Thursday, December 28, 2006

18. யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே!

யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே! = ஊத்துக்காடு வேங்கட கவி எழுதியது.
இன்றும், தொண்டர் குலத்தின் வைராக்கியத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டுப் பாடலாய் விளங்குகிறது!

பாடலைக் கேட்க, கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்கவும்!
Maharajapuram Santhanam
Krishna Kumar Varma

இந்தப் பாடலில் மூன்று பெரும் பக்தர்கள் பற்றிக் குறிப்பு வருகிறது! கடைசிக் பத்தியில்! யார் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்!gallery_Bg09 gallery_Bg08


யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
ஐயன் கருணையை பாடு
ராக ஆலாபனம் உடனும் பாடு - முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு
அருமை என வந்த பிறவிகளோ பல
ஆயிரம் தந்தாலும் வருமோ - ஆதலின்
(யாரென்ன)

நாரத கானமும் வேதமும் நாண
கான்க் குழல் ஒன்று தான் ஊதுவான்
நீரதர் கழலாட கோபியரும் பாட
வெகு நேர் நேரெனச் சொல்லி தானாடுவான் - அந்த
ஐயன் கருணையை பாடு...
(யாரென்ன)

தோலை அரிந்து கனி தூர எறிந்து
வெறும் தோலைத் துணிந்து ஒருவன் தந்தான் அல்லவோ
மேலைப் பிடி அவலை வேணுமென்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தான் அல்லவோ

காலமெல்லாம் தவம் இருந்து கனிந்த கனி
கடித்துச் சுவைத்து ஒருவள் தந்தாள் அல்லவோ - இந்த
ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை
நமக்கு எதற்கு என்று தள்ளி
நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி

ஐயன் கருணையை பாடு...
ராக ஆலாபனம் உடனும் பாடு - முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு
அருமை என வந்த பிறவிகளோ பல
ஆயிரம் தந்தாலும் வருமோ - ஆதலின்
(யாரென்ன)

gallery_Bg01


மார்கழி 14 - உங்கள் புழக்கடை - பதினான்காம் பாமாலை.

எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி

1. இந்தப் பாடலைத் திராச ஐயா முன்பே பதிந்துள்ளதாக நினைவு! சரியாகத் தெரியவில்லை! திராச ஐயா, சரி பார்த்து, சுட்டி தாருங்களேன்!

2. Picture Credit - Bhakti Vedanta Book Trust

23 comments :

SP.VR.சுப்பையா said...

பதிவில் எழுத்துக்கள் எல்லாம் மங்கலாகத் தெரிகிறது! கொஞ்சம் சரிபண்ண முடியுமா பாருங்கள்!
அன்புடன்
SP.VR.சுப்பையா

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சுப்பையா சார்!
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
திருத்தி விட்டேன்! இப்போது சரி பாத்துச் சொல்லுங்களேன்!

வல்லிசிம்ஹன் said...

கண்ணனை யார் என்ன சொல்ல முடியும்.
அவன் பாடலை மனம் விட்டுப் பாடவும் யாருக்கும் அஞ்ச வேண்டாம்.

குமரன் (Kumaran) said...

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்

உங்கள் புழைக்கடையில் இருக்கும் தோட்டத்துக் குளத்தில் (கிணற்றில்) செங்கழுநீர் பூக்கள் மலர்ந்து ஆம்பல் பூக்கள் கூம்பிவிட்டன. (செங்கழுநீர் பூக்கள் பகலில் மலரும். ஆம்பல் இரவில் மலர்ந்து பகலில் கூம்பும்). செங்கல் பொடி போன்ற காவி நிறத்தில் இருக்கும் உடையை அணிந்த, வெண்மையான் பற்களையுடைய தவத்தில் சிறந்தவர் தாங்கள் கைங்கரியம் செய்யும் திருக்கோயில்களில் கைங்கர்யம் செய்ய வந்துவிட்டார்கள். எங்களை நீ முன்னால் வந்து எழுப்புவதாகச் சொன்ன உன் வாய்வன்மை தான் என்னே?! கொஞ்சம் கூட நாணம் இல்லாதவளே! எழுந்திராய். சங்கும் சக்கரமும் ஏந்தும் நீண்ட கைகளையுடையவன் தாமரைக் கண்ணனைப் பாடுவாய்.

Anonymous said...

இந்தப்பாட்டு கேட்டதில்லை. நல்ல கதை சொல்வதில் வல்லவரான நீங்களே பாட்டிலுள்ள கதைகளைச் சொல்லிவிடவும்.

எனது நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் ஊத்துக்காடு ஐய்யாவின் பாடல் தொகுப்பொன்று வெளியிட உதவியிருக்கிறார். ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதியிருக்கிறார் ஐயா. எல்லாம் கண்ணன் மேல். உங்கள் பதிவில் அவர் பாடல்கள் மட்டும் போட்டாலும் மாளாது. அவ்வளவு இருக்கு!!

Anonymous said...

நல்ல பாடல், சேஷகோபாலன் பாடிக் கேட்டிருக்கிறேன்....நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

முதலில் பதில். விதுரர்,குசேலர், சபரி. Wஆன் போட்ட பதிவு காணாமல் போய் விட்டது.வலைப் பதிவுக்கு கெ ஆர் ஸ் தான் சம்மதம் போலிருக்கு.மற்றவைகளுக்கு பிறகு வருகிறேன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திராச ஐயா தான் முதலில் வந்து சரியான பதில்களைத் தந்துள்ளார்.

வாழ்த்துக்கள் ஐயா!

SK said...

[ஆண்டாளுக்குத்] தோழிகள் அதிகம் போல!

இன்னும் வீடு வீடாய்ப் போய் எழுப்பிகிட்டு இருக்கீங்களே!

அங்கே எல்லாரும் ஆனந்தமா நீராடிகிட்டு இருக்காங்க!

சீக்கிரம் வாங்க, குமரன்!!

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அவன் பாடலை மனம் விட்டுப் பாடவும் யாருக்கும் அஞ்ச வேண்டாம்.//

நீங்கள் மனம் விட்டுப் பாடிய பாடல், அடுத்த பதிவில் வல்லியம்மா!

நண்பர்களே, வல்லிசிம்ஹன் அவர்கள் குரலில் கண்ணன் பாட்டு அதுவும் கும்மிப்பாட்டு கேட்க, அடுத்த கண்ணன் பாட்டு பதிவிக்கு நாளை வாருங்கள்!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//(செங்கழுநீர் பூக்கள் பகலில் மலரும். ஆம்பல் இரவில் மலர்ந்து பகலில் கூம்பும்)//

அது போல நாம்
நம் உடல் உழைப்பால் அவனுக்குக் காலையில் மலர்வோம்!

நம் மனக் காதலில் அவனுக்கு மாலையில் மலர்வோம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
இந்தப்பாட்டு கேட்டதில்லை. நல்ல கதை சொல்வதில் வல்லவரான நீங்களே பாட்டிலுள்ள கதைகளைச் சொல்லிவிடவும்.//

:-)
என்னை இப்படி கதை விடுபவன் என்று ஆக்கி விட்டீர்களே, கண்ணன் சார்!
அந்தக் கண்ணன் அல்லவா கதை சொல்வதில் சமர்த்தன்!

//எனது நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் ஊத்துக்காடு ஐய்யாவின் பாடல் தொகுப்பொன்று வெளியிட உதவியிருக்கிறார். ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதியிருக்கிறார் ஐயா. எல்லாம் கண்ணன் மேல். உங்கள் பதிவில் அவர் பாடல்கள் மட்டும் போட்டாலும் மாளாது. அவ்வளவு இருக்கு!! //

ஆமாம் சார்!
ஊத்துக்காடு கவிதைகள் அள்ள அள்ளக் குறையாது; அதுவும் அத்தனையும் சந்தப் பாடல்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Mathuraiampathi said...
நல்ல பாடல், சேஷகோபாலன் பாடிக் கேட்டிருக்கிறேன்....நன்றி. //

நன்றி மெளலி சார்;
சேஷகோபாலன் சுட்டி தேடினேன்; கிட்டவில்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
Wஆன் போட்ட பதிவு காணாமல் போய் விட்டது.வலைப் பதிவுக்கு கெ ஆர் ஸ் தான் சம்மதம் போலிருக்கு//

அச்சச்சோ!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//SK said...
[ஆண்டாளுக்குத்] தோழிகள் அதிகம் போல!
//

பின்னே? இருக்காதா sk ஐயா?
எவ்வளவோ விசிறிகள், தோழிகள்!

//இன்னும் வீடு வீடாய்ப் போய் எழுப்பிகிட்டு இருக்கீங்களே!
அங்கே எல்லாரும் ஆனந்தமா நீராடிகிட்டு இருக்காங்க!//

நாங்க எங்க ஆண்டாளுடன் சென்று இறைவனையும் எழுப்பி, அவனுடன் தான் சேர்ந்து குளிப்போம்! :-)))

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்! அவன் தான் எங்களை வந்து நீராட்டுவான், கோபிகளுக்குச் செய்தாற் போலே! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
முதலில் பதில். விதுரர்,குசேலர், சபரி.
//

குமரன்
திராச ஐயா பதில்களைத் தாங்கள் கொஞ்சம் விரித்துச் சொல்லி எங்களை மகிழ்விக்க வேண்டுமே! :-)

ஷைலஜா said...

யாரென்ன சொன்னாலும் அஞ்சாதேநெஞ்சமே!
ஆரம்ப வரியிலேயே எத்தனை தன்னம்பிக்கை தெறிக்கிறது! சந்தானம் கணீரெனக் குரலில் பாடக் கேட்கும்போது மனதில் புத்துணர்ச்சி வருகிறது.பாடலை அளித்தமைக்கு நன்றிபல்.
ஷைலஜா

SK said...

ஆனந்த வெள்ளத்தில் நீந்துகையில் பாடலும் பொருளும் மறந்து போனதோ, ரவி!

//அவன் தான் எங்களை வந்து நீராட்டுவான், கோபிகளுக்குச் செய்தாற் போலே! :-)))//


வந்து நீராட்டப் போவது அவன் இல்லை!....அவள்!! :))

ஆம் !

நப்பின்னை நங்கை, திருமகள் துயிலெழுந்து, உக்கமும், தட்டொளியும் தந்து அவள் மணாளனையும், நம்மையும் நீராட்டுவார்!

விமலன் வந்து அல்ல!

ஆசைதான்!!

ஏனென்றால் அவன் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறான்!

திருவும் வந்து நீராட்டிவிட்டாளா எனத் தெரியவில்லை!

எழுந்திரு,நோக்கிடு, அருளிடு என, கெஞ்சல் இன்னும் அடுத்த 3 பாடல்களுக்குத் தொடர்கிறது!!

அரங்கன் தரிசனம் இருபத்துநாலில்தான்!!

"அங்கே" குளியல் ஜோரா நடக்குதுப்பா!

:))

Anonymous said...

ரவி சங்கர்!
நான் ரசிக்கும் பாடலில் ஒன்று!! சந்தானத்தில் குரலிலும் கண்ணனின் நர்த்தன நளினம் இருக்கிறது.
யோகன் பாரிஸ்

Natrajan said...

IYYA, intha bloggeril, typical pattacheriyargal kuralil(avanga styleae thani) 'thirupaavai' padalgalai podamudiyuma parungalen.
pani thodara vazhtukkal
natrajan

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said...
ஆரம்ப வரியிலேயே எத்தனை தன்னம்பிக்கை தெறிக்கிறது! சந்தானம் கணீரெனக் குரலில் பாடக் கேட்கும்போது மனதில் புத்துணர்ச்சி வருகிறது//.

நன்றி ஷைலஜா.
ஆமாங்க, தன்னம்பிக்கைப் பாடல் இது! பல volunteer groups, இறைவன் தன்னார்வ இயக்கங்கள் இப்பாடலைப் பாடக் கேட்டுள்ளேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Johan-Paris said...
ரவி சங்கர்!
நான் ரசிக்கும் பாடலில் ஒன்று!! சந்தானத்தில் குரலிலும் கண்ணனின் நர்த்தன நளினம் இருக்கிறது.//

ஆமாங்க யோகன் அண்ணா!
சந்தானம் சார் குரல் ஒருவித நளினத்தை ஏற்படுத்தும்! அதுவும் அவர் ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி அப்படியே ஒரு நளினம் கொண்டு வந்து விடும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//M said...
IYYA, intha bloggeril, typical pattacheriyargal kuralil(avanga styleae thani) 'thirupaavai' padalgalai podamudiyuma parungalen.
pani thodara vazhtukkal
natrajan //

நன்றி நடராஜன் சார்!
கண்டிப்பாக முயல்கிறோம்! எல்லாப் பாடல்களும் இல்லையென்றாலும் சிலவாவது முயல்கிறோம்!

அவர்கள் ஓதுவதால், சந்தையுடன் கூடிய சுட்டி கிடைத்தால் அளிக்கிறேன்!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP