Tuesday, December 22, 2009

நீ இரங்காயெனில் புகல் ஏது ?




இரண்டாவது பதிவு டகால்டி பதிவு மாதிரி இருந்தால் அதற்கு சகவாச தோஷம் தான் காரணம். :)

"ஜகன் நாதன்" என்று பாடலில் வருவதால் கண்ணன் பாடல் என்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :)
[பக்த மீராவின் அடிகளை தலையில் சுமந்து,  தாயாரை அடைந்து அதன் பின்னரே கண்ணன் பாடல்கள் வருமாம். :)]





கவிஞர்: ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவன்
ராகம்: அடாணா
தாளம்: ஆதி

பல்லவி:
நீ இரங்காயெனில் புகல் ஏது ? அம்பா !!
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (அம்பா நீ)

அனுபல்லவி:
தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?!!
ஸகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ !!!

சரணம்:
பாற்கடலில் உதித்த திருமணியே ! - ஸௌ
பாக்யலக்ஷ்மி,  என்னை கடைக்கணியே !!

நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பா நீ)




பாடலை திருமதி  எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  அவர்களின் இனிய குரலில் இங்கு கேட்கலாம்.
நம்மைப் பெற்ற தாயாரின் அன்பை இந்த  மார்கழியில் நினைவோம்.



~
கிரிதாரியின்,
ராதா

12 comments :

Kavinaya said...

எனக்குப் பிடித்த பாடல் ராதா. நன்றி.

jeevagv said...

//"ஜகன் நாதன்" என்று பாடலில் வருவதால் கண்ணன் பாடல் என்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :) //
:-) அது சரி!
திருமகள் திருமால் மார்பினில் வாசம் செய்வதால் குறையொன்றும் இல்லை!

குமரன் (Kumaran) said...

எனக்கும் ரொம்ப பிடித்த பாடல். மற்றவர் பாடிக் கேட்டாலும் எம்.எஸ். அம்மா பாடுவதைப் போல் வராது!

Radha said...

All,
Nice to know that you too like this song. Sariyaana goshtiyil thaan vandhu serndhu iruken pola. :)
~
Radha

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரண்டாவது பதிவு டகால்டி பதிவு மாதிரி இருந்தால் அதற்கு சகவாச தோஷம் தான் காரணம். :)//

//Sariyaana goshtiyil thaan vandhu serndhu iruken pola. :)//

ஏதோ ஒத்துக்கிட்டியே! அது வரைக்கும் சரி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாக்யலக்ஷ்மி, என்னை கடைக்கணியே !!//

கடைக்கணியே-வா? அப்படீன்னா என்ன ராதா?

Radha said...

இப்பொ குமரன் தான் டகால்டி-1. நீ டகால்டி - 2. என்னுடைய இடம் -4. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜகன் நாதன்" என்று பாடலில் வருவதால் கண்ணன் பாடல் என்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :)//

அதுல ஐயமே வேணாம்! ஜகன்னாதன்-ன்னு தனியா பேர் வரணும்-ன்னு அவசியமே இல்லை! ராதா வந்தாலே அது அவளுக்குச் சொந்தமான கண்ணன் பாட்டு தான்!

நான் ரெண்டு ராதாவையும் சேர்த்தே சொன்னேன்! :)

இதுக்கு மேல சந்தேகம்-ன்னா, ஏற்கனவே வந்த கண்ணன் பாட்டை, இக்கட சூடண்டி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்....நீ இரங்காயெனில் புகல் ஏது?//

அது என்னமோ சரி தான்!
எளிய அன்பர்கள் எல்லாம் சரணம் சரணம்-ன்னு அன்பாலேயே புகல் அடைஞ்சி, அவனோடு/அவளொடு ஒட்டி உறவாடி இருப்பாங்க!

இந்தப் பெரிய பெரிய புலவர்கள், வானவர், ஞான யோக ஞானியர்க்கு எல்லாம், நீயா பாத்து இரங்கினால் தான் புகல்! நீ இரங்காயெனில் புகல் ஏது?-ன்னு கடைசிப் பத்தில நச்-ன்னு கேக்குறாரு-ல்ல? :)))))

Radha said...

"ஒருவர் இவ்வளவு நிறைய அன்பு கொண்டு இருக்கிறார். மற்றொருவர் கம்மியாக அன்பு வைத்திருக்கிறார் !" என்று இறைவன் மீது அவன் குழந்தைகள் வைத்திருக்கும் அன்பை எல்லாம் எடை போடும் அளவிற்கு எனக்கு தெரியாதுப்பா ! ஆளை விடுங்க !!!

பாடலை கேட்டதனால் கொஞ்ச நேரம் இறை உணர்வு ஏற்படுகிறதே என்று மகிழ்கிறேன். எத்தனை மாங்காய் விளையாட்டிற்கு வேறு ஆளை பார்க்கவும். :)
~
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது "கொஞ்ச அன்பு, நிறைய அன்பு" என்று, கணக்கு போடும் மாங்காய் விளையாட்டு அல்ல! :)
இராவணனும், அன்னை மகாலக்ஷ்மி மேல் "அளவில்லா அன்பினை" வைத்திருந்தானே? :))))

இறைவன் மீது அவன் குழந்தைகள் வைத்திருக்கும் அன்பை எல்லாம் எடை போட்டு ஏலாது! கண்ணனைத் தராசில் வைத்து, பாமா எடை போட்ட கதை தான்! :)

பாமாவின் அன்பு "கொஞ்ச அன்பு" என்று காட்டவா இந்தக் கதை சொல்லப்படுகிறது? இல்லையே!
ஞானத்தாலும், சமத்காரத்தாலும் பகவானை வளைத்து விடலாம் என்றால் முடியாது! ஒரே ஒரு துளசி தளத்தால் தராசை வளைக்க முடியும் என்பதைக் காட்டவே இந்தக் கதை!

அதே போல்,
"பெரிய பெரிய புலவர்கள்", "வானவர்", "ஞானியர்" எல்லாம், அவரவர் புலமையில்/ ஞானத்தில்/ வானத்தில் நிற்க,
அவர்களுக்கு நீயா பாத்து இரங்கினால் தான் புகல்! நீ இரங்காயெனில் புகல் ஏது?-ன்னு என்ற பார்வையை மட்டுமே காட்ட விழைந்தேன்!

அவர்களாக ஓடி வந்து "புகல்" செய்யவில்லை எனினும், அவர்களுக்கும் நீ தானே இரங்கப் போகிறாய்? நீ இரங்காய் எனில் புகல் ஏது? என்பது பெருமையே அன்றிச் சிறுமை இல்லை! எடை போடும் மாங்காய் விளையாட்டும் இல்லை!

எடை போடும் முன்பாகவே, எங்கே தங்களை எடை போட்டுருவாங்களோ-ன்னு புலவர்களும் ஞானியர்களும், "தான்", "தன் கர்மம்", "தன் ஞானம்" என்ற வட்டத்துக்குள், "தான்"-சார்ந்து இருப்பதனால் தான், இந்தப் பதற்றம்! :))
அவர்கட்கும் நீ இரங்காய் எனில் புகல் ஏது, தாயே?

பாடலை கேட்டதனால் "கொஞ்ச நேரம்" ஏற்படும் உணர்வு...
"என்றும் நிலைத்து" ஏற்பட, அம்மா, நீ இரங்காய் எனில் புகல் ஏது?

Radha said...

அட ராமா ! நான் என்ன சொன்னேன்? மற்றுமொரு விவாதம் தொடங்க தயார் இல்லை என்று தான் சொன்னேன். எதற்கு எடுத்தாலும் பொங்கி தள்ளாதே !! சரியா?

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP