Thursday, February 15, 2007

தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?

ஸ்ரீநிவாச திருவேங்கடமுடையாய்!
ஜெய கோவிந்த முகுந்தா அனந்தா!
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்!
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?
(ஸ்ரீநிவாச)ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே!
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே!
ஜகன்னாதா சங்க சக்ர தரனே!
திருவடிக்கு அபயம் அபயம் ஐயா!
(ஸ்ரீநிவாச)இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: ஹம்ஸானந்தி
தாளம்: ஆதி
பாடியவர்: எஸ்.பி.இராம்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

இந்தப் பாடலை எம்.எஸ். பாடித் தான் முதலில் கேட்டேன். அதைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

26 comments :

இலவசக்கொத்தனார் said...

மிகவும் அருமையான பாடல். நல்ல ராகமும் கூட. வரிகளைத் தந்ததிற்கு நன்றி கே.ஆர்.எஸ்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Koths
Adiyen didnt post.
Namma Kumaran posted this.
I just landed and am checking in...

Kumaran
Arumaiyana Paadal
Nandri

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
நான் பொதுவாக வாசிக்கும் போது சங்கீதம் கேட்பேன். இதைக் கேட்டுக் கொண்டே படிக்கிறேன். மிக இனிமையாக உள்ளது.
ஜகம் புகழுமா?; ஜகன் புகழுமா? எனக்கு ஜகம் எனத் தான் கேட்கிறது. அத்துடன் ஜகம் தான் பொருத்தம் போலுமுள்ளது. மீண்டும் பார்க்கவும்.

குமரன் (Kumaran) said...

பாடலைக் கேட்டு இரசித்ததற்கு நன்றி கொத்ஸ். கே.ஆர்.எஸ். ஊருக்குப் போயாச்சு. இப்ப பதிவு எங்க (வெட்டிப்பயல், டுபுக்குசீடர், அடியேன்) பொறுப்பில் இருக்கு. படத்தை மட்டும் பாத்துட்டு கே.ஆர்.எஸ். இடுகைன்னு நெனைச்சுட்டீங்களா? :-)

குமரன் (Kumaran) said...

ஜடாயு ஐயா. உங்க பேரும் இந்தப் பதிவின் பதிவர்கள் பெயர் பட்டியலில் இருக்கே. நீங்க எப்ப இங்கே இடுகை இடப்போறீங்க?

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர், விமானத்தில் தானே போனீர்கள்? அதற்குள்ளா ஊருக்குப் போய் சேர்ந்துவிட்டீர்கள்? போய் சேர்ந்தவுடன் முதல் வேலையே பதிவுகள் பார்ப்பது தானா? :-) பயணம் நன்கு இருந்ததா? கட்டாயம் பதிவு நண்பர்களைச் சந்தித்துவிட்டு வாருங்கள்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் யோகன் ஐயா. இது மிக மிக இனிமையான பாடல். எம்.எஸ். அம்மா அளவிற்கு பக்தி பாவம் இவர் பாடியதில் தென்படாவிட்டாலும் குறை ஒன்றுமில்லை. பக்தி பாவம் நன்கு தெரிகிறது.

எழுத்துப்பிழை விட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா. சரி செய்துவிட்டேன்.

சிவமுருகன் said...

அண்ணா,

பாடல் அருமையாக உள்ளது, படம் தெரியவில்லை.

//கே.ஆர்.எஸ். ஊருக்குப் போயாச்சு.//

அவரோட நானும் பேசிட்டேன்.

குமரன் (Kumaran) said...

படங்கள் பெரியதாக இருப்பதால் அவை தெரியவில்லை என்று நினைக்கிறேன் சிவமுருகன். இன்னொரு முறை முயன்று பாருங்கள். நல்ல படங்கள் இவை.

பாடல் அருமையான பாடல். கேட்டு இரசித்ததற்கு நன்றி.

கே.ஆர்.எஸ். என்ன சொன்னார்?

ஜெயஸ்ரீ said...

அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி குமரன்.எம்.எஸ். அம்மா பாடித்தான் கேட்டிருக்கிறேன். இதுவும் நன்றாகவே இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நன்றி ஜெயஸ்ரீ. எம்.எஸ். அம்மா பாடலின் சுட்டி இருக்கிறதா?

ஜெயஸ்ரீ said...

எப்போதோ இசைத்தட்டில் கேட்டது. சுட்டி தேடிப்பார்க்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், முருகன் அருள் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை. கண்ணன் பாட்டில் பின்னூட்டம் இட முடிகிறது. இரண்டுமே குழு தானே? ஏன் அதில் பின்னூட்டம் இட முடியவில்லை?

ஜீவா (Jeeva Venkataraman) said...

வரிகள் எளிதாய் மனதில் நிற்கும் அழகான பாடல்!

குமரன் (Kumaran) said...

தெரியலையே கீதா அம்மா. முருகனருள் பதிவில் என்ன சொல்ல நினைத்தீர்கள்?

குமரன் (Kumaran) said...

உண்மை ஜீவா. அருமையான பாடல். பொருட்செறிவுள்ள பாடல். பக்தி பாவம் பொங்கும் பாடல்.

மங்கை said...

குமரன்...

இப்போதிருக்கும் மன நிலைக்கு அமைதி தரும் பாடல் இது...

சதா வேங்கடமுடையானுக்கே கைங்கரியம் செய்ய நினைக்கும் / செய்து கொண்டிருக்கும் தாய்க்கு உடல் நிலை சரி இல்லை என்று இப்பொழுது தான் தொலை பேசியில் செய்தி வந்தது அருகில் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம்...இந்த பாடல் மனதிற்கு அமைதி அளிக்கிற விதத்தில் இருக்கிறது
.....ம்ம்ம் ..நன்றி பாடலுக்கு

குமரன் (Kumaran) said...

மங்கை,

உங்கள் தாயாரின் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நானும் ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டேன்.

Anonymous said...

Superb photos -

what a beauty

If Andal happens to see the photos, definitely she would like to have a another birth to enjoy this photos and to join Lord ...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மங்கை,

உங்கள் தாயார் நலம் பெற வேண்டும் என்று அவன் மார்பில் கொலுவிருக்கும் தாயாரை அடியேனும் வேண்டிக் கொள்கிறேன்.

Anonymous said...

எம்.எஸ்.அம்மா பாடி கேட்டதில்லை.
சுதா ரகுநாதன் பாடி கேட்டிருக்கேன்.
அம்மா பாடியதை கேட்க ஆவல்
மிக அருமையான பாடல்.நான் ரசித்து
ரசித்து வீணையில் வாசித்தது ஞாபகத்தில் வந்தது.
கல்யாணி

குமரன் (Kumaran) said...

கல்யாணி அவர்களே. வீணையில் வாசிப்பதற்கு மிக ஏற்ற பாடல் இது என்று நினைக்கிறேன். (எனக்கு சங்கீதம் தெரியாது. தோன்றுவதைச் சொல்கிறேன். அவ்வளவு தான்).

பாடலைக் கேட்டு இரசித்ததற்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

பெயர் சொல்லாத நண்பரே. உண்மை தான். எம்பெருமான் திருவுருவம் உள்ளம் கொள்ளை கொள்கிறது.

சிவமுருகன் said...

//கே.ஆர்.எஸ். என்ன சொன்னார்? //

தில்லியிலிருந்து பேசுகிறேன் என்றவுடன் ரொம்ப சந்தஷோம் அவருடைய குரலிலேயே தெரிந்தது. முதல் முறையாக ஒரு இந்திய பதிவர் குரலை கேட்பதாக சொன்னவர் பிறகு, மூன்று முறை எனக்கு அலுவலக அழைப்பு வந்துவிட்டது, பிறகு சொல்கிறேன்.

மங்கை said...

குமரன்

சில சமயங்களில் சில ஆறுதல் வார்த்தைகளும், அன்பும்,ஆறுதலும்,
எந்த அளவுக்கு மன நிறைவையும், நம்பிக்கையையும் தருகிறது என்பதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்
என் தாயாருக்காக நீங்களும் வேண்டிக் கொண்டதற்கு நன்றி...இப்போது நலமாக உள்ளார்...

அன்புடன்

மங்கை

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி மங்கை.

திருமாலவன் அருள் சூழ்ந்து நின்று காக்கும்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP