Monday, May 28, 2007

52. கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்!

ஒரு பெண்ணின் காதலை, ஒரு ஆண் பரிபூர்ணமாக, முழு மனதுடன் புரிந்து கொள்ள முடியுமா?
கவியரசர் கண்ணதாசனின் சொற்களைக் கொஞ்சம் கடன் வாங்கினால், முடியும்!
"கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ" என்ற ஏக்கம், அப்போது நன்றாகவே புரியும்!

இந்தப் படத்தில், இதைப் பாடுவது யார்?
தேவிகாவா? இல்லை விஜயகுமாரியா?
இரண்டு பேரும் கண்ணன் பாட்டு பாடியிருக்கிறார்கள். ரெண்டுமே கொஞ்சம் சோகமான பாட்டு தான். அதான் கொஞ்சம் குழப்பம்! :-)
"அதே பாட்டு, அதே பாவம்...பாடம்மா....நீ பாடு" என்று "பாடு சாந்தா பாடு" டயலாக் இந்தப் பாடலிலும் வரும்!

பாடலை இதோ கேளுங்கள்!

சுந்தரம் என்ற நண்பர் கேட்ட நேயர் விருப்பம்!


bhojan-lila_01

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓஓ...கண்ணன் நடுவினிலே


காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!
(கங்கைக்கரை)

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்


கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!


அன்று வந்த கண்ணன் அவன்
இன்று வர வில்லை அவன்!
என்றோ அவன் வருவான்...ஓ...என்றோ அவன் வருவான்!


கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை


கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ!
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!!
கண்ணா...!!கண்ணா...!!கண்ணா...!!




படம்: வானம்பாடி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
ராகம்: ஆபேரி (கரெக்டா?...:-)

18 comments :

வல்லிசிம்ஹன் said...

ரவி,
பாடியவர் தேவிகா .பாடும்மா பாடுனு சொல்றது டி.ஆர்.ராஜகுமாரி
தலைத் தலையை ஆட்டுவது சின்னக் கமல்.


தேடித் தேடிக் கண்ணனைக் கொண்டுகிறீர்கள்.
நல்ல பாட்டு.
மறக்கவே முடியாதது.

பாலராஜன்கீதா said...

நானும் ஒரு பெண் திரைப்படத்தில் விஜயகுமாரி நடித்து பி.சுசிலா பாடிய கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாட்டும் நினைவிற்கு வந்தது.

G.Ragavan said...

வானம்பாடி. இனிய பாடல்கள் நிறைந்த படம்.

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்...

ஆகாகா...இசையரசியின் இனிய குரல் கண்ணனை உருக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

கவியரசரை வியந்து வியந்து வியந்து போகிறேன். வாழ்க அவரது புகழ்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை//
ரவி சங்கர்!
ஆண்டவன் மேல் அன்பு வந்தால், அரசன் கூட எம்மாத்திரமேன, சொல்விளையாட்டுச் செய்துள்ளார்.
எனக்கும் என்றும் பிடிக்கும் பாட்டு.சுசீலா அம்மாவின் குரலினிமையே தனி

Geetha Sambasivam said...

படம் பார்த்ததில்லை. ஆனால் பாட்டு மட்டும் மனசிலே நல்லா நினைப்பிருக்கு. நிஜமாவே சில சமயம் கண்ணிலே நீர் வரும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது. அருமையான பாடலோடு இசையும் அருமையாகச் சேர்ந்து வந்ததால் காலத்தை வென்ற பாடல்னு சொல்லலாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
பாடியவர் தேவிகா .பாடும்மா பாடுனு சொல்றது டி.ஆர்.ராஜகுமாரி
தலைத் தலையை ஆட்டுவது சின்னக் கமல்//

ஹைய்யா...இதான் விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்கணும்ங்கிறது!

//தேடித் தேடிக் கண்ணனைக் கொண்டுகிறீர்கள்//.

அட, கண்ணன் தான் தேடித் தேடி, எப்படியோ கண்ணன் பாட்டுக்குள் புகுந்து விடுகிறான், வல்லியம்மா :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாலராஜன்கீதா said...
நானும் ஒரு பெண் திரைப்படத்தில் விஜயகுமாரி நடித்து பி.சுசிலா பாடிய கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாட்டும் நினைவிற்கு வந்தது.//

அடுத்த பாட்டு ரெடீய்ய்ய்ய்ய்!
நன்றி பாலராஜன் சார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// G.Ragavan said...
வானம்பாடி. இனிய பாடல்கள் நிறைந்த படம்//

ஆமாம் ஜிரா.
தூக்கணாங் குருவிக் கூடு, கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்....என்று பல இனிய பாடல்கள்!

//இசையரசியின் இனிய குரல் கண்ணனை உருக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை//

கண்ணனை இப்படி எல்லாரும் உருக்கினால் எப்படி ஜிரா?
கண்ணன் என்ன வெண்ணையா, உருக்குவதற்கு!

அச்சோ...கண்ணா...நான் உன்னை வெண்ணெ என்றெல்லாம் திட்டவில்லை! சும்மா பேச்சுக்குச் சொன்னேன்! :-)

கோவி.கண்ணன் said...

இன்று காலை இந்த பாடலுடன் தொடங்கியது !

நன்றி !

வடுவூர் குமார் said...

பாட்டு பல விஷயங்களை சொன்னாலும்... படம் அதைவிட அதிகமாக சொல்வதாக தோனுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை//
ரவி சங்கர்!
ஆண்டவன் மேல் அன்பு வந்தால், அரசன் கூட எம்மாத்திரமேன, சொல் விளையாட்டுச் செய்துள்ளார்//

ஆமாங்க யோகன் அண்ணா...
ஒரு கால் பக்த மீராவையும் நினைத்திருப்பாரோ கவியரசர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
நிஜமாவே சில சமயம் கண்ணிலே நீர் வரும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது//

உண்மை தான் கீதாம்மா!
அதிலும் கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...என்ற கட்டம் மிகவும் உணர்ச்சிகரமானது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
இன்று காலை இந்த பாடலுடன் தொடங்கியது !//

GK
காலையில் பாட்டுடன் துவங்குவது சிறப்பு!
என்னைப் பொருத்த வரை குறட்டையும் ஒரு நல்ல பாட்டு தான்!
என்ன சொல்லறீங்க? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
பாட்டு பல விஷயங்களை சொன்னாலும்... படம் அதைவிட அதிகமாக சொல்வதாக தோனுகிறது//

ஆமாம் குமார் சார்...
காவியமா இல்லை ஓவியமா-ன்னு
சும்மாவா பாடினாங்க!

ஷைலஜா said...

என்ன இருந்தாலும் பெண்ணின் காதல் உன்னதமானதுதான்...பாருங்க 'கண்ணனுக்குத்தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' எனும் வரிகளில்தான் எத்தனை அழுத்தம் அன்பு ! காலங்களைக் கடந்து நிற்கும் பாட்டு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
என்ன இருந்தாலும் பெண்ணின் காதல் உன்னதமானதுதான்...பாருங்க 'கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' எனும் வரிகளில்தான் எத்தனை அழுத்தம்//

ஆகா, ப.பா.ச வில் இருந்து தலைவி வந்து ஒரு கருத்து சொன்னா அதை மீற வ.வா.ச-க்குக் கூடத் துணிவு கிடையாதே!

அப்படி இருக்க,
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று கண்ணனும் அதே அன்புடன் ராதைக்கு உருகுவதை,
ஒரு அப்பாவி ஆன்மீகப் பதிவர், எப்படி உரக்க சத்தம் போட்டுச் சொல்ல முடியும், சொல்லுங்க! :-)

Anonymous said...

dear KRS,

Thanks a lot for the beautiful song and the clip.

Adiyen kettu vegu naalagiyathal Naane maranthalum thangal miga-nerthiyaga ezhuthi Kannan padalai Publish seythatharku NANDRI Nandri NANDRI.

Melum valara vizhum

sundaram

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் அமுதம் இரவிசங்கர். காற்றினிலே வரும் கீதம் பாடலுக்குப் பின் இந்தப் பாடலைக் கேட்கும் போது தான் உள்ளம் ஒரு முனைப்பாகி கண்கள் தானே மூடி கண்ணில் நீர் நிறைந்து உருக வைக்கிறது. கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை தொடங்கி எத்தனை எத்தனை அமுத வரிகள். அப்பப்பா. கண்ணதாசா. நீ வாழ்க. வாழ்க.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP