, they are the feelings of a true devotee)
The only way to percieve Him is through our heart.
Sharanagathi may follow, must follow, but Sharanagathi by itself is not a means to an end.
It is not a road that may culminate at moksha.
Sharanagathi is the establishment of the Supreme connection.
It is a point of infinite love where nothing else seems important.
Where, a person is ready to leave all the ties that hold him/her back from establishing the only true relationship.
Forgive me if this suggestion is too intrusive, but you may just understand people's feeling on this post's comments if you did this: Just go to your nearby temple, and try taking in the meaning of the Pasuram, standing in front of Him.
//Ur comments Ms Shailaja ?
Looking forward to more comments//
No More Comments!
ஜோ, தனித்தனியான கருத்துக் கணிப்பு, இங்கே அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்!
தங்களுக்கு அடியேன் சொன்ன கருத்துக்கள், கண்ணன் பாட்டுக் குழுவின் பொதுவான கருத்துக்களும் கூட!
Let Radha continue the next part!
We are done with discussions on this post!
//Take me just a free intellectual pl who wants to know all before forming his opinions on anything.//
:)
நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே:)
ஸ்ரீரங்கம் மூல பெருமாள் பாதத்தை பார்த்துதானே ஆழ்வார் பாடினார்.
பெருமாள் திருபாதம் பார்க்க நீங்கள் போட்ட படத்தை பெரிது படுத்தி பார்த்தேன் .
மூல பெருமாளின் பாதம் புற கண்களுக்கு தெரியவில்லை. ஏன்?
:)
//மூல பெருமாளின் பாதம் புற கண்களுக்கு தெரியவில்லை. //
ராஜேஷ் ! அடுத்து பாதம் தெரியற மாதிரி படம் போடறேன். :-)
@KK,
in my case PSP is deeply attached to me. :) i lived in triplicane several years ago...now i am close to nanganallur anjaneyar. :)
//I am just curious to know how the bhaktas approach Aazhwaars, and how it differs from mine.
//
@Jo,
The way you have addressed us - as bhakthas - is very heartening to read. As an intellectual you may be knowing that bhakthi is nothing but expression of love. The whole world is moved by the force called love. The lower forms of love are selfish and may degenerate to fanaticism. Bhakthi at its glory, is love for love's sake. Through pasurams we are trying to dig deep into our own hearts and strike gold. You too should be having it in your heart of hearts. Thats why you were able to address us that way. :-)
May the Lord shower His choicest blessings on you brother !
I havn't posted any comments but the message appeared: Your comments have been saved..." What is the prob?
Generally in such blogs, my comments are disallowed at the very beginning. Here, you keep an open forum. I am surprised. All that I write appEars hey presto !
My comments:
"No more from me too, Krs. I have taken your comments as those of Radha too.
I have read the further comments from the LK also.
Thanks for all comments. Maybe, I am not able to get at you. But, truth to tell, they are intellectual, esp. krs'
This is not the place for me to talk about my approach to azvaars. I can, however, say I am not seeing myself one with you. I am an odd man out here!
My approach to azwaars is all my own. I think that is the right way for me: me and Azvaars - all alone ! Perhaps I may write all about the way in my blog some time in future.
May the blessing of Thiruvaazh Maarban upon you and all your near and dear sure as it did on Azvaar's mother and azvaar too. நிமலன், isnt he? I live close by, in fact, so near to it, rather inside too: திருவெண்பரிசாரம் @ திருப்பதிசாரம், the abode of Thiruvaazh Maarban in Nagercoil.
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை அளிப்பான் திருவாழ் மார்பன்.
பொய் நின்ற ஞானம், பொல்லா ஒழுக்கு, அழுக்கு உடம்பு - Nammazvaar describes himself. Quite interesting. More on my blog on this. A different take on Azvaars.
Thx.
@Jo,
May Thiru Vaazh Marban shower His blessings on all of us ! Its a bit unfortunate that people lost patience when you kept asking for comments one by one without providing your own. Please bear with us. And yes, I would be interested in reading your article and your take on Azhvaars !
@ஜோ
//Generally in such blogs, my comments are disallowed at the very beginning. Here, you keep an open forum. I am surprised. All that I write appEars hey presto !//
:)
அடியார்களை...
அவர்கள் "கருத்துக்காக"
அவர்களையே ஒதுக்குவது என்பது
எம்பெருமானையே ஒதுக்குவது போல்!
அதைச் செய்ய மனம் துணியாது! உங்கள் கருத்தும் பின்னூட்டமும் கண்ணன் பாட்டில் என்றும் அலங்கரித்து இருக்கும்!
----------------------
//Thanks for all comments. Maybe, I am not able to get at you. But, truth to tell, they are intellectual, esp. krs//
ஹா ஹா ஹா
ஆழ்வார் கூட "Intellectual" தளத்தில் இல்லை! அப்பறம் தானே நாங்கள் எல்லாம்! :)
The Best Intellect is to tell our intellect that, not measuring, but desiring him is the objective of Intellect.
வையம் அளந்தானை "அளக்க" முடியாது! "கொள்ள"த் தான் முடியும்! :)
-------------------------
//This is not the place for "me" to talk about "my" approach to azvaars//
//"My" approach to azwaars is all "my" own//
:)
இரண்டு வாக்கியத்தில் இத்தனை "Me" and "My"-ஆ? :))))))
சரி, உங்கள் தேடலின் வழியாக, ஆழ்வார் உள்ளத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஆழ ஆழ...
இந்த "Me" குறைந்து, "Him" ஆகும்! = அவன் திருவுள்ள உகப்பு!
தங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
//Perhaps I may write all about the way in my blog some time in future//
Pl do & give us the link. If at all, you desire an open discussion, we will do it, at that forum!
//பொய் நின்ற ஞானம், பொல்லா ஒழுக்கு, அழுக்கு உடம்பு//
திருவண்பரிசாரத்து எம்பெருமான், திருவாழ்மார்பன் - திரு வாழ்ந்த மார்பன், வாழ்கின்ற மார்பன், வாழும் மார்பன்! - அவனை ரொம்ப ரொம்ப ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்கள்! :)
//My approach to azwaars is all my own. I think that is the right way for me: me and Azvaars - all alone !//
@Jo,
Able to appreciate your stance. Just like each one of us has a unique approach towards the Lord...each creature has his/her/its own speciality. Regarding Thiruvaimozhi, its a veritable mine of a variety of gems. Literally every person would be able to strike a chord with it. Intellectual philosophers, emotionally inclined bhakthas, dwaitins, visishtadvatins, advaitins, monks, householders, poets, musicians,...name a category - they will be able to find a set of pasurams which would appeal to them very much. That you have a different view is no wonder ! :-)