7.கண்ணன் 'அம்மா' என்றழைத்தல்.
தவழ்ந்து தொடங்கிய தங்கப் பகல்மேல்
கவிழ்ந்து மறைத்தது கொண்டல். - அவிழ்ந்த
சுருள்நுரையாய்ப் புட்கள் சுழலாய்ப் பறக்க
வருகின்ற தந்ததிரு நாள்.
கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.
பக்கம்போய்த் தட்டிக் கொடுத்துப் பாலூட்டிப்
பார்த்துக் கவனமாய் நீராட்டிப் - பாலன்னம்
சோறிட்டுத் தாலாட்டிச் சொக்கி உறங்குமுன்
கூறினான் காதினில் "மா!"
குழல்நாதம் கொஞ்சம் குறுவீணை கொஞ்சம்
கழலுரசல் சேர்த்துக் கனித்தேன், - பழரசம்,
செஞ்சாந்து, யாழிசை, சேரும் அலையோசை
மஞ்சள் குளிரை மயனென்பான் - மிஞ்சியச்
செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்
ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட,
காந்தி ஜொலிக்கும் குயில்மொழி - நீந்தி
எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்.
***
Image Courtesy :: http://www.netglimse.com/images/events/janmashtami/krishna_bakasura.jpg
5 comments :
//கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;//
கீழ் வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
//பாவினங்கள் கோயிலில் பாடுவர்//
புள்ளரையன் கோயிலில் வெள்ளி விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
அப்படியே திருப்பாவை வரிகள் போலவே இருக்கு வசந்த்! எதுக்கு என் தோழி கிட்ட இருந்து காப்பி அடிச்சீங்க? :))
//செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்
ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட//
You mean cocktail? on the rocks?? :)
//எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்//
கண்ணன் குரலுக்கு இப்படி ஒரு கிக்-கா? :)
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. பொருத்தமான சொற்களைப் பூட்டி கண்ணன் குரலை கேட்கும்படி செய்கிறீர்கள்.
//கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.//
Reminds me of Thiruppaavai. :)
//
கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி//////
இந்த வரிகளுக்கே மன்னனாயிருந்தால் பொன்முடிப்புதந்துருப்பேன் அருமை வசந்த்.