பாதத் தாமரைகள் நொந்திட...
....பார் தனில் என்னை தேடி வந்தவன் !
மனதை வருடும் ஒரு மெல்லிய பாடல். மார்கழி நன்னாளில் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். :)
கவிஞர்: அமரர் கல்கி
ராகம்: ஹரிகாம்போதி
வண்டாடும் சோலை தனிலே
கண்டெனதுள்ளம் கொண்டான் சகியே !
கொண்டல் போலும் வண்ணன் உடையான் !
கோகுலம் தந்த பாலன் அவனோ !!
பாதத் தாமரைகள் நொந்திட
பார் தனில் என்னை தேடி வந்தவன் !
மாதவன் மதுரை மைந்தன்
மறைகள் பரவும் மாயன் அவனோ !! (வண்டாடும்)
பாடலை திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் தேனினும் இனிய குரலில் இங்கு கேட்கலாம். ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா
7 comments :
எம்.எஸ்.அம்மாவின் குரலில், "பாலன் அவனோ, மாயன் அவனோ"-ன்னு மனதை வருடுகிறது!
அமரர்.கல்கி கொஞ்சமே கவிதைகள் புனைந்திருந்தாலும், ஒவ்வொன்னும் தேர்ந்த இசைப் பாடலாக இருக்கும்!
பொன்னியின் செல்வனில் ஓடக்காரப் பெண் பூங்குழலி பாடும்,
"அலை கடலும் ஓய்ந்திருக்க,
அகக கடல்தான் பொங்குவதேன்"
போன்ற கவிதைகள், கல்கியை ஒரு சிறப்பான இசைக் கவிஞராகவே காட்டும்!
//பாதத் தாமரைகள் நொந்திட//
அதனால் தான் "பாதம் வருடிய மணவாளா"-ன்னு அருணகிரி அடிக்கடி பாடுவாரு! ஆனால் மிகவும் நொந்த வள்ளியின் பாதங்களை என் முருகன் அடிக்கடி வருடி விடுவான்! :)
மார்கழி-09
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்
---------------------------------
தூய்மையான மணி மாடத்தில் சுற்றிலும் விளக்குகள் எரிய
நறுமணப்புகை எங்கும் கமழ மென்மையான படுக்கையின் மேல் தூங்கும்
மாமன் மகளே! மணிக்கதவுகளின் தாள் திறப்பாய்!
மாமி! அவளை எழுப்புங்கள். உங்கள் மகள் தான்
ஊமையோ? இல்லை செவிடோ? பெருஞ் சோம்பேறியோ?
நீண்ட பெருந்துயில் வரும்படி மந்திரம் செய்து விட்டார்களோ?
'மாயங்களில் வல்லவன், மாதவன், வைகுந்தன்' என்று என்று
நாமம் பலவும் சொல்.
பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!
இனிமையான பாடலுக்கு நன்றி ராதா.
ஒவ்வொரு சொல்லும் மிகவும் உருக்கும் சொற்கள் இந்தப் பாடலில்...
//ஒவ்வொரு சொல்லும் மிகவும் உருக்கும் சொற்கள் இந்தப் பாடலில்...//
உண்மை குமரன். :)
//பொன்னியின் செல்வனில் ஓடக்காரப் பெண் பூங்குழலி பாடும்,
"அலை கடலும் ஓய்ந்திருக்க,
அகக கடல்தான் பொங்குவதேன்"//
ஆஹா ! எனக்கும் பொன்னியின் செல்வன் மிகவும் பிடிக்கும்.
பூங்குழலியின் அந்தப் பாடலும் மிகவும் பிடிக்கும்.