Tuesday, December 19, 2006

9. குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டான்!

இப்பதிவு அன்பர் Dubuku Disciple - சுதா பிரசன்னா அவர்களின் சார்பாக!
மேலும் சில அழகான பாடல் வரிகளும், படங்களும் அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்று, "குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும், குறை ஏதும் எனக்கேதடி சகியே.... "
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - K.S. Chitra பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!

குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
(குழலூதி)

அழகான மயிலாடவும் - மிக மிக
அழகான மயிலாடவும்
காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்


அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு

(குழலூதி)

மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்

(அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...)
(குழலூதி மனமெல்லாம்...)

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:

"குழல் ஊதி" குழலில்; Flute - Ramani
Saxophone-Kadri Gopalnath

KJ Yesudass
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
Bombay Sisters
Sowmya

மார்கழி 5 - மாயனை மன்னு வடமதுரை - ஐந்தாம் பாமாலை
பாடியவர்: சித்ரா
எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி

ராகம்: காம்போதி
தாளம்: ஆதி

14 comments :

வல்லிசிம்ஹன் said...

ஊத்துக்காடு ஐய்யா பாடலுக்குக் கண்ணன் ஆடினானாம்.
அந்த கொழு கொழு விக்கிரகத்தைப் பார்க்கும் போதெல்லாம் வாரி அணைக்க ஆசை வரும்.
மஹராஜபுரம் சந்தானம் பாடும்போதும் அதே ரசனை கிடைக்கும். நன்றி ரவி.

SK said...

குறை ஒன்றும் இல்லை
ரவி என்னும் கண்ணா
குறை ஒன்றும் இல்லை பிரானே!

குழலூதி வருவதே கொள்ளை அழகு!
குரலிழை கூட்டி சித்ரா பாடிட அழகு!
பதிவினில் ஏற்றி போட்டதோ இன்னும் அழகு! அழகு!

குறை எங்கிருந்து வரும்?

Anonymous said...

kaNNapiraan:

இங்கு கட்டாயம் சேர வேண்டிய இன்னொரு பாடல் புரந்தரதாசர் எழுதிய 'கோவிந்தா! நின்ன நாமம்' என்ற பாடல். இதை மகராஜபுரம் பாடிக் கேட்க வேண்டும். உயிர் உருகிவிடும்.

அடுது எம்.எஸ். அம்மா பாடிய அன்னம்மையா கீர்த்தனை ஒன்று. ஊனை உருக்கும் பாடல்.

இணைப்புத் தருகிறேன். பாடல் வரிகளை எடுக்க முடியுமா பாருங்கள். எனக்கு கன்னடம் தெளியண்டி, தெலுங்கு அதுக்கு மேலே! நம்ம மதுமிதா, டீச்சர் துளசி உதவி கேட்கலாம்.

Anonymous said...

அருமையான பாடல்...நன்றி கண்ணபிரானே.....

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பற்றி ஒரு தகவல்....அவர் பிறவியிலேயே கண்தெரியாதவராம்....
கண்ணன் அவர்முன் நடனமாடுவதை அவரால் கேட்க முடிந்ததாம்....அந்த ஜதிகளை வைத்தே அவர் தமது பாடல்களை எழுதியதாக கூறுவர். இதற்கொப்ப அவர் பாடல்களில் ஜதி அதிகமாக காணலாம்...

மெளலி...

பாலராஜன்கீதா said...

இந்தப் பாடலை சூலமங்கலம் சகோதரிகளும் பாடியுள்ளனர். அது இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
old is gold ? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
மஹராஜபுரம் சந்தானம் பாடும்போதும் அதே ரசனை கிடைக்கும். நன்றி ரவி.//

நன்றி சுதாவுக்கு தான் வல்லியம்மா!
மகராஜபுரம் பாட்டும் போட்டு விடுகிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//SK said...
குறை ஒன்றும் இல்லை
ரவி என்னும் கண்ணா
குறை ஒன்றும் இல்லை பிரானே!//

ஆகா!
SK ஐயா....உங்களுக்குள் ஒரு ஊத்துக்காடு ஒளிந்துள்ளாரா?
இப்படிக் கலக்குறீங்களே கவிஞர் SK!
(கவியரசர் என்று சொல்லணுமோ; நான் ஏதும் தப்பு கிப்பு பண்ணிடலையே GK ஐயா?) :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கண்ணன் சார்,
புரந்தரதாசர் எழுதிய 'கோவிந்தா! நின்ன நாமம்' மிகப் பெரும் உணர்ச்சிப் பிரவாகம் தான்!

ஆனால், முதலில் தமிழ்ப் பாடல்கள் எல்லாம் இட்டு விடுவோம் சார்! பின்பு ஒவ்வொன்றாய் மற்ற சாகித்யங்கள் இடலாம்; ஒரு தனி வலைப்பூவும் வேண்டுமானால் தொடங்கலாம்!

//கன்னடம் தெளியண்டி, தெலுங்கு அதுக்கு மேலே! நம்ம மதுமிதா, டீச்சர் துளசி உதவி கேட்கலாம்.//

டீச்சர், மெட்றாஸ்ல எக்கட வுன்னாரு? பதிவர் மீட்டிங்குலு பாக போயிந்தியா? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாலராஜன்கீதா said...
சகோதரிகளும் பாடியுள்ளனர். அது இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
old is gold ? :-)//

பழைய தங்கம் கேட்கிறீர்கள்! கொடுத்து விட்டால் போகிறது! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Mathuraiampathi said...
அருமையான பாடல்...நன்றி கண்ணபிரானே.....//

நன்றி மெளலி சார்!

//ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பற்றி ஒரு தகவல்....அவர் பிறவியிலேயே கண்தெரியாதவராம்....//

இது சரியல்ல என்றே நினைக்கிறேன் மெளலி சார்! பார்வை அற்றவர் என்ற குறிப்பு எங்கும் இல்லையே! அறிந்தவர் சொல்லுங்களேன்!

//கண்ணன் அவர்முன் நடனமாடுவதை அவரால் கேட்க முடிந்ததாம்....அந்த ஜதிகளை வைத்தே அவர் தமது பாடல்களை எழுதியதாக கூறுவர்.//

அவர் ஊரான ஊத்துக்காட்டில், காளிங்க நர்த்தனப் பெருமாள் கோவில் உள்ளது; நீங்கள் சொல்வது போல இறைவன் ஆட, இவர் ஜதிகள் போட்டதாகவும் சொல்லுவார்கள்!

Anonymous said...

//இது சரியல்ல என்றே நினைக்கிறேன் மெளலி சார்! பார்வை அற்றவர் என்ற குறிப்பு எங்கும் இல்லையே! அறிந்தவர் சொல்லுங்களேன்!//

எனக்கு வந்தது செவி வழி செய்திதான். பல வருடங்கள் முன் மதுரை லஷிமி சுந்தரம் ஹாலில் மார்கழி கச்சேரிகளின் ஒரு பிரிவாக நடக்கும் (பகல் நேரத்தில்) ஒரு கருத்தரங்கிற்க்கு ஊத்துக்காடு ஐய்யாவின் குடும்பத்தை சேர்ந்த இருவர் (அவர்களது பெயர் நினைவில் இல்லை) வந்திருந்தனர். அவர்களை அறிமுகம் செய்து வைத்து சபா தலைவர் பேசும்போது கூறிய தகவல்தான் மேலே நான் சொன்னது.

மெளலி..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நேயர் விருப்பபடி, குழலில் வாசிக்கும் "குழலூதி" பாடலின் சுட்டியும்,
மற்ற பாடகர்கள் பாடிய சுட்டிகளும்,
மேலே கொடுத்தாகி விட்டது!

குமரன் (Kumaran) said...

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்

மாயங்களில் வல்லவனை நிலைத்த புகழ் கொண்ட வடமதுரை பிறந்தவனை

தூய்மையான நீர் நிரம்பிய யமுனைக் கரையில் இருப்பவனை

ஆயர்கள் குலத்தினில் தோன்றி உலகுக்கெல்லாம் அழகிய திருவிளக்கைப் போல் ஒளி வீசுபவனை

பெற்ற தாயின் வயிற்றை விளங்கச் செய்த தாமோதரனை

தூயவர்களாக வந்து நாங்கள் தூய்மையான மலர்களைத் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தால் சிந்தித்தோமென்றால்

இதுவரை நாங்கள் செய்த பாவங்களும் இனி மேல் செய்யப்போகின்றவையும்

தீயினில் பட்ட தூசினைப் போல் ஆகும்; அதனால் அவன் பெயர்களைச் செப்புங்கள்.

thaamarai chelvan said...

https://www.youtube.com/playlist?list=PL4ljP4IezNBLqn1W5rR1s71wd5dgw7BWP

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP