Sunday, December 27, 2009

கண்ணன் பாட்டிலே ஒரு மலையாளப் பாட்டு!

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில் பலநாள் கழித்து....அடியேன் வணக்கம்!

இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

பல இடங்களில் பலவாறு கொண்டாடப்பட்டாலும்,
திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாகக் கொண்டாடப்படுவது! = இராப் பத்து!
திருவாய்மொழித் திருநாள்! எம்பெருமான், வடமொழி வேதங்களைச் சற்றே ஓரங்கட்டி, தீந்தமிழ்ப் பாசுரங்களை மட்டுமே இடைவிடாது கேட்கும் நாள்!

திருவாய் மொழிக்கு உருகாதார்
ஒருவாய் மொழிக்கும் உருகார்!முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடப் பாடல் - கிருஷ்ணா நீ பேகனே,
* தெலுங்குப் பாடல் - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரப் பாடல் - பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
* வடமொழிப் பாடல் - பாவன குரு/அமர ஜீவிதம்,
* இந்திப் பாடல்கள் - பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்று எப்போதாவது ஒன்னு ரெண்டு இதர மொழிப் பாடல்களும் வரும்!

அந்த வரிசையில், இன்று மிகவும் ஏகாந்தமான மலையாளப் பாடல் ஒன்று!
கேட்டுத் தான் பாருங்களேன்!
பொருள் சுமாரா உங்களுக்கே புரிஞ்சிரும்-ன்னு நினைக்கிறேன்! மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை அல்லவா?
எந்தா இன்னும் ஓர்க்குன்னு? யான் பறைஞ்சது மனசுலாயோ? ஈ நாள் வரை தமிழ் பாஷையிலே மட்டும் கானம் கழிஞ்சோ? :)

குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!

இங்கே கேட்டுக் கொண்டே பாடலில் கரையுங்கள்!குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும்போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!


தளரும் போல் ஆத்மாவாம் பஷூவே நின் நாவில்
அம்ருதம் போல் ஊஊறிடுக நாராயண நாமம்!


நெய்யுண்ணு பீதாம்பரம் ஈ சந்தயகள் ராவாம்
பையெல்லாம் வார்க்குன்னு பால் மாதுரி அல்லோ?

ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்
சுட்டுன்னுரு பீலி திருமுடியோ மழை மேகம்?


கருடன் போல் ஆகாசம் சிறகார் நீடும்போல்
வனமாலைகள் தீர்க்குன்னு மழை வில்லுகள் இப்போல்!

நிறக் கண்ணால் காணுன்னே எங்கெங்கும் சுவாமி
குருவாயூர் அப்பா நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்.....

நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்
நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்பாடல்: குருவாயூர் ஏகாதசி
தொகுப்பு (Album): வனமாலா
குரல்: K.J.யேசுதாஸ்
வரிகள்: ரமேசன் நாயர்
இசை: P.K.கேசவன் நம்பூதிரி


"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்"

= அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி? "வைகுந்த" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அனைத்து ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தாங்க காரணம்!
= வாரணம் தான் காரணம்!
வேண்டுமானால் இங்கே சென்று அந்த தனிக் கதையை வாசித்துக் கொள்ளவும்!

அது சரி, கண்ணன் பாட்டிலே மலையாளப் பாட்டு எப்படி இருந்துச்சி? ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்-ன்னு இருந்துச்சா? :)

இது போன்ற முயற்சிகளை, பன் மலர் மாலைகளை,
கண்ணன் பாட்டு அன்பர்கள் தொடர்ந்து செய்ய வேணுமாய்,
பணிவுடன் கேட்டு, அடியேன் அமைந்து விடுகிறேன்!

பயந்த தனி வழிக்குத் துணை,
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
பயந்த தனி வழியில்.....
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!!

தளரும் போல் ஆத்மாவுக்கு...
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!! அவன் நாராயண நாமம்!!

4 comments :

thiruthiru said...

முதல் வரியில் ரூபம் என்பதை நாமம் என்று எழுதியிருப்பதைத் திருத்த வேணும். ஆனால் பாடல் அருமை!

குமரன் (Kumaran) said...

நல்லதொரு பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி இரவி!

போழ் என்று சில இடங்களிலும் போல் என்று ஒரு இடத்திலும் வருவது போல் தோன்றுகிறது. பலுக்கலுக்கேற்ற படி பாடல் எழுதப்படவில்லையோ என்றும் தோன்றுகிறது. சரி பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

யேசுதாசின் உருகும் குரலில் ,இந்தத் தரங்கிணி காசட்டில் அத்தனை பாட்டுகளும் அமிர்தம்.''அக்ரே பஸ்யாமி''முதலாக அத்தனை பாட்டுகளில் இந்த்க்''குருவாயூர் ஏகாதசியைக் கேட்கும் தோறும் தொண்டையில் கண்ணீர்
தேங்கும்.கண்வழி வெளி வரும்.
அந்தப் பாட்டை இங்கே பதிந்த உங்கள் அன்பை எப்படித்தான் சொல்வது ரவி.
இனிய புத்தாண்டு நல்வாத்துகள்.

BALAJI K said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் ! மிக்க நன்றி ! இப்பாடலை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். http://vathsri.blogspot.com/2009/10/blog-post_30.html
எனது BLOG தயவு செய்து வருகை தரவும்! மிக்க நன்றி ! - கே.பாலாஜி

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP