Friday, December 25, 2009

யதுநந்தனா ! கோபாலா !

சாது ஜனங்கள் ஒன்று கூடினால் கிரிதாரிக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மீரா போன்ற ஒரு பக்தையின் தலைமையில் கூடுகிறது என்றால் கிரிதாரியின் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். இதோ இங்கே ஒரு அருமையான பஜனை பாடலை எல்லோரும் சேர்ந்து பாடிக் களிக்கிறார்கள். கண்ணனையும் குளிர வைக்கிறார்கள்.

அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார்?  எங்கும் நிறைந்தவனே !

யானை அன்று "ஆதிமூலமே !"  என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே !!

ஈனர்கள் சபையில் த்ரௌபதி கதற
மானம் காத்தனையே !! ஆஹா நீ !!

ப்ரஹலாதனையே பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரணனே !

தாரணியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சங்க கதாதரனே ?

யதுநந்தனா ! கோபாலா !
ஜெய பிருந்தாவன லோலா !

ஜெய தீன வத்ஸலா !!
ஜெய வேணுகான லோலா !!

வரதா !! அருள் தருவாய் வனமாலீ !!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!

மீராவின் காலத்தில் அந்த சாதுக்கள் கூட்டத்தில் சேர்ந்து பாடும் பாக்கியம் செய்யாவிடினும், இதோ இங்கே மறுபடி எம்.எஸ் அம்மாவின் குரலில் நம்மை மீரா வழி நடத்துகிறாள்.

இந்தப் பாடல் மிகவும்  ப்ரபலமான (அதாவது எனக்கு மிகவும் பிடித்த :)) ஹிந்தி மீரா பஜன் ஒன்றின் திரண்ட பொருளை தழுவியதாகக் கொள்ளலாம்.  கிரிதாரியின் அருளால்  பின்னர் ஒரு பதிவில் அந்தப் பாடல் கண்ணன் பாட்டில் வரும்.  ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா


8 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யதுநந்தனா ! கோபாலா !
ஜெய பிருந்தா வன லோலா !
யதுநந்தனா ! கோபாலா !
ஜெய பிருந்தா வன லோலா !
யதுநந்தனா ! கோபாலா !
ஜெய பிருந்தா வன லோலா !

ன்னு ஓடிக்கிட்டே இருக்கு பாட்டு! எம்.எஸ் பாடி முடித்தாலும், பாட்டு என்னவோ, மனசுக்குள் முடியாம ஓடிக்கிட்டே இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார்? எங்கும் நிறைந்தவனே !
//

இந்தக் கவிதையை எழுதிய அந்த "மிகப் பிரபலமான" கவிஞர் யார்? :)

Radha said...

//எம்.எஸ் பாடி முடித்தாலும், பாட்டு என்னவோ, மனசுக்குள் முடியாம ஓடிக்கிட்டே இருக்கு! //
Same here !! :)))

Kavinaya said...

எனக்கும் :) நன்றி ராதா.

Radha said...

//இந்தக் கவிதையை எழுதிய அந்த "மிகப் பிரபலமான" கவிஞர் யார்? :) //
தெரியவில்லை டா. பாபநாசம் சிவன் என்று நினைக்கிறேன். கல்கியாகவும் இருக்கலாம்.

குமரன் (Kumaran) said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் - இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் மிகவும் பிடிக்கும். மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்பேன். யூ ட்யூபில் சில பாடல்கள் இல்லாமல் இருந்தது குறையாக இருந்தது. இப்போது நீங்கள் இங்கே இடுவதால் அந்த குறையும் தீர்ந்தது. நன்றி இராதா.

Radha said...

//எனக்கு மிகவும் பிடித்த பாடல் - இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் மிகவும் பிடிக்கும்.//
Same here. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்ப தான் பார்த்தேன்...

ராதாவின் இந்தப் பதிவு, கண்ணன் பாட்டின் 150ஆம் பதிவு!
:)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP