எங்கள் கண்களில் வசிக்க வா!
சொந்தமாக கவிதை எழுதும் திறமை இல்லாவிடினும், இருக்கும் கவிதைகளை நன்றாக காப்பி அடிக்க தெரியும். :)
இதோ இங்கே ஒரு மீரா பஜனை பாடல் - ஹிந்தி மூலமும், "காற்றினிலே வரும் கீதம்" என்ற ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருந்து தமிழாக்கமும்.
(மீரா பஜன் -1)
பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா ||
மோஹனீ மூரத ஸாம்வரீ ஸூரத நைநா பனே பிஷால் ||
மோர முகுட மகராக்ருதி குண்டல, அருண திலக சோஹ பால் ||
அதர சுதா ரஸ முரளி, ராஜதி உர (பை)பம்ஜதீ மால் ||
சுத்ர கண்டிகா கடி தட ஷோபித நூபுர ஸபத ரஸால் ||
மீரா ப்ரபு ஸந்தன சுகதாயீ ப-க-த-வ-ச-ல கோ-பா-ல் ||
(தமிழாக்கம் - நன்றி ரா.கணபதி, கிரிதாரி)
அந்தமில் அழக, நந்தலால,
கண்ணில் வசிக்க வா, கண்ண, பால
மோகன மூர்த்தி
சியாமள சீர்த்தி
நயனம் விரி நேர்த்தி
மயிற்பீலி மங்கலம்
மகரமீன் குண்டலம் - நெற்றி
திலக முகமண்டலம்
ஆரமுதம் பொழியும் அதரம் - அதனில்
தீங்குழல் பொழியும் இன்சுரம்
பேரெழில் வைஜயந்தி உறை உரம்
உயிரை கவர் உதரம் - அதனில்
மோகன கிண்கிணி மதுரம்
இன்னிசைக்கும் நூபுரம்
மீரா இதய பூபாலன்
அன்பர்க்கு இனிய க்ருபாலன் - பக்த
கன்றுகள் கோபாலன்.
இந்தப் பாடலை பாரதத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பக்தி ரசம் நிறைந்த குரலில் இங்கு கேட்கலாம்.
(மற்றுமொரு சுட்டி.)
Baso More - M S Su... |
~
கிரிதாரியின்,
ராதா
9 comments :
கண்ணன் பாட்டுக்குத் தங்கள் முதல் வருகை, நல்வரவு ஆகுக, கிரிதாரியின் ராதா! :)
என் கிரிதாரி, போனாப் போவட்டும், நீயும் வாடா! உனக்கும் நல்வரவு! :)
இங்கிட்டு தானே எப்பமே இருக்கே? அப்பறம் எதுக்கு நல்வரவு எல்லாம் புதுசா எதிர்பாக்குற?
சரி சரி, வா வா! :)
//சொந்தமாக கவிதை எழுதும் திறமை இல்லாவிடினும், இருக்கும் கவிதைகளை நன்றாக காப்பி அடிக்க தெரியும். :)//
எங்களுக்கு அது கூடச் சரியா அடிக்கத் தெரியாதே!
அதுக்குத் தான் நீங்க வேணுங்கிறது ராதா! :)
மீரா பஜன் அருமை!
கண்களில் வசிக்க வா, இப்போ செவிகளில் வசிக்கிறது!
//எங்களுக்கு அது கூடச் சரியா அடிக்கத் தெரியாதே!
அதுக்குத் தான் நீங்க வேணுங்கிறது ராதா! :)//
ரிப்பீட்டு! ஆனாலும் கேயாரெஸ் கண்ணனுக்கு பொருந்தாது என்பதையும் இங்கே சொல்லிக்கிறேன் :)
அழகான மீரா பஜனுக்கு நன்றி ராதா.
கவிதை எழுத தெரியாதவங்களுக்கு தான் காப்பி அடிக்க தேவை இருக்கும். :)
குமரன், கவிநயா அக்கா, ரவி, வசந்த் எல்லோரும் எப்படி எழுதுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.:)
ரவி, உங்க புண்ணியத்துல தான் சங்கத்துல வந்து சேர்ந்தேன். வரவு அளித்தமைக்கு நன்றி. அது சரி, கண்ட நேரத்துலயும் பின்னூட்டம் போடறீங்களே, நீங்க என்ன பேயா? சே ! பேயாழ்வாரா? :)))
//அழகான மீரா பஜனுக்கு நன்றி ராதா.//
பாடல் தமிழ் அல்லாத வேறு மொழியில் இருப்பதால் யோசித்து இட்டேன்.
யாராவது ஒருவருக்கேனும் பிடித்து இருந்தால் மேலும் சில மீரா பஜனை பாடல்களை இட எண்ணம்.
இரண்டு பேர்(ரவி, மற்றும் கவிநயா அக்கா) சிக்கி விட்டார்கள். :)
மார்கழி-05
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்
-----------------------------------
மாயங்களில் வல்லவனை நிலைத்த புகழ் கொண்ட வடமதுரை பிறந்தவனை
தூய்மையான நீர் நிரம்பிய யமுனைக் கரையில் இருப்பவனை
ஆயர்கள் குலத்தினில் தோன்றி உலகுக்கெல்லாம் அழகிய திருவிளக்கைப் போல் ஒளி வீசுபவனை
பெற்ற தாயின் வயிற்றை விளங்கச் செய்த தாமோதரனை
தூயவர்களாக வந்து நாங்கள் தூய்மையான மலர்களைத் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தால் சிந்தித்தோமென்றால்
இதுவரை நாங்கள் செய்த பாவங்களும் இனி மேல் செய்யப்போகின்றவையும்
தீயினில் பட்ட தூசினைப் போல் ஆகும்; அதனால் அவன் பெயர்களைச் செப்புங்கள்
பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!
இப்படி பாடல் வரிகள், பாட்டு (ஒலி), பொருள் எல்லாமும் சேர்த்துத் தந்தால் என்னையும் சிக்கிக் கொண்டவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் இராதா. :-)
ஆஹா ! நிச்சயமாக குமரன். :-)
இன்னும் சில அருமையான பாடல்கள் உள்ளன. கிரிதாரி அருள் புரிய வேண்டும். :)