Monday, December 25, 2006

15. தாயே யசோதா!

இப்பதிவு அன்பர் Dubuku Disciple - சுதா பிரசன்னா அவர்களின் சார்பாக!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - ஊத்துக்காடு வேங்கட கவி எழுதி, சுதா ரகுநாதன் பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!



தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
(தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
(தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்


பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி
(தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்




அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி!
(தாயே)

இந்தப் பாடல் இன்னும் பல பத்திகள் (சரணங்கள்) கொண்டு உள்ளது; மொத்தம் ஆறு சரணங்கள் என்றாலும், மிகப் பிரபலமாகப் பாடப் படும் சரணங்களே மேலே கொடுக்கப்பட்டுள்ளன. முழுதும் அறிய இங்கே செல்லவும்.



திரைப்படங்களில்:

எம்.எல்.வசந்தகுமாரி = படம்: குல தெய்வம்
சுதா ரகுநாதன், ரஞ்சனி ராமகிருஷ்ணன் = படம்: Morning Raga (Hindi)

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Maharajapuram Santhanam
Sowmya
Bombay Sisters
Madurai Mani Iyer
Chembai Vaidyanatha Bhagavathar

Veenai - Karaikurichi Brothers


மார்கழி 11 - கற்றுக் கறவை - பதினொன்றாம் பாமாலை.

எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: தோடி
தாளம்: ஆதி

24 comments :

சாத்வீகன் said...

கண்ணனை பற்றி முறையிடவோ யசோதையிடம் ஆயர் குல மகளிர் மீண்டும் மீண்டும் வருகின்றனர். முறையிடும் சாக்கில் அச்சிறு கண்ணனை காணவன்றோ.

அருமையான பாடல்.
நன்றி.

SP.VR. SUBBIAH said...

ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் அருமையான பாடல்களில் ஒன்று!
பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

Anonymous said...

அருமையான பாடல்.நெடுநாட்களாக கேட்க தேடிக்கொண்டிருந்தேன்
நன்றி
http://pirakeshpathi.blogspot.com/
இநத்ப் பதிவில் குறையொன்றுமில்லை ம்றைமூர்த்தி கண்ணா என்ற பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். நீங்களும் கேட்டு மகிழலாம்

Anonymous said...

நன்றி கே ஆர் எஸ் அவர்களே....
மெளலி...

Anonymous said...

I visit first time your blog.T he name dubuku deciple attracted me. ALso my favourite music.Very nice to hear and read.

Anonymous said...

I visit first time your blog.T he name dubuku deciple attracted me. ALso my favourite music.Very nice to hear and read.

ஞானவெட்டியான் said...

எல்லாம் அவனுள் அடக்கம்.
//அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான்//
அவன்தானே வைகுந்தத்தொடு எல்லாம் காட்டவியலும்.

அடங்கியவை அடக்கம்.
நமக்குள் அடக்கம் வந்தால் அவனும் அதில் ஐக்கியமாகிவிடுவான்.

Radha Sriram said...

it is a beautiful song........thanks for posting it

have you heard "pullai piravi pera venum"??


cheers
Radha

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலையும் பலமுறை கேட்டாலும் தெவிட்டுவதில்லை இரவிசங்கர். தங்கள் தயவால் எல்லார் பாடியதையும் ஒரு முறை கேட்டு மகிழ்ந்தேன்.

Anonymous said...

Ignorance is Bliss.

குமரன் (Kumaran) said...

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செறுச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
ப்ற்றரவல்குல் புனமயிலே போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றத்தே நின்று முகில்வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்.

கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள் பல உடைய, பகைத்தவர்கள் வீரம் அழிய சென்று போர் செய்யும், எந்த வித குற்றமும் இல்லாத இடையர்களின் பொற்கொடி போன்றவளே! புற்றில் வாழும் பாம்பு படமெடுத்ததை போன்ற இடைப்பகுதியை உடைய நந்தவன மயிலே! போதராய்! செல்வத்தில் சிறந்தவளே! சுற்றுப்புறத்திலுள்ள தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றத்தில் நின்று மேகவண்ணனின் பேர் பாட நீ கொஞ்சம் கூட அசையாமலும் பேசாமலும் உறங்குகிறாயே. இதற்கு என்ன பொருள்?

Anonymous said...

ரவிசங்கர்!
இந்த ஊத்துக்காட்டார் பாடல் எங்கள் ஈழத்தில் ரசிகர்களால் "அலைபாயுதே" க் அடுத்ததாக ரசிக்கப்படுவதும்; வித்வான்களும் அதிகம் பாடும் பாடல்....பொருள் தெளிவாக விளங்குவதால் ரசிகர் ஒன்றி விடுவதியல்பு.
நன்றி
யோகன் பாரிஸ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாத்வீகன் said...
முறையிடும் சாக்கில் அச்சிறு கண்ணனை காணவன்றோ.//

ஹைய்யா. இது தான் உண்மை!
நன்றி சாத்வீகன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SP.VR.சுப்பையா said...
ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் அருமையான பாடல்களில் ஒன்று!//

நன்றி சுப்பையா சார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சுந்தரி said...
அருமையான பாடல்.நெடுநாட்களாக கேட்க தேடிக்கொண்டிருந்தேன்
நன்றி//

வாங்க சுந்தரி!
இன்னும் template மாற்றவில்லை! font size சதி செய்தால் IE-இல் பாருங்க! Firefox-il காணத் தான் பிரச்சனை.

//http://pirakeshpathi.blogspot.comஇநத்ப் பதிவில் குறையொன்றுமில்லை ம்றைமூர்த்தி கண்ணா என்ற பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். நீங்களும் கேட்டு மகிழலாம்//

பார்த்தேன் சுந்தரி. நன்றி!
நீங்கள் அப்போது கேட்ட போதே குமரனின் பதிவுச் சுட்டியைத் தந்தேனே!
அதில் வரிகளும் இருக்கும், பாட்டும் இருக்கும்!
இதோ மீண்டும் உங்களுக்காக:
http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
நன்றி கே ஆர் எஸ் அவர்களே....
மெளலி...//

வாங்க மெளலி, நன்றி.

//saraswathi from Malaysia said...
I visit first time your blog.T he name dubuku deciple attracted me. ALso my favourite music.Very nice to hear and read.//

நன்றிங்க சரஸ்வதி!
சுதா, பார்த்தீர்களா, உங்க பேரு எப்படி மக்களை ஈர்க்குதுன்னு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஞானவெட்டியான் said...
எல்லாம் அவனுள் அடக்கம்.
அடங்கியவை அடக்கம்.
நமக்குள் அடக்கம் வந்தால் அவனும் அதில் ஐக்கியமாகிவிடுவான்.//

அடக்கம் அமரருள் உய்க்கும்! நன்றாகச் சொன்னீங்க ஞானம் ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha Sriram said...
it is a beautiful song........thanks for posting it
have you heard "pullai piravi pera venum"??//

நன்றி ராதா!
புல்லாகினும் நெடு நால் நில்லாது ஆதலினால் கல்லாய் பிறவி தர வேணும் என்ற பாடல், நெஞ்சை அள்ளும். விரைவில் பதிவில் இடுகிறோம் ராதா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இந்தப் பாடலையும் பலமுறை கேட்டாலும் தெவிட்டுவதில்லை இரவிசங்கர். தங்கள் தயவால் எல்லார் பாடியதையும் ஒரு முறை கேட்டு மகிழ்ந்தேன்//

மிக்க மகிழ்ச்சி குமரன்.
எல்லார் பாடியதையும் கேட்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்ததே கண்ணன் பாட்டு வலைப்பூ வாயிலாக!

கண்ணபிரானே நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திராவிடன் said...
Ignorance is Bliss.//

வாங்க திராவிடன்.
தமிழில் சொல்லலாமே!

கற்றாரை யான் வேண்டேன்,
கற்பனவும் இனி அமையும்!

வருகைக்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!//

குற்றமொன்றில்லாத கோவலர் என்று ஆயர் குலத்தைச் சொல்லிப் பின்
குறையொன்றுமில்லாத கோவிந்தா என்பாள் பாருங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//johan -paris said...
ரவிசங்கர்!
இந்த ஊத்துக்காட்டார் பாடல் எங்கள் ஈழத்தில் ரசிகர்களால் "அலைபாயுதே" க் அடுத்ததாக ரசிக்கப்படுவதும்; //

ஆகா, ஈழத்தில் ரசிக்கப்படும் பாடலா யோகன் அண்ணா? எனக்கு இது புதிய செய்தி தான். ஈழத்தில் இப்போதெல்லாம் இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள் நடக்கிறதா என்று தெரியவில்லை. எவ்வளவு தான் அமைதியின்மை இருந்தாலும், நல்ல இசை ஓரளவுக்காவது மனங்களுக்கு அமைதி கொடுக்கும்!

ஈழம் இசைபட வாழும் நாள் எந்நாளோ?

ஷைலஜா said...

முந்தா நாள் அந்திநேரம் சொந்தமுடன் கிட்டேவந்து...
இந்தவரிகளை எம் எல்வி அனுபவித்துப்பாடுவார்!
ஒரு பெண்ணின் மனநிலை பாடல் வரிகளீல் அப்படியே வருகிறது..ஆனந்தம் கேட்பதற்கு!
ஷைலஜா

Robert Robinson said...

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செறுச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! ப்ற்றரவல்குல் புனமயிலே போதராய்! சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றத்தே நின்று முகில்வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய். கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள் பல உடைய, பகைத்தவர்கள் வீரம் அழிய சென்று போர் செய்யும், எந்த வித குற்றமும் இல்லாத இடையர்களின் பொற்கொடி போன்றவளே! புற்றில் வாழும் பாம்பு படமெடுத்ததை போன்ற இடைப்பகுதியை உடைய நந்தவன மயிலே! போதராய்! செல்வத்தில் சிறந்தவளே! சுற்றுப்புறத்திலுள்ள தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றத்தில் நின்று மேகவண்ணனின் பேர் பாட நீ கொஞ்சம் கூட அசையாமலும் பேசாமலும் உறங்குகிறாயே. இதற்கு என்ன பொருள்?

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP