நித்தியமும் வந்து சத்தியங்கள் செய்தவன்...
நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!
வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..
நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !
ஆயர்க்குலச் சீயன் அவன் அங்கம் வழியும் கருமையை
சாயம் பூசினான் சந்திரன் தவழும் விண்ணிற்கு..
வியர்வையாய் சுரந்தனன் மாயவன் மழையதனை - அதில்
மண்குளிரச் செய்வதாய் ஏழை மனம் குளிர்வித்தானடி..
18 comments :
'kuzhal maththu',
'manaththayir',
'bakthi vennai',
.....fantastic!
அழகான கவிதை சங்கர்.
[நித்தமா? நித்தியமா?]
லலிதம்மா : நன்றி ! :)
@ராதா அண்ணா: நன்றி அண்ணா ! நித்தியம் தான்.. ஏன் கேக்கறீங்க ?
பாட்டு நடனம் எல்லாம் கத்துக்கறீங்கலாமே? :)
சங்கர்
நல்ல பாடல்; நல்லாப் பாடி இருக்கீங்க! சாயம் பூசினான் என்ற இடத்தில் 'பூசினாற்' போல் பாடியது பிடித்து இருந்தது!
சங்கர்,
பாட்டு கத்துக்கணும் இன்னும் ஆவல் இருக்கு. நான் பாட(!??) கிரிதாரி நடனம் புரிவான். :-)
தற்பொழுது என் நிலை இந்தப் பாடலை தான் நினைவுபடுத்துகிறது.
"உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா !
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா !"
:-)
நித்தம் - தினம் தினம்
நித்தியம் - எப்பொழுதும்
--
என்று நினைக்கிறேன்.
எப்படி பார்த்தாலும் கண்ணனுக்கு
பொருத்தம் தான். :-)
அருமை ,வரியும் பாடலும்
//வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !// :))
Beautiful lines! Vera enna solla? :)
btw, can i dedicate this please?
@KRS: ரொம்ப நன்றி.. ஹா ஹா தானா அமைஞ்சது.. :)
@ராதா அண்ணா: கண்டிப்பா கத்துக்கங்க! நிறைய பாடுங்க.. அவன் கண்டிப்பா வந்து ஆடுவான்.. நான் guarantee.. :)
@ராதா அண்ணா: ரெண்டு விதமாவும் நீங்க சொன்ன மாதிரி அழகாதான் இருக்கு. :)
@திகழ்: ரொம்ப நன்றி! :)
@ILWK: நன்றி! Of course, you can! :) its my pleasure.. :)
@Sankar: Thanks:)
Dedicated to my Lord, Azhagiya Singar of thiruvallikeni who looks all the more handsome when He dresses up as Krishna.
நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!:)
Very nice:)
/வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !
realy........superb:)
Thanks a lot Rajesh. :)