Thursday, December 21, 2006

10. காக்கைச் சிறகினிலே நந்தலாலா

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - பாரதியார் எழுதி, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!


பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!


கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!


தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!
திரைப்படங்களில்:
ஜேசுதாஸ் - L.வைத்யநாதன் = படம்: ஏழாவது மனிதன்
சூலமங்கலம் ராஜலட்சுமி - K.V.மகாதேவன் = படம்: திருமால் பெருமை

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Bombay Jayashree
Bombay Sisters
Veenai-Rajesh Vaidya


மார்கழி 7 - கீசுகீசு என்றெங்கும் - ஏழாம் பாமாலை
இன்று திருப்பாவையில் கீசுகீசு என்ற பறவைப் பாட்டு! அதனால் இங்கும் "காக்கைச் சிறகினிலே"!

எழுதியவர்: சுப்ரமணிய பாரதியார்
ராகம்: யதுகுல காம்போதி (அ) பஹாடி (ஹிந்துஸ்தானி)
தாளம்: ஆதி

16 comments :

குமரன் (Kumaran) said...

எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று இரவிசங்கர்.

கீசுகீசென்றெங்கும் கிளிப்பிள்ளைகள்
பேசிக்கொண்டிருக்கும் பொன்னிளங்காலை
பேசிய பேச்சரவம் பேதை என் செவியில்
கேசவன் கோவிந்தன் என்னுமாறதேனோ?

ஜடாயு said...

கண்ணபிரான்,

அற்புதமான பாடல்கள், இசை என்று தமிழ் இணையத்தில் மார்கழிக் காற்றை சுவாசிக்க வைக்கிறீர்கள். உங்கள் பக்தியும் ஊக்கமும் கண்டு மனம் மகிழ்கிறது!

கண்ணபிரான் அருளில் கண்ணன் பாட்டுக்களை அனுபவிக்கும் பாக்கியம்!
"அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகர் சொன்னது இதைத் தானோ?? :))

ஞானவெட்டியான் said...

எதிலும் அவனை உணர்ந்தால் அவன் திருவடி நிச்சயம் கிட்டும்.

Anonymous said...

ரவிசங்கர்!
அருமையான பாடல் தொகுப்பு!
இதில் ஜேசுதாஸ் குரலில் "ஏழாம் மனிதனில்" இடம் பெற்ற மெட்டு எனக்கு ஏதோ?,மிகப் பிடிக்கும்.
மிக அற்புதமான இசைக்கோப்பு...;
மிக நன்றி!
யோகன் பாரிஸ்

Anonymous said...

ரவிசங்கர்!
அருமையான பாடல் தொகுப்பு!
இதில் ஜேசுதாஸ் குரலில் "ஏழாம் மனிதனில்" இடம் பெற்ற மெட்டு எனக்கு ஏதோ?,மிகப் பிடிக்கும்.
மிக அற்புதமான இசைக்கோப்பு...;
மிக நன்றி!
யோகன் பாரிஸ்

SP.VR.சுப்பையா said...

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!
- மகாகவி பாரதியார்

காலையிளங்காற்று பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
- கவியரசர் கண்ணதாசன்

சாத்வீகன் said...

உயிர் உருக்கும் பாரதியின் கவிதை வரிகள்...

காக்கையின் சிறகினில் கண்ணனை காணும் கவித்திறம் பாரதிக்கு மட்டுமே சாத்தியம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று இரவிசங்கர்.//

ஆமாம் குமரன்; short and sweet என்பது இது தானோ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜடாயு said...
கண்ணபிரான்,
அற்புதமான பாடல்கள், இசை என்று தமிழ் இணையத்தில் மார்கழிக் காற்றை சுவாசிக்க வைக்கிறீர்கள். உங்கள் பக்தியும் ஊக்கமும் கண்டு மனம் மகிழ்கிறது!//

நன்றி ஜடாயு சார்!
இதில் அடியேன் பங்கு ஒன்றுமே இல்லை! எழுதியவர், பாடியவர், இசை என்று எல்லாமே வேறு ஒருவர்!

கண்ணன் பாட்டு வலைப்பூவே, பாடல் இன்பம் காணும் அன்பர்களின் கூட்டு முயற்சி!

மதுமிதா அக்கா, குமரன், சாத்வீகன் அவர்களே இயற்றி வலையேற்றிய கவிதைகளையும் சென்ற பதிவில் படீத்தீர்களா? மிக அருமை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஞானவெட்டியான் said...
எதிலும் அவனை உணர்ந்தால் அவன் திருவடி நிச்சயம் கிட்டும்.//

சரியாகச் சொன்னீங்க ஞானம் ஐயா! நன்றி!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Johan-Paris said...
ரவிசங்கர்!
அருமையான பாடல் தொகுப்பு!
இதில் ஜேசுதாஸ் குரலில் "ஏழாம் மனிதனில்" இடம் பெற்ற மெட்டு எனக்கு ஏதோ?,மிகப் பிடிக்கும்.
மிக அற்புதமான இசைக்கோப்பு...;
//

எனக்கும் அந்தத் திரை இசை தான் மிகவும் பிடிக்கும் யோகன் அண்ணா!
மார்கழியில் பாமாலை, இசைமாலை என்று தினம் ஒரு பாடல் இங்கே! மார்கழிக் கச்சேரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
என்ன, மார்கழி முழுதும் தமிழ் இசை மட்டுமே! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//காலையிளங்காற்று பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
- கவியரசர் கண்ணதாசன்//

அட ஆமாம்; நன்றி சுப்பையா சார்!
கண்ணதாசனுக்குள் ஒரு பாரதி என்ற கட்டுரை எழுதினால் நல்ல ஒப்பு நோக்கும் பல தகவல்களும் கிடைக்கும் அல்லவா, சார்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சாத்வீகன் said...
உயிர் உருக்கும் பாரதியின் கவிதை வரிகள்...//

ஆமாம் சாத்வீகன்; நன்றி!

G.Ragavan said...

மிகவும் நல்ல பாடல். ஏழாவது மனிதன் பாடல் நன்றாக இருந்தாலும்...எனக்குத் திருமால் பெருமை பாடல் மிகவும் பிடிக்கும். ஆண்டாளே பாடுவது போல படம் பிடித்திருப்பார்கள்.

Anonymous said...

ARUMAI ANNATHAI, ENNA THOOGAPOGUMPODHU KETTAL ORUMATHRI DISTURB AGIVIDUKIREN - VAZHGA NEE EMMAN
Natrajan

குமரன் (Kumaran) said...

கீசு கீசு என்றெங்கும் ஆனை சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்தத் தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவு ஏலோர் எம்பாவாய்

கீசு கீசு என்று எங்கும் ஆனை சாத்தன் (வலியன் பறவைகள்) தங்களுக்குள் கலந்து

பேசிக்கொண்டிருக்கும் பேச்சு ஒலி கேட்கவில்லையோ பேய் பெண்ணே

காசு மாலையும் தாலியும் ஒன்றுடன் ஒன்று உரச, கைகளை மாற்றி மாற்றி

நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய ஆய்ச்சியர் மத்தினால்

தயிர் கடையும் ஓசை கேட்கவில்லையா?

எங்களுக்கெல்லாம் தலைவியே! நாராயணன், நம் தலைவன்,

கேசவன் - அவனை நாங்கள் எல்லாம் பாடிக் கொண்டிருக்க அதனை நீ கேட்ட பின்பும் தூங்குகிறாயோ?

ஒளி மிகுந்தவளே! கதவைத் திறவாய்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP