அன்னமய்யா தெலுங்கு படப் பாடல்...தமிழில்!
இது மிகப் பிரபலமான பாடல்! அன்னமய்யா படத்தில், சித்ராவுடன், எல்லாரும் சேர்ந்து பாடும் கடைசிப் பாடல்....
திருவேங்கடமுடையான் மீது அன்னமய்யா 14th CE-இல் இசையமைத்த பாடல்! இதைப் பாடாத மேடையோ, பாடகரோ இல்லை!
எம்.எஸ் அம்மா முதற்கொண்டு, இன்று சபையில் அறிமுகமாகும் என் தங்கச்சி பொண்ணு வரை, இந்தப் பாடலுக்கு அப்படி என்ன முக்கியத்துவம்?
சில சமயம், தமிழ்ச் சொற்களை இசையில் போட்டு உடைப்பது போல், பிரம்ம க'டி'க்கின என்று அழுத்திக் கடிப்பவர்களும் உண்டு!:)
அன்னமாச்சார்யர் தெலுங்கில் மட்டுமே கீர்த்தனைகள் எழுதினாலும், ஆழ்வார்கள் மீது மாறாத அன்பு கொண்டவர்! உடையவர் மீது தனிக் கீர்த்தனையே செய்துள்ளார்!
அதான் ஆழ்வார் பாசுரக் கருத்தை, இந்தப் பாடலில் அப்படியே பொழிந்துள்ளார்! என்ன பாசுரம்-ன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்! :)
பிரம்மமு தானினி பாதமு
சித்ராவின் குரலோடு, அனுராதா ஸ்ரீராம், பூர்ண சந்தர், சுஜாதா என்று பலரும் ஒன்று சேர்ந்து பாடி, படத்தை நிறைவு செய்வது...அவசியம் கேட்கவும்!!!
* அன்னமய்யா தெலுங்குப் படத்தில்....கடைசிப் பாட்டு!
(அல்லது)
எம்.எஸ்.அம்மா உருகிப் உருகிப் பாடுவதைக் கேட்டுக் கொண்டே படிக்கவும்!
தமிழாக்கம், அதே மெட்டில் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்!
@சங்கர் - இதை எனக்குப் பாடித் தருகிறாயா?:)
பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு
பிரம்மன் துலக்கிடும் பாதமே! - பரப்
பிரம்மம் தான்-இந்தப் பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)
செலகி வசுத கொலி, சின நீ பாதமு
பலி தல மோபின பாதமு
தலகக ககனமு, தன்னின பாதமு
பலரிபு காசின பாதமு
சென்றது பூமியில் செவ்வடிப் பாதமே!
பலி தலை மீது உன் பாதமே!
அவனியும் புவனியும் அளந்தநின் பாதமே!
அடியவர் ஆதரி பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)
காமினி பாபமு கடிகின பாதமு
பாமு தல நிடின பாதமு
ப்ரேமபு ஸ்ரீசதி பிசிகெடி பாதமு
பாமிடி துரகபு பாதமு
பேதையின் சாபத்தைப் போக்கிய பாதமே!
பாம்பின் தலை நிலை பாதமே!
நெஞ்சிலுன் திருமகள் கொஞ்சிடும் பாதமே!
பரிமேல் அழக-நின் பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)
பரம யோகுலகு பரிபரி விதமுல
வரமு செகடி நீ பாதமு
திருவேங்கட கிரி திரமணி சூப்பின
பரம பதமு நீ பாதமு
ஞானிகள் பலப்பல பாதைகள் வழிவர
வரங்களை வழங்கிடும் பாதமே!
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழும் பாதமே! - எங்கள்
பரமபதம் உன் பாதமே!!!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)
இன்னும் சில குரல், கருவிகளில்...
* பாலமுரளி வயலின் வாசிக்க-காயத்ரி வீணையில்
* உன்னி கிருஷ்ணன்
* யேசுதாஸ்
* பால முரளி கிருஷ்ணா
குரல்: சித்ரா
இசை: மரகதமணி (எ) கீரவாணி
படம்: அன்னமய்யா
வரிகள்: அன்னமாச்சார்யர்
பரம பதமு நீ...பாதமு!
43 comments :
அருமையான பாடல்.அருமையாக இருக்கிறது தமிழ் பாடல்...
திருவேங்கட கிரி திரமணி சூப்பின
பரம பதமு நீ பாதமு//
தமிழாக்கம் தெரியாமல் தேடி கொண்டிருந்தேன்
மிக்க நன்றி கொடுத்தமைக்கு :)
ஆழ்வார் பாசுரக் கருத்தை, இந்தப் பாடலில் அப்படியே பொழிந்துள்ளார்! என்ன பாசுரம்-ன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்! :)
தெரியாது : நீங்க சொல்லுங்க
இதுவா இருக்குமோ :)
உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒழி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலுக்காய் நின்ற திரு வேம்கடத்து எம்பெருமானே
குல தோல் அடியேன் உன் பாதம் கூடுமாறு கூறாயே 6-10-1
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே
கொடியா வடு புள் ளுடையானே கோல கனிவாய் பெருமானே
செடியார் வினைகள் தீர் மருந்தே திரு வேம்கடத்து எம்பெருமானே
நொடியார் பொழுதும் உன பாதம் காணா நோலாது ஆற்றேனே
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே
அடி கீ ழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படி கே ழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
--:)
@அமுதா
பாடல் + தமிழாக்கம் நன்று என்றமைக்கு நன்றி:)
@ராஜேஷ்
தமிழாக்கம் புரிந்து பாட்டை இப்போ அனுபவிக்க முடிகிறதா?
ஆழ்வார் பாசுரம் என்ன-ன்னு நீங்க தான் சொல்லணும்! நீங்க தானே பாசுர வகுப்புக்கு போறீங்க?:)
நன்றி..நல்ல விளக்கம்.
தமிழாக்கம் மெட்டோட இசைந்து அமைஞ்சுருக்கு! கண்டிப்பா பாடி தரேன் :) :)
அருமையான பாடல்; கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
k.r.s! u r at yr best!highly thirilled to read yr beautiful poetic tamil version of my favourite song!waiting fr sankar!
பல்கலை வைபையில் video/audio systems /downloads are blocked. anyway எங்க ஊர் அம்மா குரல்ல பல தடவ கேட்டிருக்கிறேன். its like a smooth river flow in plains. அர்த்தம் இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி...
@நன்றி சமுத்ரா
@@சங்கர், எப்போ பாடி, எப்போ போடுறது?:) சீக்கிரம்! லலிதாம்மா வேற வெயிட் பண்றாங்க பாரு!
@குமரன்
ஆமாம்! கேட்டுக்கிட்டே இருக்கலாம்! esp the group song from the movie!
@லலிதாம்மா
எனக்கும் மிகவும் பிடிச்ச பாட்ட அது! அலுக்கவே அலுக்காது! பாதமு பாதமு-ன்னே ஒவ்வொரு வரியும் முடியும்!
@லலிதாம்மா, @ராஜேஷ்
இது போல மொழியாக்கும் போது, பொருத்தமான பொருளில்...ஆழ்வார் பாசுர வரிகளை ஆங்காங்கே தூவி மொழியாக்குவது வழக்கம்!
அப்போ தான் வெறும் மொழி பெயர்ப்பாக அமையாது, அன்னமய்யா என்ன ஜீவனோடு எழுதினாரோ, அந்த 'உயிர்ப்பு' கிடைக்கிறது!
//இந்திரன் said...
பல்கலை வைபையில் video/audio systems /downloads are blocked//
என்ன பல்கலை இது? Wi-Fi ல Youtube ல்லாம் block பண்ணிக்கிட்டு?
//எங்க ஊர் அம்மா குரல்ல பல தடவ கேட்டிருக்கிறேன்//
ஓ, அம்மா பாடுவாங்களா?
பொருள் அறிஞ்சி அனுபவிப்பது கண்டு மகிழ்ச்சி!
பொருள்+மெட்டு ரெண்டும் பொருந்தி வரா மாதிரி மொழியாக்கும் முயற்சிகள், இங்கே! http://kannansongs.blogspot.com/search/label/languages2tamil
இரவி,
இந்திரன் சொன்ன 'எங்க ஊர் அம்மா' மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. :-)
//இந்திரன் சொன்ன 'எங்க ஊர் அம்மா' = மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. :-)//
தோடா! :))
உங்கூரு அம்மாவா? இருக்கட்டும் இருக்கட்டும்!
//என்ன பல்கலை இது? Wi-Fi ல Youtube ல்லாம் block பண்ணிக்கிட்டு?//
அடையாற்றங்கரை அண்ண்ண்ணா பல்கலை.... :(
//இந்திரன் சொன்ன 'எங்க ஊர் அம்மா' மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. :-)//
பார்த்தீங்களா குமரன் சார் எப்புடி பெட்ரோல் கணக்கா கப்புன்னு பிடுச்சாருன்னு.... இத்தன பதிவு போட்டுருக்கேன்களே தவிர, நீங்க ரொம்ப லேட் பிக் அப் கேஆரெஸ் அண்ணா....
//பொருள்+மெட்டு ரெண்டும் பொருந்தி வரா மாதிரி மொழியாக்கும் முயற்சிகள், இங்கே! http://kannansongs.blogspot.com/search/label/languages2tamil//
பார்த்தேன். awesome ரொம்பக் கஷ்டம் பா. பாட்டுப் பொருளும் வரணும் நல்ல வார்த்தைகளும் கெடைக்கணும் மெட்டும் பொருந்தி வரணும்.... ஸ்ஸ்ஸ்.... கண்ணை கட்டுதே
@கேஆரெஸ்
ம்ம்ம்... கேட்க நெனச்சு மறந்தே போயிட்டேன். உங்க profile pic எதுக்கு மாத்துநீங்க. பழைய pic எவ்வளவு அழகா காவிரி கொள்ளிடத்துக்கு இடையில படுத்துட்டு இருக்குறவன் மாதிரி இருந்துச்சு...
Oh Anna univ aa? Met yr prof Madhan Karky here :)
Kumaran karpooram; unga madurai la?:)
madurai=somu thaan! Ms Amma ulagathukke sontham:)
Profile pic naa recent aa irukkanum la?
That pic 4-5 yrs old; pathivu ezutha vantha puthusu:)
Appo sleeping arangan; ippo sitting arangan :)
//சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழும் பாதமே!//
Thanks for reminding me of my Giridhaari. :-)
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் - பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
இந்த நம்மாழ்வார் பாசுரம் தானே ஒளிந்து கொண்டிருந்தது ? :-)
//Met yr prof Madhan Karky here :)//
யார் அவுக... எந்த department. எங்க 'கூட்டத்த' சேர்ந்த குருநாதர் இல்லையே. அவரோட வலைப்பூ முகவரி குடுங்க. போய் படிக்கிறேன்
//Ms Amma ulagathukke sontham:)//
இருக்கலாம். 'எம்எஸ் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட மதுரை' ன்னும் சொல்லலாமுல. வள்ளுவருக்கு ஒரு நியாயம். எங்க எம்எஸ்ஸுக்கு ஒரு நியாயமா?
//Appo sleeping arangan; ippo sitting arangan :)//
அப்போ இன்னும் 4 வருசத்துல சுந்தரராஜ பெருமாள (கள்ளழகர்) எதிர்பார்க்கலாம்?
@இந்திரன்
மதன் கார்க்கி தெரியாதா? அண்ணாவில் Comp Sci Dept, Asst Prof! எந்திரன் படத்தில், இரும்பிலே ஒரு இதயம் பாட்டு எழுதிய புள்ள! வைரமுத்துவின் மகன்! :)
http://en.wikipedia.org/wiki/Madhan_Karky
என்னாது, நால வருசத்துல நான் கள்+அழகரா! எனக்கு அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாது! ஒன்லி Malibu Rum:)
@ராதா
வணக்கம்! எந்தா சுகந் தன்னே? ஈயாளு கண்ணன் பாட்டுக்கு பின்னூட்டம் இட்டு யாது சம்சாரிக்குன்னு?
//Thanks for reminding me of my Giridhaari. :-)//
அலோ! இது எங்க திருவேங்கடம்! உங்க 'கிரி' பிருந்தாவனத்துல இருக்கு! அங்கிட்டு போங்க!:)
//குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் - பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
இந்த நம்மாழ்வார் பாசுரம் தானே ஒளிந்து கொண்டிருந்தது ? :-)//
டேய், கர்ப்பூரம்-டா நீ!
உன்னை 'வளர்த்த' பேறு பெற்றேன்! பெற்றேன்! :))
மதன் கார்க்கி...எனக்கு தெரிந்து நிறைய கண்ணன் பாடல்கள் எழுதுகிறார்.ஒரு நாளைக்கு முன்னூறு தரம் சில பாடல்களை எஃப்.எம்-ல் கேட்க நேரிடுகிறது.
"
சுத்தி சுத்தி உன்னைத் தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ..
சிரிப்பால் எனை நீ
சிதைத்தாய் போதும்...
ஏனோ குவயமிலா குவியமிலா
ஒரு காட்சிப் பேழை...
"
...
...
"மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூலை வானம் ஜ்வாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ"
"அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானா?"
இவை எல்லாமே கண்ணன் பாடல்கள் தான் என்று தோன்றுகிறது. :-)
பொதுவாக அண்ணா பல்கலை கழகத்தில் சேருபவர்கள் எல்லாம் ஒரே பண்டுவாக இருப்பார்கள்.
சில விதி விலக்குகள் உண்டு.
:-)
//வணக்கம்! எந்தா சுகந் தன்னே? ஈயாளு கண்ணன் பாட்டுக்கு பின்னூட்டம் இட்டு யாது சம்சாரிக்குன்னு? //
முன்னாடி போட்ட பின்னூட்டத்தை பார்த்தவுடன் இவ்வளவு நாட்களாக என்ன கிழித்துக் கொண்டிருந்தேன் என்று தெரிந்து கொள்ளலாம். :-)
பல வெட்டி வேலைகளுக்கு இடையே ஒரே ஒரு உருப்படியான காரியத்திற்கு நேரம் செலவழிந்தது.
pls visit www.araiyar.org when you are free. (its still under construction...)
//இவை எல்லாமே கண்ணன் பாடல்கள் தான் என்று தோன்றுகிறது. :-)//
தோனும் தோனும்! இரும்பிலே ஒரு இதயம்-ன்னு Robot கூட கண்ணன் Steel Bodyஆ தோனுமே?:))
//பொதுவாக அண்ணா பல்கலை கழகத்தில் சேருபவர்கள் எல்லாம் ஒரே பண்டுவாக இருப்பார்கள்.
சில விதி விலக்குகள் உண்டு//
டாய்! என்ன கொழுப்பு! அண்ணா-ன்னா funduவா? அப்போ நான் என்ன? பிச்சிருவேன் பிச்சி :)
//முன்னாடி போட்ட பின்னூட்டத்தை பார்த்தவுடன் இவ்வளவு நாட்களாக என்ன கிழித்துக் கொண்டிருந்தேன் என்று தெரிந்து கொள்ளலாம். :-)//
ஓ! FM-ல்லயே வாழ்க்கை ஓட்டிக்கிட்டு இருந்த! ராதா பாசுரம் எல்லாம் மனப்பாடமாச் சொல்லுவான் தெரியும்! FM பாட்டு எல்லாம் மனப்பாடமாச் சொல்லுறான்-ன்னா என்னமோ இருக்கு டோய்!:)
Will see Araiyar.org now! Woke up early!:)
பிரம்மன் துலக்கிடும் பாதமே
துலக்கிடும் - means?
பாதபூஜையா!!
//Anonymous said...
பிரம்மன் துலக்கிடும் பாதமே
துலக்கிடும் - means? பாதபூஜையா!!//
மூலப் பாடலில், பிரம்ம கடிகின பாதமு-ன்னு இருக்கு! கடிகின=கழுவின! உலகளந்த இறைவனின் பாதங்கள், மேல் நோக்கிச் சென்ற போது, நான்முகன் பாதங்கள் மீது நீரூற்ற, அதுவே கங்கையின் தோற்றம் என்பது கதை!
கடிகின = துலக்கிடும் என்று அதான் ஆக்கினேன்! துலக்குதல்=விளங்கச் செய்தல்! பாத பூசையாகவும் இருக்கலாம்! நடந்த கால்களுக்கு அன்பால் நீர் ஊற்றியதாகவும் இருக்கலாம்!
@KRS
//மதன் கார்க்கி தெரியாதா? அண்ணாவில் Comp Sci Dept, Asst Prof! எந்திரன் படத்தில், இரும்பிலே ஒரு இதயம் பாட்டு எழுதிய புள்ள! வைரமுத்துவின் மகன்! :)//
மதன் கார்க்கி வைரமுத்து பையன்ன்னும் அவர் எந்திரன் பாட்டு எழுதினாருன்னும் அத்தோட அவர் இங்க தான் வொர்க் பண்ணுறாருன்னும் நீங்க சொன்னப்புறம் தான் computer department ல கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். சத்தியமா இதுக்கு முன்னாடி எனக்குத் தெரியாதுன்னு வெட்கப்படாமல் ஒப்புக்கிறேன். 'காந்தியைத் தெரியாதுன்னு ஒருத்தன் சொன்னா சிறுமை காந்திக்கன்று. சொன்னவனுக்குத்தான்'. எப்போதோ எங்கேயோ படித்த உவமை. (நீங்களும் படித்திருந்தால் எங்கே என்று ஞாபகப் படுத்துங்கள் )
@Radha
//பொதுவாக அண்ணா பல்கலை கழகத்தில் சேருபவர்கள் எல்லாம் ஒரே பண்டுவாக இருப்பார்கள்.
சில விதி விலக்குகள் உண்டு.
:-)//
கண்டிப்பா நான் அந்த விதிவிலக்குக்குள்ள இல்லீங்க :) :)
@KRS
//டாய்! என்ன கொழுப்பு! அண்ணா-ன்னா funduவா? அப்போ நான் என்ன? பிச்சிருவேன் பிச்சி :)//
நீங்களும் இங்க தான் படிச்சீங்களா?
ஆஹா... எத்தனை முறை அன்னமய்யா கீர்த்தனைகளை கேட்டிருப்பேன்..அப்பப்போ சில கீர்த்தனைகளை அல்லது வரிகளை தமிழாக்கம் செய்து குருஞ்செய்தி யாக என் நண்பனுக்கு அனுப்புவேன்.. இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு.. வேலை பளு.. அதிகமாக வலைப்பூ பக்கம் வர முடிவதில்லை...
@நவீன்...
மதன் கார்க்கியை காந்தி ஆக்கிப்புட்டீங்களே! :)
சும்மா கேண்டீனுக்கு அழைச்சிட்டு போய்ப் பேசுங்க! எளிமையான பையன் தான்! நல்ல Projectகள் கைவசம் வைத்துள்ளார்! தமிழார்வம் கொண்டவர்!
நானும் அண்ணா பல்கலையே! ஆனா MIT Campus!
@டாக்டர் சரவணன் அண்ணா :)
வேலைப் பளுவா? :) சரி சரி! நீங்க அனுப்பிய அந்தக் குறுஞ்செய்திக் கவிகளை இங்கு தரலாமே! கண்ணன் பாட்டில் இடுவோம் அல்லவா?
Emoko Emoko ciguru Tadharamuna eDaneDa kastoori ninDenu:)
its possilbe make this song tamil pl:)
//மதன் கார்க்கியை காந்தி ஆக்கிப்புட்டீங்களே! :)//
உண்மையை விட உவமை சற்றுச் சிறப்பாக இருக்கும் என்பதுதானே விதி. தாங்கள் அறியாததா?
//நல்ல Projectகள் கைவசம் வைத்துள்ளார்!//
ஆனா projects நமக்கு உதவாதே. நான் குடிசார் துறை. அவர் கணினித்துறை. ரொம்ம்ம்ம்ம்ப தூரம். ஆனாலும் தமிழில் ஒன்றுவதால் பேசணும். . .
//நானும் அண்ணா பல்கலையே! ஆனா MIT Campus!//
ஐ சீ
//Emoko Emoko ciguru Tadharamuna eDaneDa kastoori ninDenu:)
its possilbe make this song tamil pl:)//
Everything is possible!
Pl let us know your name and a specific reason for this request!
ஏமிகோ சிகுரு, kasturi on lips is a very romantic song, btw, on அலர்மேல்மங்கைத் தாயார்!
:)
அருமையான விடயத்தை அறிந்து கொண்டேன் நண்பரே
ரெம்ப அருமையான பாடல்... கேட்டு இருக்கேன்... என்னோட favourite song "என்த ருசி ரா ராமா எமி ருசி ரா..."
@அப்பாவி தங்கமணி
நன்றி-ங்க!
ஒ ராமா நீ நாமா ஏமி ருசி-ரா
ஸ்ரீ ராமா நீ நாமா எந்த ருசி-ரா
பாடலும் அருமையானது! பத்ராசலம் இராமதாசர் பாடல்! பதிவில் அன்னமய்யா பாடல் :)
அன்புடன் வணக்கம்,
ஓய்விருக்கும் போது சிவயசிவ - பக்கமும் வரலாமே ?
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com