Wednesday, December 08, 2010

குயிலே


கோவிந்தன் குணம் கூவாய் - குயிலே !

கோவிந்தன் குணம் கூவாய் ...

திருமகள் நேயன்; திகழொளி மார்பன் ..

தீரம் உணர்ந்த தருணமதிலே..

வந்தனை செய்வோரின் குந்தகம் நீக்கிடும்;

வாழ்க்கை படகினை கரை தனில் ஏற்றிடும்;

தாசனின் மனதினை காதலில் நெகிழ்த்திடும்;

குணம் கூவாய்; சுகம் காண்பாய் .. குயிலே !!!

32 comments :

sury said...

கோவிந்தன் குணங்களைக் கூவாய
குயிலே !!
பெருமாளை அழைப்பதிலே தான் எத்தனை சுகம் !!
இந்த பாட்டை நான் அடாணா ராகத்தில் பாட முயற்சித்தேன்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Radha said...

கண்ணன் பாடலுக்கு வருகை தரும் குயிலை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். :-)
ஒரு கோவிந்த பஜனை பாடல் நினைவிற்கு வருகிறது.
ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா ! தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

நந்தா குமாரா! நவநீத சோரா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா ! தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

புராண புருஷா புண்ய ஸ்லோகா
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா ! தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

வேணு விலோலா ! விஜய கோபாலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா ! தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா ! தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா ! தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
...
...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கண்ணன் பாட்டில் கன்னி இடுகை! வாழ்த்துக்கள் சங்கர்! :)

பெருமாள் பற்றிய வலைப்பூவில் - சங்கர், இரவி, குமரன், ஷைலஜா-ன்னு ஒரே சைவப் பேரா இருக்கு!

அந்தாண்ட முருகனருள் வலைப்பூவில், ராகவன்-ன்னு வைணவப் பேரா இருக்குது! அடடா! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திருமகள் நேயன்; திகழொளி மார்பன்//

ஓ..தாயாரும் முதல் பதிவிலே வந்துட்டாங்களா? சூப்பரு! :)

//குயிலே//

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கவி-க்கா கிளியே-ன்னு பதிவு போட்டாங்க! இப்போ குயிலே!
கண்ணன் பாட்டு பறவைகள் சரணாலயமா ஆயிருச்சிப்பா! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவிந்தன் குணம் கூவாய்//

என்ன குணம்? எதைக் கூவணும்?
கொஞ்சம் விளக்குங்கள் ப்ளீஸ்!

எதுக்கு கேக்குறேன்-ன்னா, பொதுவா பேரைக் கூவச் சொல்லுவாங்க! கிளி, குயில் எல்லாம் கூவிரும்!
ஆனா இங்க சங்கர் "குணத்தை"க் கூவச் சொல்றாரு! That sent my thoughts - Why??

இதே தான் என் ஆருயிர்த் தோழியும் பண்ணுறா! அவனைப் போற்றாமல், அவன் "குணம்" போற்றி-ன்னு பாடுறா!

குன்று குடையாய் எடுத்தாய் - குணம் போற்றி!

ஆக மொத்தம், அவன் போற்றி இல்லை! ஒன்லி குணம் போற்றி! உம்ம்ம்ம்ம்ம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Radha said...
ஒரு கோவிந்த பஜனை பாடல் நினைவிற்கு வருகிறது.
ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதேகோவிந்தா !//

அலோ ராதா
நீங்கள் கொடுத்த பாட்டு ஃபுல்லா உங்க பேரே வருது! எத்தனி ராதா? எதுக்கு உங்களுக்கு இவ்ளோ தற்புகழ்ச்சி? :)

Radha said...

ஒரு உயிர் ஜன்மம் ஜன்மமா கிருஷ்ணனை மட்டுமே நினைச்சிட்டு இருந்தா, பேர்ல தானா ராதை வந்து ஒட்டிப்பா அப்படின்னு சொற்பொழிவுகளில் எல்லாம் கேள்வி பட்டு இருக்கேன். :-)
தற்புகழ்ச்சி ??? அப்படின்னா என்ன? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Radha said...
தற்புகழ்ச்சி ??? அப்படின்னா என்ன? :-)//

பாட்டு ஃபுல்லா ராதா ராதா-னு தன் பேரையே போட்டுக்கறது! :)))

//பேர்ல தானா ராதை வந்து ஒட்டிப்பா//

ஆமாம்!
எங்காச்சும் ருக்மிணி கிருஷ்ணன், பாமா கிருஷ்ணன், லக்ஷ்மி கிருஷ்ணன், ஜாம்பவதி கிருஷ்ணன்-ன்னு சொல்லுறோமா?

எங்கெங்கும், எல்லார் பெயரிலும் ராதா-கிருஷ்ணன் மட்டுமே!

கண்ணனை "மணக்காத" ராதை தான் நெஞ்செங்கும் "மணக்கிறாள்"!

காதலனுக்காகத் தன்னையும் விட்டுக் கொடுப்பது "உயர்ந்த" காதல்!
ஆனால், காதலனுக்காக, காதலனையே விட்டுக் கொடுப்பது?? அதனினும் "ஆழ்ந்த" காதல்!

அப்படி ஆழ்ந்தவள் ராதை!
கண்ணனின் உடலோடு வாழாது, உள்ளத்தில் மட்டும் வாழ்ந்தவள்! அதனால் இன்று அனைவரின் உள்ளத்திலும் வாழ்கிறாள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஒரு உயிர் ஜன்மம் ஜன்மமா கிருஷ்ணனை மட்டுமே நினைச்சிட்டு இருந்தா, பேர்ல தானா ராதை வந்து ஒட்டிப்பா//

Wow!
I like this so much...
ஜன்மம் ஜன்மமா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
உன்தன்னோடு-உறவேல்-எனக்கு! முருகா!

உன் பேரே என்னையும் தாங்கும்
உன் பேரே என்னையும் தாங்கும்!

முன்னாடி சொன்னேனே! இப்போ புரிஞ்சுதா ராதா, எப்படி பேர் தாங்குது-ன்னு? "தானா ராதை வந்து ஒட்டிப்பா"-ன்னு நீயே பதில் சொல்லி இருக்கே பாரு! :)

Sankar said...

@ Ms. Radha..
Thanks a lot.
The Bajan is very divine and religious. :)

Sankar said...

Thanks KRS..
Guys don mistake me...
I dunno, how to write comments in tamil.
'Hariyum Haranum ondre' allva!!
There is a interesting story..
Lord Vishnu, lies in the Soul of Lord Shiva and viceversa. Hence, Shiva has got the colour of butter (which was eaten by Krishna) and Vishnu has got the colour of Aalakala visham - blue (which was swallowed by Shiva)..
So.. no differnce shall be preached by them.. However,one cannot deny that Krishna's glories seems to be so naughty and captivating..

Sankar said...

நன்றி திரு. சூரி அவர்களே !
நானும் இந்த பாடலை இசை படுத்தியுள்ளேன் ..
தாங்களும் தங்கள் மெட்டை பகிர்ந்துகொள்ளவும் ..
சிறந்ததை தெரிவு செய்து கொள்ளலாம்

Sankar said...

@KRS
ஒரு மனிதனை , நாம் நினைவில் கொள்வது அவர்கள் செய்யும் செயல்களை பொறுத்தே அமைகிறது..
ஏன் ராகங்களையே அதன் க்ஷணங்களை கொண்டே நினைவில் கொள்கிறோம் ..
அப்படி இருக்க நம் கோவிந்தன் மட்டும் என்ன விதிவிலக்கா ?

Sankar said...

Appa.. finally i learnt to post in tamil.. yuppie!

Radha said...

சுப்பு தாத்தா ! அடாணாவில் சூப்பரா வந்திருக்கு ! :-)
ரங்கநாயகி/நாயகன் படங்களும் அருமை. :-)

Sankar said...

o.. apdiya.. wud like to listen.. :)

குமரன் (Kumaran) said...

This song is really good. Even I started singing after reading the first line. :-)

Ms. Radha (!!!) knows ragas, but I dont. So, I dont know which raga I used to sing this song. Next time I might use a different raga. :-)

குமரன் (Kumaran) said...

Sankar, Please go to Subbu aiyaa's blog menakasury.blogspot.com to listen his version of this song.

Sankar said...

@Sury sir:Thanks Sury sir.. romba nanna vandhurukku.:)
@Kumaran: thanks a lot.. :)
@radha: yellarum Y vambu pannifyin wit u!! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//@radha: yellarum Y vambu pannifyin wit u!! :)//

sankar, thatz the magic of our friend radha! he likes to vambu pannufy with us, but eventually it turns out the other way! :)

btw, he is not ms.radha, but mr.radha :)
he may be a great fan of ms amma, but athukaaga avanai ms.radha-nu nee cholrathu, too much :)

Radha said...

@சங்கர்,
எனது முழு பெயர் ராதாமோகன். :-)

//@radha: yellarum Y vambu pannifyin wit u!! :) //
அவங்க அப்படி தான்...கண்டுக்காம விடுங்க. விட்டுக் கொடுத்தலில் ஒரு தனி சுகம் உள்ளது.
அந்தச் சுகத்தை எனது நண்பர்கள் (முக்கியமா கே.ஆர்.எஸ்.) எனக்கு தருவதில் பெரு மகிழ்வு எய்துவார்கள். :-) அவர்கள் சந்தோஷம் எனக்கு மேலும் சந்தோஷம் தரும். :-)

Sankar said...

@Mr.Rahda: ha ha.. am so sorry :(

Sankar said...

@ KRS: Hello.. he is one pavamana jeevan, i suppose.. avara vitudalam!!

ராதை/Radhai said...

தாசனின் மனதினை காதலில் நெகிழ்த்திடும்
கோவிந்தன் குணம் கூவாய்...குயிலே!!!

:-)

கவிநயா said...

ராதா, கண்ணன், ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு ராதா கிருஷ்ணன் நினைவுதான் வருது :P

//கோவிந்தன் குணம் கூவாய் - குயிலே !//

ரொம்ப அழகான பாடல். அவன் குணத்தைக் கூவுவதேயன்றி (கவிக்)குயில்களுக்கு வேறென்ன வேலை! :)

முதல் பதிவுக்கு வாழ்த்துகள் சங்கர்.

கவிநயா said...

ராதா, பஜனைப் பாடல் முழுசையும் குடுங்களேன்... யாருக்கும் தெரியாம 'பஜனை பாடல்கள்' வலைப்பூவுக்கு கடத்திக்கிறேன்... நன்றி :)

Sankar said...

@ Kavinaya: thanks a lot. :)

Sankar said...

@Radhai: thanks a lot :)

Radha said...

//@ KRS: Hello.. he is one pavamana jeevan, //
@சங்கர்,
என்னை பார்த்து பாவம்னு சொல்றீங்களே. கலி முத்தி போச்சு. :-) நான் ரவியை எவ்வளவு நோகடிசிருக்கேன்னு குமரன், கிரிதாரி ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். கொஞ்ச நாள் கழிச்சு இந்த டயலாக்கை வாபஸ் வாங்கிக்க போறீங்க பாருங்க. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//@ KRS: Hello.. he is one pavamana jeevan, i suppose.. avara vitudalam!!//

சரி சங்கர்!
போன பதிவில் ராதா கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்!
இந்தப் பதிவில் அவரை விட்டுட்டேன்! :)

//@சங்கர்,
என்னை பார்த்து பாவம்னு சொல்றீங்களே. கலி முத்தி போச்சு. :-) நான் ரவியை எவ்வளவு நோகடிசிருக்கேன்னு குமரன், கிரிதாரி ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்//

ஹா ஹா ஹா!

மொதல்ல எல்லாம், பின்னூட்டங்களில், ராதாவுக்கு என்னைக் கேள்வி கேட்டு மடக்குறது-ன்னா தனி ஆனந்தம்! :) அப்பறம் அது தனி மடலில் வேறு ஓடும்! :) அது என்னமோ, உன்னைத் தான் இப்படிப் பண்ணத் தோனுது, Just eager for your reaction-ன்னு எல்லாம் சொல்லி, ராதா ஜாலியா இருந்தான்! ஆனா யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலை, அவன் என்னை மடக்குவது போயி, நான் அவனை ஓட்ட ஆரம்பிச்சிட்டேன்! ராதாவும் என் வாயில் - வையம் ஏழும் கண்டான் பிள்ளை வாயுளே! :)

Sankar said...

@Radha: Papom.. :)

Westkdlv said...

சுப்பு தாத்தா ! அடாணாவில் சூப்பரா வந்திருக்கு ! :-) ரங்கநாயகி/நாயகன் படங்களும் அருமை. :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP