Saturday, December 11, 2010

MS ஊஞ்சல் பாட்டு! டோலாயாம் சல டோலாயாம்!

கண்ணன் பாட்டில் இது 197-ஆம் இடுகை!
இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :)
மொத்த பேரும், குழுவாக என்ன செய்யலாம்-ன்னு யோசனை சொல்லுங்க!
வழக்கமா, இந்தக் கேஆரெஸ் பய, சினிமாப் பாட்டைத் தான் கண்ணன் பாட்டில் போடுவான்! மீண்டும் கோகிலா படத்தில், கமல் பாடும் போது, "கண்ணா"-ன்னு ஒத்தைச் சொல் வந்துறக் கூடாது! அதையும் கண்ணன் பாட்டில் கொண்டாந்து போடும் அவன், இன்னிக்கி நம்ம திராச ஐயாவைப் பார்த்து திருந்திட்டான்! :)

திராச ஐயா தான், நல்ல மரபிசைப் பாடல்களை, கர்நாடக இசைப் பாடல்களை வலையேற்றுபவர்! அவர் வழியில், இன்னிக்கி கொஞ்சம் போல் திருந்தி...
இதோ எம்.எஸ் அம்மா அவர்கள் பாடிய ஊஞ்சல் பாட்டு ஒன்னைப் பார்க்கலாம்!

எம்.எஸ்-க்கு என்றே சில பாடல்கள் அமைந்து விடும்!
வேறு யார் பாடினாலும், அதிலும் எம்.எஸ் சாயல் தான் இருக்கும்!
அப்படியான பாடல்களில் இது ஒன்று!

திருவேங்கடமுடையானுக்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அன்னமய்யா!
பெருமாள் ஊஞ்சலில் வேகமாக ஆடுவதை,
அப்படியே வார்த்தைகளில் வேகமாக நகர்த்திக் காட்டுகிறார்!

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வாக்கு...
கூடவே, தமிழில், மெட்டு மாறாமால், தர முயன்றுள்ளேன்!
பாடிப் பார்த்து, பொருளும் இசையும் பொருந்தி வருகிறதா-ன்னு சொல்லுங்க!

ஊஞ்சல் போய் வருவது போலவே, பாடலும் போய்ப் போய் வருகிறது! டோலாயாம் சல டோலாயாம்! ஆடு பொன்னூஞ்சல்!இங்கே, எம்.எஸ் குரலில் பாடலைக் கேட்டுக் கொண்டே வாசிக்கவும்!

ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரி: அன்னமாச்சார்யர்

டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்
பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், அரி பொன்னூஞ்சல்

மீன கூர்ம வராக
மிருக பதி அவதார
தானவ அறே குண செளரே
தரணீ தர மரு ஜனக
(டோலாயாம் சல டோலாயாம்)

மீனும் ஆமை கேழலாய்
ஆளரி அவ தாரமாய்
பர...கால குண...வீர
பாரைத் தாங்கும் மாரன் எந்தை
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

வாமன ராமா ராமா
வர கிருஷ்ண அவதார
சியாமளாங்க ரங்க ரங்க
சாமஜ வரத முர ஹரண
(டோலாயாம் சல டோலாயாம்)

குறள் பல ராமா ராமா
குன்றம் எடுத்த வா-கண்ணா
கருத்த மேனி பொருத்த ரங்க
ஆனைக்கு அருளி, முரனை முடித்து
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

தாருண புத்த கல்கி
தச வித அவதார
ஷீர பாணே கோ சமானே
ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய
(டோலாயாம் சல டோலாயாம்)

சீருடை புத்த கல்கீ
ஐந்தும் ஐந்தும் அவதார!
ஐம்-படைகள் ஏந்தும் மால்-திரு
வேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)பாட்டை நாதசுரத்தில் கேட்கலீன்னா எப்படி? இதோ
நாதசுரம் - ஷேக் சின்ன மெளலானா

அப்படியே, இதர கலைஞர்களின் குரலில்...
* சுதா ரகுநாதன்
* மும்பை சகோதரிகள்
* சைந்தவி

எல்லாத்துக்கும் மேலா, எம்.எஸ் - B&W Video!
அப்பவே ரொம்ப அழகா இருக்காங்க! :)
ஊஞ்சல் வேகமாப் போவதை, கையால் அசைத்துக் காட்டிச் சிரிக்கிறாங்க! 0:22 இல் பாருங்க!

21 comments :

sury said...

அசத்திவிட்டீர்கள் !!

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

Radha said...

அடுத்து இந்தப் பாடல் தான் என்று பொருத்தமான படங்கள் தேடி கொண்டிருந்தேன். Thanks ! :-)

In Love With Krishna said...

Nice post.
Pattu romba pidichirikku. Tnx :)

btw, Sunday VK will be without meesai. Don't miss Him. :)

And, PSP daily evening 7:00 pola 'dolayam' aadraaru, or rather 'uyyali'. If you can, andha azhagai rasichu paarunga. :)

In Love With Krishna said...

@Radha: Appadiye unga post-kku redirect (rabindranath tagore post)!

குமரன் (Kumaran) said...

இந்த மொழிபெயர்ப்பை எழுதி ரொம்ப நாளாச்சோ இரவி? எப்பவோ படிச்ச மாதிரியே இருக்கு. ஒரு வேளை மின்னஞ்சல்ல முந்தி பகிர்ந்துகிட்டீங்களோ? இருக்கலாம்.

நல்ல மொழிபெயர்ப்பு. (இதை வேற சொல்லணுமா என்ன?)

Radha said...

இப்போ தான் வீட்டுக்கு வந்து எம்.எஸ் வீடியோ பார்க்கறேன்.
அருமையா இருக்கு அப்படின்னு சொல்லணுமா என்ன? :-)
towards the end - பாவம் அதிகமானதுல வைகுண்ட நாதர் வந்துட்றார். "shaarnga paaNe" அப்படின்னு பாடி அப்பறம் மறுபடியும் பாடும் பொழுது பலராமர்..."shIra paaNe"...beautiful !!! :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

மலையப்பனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவித்தவனையே ஆட்டுவிக்கும் வலிமை படைத்தவர் அன்னமசாரியார். பொருத்தமான பாட்டு அதும் எளிய விளக்கத்துடன். ஆனா கேஆர்ஸ் அவசரப்பட்டுடீங்க.நீங்க திருந்திட்டீங்க நான்? என்னுடைய அடுத்தபாட்டு சினிமாபாட்டுத்தான்."சினிமா பாட்டுன்னா என்ன அவ்வளவு கேவலமா" சிந்துபைரவி படம் பாத்தீங்க இல்லே.பி சுசீலா அம்மா பாடின 'மன்னவன் வந்தானடி" கல்யாணி ராகம் மாதிரி மரபு வித்துவானால் கூட பாட முடியாதுன்னு என் குருனாதர் சுப்புடு சொல்லுவார்.

sury said...

/ இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :) மொத்த பேரும், குழுவாக என்ன செய்யலாம்-ன்னு யோசனை சொல்லுங்க!//

நான் உங்க குழுவிலே மெம்பர் இல்லையே ! இருந்தாலும் ஒரு யோசனை தர்ரேன்.
மார்கழி மாதம் அல்லவா ?

உங்கள் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும், திருப்பாவையில் இருந்து ஒரு பாசுரம்,
அல்லது திருவெம்பாவையில் இருந்து ஒரு பாசுரம் எடுத்து, அதை இந்த காலத்து
கவிஞர்கள் பாடறாப்போல எழுதினால் எப்படி இருக்கும் ? ( ஃஃபார் எக்ஸாம்பிள் , வாலி,
வைரமுத்து, தாமரை இவங்க எல்லாம் ! )

இல்லை, நீங்களே உங்க பாணிலே ட்ரை பண்ணி பாருங்களேன். அபீல் இன் பர்டிகுரல் டு
கே ஆர் எஸ், குமரன் அன் கவி நயா.

சுப்பு ரத்தினம்.
தாத்தாவின் சங்கீத சபாவில் தினந்தோறும் டிசம்பர் சீஸனுக்கு அந்த கால பாடகர்கள்,
ஜி.என்.பி, மதுரை மணி ஐயர், எம்.டி.ராமனாதன், ஹிக்கின்ஸ், ஆலத்தூர் சகோதரர்கள்,
மதுரை சோமு எல்லோரும் வந்து அந்த கால கீர்த்தனைகள், பாடல்களை, இலக்கண சுத்தமா
பாடுகிறார்கள்.
http://movieraghas.blogspot.com

Sankar said...

@Mr. Sury.. Thats a great idea!
Awaiting to watch the colourful poems to be rendered by KRS anna, Kavinaya akka and Kumaran anna.

In Love With Krishna said...

@KRS: @Radha: @Everyone:
Go, go, go see ParthaSarathy without meesai. Only one more day time for you people...
Azhagaana irendu suryan pondra kangal,
Adhai etti pidikkum avar azhagan nila pondra sirippu...
Other highlights: no angi, He looks so lean.
And, if you are going (please do), go around 07:00.
At 07: 45, there's uyyali for our dear PSP. (Margazhi utsavam)
Avarai azhaga atti, atti, ulle kondu pogum andha scene- chance-e illai!
Ange iruppavargal ellam kannai thodachikiraanga.
Without fail, inikko nalaikko poi paarunga.

Radha said...

@KK,
i am returning back to office just after seeing Him. :-) had the darshan yesterday too. நாளைக்கும் பார்க்க போறேன். :-)

KRS, Kumaran, Kavinaya akka are all in U.S. அவங்க எல்லோருக்கும் சேர்த்து தான் நாம பார்த்துட்டு இருக்கோம் !! My Sanskrit teacher's comment: "shotasha balaka:" (பதினாறு வயது பாலகன்) :-)

In Love With Krishna said...

@Radha: i didn't know that they were in the US.
i had darshan on Sunday. Paramapada Nathan was (is) simply wonderful. My first darshan of uyyali, and i was totally taken aback. i was crying uncontrollably. Avlo oru azhagu, avlo oru gambheeram!
That brings me to something else- people who live in India close to Perumal just don't realize perhaps how blessed they are. i grew up abroad, and i was just thinking yesterday-i love life abroad, as much as i love life in India, but there are some positives and some negatives for both sides.
And, Perumal may be with us always, but His temple, that culture, is a big plus here. :)

Radha said...

சுப்பு தாத்தா,
நேற்று திவ்யமாக உங்கள் வலைப்பூவில் இருந்து சில பாடல்களை கேட்டேன். ஹிக்கின்ஸ் அறிமுகத்திற்கு நன்றி. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//In Love With Krishna said...
@Radha: i didn't know that they were in the US//

I am NOT in the US.
I work in a geo stationary satellite, with my antenna pointed to Mt. T2 (Tirumala Tirupathi) :)

இவரும் "வேங்கட" கிருஷ்ணன் தானே! அதுனால இவர் மேல இருக்கும் கண்ணையும், மீசை மேல் உள்ள ஆசையும் எடுப்பதாக இல்லை! :)

Other highlights: no angi, He looks so lean.
And, if you are going (please do), go around 07:00.
At 07: 45, there's uyyali for our dear PSP. (Margazhi utsavam)
Avarai azhaga atti, atti, ulle kondu pogum andha scene- chance-e illai!//

சூப்பர்! அப்படியே நாங்களும் நேர்-ல பாத்தா போல இருக்கு!
ராதா, தான் பார்த்ததை, பாசுரங்களோடு கோர்த்து, பார்த்தசாரதி திருவோலக்கமாக, ஒரு பதிவே போட்டுறலாம்! கண்ணன் பாட்டிலே ஒரு அல்லிக்கேணி சன்னிதியாக என்னைக்கும் இருக்கும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//At 07: 45, there's uyyali for our dear PSP. (Margazhi utsavam)//

மூன்று வாரத்துக்கு முன் சென்னையில், திரு அல்லிக் கேணி பாட்ஷா வீட்டுக்குள், பின் வழியாக நுழைந்தேன்! முன் வாசலில் மின்தமிழ் ரங்கன் சார் காத்துக் கொண்டிருந்தார்! இன்னும் ராதா அலுவலகத்தில் இருந்து வரலை! நான் கிடு கிடு-ன்னு முன் வாசலுக்குப் போக எத்தனிக்க...ஒருத்தி...தொம் என்று என் முன்னால் வந்து நின்னா! எவ அவ, வழியை மறிக்கறது-ன்னு ஏறிட்டுப் பார்த்தா....அச்சோ...அவளே தான்!

ஒருத்தனைப் பிடிக்க ஊரை வளைக்குமாப் போலே-ன்னு...

என்னைப் பிடிக்க, இப்படிச் சுத்திச் சுத்தி வராளோ? ரொம்ப கிட்டக்க நின்னுக்கிட்டேன்! திருநெடுந்தாண்டகம் கூடவே ஒதுவதைப் பார்த்து, தம்பீ, பாசுரம் தெரியுமா-ன்னு பட்டர் கேட்க, நான் அவளைக் காட்டி, அவளைப் பார்த்தா, தானா வரும்-ன்னு சொல்லி வைக்க...அவர் சிரிக்க...

ஒய்யாலி...ஊஞ்சலில் அசைத்து அசைத்து ஆட்ட,
நானும் ஏதோ என்னை ஆட்டுவது போல், Left & Right அசைய...

வெளியில் காத்துக் கிடந்த ரங்கன் சார் வந்து பொட்டுன்னு தலையில் போட்டப்பறம் தான் தெரியும், நானும் ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருந்தேன்-ன்னு! :)) மளமள-ன்னு அவளுக்கு நேத்ரானந்த தீப கலசம் காட்ட, அவளைப் பிரிய மனமில்லாமல்...ஏதோ யோசிச்சிக்கிட்டே வெளியில் வர...

எதிரே சாட்சாத் நம்ம பிருந்தாவன ராதா! கையில் அலைபேசியோடும், கார் சாவியோடும்! :)

வடிவார் சோதி வலத்துறையும் கார் சாவியும் பல்லாண்டு!
படைபோர் புக்கு முழங்கும் ராதா செல்பேசியும் பல்லாண்டே!

Radha said...

//I work in a geo stationary satellite, with my antenna pointed to Mt. T2 (Tirumala Tirupathi) :)
//
:-))))

In Love With Krishna said...

@KRS: Do geo-stationary satellites involve imaging? :))
btw, oyyali-na it is not on unjal.
The unjal here is the shoulders of His devotees. :)

In Love With Krishna said...
This comment has been removed by the author.
In Love With Krishna said...

i have a 'kurai' to pu forward to kannan pattu members.
How is it that you don't have 'Kurai Ondrum Illai' on your list????

ஷைலஜா said...

மனசே ஊஞ்சலாடுது ரவி! ஊரைசுத்தப்போய்ட்டு தாமதமாக பார்த்ததால் தாமத மடலாகிவிட்டது! வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பாக ஏதும் செய்ய அரங்கன் நமக்கு அருள்வான்!

LK said...

"விஷமக்கார கண்ணன் " பாட்டு இது வரை இங்குப் போடவில்லை என்றால்போட இயலுமா ?

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP