Friday, March 02, 2007

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா


கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடி பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி ஏனடா)

என் மனம் உனக்கொரு விளையாட்டுப் பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
நெஞ்சில் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாற வா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாக வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி ஏனடா)

வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்
கண் மழை விழும் போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை இரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை
நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி ஏனடா)


திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: வைரமுத்து
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்

சித்ரா மட்டும் பாடியது, சித்ராவும் ஜேசுதாஸும் பாடியது.

13 comments :

ஆதி said...

அருமையான பாடல். இன்றைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

குமரன் (Kumaran) said...

திரு.ஆதிசேஷன். இந்தப் பதிவில் இருக்கும் மற்ற இடுகைகளையும் பாருங்கள். பல பாடல்கள் உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மார்கழியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கண்ணன் பாடலாக இட்டோம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என் மனம் உனக்கொரு விளையாட்டுப் பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?//

"நான் ஒரு விளையாட்டு பொம்மையா" என்ற பாபநாசம் சிவனின் நவரசப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது குமரன்.

திரைப்படமோ "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" - நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் என்ற ஆழ்வார் வரிகளூம் நினைவில் நிழல் ஆடுகின்றன.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்
கண் மழை விழும் போது எதிலென்னைக் காப்பாய்//

இன்னொன்றும் கவனியுங்கள்
சித்ரா
யேசுதாஸ்
ரகுமான்
என்று அனைத்து மதத்தினரும்,
வைரமுத்து என்று பகுத்தறிவுச் சிந்தனையாளர்
- இப்படி அனைவரின் உள்ளங்் கவர் கள்வன் - நம் கண்ணன்.
பாடலுக்கு நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

நல்ல தொடர்புகளைத் தொடுத்து இட்டிருக்கிறீர்கள் இரவிசங்கர். :-)

அனைவரின் உள்ளம் கவர் கள்வன் தான் நம் கண்ணன் என்பதில் ஐயமே இல்லை.

God said...

ராகம்: சிறீரஞ்சனி
தாளம்: ஆதி
இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி


பல்லவி
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
ராகம் காபி
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
குறையொன்று;ம் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்
குறையொன்றும் எனக்கிpல்லை மறைமூர்த்தி கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


ராகம்: சிந்துபைரவி
சரணம்4
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

குமரன் (Kumaran) said...

சாமி,

மிக அருமையான பாடலைப் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் பதிவிலும் அடியேனின் 'கூடல்' பதிவிலும் இந்தப் பாடலையும் பாடலுக்கான பொருளுரையும் பார்க்கலாம். பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வெகு அருமையான பாடல் குமரன்.
அதுவும் சித்ராவின் குரலில்
கேட்கக் கேட்கத் திகட்டாது.

படம் நிறைவாக இருக்கிறது.வரைந்தவன் வாழ்க.

குமரன் (Kumaran) said...

இந்த மாதிரி ஓவியங்கள் பல கிருஷ்ண உணர்வு இயக்கத்தினர் (ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்) வரைந்திருக்கிறார்கள் வல்லி அம்மா. ஒவ்வொன்றும் பாகவதத்தில் சொல்லியிருப்பதை நேரில் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தும்.

இந்தப் படத்தில் ராதா கண்ணனைப் பற்றி கருவண்டிடம் பேசுவதைக் காட்டியிருக்கிறார்கள். வலப்புறத்தில் மேலே மரத்தில் இருக்கும் மலரில் அமர்ந்திருக்கும் வண்டிடம் ராதிகை பேசுகிறாள். கிருஷ்ண பக்தியில் ஊறி கண்ணெதிரே இந்தக் காட்சிகளைக் காணாமல் இந்த மாதிரி ஓவியங்கள் வரைய முடியாது.

சினேகிதி said...

nalla paadu :-) ungada blog la niraya nalla paadu iruku pola!

குமரன் (Kumaran) said...

ஆமாம் சினேகிதி. நிறைய நல்ல பாடல்கள் இந்தக் குழுப்பதிவில் இருக்கின்றன. காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருக வைக்கும் பாடல்களின் தொகுப்பாக இந்தக் கண்ணன் பாட்டு பதிவு இருக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
படம் வந்தபோதே இப்பாடலில் நல்ல ஈர்ப்பு இருந்தது. தாங்கள் முகப்பில் இட்ட படம் கன ஜோர்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஐயா. நல்ல பாடல் இது.

நன்றி ஐயா.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP