Thursday, February 03, 2011

சல்லாபம்



இனிமையான மாலைப் பொழுது.. ஆலாபனை ஒன்று காற்றில் தவழ்ந்து வந்தது. என்ன ராகம் இது.. இப்படியும் மனம் மயக்க..

கண்ணனிடம் பொய்க் கோபம் கொண்ட ராதை, அவன் திரும்பி வர இப்படித்தான் முனகி இருப்பாளோ, என்று தோன்றியது.

காலம் பின்னோக்கி சென்றது..

பின் மாலை நேரம்.. பசுமையான வனத்தினில் அவன் வருவானென்று காத்திருக்கின்றாள். வானமெங்கும் படர்ந்திருந்த நீல நிறம், அவளுக்கு கண்ணனின் அங்கங்களை நினைவுறுத்தியது. கார்மேகம் இரண்டொன்று, அவள் மேல் பன்னீரைத் தூவிச் சென்றது. குளிரில் அவள் நடுங்கினாள். பசுமையான முல்லை புதர்களில் தோன்றிய மலர்கள், தன்னை கண்டு எள்ளி நகையாடுவதைப் போல அவளுக்கு தோன்றியது. தன் முன்கோபத்தை தானே நொந்து கொண்டாள். ஒரு முறை அவன் எழில் திருமேனியினை காணோமா!! அவன் பாதம் பணியோமா!! என்று ஏங்கினாள்... அதோ பாடுகிறாள் அவள், ஆள் இல்லாத வனமதனில், ஆண்டவனின் கருணையை நாடி....


நீ வேய்ங்குழல் ஊத நிதம் ஏங்கி நின்றேன் கண்ணா..

நினைவிலும் கனவிலும் மாயம் செய்யும் மாதவா மனமிரங்கி..


சரிந்திடும் கார்குழலும்

அசைந்திடும் மயில் பீலியும்

ஒளிர்ந்திடும் பட்டு துகிலும்

குவிந்திடும் செவ்விதழும் கொண்டு .. நீ


குன்றினை ஏந்தி நின்ற

குவலயா பீடம் கொன்ற

திரௌபதை மானம் காத்த

தோழனின் துயர் தீர்த்த.. நீ


சரணம் என்று நானும்

அடைந்தேன் உந்தன் பாதம்

உதிரம் எல்லாம் உனதே

என்ற உளறல் கேட்டிலையோ ... நீ



41 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உதிரம் எல்லாம் உனதே என்ற உளறல் கேட்டிலையோ//

என் உதிரம் எல்லாம் உனதே என்ற உளறல்!
கேட்டிலையோ?
கேட்டிலையோ?
கேட்டிலையோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாடலைத் தந்து சாந்தப்படுத்தியமைக்கு நன்றி, கவிஞர்.சங்கர்! பாடியதும் அருமை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே...

என்ற ராஜாவின் இசையை ஞாபகப்படுத்தி விட்டது! என் தோழனுக்கும் மிகவும் பிடித்த பாடல்-ராகம் இது!...

Lalitha Mittal said...

lyrics as well as music echo the
singer's 'ekkam'.congrats,sankar!

Radha said...

@sankar,
beautiful lyrics...heard the song too ! beautiful rendition !!(heard your earlier ponniye song also).
thanks ! :-)

Radha said...

@ரவி,
"விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே...
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்துவிடு..."
[பாடுவது ராதை, கரை => யமுனா நதிக்கரை ]
இரண்டு வாரங்களுக்கு முன்னர் (when i heard this in radio) இந்த வரிகளை மட்டும் பதிவிட இருந்தேன். :-)
ஓவர் டகால்டியா இருக்கோன்னு மிகவும் தயங்கி விட்டுவிட்டேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
டகால்ட்டி எல்லாம் இல்ல! அது கண்ணன் பாட்டே தான்! யாராச்சும் கண்ணன் பாட்டில் இடுங்களேன்...

எனக்கு மட்டும் சொந்தம்...
உனது இதழ் கொடுக்கும் முத்தம்!
உனக்கு மட்டும் கேட்கும்...
எனது உயிர் உருகும் சத்தம்!
முருகா, உயிர் உருகும் சத்தம்!

தமிழ் said...

இரசித்தேன்

Radha said...

//கண்ணன் பாட்டே தான்! யாராச்சும் கண்ணன் பாட்டில் இடுங்களேன்...//
ok. added to the pipeline. :-)

Radha said...

@சங்கர்,
இது என்ன (ஹிந்துஸ்தானி) ராகம்?

sury siva said...

இந்த அற்புதமான விரக அனுபவத்தை இந்த ராகத்திலும் பாடலாமே என்று தோன்றியது.
இருக்கும் ஒரு இரண்டு பற்களையும் பல் டாக்டர் பிடுங்கியபின்னே
இருக்கும் பொக்கை வாயால் பாட முடியுமோ என்னவோ என்று ஐயந்தான்.
இருந்தாலும்
பாடலின் நயம் என்னைக் கவர்ந்தது.
பாடவும் செய்தேன்.

இங்கே வாருங்கள். வந்து கேளுங்கள்.
http://www.youtube.com/watch?v=jPeMu7PlgkY

சுப்பு ரத்தினம்.

Sankar said...

@ KRS: நன்றி.. கவிஞர் எல்லாம் இல்லங்க. மனசுக்கு தோணினத எழுதினேன். உங்களுக்கு பிடித்து, உங்கள் மனதை சாந்தப் படுத்திருந்ததாக சொன்னதுக்கு மிக்க நன்றி. ஓ.. அந்த பாட்ட நான் நெனைக்கவே இல்லங்க. ஆமாம், அது எனக்கும் பிடித்த பாடல்.

Sankar said...
This comment has been removed by the author.
Sankar said...
This comment has been removed by the author.
Sankar said...

@Radha: Thanks + Thanks. Btw, this is a Carnatic raagam only. This raagam is called as Sallapam or Surya. When i heard this for the first time, I could not even talk. Such was the beauty and effect of the raagam. Hope you also enjoyed it. I want this to be sung by a professional singer, U know anyone!! :)

Sankar said...

@ திகழ் : ரொம்ப நன்றி !! :)

Sankar said...

@ Sury Sir: Sir.. Its so amazing.. Charukesi la, the lyrics are more beautified.
Thanks Sir.. You liked the lyrics. :) How did you like it in Sallabam sir?

Sankar said...

@Lalitha amma: Thanks a lot amma.. :)

In Love With Krishna said...

@Sankar:
Tnx 4 posting this!
Mind-blowingly wonderful! :))

//நீ
சரணம் என்று நானும்அடைந்தேன் உந்தன் பாதம்உதிரம் எல்லாம் உனதேஎன்ற உளறல் கேட்டிலையோ ... நீ//
Those lines brought tears to my eyes... :)
btw, title-kku meaning enna?
Konjam english-la translate pannungalein!

In Love With Krishna said...

//பசுமையான முல்லை புதர்களில் தோன்றிய மலர்கள், தன்னை கண்டு எள்ளி நகையாடுவதைப் போல அவளுக்கு தோன்றியது. //
Manadhil sogam irukkum podhu pasumai ellam kooda kannukku theriyuma??

In Love With Krishna said...

//ரு முறை அவன் எழில் திருமேனியினை காணோமா!! அவன் பாதம் பணியோமா!! என்று ஏங்கினாள்... அதோ பாடுகிறாள் அவள், ஆள் இல்லாத வனமதனில், ஆண்டவனின் கருணையை நாடி.....//
Ange unmayile "aal illayaa"??
illai, illai...
avan kovapattu "invisible" aayitaan!
But, He is there!
Right next to her!
And she knows, that's why she sings!
Now, will He leave His anger and become visible?

Sankar said...

@ILWK:
Thanks ma.. You liked it.. Happy with ur comments.
English la proper translation therilangale... A state of being in bliss nu venumna sollalam.

KRS: Pl help in translation.

//Manadhil sogam irukkum podhu pasumai ellam kooda kannukku theriyuma??//
Illanga radhaioda kannukku, andha pookal dhan theriyudhu. Andha pookal avala pathu paragasikaardhunnu nenaikkaral.

He is very much there; that she also knows.. Avana thavira veru aal illainu sonnen. :) :)

In Love With Krishna said...

@Sankar: Ok, let's consult the KRS-Dictionary :))

//Avana thavira veru aal illainu sonnen.//
illai...
what i meant was the knowledge that He is very much there makes her more sad.
i mean, how unhappy can He be to hide Himself?
Is He so stone-hearted that it doesnt affect Him?
Or, is she worthless to Him, so much so, that He can manage to be fine without her, while she is pushed to a fate worse than death??

Kavinaya said...

ஆஹா, அருமையான பாடல். உங்கள் குரலும் குழைந்து மனசை உருக்கியது, சங்கர். தாத்தா பாடியிருந்ததும் மனதை நிறைத்தது. நன்றிகள் பல.

Sankar said...

@ILWK: He is not at all a stone-hearted fellow.. He just plays with her..Avlodhan.. Soon He ll unites with her..
Whenever, he gets angry on Radha, he gets more hurt than her.. Such is the value of love and the ultimate surrender..

Sankar said...

@Kavinaya akka.. Thanks a lot akka.. :) I second ur opinion on Sury sir's song.. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@sankar, @kk
Thanks, for calling me dictionary, but I contain "only" the words & sounds related to Him :)
சல்லாபம் = Act of Romance

Romance is not only between people; Music can be romantic, situations can be romantic like the morning sun and so on....
That which is ardent and elates your heart = romantic

சல்லாபம் = இன்ப ஆடல்; Act of Romance
(worldly meaning has changed a bit and denotes only physical pleasure)

Sankar said...

@KRS: Nice.. Thanks..
Btw.. U said the words soothed you.. in which way!! if I can know..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Is He so stone-hearted that it doesnt affect Him?//

கல் மனது என்று பேர் வாங்கியும், அவன் அன்பு மாறாமல் இருக்கே! நம்மைக் கல்மனது என்று சொன்னால் உடனே அப்படியில்லை-ன்னு defend பண்ணுவோம்-ல்ல? அவன் தன்னை defend கூடச் செய்து கொள்வதில்லை பாருங்கள்!

அவன் தன்னை மறைத்துக் கொள்ளக் காரணம் = கோபம் இல்லை! மோகம்!

Shez trying to seek him outside!
Hez trying to seek her inside!
மறைத்துக் கொண்டால், மனம் ஏங்கும்! உடல் ஏக்கமல்ல! மன ஏக்கம்! அதுவே அவனுக்கு வேண்டும்!

அதான் தன்னை மறைத்துக் கொண்டு அவளுக்காக ஏங்குகிறான்!
அவளையும் ஏங்க வைக்கிறான்!

Living is short lived.
Thoughts of living is long lived.
He wants the love to live long!
முருகா-நீ எனக்குன்னு சொன்னதைச் சொல்லிட்டேன்!

Sankar said...

//அதான் தன்னை மறைத்துக் கொண்டு அவளுக்காக ஏங்குகிறான்!
அவளையும் ஏங்க வைக்கிறான்!//

WOW.. :) Awesome..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//U said the words soothed you.. in which way!! if I can know..//

sorry, private!

உதிரம் எல்லாம் உனதே
உளறல் கேட்டு இலையோ
If all my blood comes from His, then what has He done to me?
What happ to my mom gave blood? Has it changed in His Transfusion? Is transfusion not painful? உளறல் கேட்டு, இலையோ?

Sankar said...

//உதிரம் எல்லாம் உனதே

உளறல் கேட்டு இலையோ
If all my blood comes from His, then what has He done to me?
What happ to my mom gave blood? Has it changed in His Transfusion? Is transfusion not painful? உளறல் கேட்டு, இலையோ? //

Puriyala!!

In Love With Krishna said...

@KRS:
//What happ to my mom gave blood? Has it changed in His Transfusion? Is transfusion not painful? //
:))
Your Mom's blood...where did it come from?? :))
"endhai thandhai than muthappan...vandhu vazhi vazhi aatseykindrom"...marandhuteengla? :))

btw, transfusion is NEVER painful, both literally and figuratively. :))
But, in your case, as i just mentioned before, it is DNA coding from long before, not transfusion!

In Love With Krishna said...

@KRS @Sankar:
btw, Radha (or me) didnt call Him stone-hearted!
How is that possible?
She does question in doubt, but she realizes that cant be, and goes on to the next question!
He is not stone-hearted, definitely not!
His love is the kind that melts stones! :)

Sankar said...

//He is not stone-hearted, definitely not!
His love is the kind that melts stones! :)//
right said.. :)

Radha said...

//When i heard this for the first time, I could not even talk. Such was the beauty and effect of the raagam. Hope you also enjoyed it.
//
@sankar,
yes. i liked it very much. you are very very gifted. கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. :-) all my attempts to learn music went in vain. :-(((

Sankar said...

//yes. i liked it very much. you are very very gifted. கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. :-) all my attempts to learn music went in vain. :-(((//

Radha.. I learned very little of carnatic music. Not even finished a single varnam fully. I use to listen a lot. Hey.. U can learn, if you have the ultimate passion.

ஷைலஜா said...

காதல் மாதத்தில் அழகான பாடல். தாமதமாக பார்க்கிறேன் .. முதல்ல பார்த்திருந்தா பாடி அளித்திருப்பேன்!

Sankar said...

@Shilaja akk: Thanks akka. Please padi kodunga.. :) eagered to listen to ur voice. :)

ஷைலஜா said...

சங்கர் நீங்களே அழகா இனிமையா பாடி இருக்கிங்களே........இப்போதான் கேட்க முடிஞ்சது...

Sankar said...

Thanks akka. :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP