Thursday, December 14, 2006

4. காற்றினிலே வரும் கீதம்!




திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: தெரியவில்லை
பாடகி: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
இசையமைப்பாளர்: எஸ்.வி.வெங்கட்ராமன்
இயற்றியவர்: கல்கி
குழலில் இசைத்தவர்: சிக்கில் மாலா சந்திரசேகர்



காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்



துணை வண்டுடன் சோலை குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்


அருஞ்சொற்பொருள்:
பண்ணொலி - இசையுடன் கூடிய ஒலி
மதுர - இனிமை
மோகன - மனம் மயக்கும்
கீதம் - பாடல்; இசை
தாராகணங்கள் - தாரா என்றால் விண்மீன்கள்; தாராகணங்கள் என்றால் விண்மீன்கள் கூட்டம்
வேய்ங்குழல் - மூங்கில் குழல்

18 comments :

SP.VR. SUBBIAH said...

காற்றினிஒலே வரும் கீதம்
கல்கி புனைந்த கீதம்
குமரன்பதிவிலே வந்த கீதம் -எமை
குழலோனுக்கு அடிமையாக்கிய கீதம்!

Sivabalan said...

Excellent Song!

Thanks

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்//

பாட்டில் அருமையான இடம் இது!

//இயற்றியவர்: கல்கி
குழலில் இசைத்தவர்: சிக்கில் மாலா சந்திரசேகர்//

புதிய தகவல்கள் குமரன்; பாடலுக்கும் பொருளுக்கும் நன்றி!

இலவசக்கொத்தனார் said...

நல்ல பாட்டு. வீட்டுக்குப் போய் கேட்கறேன்.

Anonymous said...

அன்புக் குமரன்!
அருமையான பாடல்! இனிமையான குரல்!!!அழகான தோற்றம். மறக்க முடியாதவை!
நன்றி
யோகன்

குமரன் (Kumaran) said...

உண்மை தான் வாத்தியார் ஐயா. இந்தப் பாடல் நம்மை குழலோனுக்கு அடிமையாக்கும் கீதமே!

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன்.

Anonymous said...

இந்த மிக அருமையான பாடலை தந்த உங்களுக்கு நன்றி.

மெளலி...

வடுவூர் குமார் said...

வீட்டில் புல்லாங்குழல் கிடக்கு..வாசிக்கத்தெரியாததல்.
சரியான நேரத்துக்காக காத்திருக்கேன்.
MSS பாடியதில் இதுவும் ஒரு தேவ கானம்.

ஷைலஜா said...

காற்றினிலே வரும் கீதம்! ஆரம்ப வரிகளே அருமை! ஐம்பூதங்களில் காற்றுக்கு மட்டுமே இசையோடு சேர்ந்த பெருமை உண்டு. கண்ணுக்குத் தெரியாத காற்று செவிக்கு ஒலியை கொண்டுவந்து சேர்க்கிறது! எம் எஸ் போல பாடுபவரின் குரல் இனிமை காற்றையும் தென்றலாக்கிவிடுகிறது...நல்ல இனிய கீதம்! நவராத்திரி கொலு நாட்களில் சட்டென யார்வீட்டிலாவது பாடச் சொன்னால் இந்தப்பாடலை சுமாராய் பாடிவிட முடியும் அதிக சிரமம் இல்லாத பாடல்! நன்றிகுமரன் இங்கு அளித்தமைக்கு.
ஷைலஜா

குமரன் (Kumaran) said...

உண்மை தான் இரவிசங்கர். எனக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வரி வரும் போது உள்ளே ஏதோ ஒன்று அசைவது போல் தோன்றும். அதற்கடுத்த வரியும் அப்படியே. அதனைத் தான் 'கேட்டதில் பிடித்தது' வலைப்பூவில் இந்தப் பாடலை இட்ட போது தலைப்பாய் வைத்தேன்.

குமரன் (Kumaran) said...

வீட்டுக்குப் போய் கேட்டீங்களா கொத்ஸ்?

குமரன் (Kumaran) said...

உண்மை யோகன் ஐயா. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

குமரன் (Kumaran) said...

பாடலைக் கேட்டு இரசித்ததற்கு மிக்க நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

விரைவில் வாசிக்கக் கற்றுக் கொண்டு இந்தப் பாடலையும் வாசித்துப் பாருங்கள் வடுவூர் குமார். ரொம்ப நல்லா இருக்கும்.

குமரன் (Kumaran) said...

ஷைலஜா. நானே இந்தப் பாடலை சிரமமில்லாமல் பாடி விட முடியும்; அப்படியிருக்க உங்களால் முடியாதா திருவரங்கபிரியா?! :-)

Sethu Subramanian said...

துணை வண்டுடன்-----> சுனை வண்டுடன் ????
சுனை = நீர்நிலை (pond, tank). Usually the bees roam around the pond looking for nectar in the lillies, and lotuses in the pond.
Please read my article on this song here:
http://periscope-narada.blogspot.com/2015/09/katrinile-varum-geetham.html

Sethu Subramanian said...

This song was written specifically for the movie “MeerA” made in 1945 featuring M S Subbulakshmi as the subject heroine. The movie was directed by Ellis R. Dungan (an American director).

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP