பேய்ப் பெண்ணே !
மார்கழி - 07
கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!
கேயாரெஸின் விளக்கம் இங்கே.
ஆனைச் சாத்தன் பறவையெல்லாம்
பேசும் பேச்சுகள் கேட்கலையோ?
நறுங்குழல் ஆய்ச்சியர் தயிர்கடையும்
ஓசை உனக்கு கேட்கலையோ?
வளையொடு அணிகளும் சேர்ந்திசைக்கும்
கலகல ஒலியும் கேட்கலையோ?
கேசவன் புகழைக் கேட்ட பின்னும்
உறங்கிக் கிடக்கும் பேய்ப் பெண்ணே!
ஒளிர்திரு மேனி உடையவளே!
உடனே கதவைத் திறவாயே!
--கவிநயா
இந்த பாடலைக் குறித்து ஷைலஜா அக்கா:
இன்றைய திருப்பாவை மிகவும் சிறப்பான பாடலாக அமைந்திருக்கிறது.
ஆரமபமே கீசு கீசு என்று காதருகே வந்து கிசுகிசுக்கிறது! அதென்ன கீசு கீசு என்று பாசுரம் படிக்க ஆரம்பித்த நாளில் மனசில் ஒரே குறுகுறு!
விடுவிடுவென பொழிப்புரைபக்கங்களைப்புரட்டிப்படிக்க ஆரம்பித்தால் அவரவர் பாணியில் அர்த்தங்களைச்சொல்லி இருந்தாலும் அழகிய சிங்கர்சுவாமிகள்(ஸ்ரீரங்க ராஜகோபுரம் கட்டியவர்தான்) கூறிய விளக்கம் அப்படியே மனசைக்கட்டிப்போட்டுவிட்டது
ஆனைச்சாத்தான் என்றால் என்ன? பரத்வாஜ பட்சிகளாம்!
ராமனை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரச் சித்திரகூட யாத்திரைசெய்தபோது பரதனுடன் கூடவே வந்த் அயோத்தியாவாசிகளான ஆண்பெண்கள் அவ்வளவுபேரும் ஆனைச்சாத்தான்களாம். அதாவது பரத்வாஜரின் விருந்தோம்பலில் அவரிடத்தில் பூரண விசுவாசம் கொண்டவர்களாயிருந்து ராமனை சேவிக்கவேண்டும் என்ற பெரிய மகிழ்ச்சியான ஆரவாரத்தைச்செய்கிறார்களாம்.அதுபோல இப்போது யமுனைத்துறைவனை சேவிக்க கூட்டமாய் வருகிறார்களாம். அவர்கள் தேவ மொழியில்பேசுவதால் நமக்கு அது புரியாதாகையால் கீசுகீசென்று கேட்கிறதாம், அந்த சப்தம் உன்காதில் விழவில்லையா என்று ஆண்டாள் கேட்கிறாளாம்!
இறைசிந்தனையைத் தடுத்துவிட்ட பேய் புத்திகொண்ட பெண்ணே என்று திட்ட ஆரம்பித்து கடைசியில் தேஜஸ் கொண்டவளே என்கிறாள் தேசமுடையாய் என்பதற்குக்காரணம் கண்ணனின் நினைவிலேயே அவள் இருப்பதால் அவனது தேக தேஜஸ் நாயகப்பெண்பிள்ளையான அதாவது இவர்களின் எஜமானியான அவளுக்கும் வந்துவிடுகிறதாம் அப்படியானால் பேய்ப்பெண் என்று இறை அடியாரான அந்தப்பெண்னை சொல்லிவிட்டதற்காய் வருந்தி தேசமுடையாய் என முடிக்கிறாள் அவளும் நான் பேய்ப்பெண் தான் இல்லாவிடில் இப்படி தூங்கிக்கொண்டு கேசவனின் நாமம் பாடி வந்த உங்களை வாசலில் காக்க வைப்பேனா நானல்லவா பாகவத அபசாரம் செய்துவிட்டேன் என்கிறாள்!
அவளது அழகான பேச்சைரசித்தபடி மற்றொரு பெண்னை எழுப்பச்செல்கிறார்களாம்! இந்தப்பாசுரத்தில் கூறப்படும் திவ்யதேசம் திரு ஆய்ப்பாடியாகும் இது பெரியாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டது.
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
பெரியாழ்வார் திருமொழி 1-2 -2
இங்கு கூறப்படும் பாடுவார்களும் பல்பறைக்கொட்ட நின்று ஆடுவார்களும் என்னும் தொடர் ஏழாம் பாசுரத்தில்கூறப்படும் நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் என்பதை நினைவுபடுத்துகிறது.
படத்துக்கு நன்றி: aazhvarmozhi.blogspot.com
19 comments :
இன்றைய திருப்பாவை மிகவும் சிறப்பான பாடலாக அமைந்திருக்கிறது.
ஆரமபமே கீசு கீசு என்று காதருகே வந்து கிசுகிசுக்கிறது! அதென்ன கீசு கீசு என்று பாசுரம் படிக்க ஆரம்பித்த நாளில் மனசில் ஒரே குறுகுறு!
விடுவிடுவென பொழிப்புரைபக்கங்களைப்புரட்டிப்படிக்க ஆரம்பித்தால் அவரவர் பாணியில் அர்த்தங்களைச்சொல்லி இருந்தாலும் அழகிய சிங்கர்சுவாமிகள்(ஸ்ரீரங்க ராஜகோபுரம் கட்டியவர்தான்) கூறிய விளக்கம் அப்படியே மனசைக்கட்டிப்போட்டுவிட்டது
ஆனைச்சாத்தான் என்றால் என்ன? பரத்வாஜ பட்சிகளாம்!
ராமனை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரச் சித்திரகூட யாத்திரைசெய்தபோது பரதனுடன் கூடவே வந்த் அயோத்தியாவாசிகளான ஆண்பெண்கள் அவ்வளவுபேரும் ஆனைச்சாத்தான்களாம். அதாவது பரத்வாஜரின் விருந்தோம்பலில் அவரிடத்தில் பூரண விசுவாசம் கொண்டவரக்ளாயிருந்து ராமனை சேவிக்கவேண்டும் என்ற பெரிய மகிழ்ச்சியான ஆரவாரத்தைச்செய்கிறார்களாம்.அதுபோல இப்போது யமுனைத்துறைவனை சேவிக்க கூட்டமாய்வருகிறார்களாம். அவர்கள் தேவ மொழியில்பேசுவதால் நமக்கு அதுபுரியாதாகையால் கீசுகீசென்று கேட்கிறதாம், அந்த சப்தம் உன்காதில் விழவில்லையா என்று ஆண்டாள் கேட்கிறாளாம்!
இறைசிந்தனையைத்தடுத்துவிட்ட பேய் புத்திகொண்ட பெண்ணே என்று திட்ட ஆரம்பித்து கடைசியில் தேஜஸ் கொண்டவளே என்கிறாள் தேசமுடையாய் என்பதற்குக்காரணம் கண்ணனின் நினைவிலேயே அவள் இருப்பதால் அவனது தேக தேஜஸ் நாயகப்பெண்பிள்ளையான அதாவது இவர்களின் எஜமானியான அவளுக்கும் வந்துவிடுகிறதாம் அப்படியானால் பேய்ப்பெண் என்று இறை அடியாரான அந்தப்பெண்னை சொல்லிவிட்டதற்காய் வருந்தி தேசமுடையாய் என முடிக்கிறாள் அவளும் நான் பேய்ப்பெண் தான் இல்லாவிடில் இப்படி தூங்கிக்கொண்டு கேசவனின் நாமம் பாடி வந்த உங்களை வாசலில் காக்க வைப்பேனா நானல்லவா பாகவத அபசாரம் செய்துவிட்டேன் என்கிறாள்!
அவளது அழகான பேச்சைரசித்தபடி மற்றொரு பெண்னை எழுப்பச்செல்கிறார்களாம்! இந்தப்பாசுரத்தில் கூறப்படும் திவ்யதேசம் திரு ஆய்ப்பாடியாகும் இது பெரியாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டது.
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
பெரியாழ்வார் திருமொழி 1-2 -2
இங்கு கூறப்படும் பாடுவார்களும் பல்பறைக்கொட்ட நின்று ஆடுவார்களும் என்னும் தொடர் ஏழாம் பாசுரத்தில்கூறப்படும் நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் என்பதை நினைவுபடுத்துகிறது.
யாரும் பதிவிடவில்லையென்பதால் பாடலை மட்டும் இட்டிருந்தேன். இப்போது உங்கள் குறிப்பு கண்டு மிக்க மகிழ்ச்சி ஷைலஜா அக்கா. பதிவில் சேர்த்து விட்டேன். மிக்க நன்றி.
மன்னிக்கவும் . நான் முதலில் படித்தவுடன் பதிவிட நினைத்தேன்... ஆனால் இனைய தொடர்பு தகராறு செய்ததால் இயல்வில்லை. மிக நன்றாக இருக்கிறது, அதுவும் இந்த கமெண்ட்டுடன் படிக்கும் போது மிக சுலபமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்... தொடர்ந்து வருகிறேன்... நன்றி.
//யாரும் பதிவிடவில்லையென்பதால் பாடலை மட்டும் இட்டிருந்தேன். //
குறையை தீர்த்தாயிற்று. :)
I was waiting without posting thinking that others would have something to post. :)
Hass anyone planned anything for Ekadesi post?
வாங்க அண்ணாமலையான். நீங்கள் தொடர்ந்து படிப்பதே மகிழ்ச்சி. இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டாமே :) வருகைக்கு நன்றி.
//குறையை தீர்த்தாயிற்று. :)//
ஆமாம் ராதா, இராத்திரி நான் படுக்க போற வரை பதிவைக் காணும். அதான்.
உங்களுக்கு தனிமடல் இட்டிருந்தேன், பாத்துட்டீங்கன்னு நினைக்கிறேன் :)
தேஜஸ்வினிக்கு இரண்டு மூன்று வயது இருக்கும் போது பெரும்பாலும் இந்தப் பாசுரம் தான் அவளுக்குத் தாலாட்டு. பேசிக் கொண்டே இருப்பவள், 'கீசு கீசென்றெங்கும்' என்று தொடங்கியவுடன் பேச்சை நிறுத்திவிடுவாள்; 'தேசமுடையாய்' என்று பாடும் போது நன்கு உறங்கியிருப்பாள். :-) தவறாமல் ஒவ்வொரு முறையும் நடந்தது. இப்போது அவள் தம்பிக்காக பாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாசுரத்தை இல்லை. 'கோபாலா' என்று வரும் பாசுரம் தேடிப் பார்க்க வேண்டும். சட்டென்று ஏதேனும் நினைவுக்கு வருகிறதா? :)
சமயத்தில் வருவா சமயபுரத்தாள்-ன்னு சொல்லுவாய்ங்க!
எங்க கவிக்கா சமயத்தில் வந்து மார்கழிப் பதிவைப் போட்டுட்டாங்க, பின்னூட்டத்தில் திருப்பாவைக்கு எனக்கு வேலை வைக்காமல்! :))
ஷைல்ஸ் அக்கா விளக்கம் சொல்லி கலக்கிங்ஸ்!
ஆனா நான் மட்டும் ஒப்புத்துக்க மாட்டேன்! யக்கா, மார்கழிப் பதிவு நீங்க போடவே இல்லை கண்ணன் பாட்டுல! அதைப் போடுங்க, அப்பறம் ஒப்புத்தக்கறேன்! :)
//Radha said...
Hass anyone planned anything for Ekadesi post?//
அடியேன்!
//குமரன் (Kumaran) said...
ஆனால் இந்தப் பாசுரத்தை இல்லை. 'கோபாலா' என்று வரும் பாசுரம் தேடிப் பார்க்க வேண்டும். சட்டென்று ஏதேனும் நினைவுக்கு வருகிறதா? :)//
கோபாலா கோபாலா
மலையேறு கோபாலா
கோழிக் குஞ்சு தேடி வந்த கோபால
கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
:))
குமரன்
குருத்தொசித்த **கோபாலகன்**-ன்னு ஒரு இயற்பா பாசுரம் வரும்-ன்னு நினைக்கிறேன்!
ஆனா இயற்பா பாடி தூங்க எல்லாம் வைக்க முடியாது! :)
நல்ல டகால்ட்டியா இருந்தா, தோழி கிட்டே போவான்!
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்த **கோபாலா** எழுந்திராய்
இதுல வரும் கோபாலா, கோபாலா-என்பதை இழுத்து இழுத்துப் பாடித் தூங்க வச்சிருவான்! :))
பெரியாழ்வார் பாடாத கோபாலா-வா? :)
தத்துக் கொண்டாள் கொலோ?
தானே பெற்றாள் கொலோ?
சித்த மனையாள் அசோதை இளஞ் சிங்கம்
கொத்தார் கருங்குழல் **கோபாலா** கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்!
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்!!
வாங்க குமரன், கண்ணன் :)
ஷைலஜா அக்கா ! மிக்க நன்றி. உங்கள் விளக்கம் என்னை ராமாயணம் படிக்க தூண்டியது.
கண்ணன் பாடல் குழுவினரே !
ஒரு ராமர் பாடல் ஒன்று கைவசம் இருக்கிறது. கண்ணன் பாடலில் ராமன் வரலாமா? இல்லை ராமன் பாடல்களுக்கு என்று ப்ரத்யேகமாக வேறு எதாவது தளம் வைத்திருக்கிறீர்களா? :-)
~
ராதா
குமரன்,
"யது நந்தனா ! கோபாலா ! ஜெய வேணு கான லோலா !"
என்ற மீரா பஜனை நினைவிற்கு வருகிறது. கண்ணன் பாட்டில் பதிய இருக்கிறேன். :)
~
ராதா
//கண்ணன் பாடல் குழுவினரே !//
எதுக்கு ராதா, உங்களை நீங்களே கூப்புட்டுக்கறீங்க? :)
//ஒரு ராமர் பாடல் ஒன்று கைவசம் இருக்கிறது. கண்ணன் பாடலில் ராமன் வரலாமா?//
கண்ணன் பாட்டில், பசு மாடுகள் பாட்டு சூப்பராய் வரலாம்! அப்படியிருக்க, ராமன் பாட்டு வரலாமே! கண்ணனின் பசுக்களுக்கு அடுத்து, எங்களுக்கு ராமனையும் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்! :))
இதோ 1
இதோ 2
நன்றி இரவி & இராதா.
இராதா, தொடர்ந்து நீங்கள் நினைக்கும் எல்லா பாடல்களையும் இந்தப் பதிவில் போடுங்கள். நன்றி.