Sunday, February 13, 2011

லலிதா மிட்டல்-தசாவதார பஜனம்!

இன்று கண்ணன் பாட்டில் அன்பர் கவிதை! கண்ணன் பாட்டின் வாசகியான லலிதாம்மா என்னும் லலிதா மிட்டல் அவர்கள் வழங்குவது! அவர்களின் வேண்டற்பாடல்களின் வலைப்பூ இது!


தசாவதாரம் [மெட்டு - மீராபஜன் - paayoji maine ramrathanudhan paayo என்ற மெட்டு]


கண்ணா மண்ணை உண்ட மன்னா - கார்முகில் வண்ணா

அசுரன் அபகரித்த மறைகளை மீட்கவே
மீனாய்ப்பிறந்து பட்டபாட்டால் களைத்தேநீ
அரவணையில் அயர்ந்தாயோ? அரங்கநாதா!
[கண்ணா மண்ணை.. ]

அமிர்தம் கடைந்தெடுக்க ஆமையாய் அவதரித்து
மந்தரமலை சுமந்ததாலே சோர்வடைந்தேநீ
அரவணையில் துயின்றாயோ ? ஆராவமுதா!..
[கண்ணாமண்ணை]

வராகமாய்ப்பிறந்து இரண்யாக்ஷனை அழித்து
பூமியைக்கொம்பினில் தாங்கிக் களைத்தேநீ
பாம்பணையில் படுத்தாயோ? ஸ்ரீபாண்டுரங்கா!..
[கண்ணா மண்ணை..]

நரசிம்மரூபனாய் தூணைப்பிளந்துவந்து
இரண்யனின் உதரம் கிழித்தே உக்ரம் தணிய
சேஷ சயனம் செய்தாயோ ?சாரங்கபாணி!..
[கண்ணா மண்ணை ]

வாமனனாய் பலியை மூவடி நிலம்கேட்டு
ஓங்கி உலகளந்ததாலே ஓய்வேடுக்கவே
நாகத்தின் மேல் படுத்தாயோ?ஹரினாராயனா!..
[கண்ணா மண்ணை,.]

ஜமதக்கினிமகனாம் பரசுராமனாய் வந்து
க்ஷத்ரிய குலநாசம் செய்து களைத்தேநீ
சேஷசயனம் செய்தாயோ? ஜனார்தனா!
[கண்ணா மண்ணை...]

தசரதனின்மகனாம் ராமனாய் அவதரித்து
தசமுகமர்தனம் செய்தே இளைப்பாற
புஜங்கசயனம் செய்தாயோ ?புண்டரிகாக்ஷா!
[கண்ணா வெண்ணை ]

பலராமனாய்ப்பிறந்து கலப்பைதனைச் சுமந்து
பலவிதலீலை புரிந்தே களைப்படைந்து
பன்னகசயனம் கொண்டாயோ ?பரந்தாமா!
[கண்ணா வெண்ணை ]

கீதைதனை ஓத கண்ணனாய் அவதரித்து
பார்த்தனுக்க்காக தேரோட்டிக்களைத்தேநீ
பாம்பணையில் படுத்தாயோ? பண்டரினாதா!
[கண்ணா மண்ணை..]

தங்கத்தொட்டிலில் உன்னைத் தாலாட்ட நாங்களிங்கே
ஏங்கிஇருக்க தேவைதானோ பாம்புப்படுக்கை ?
எங்கள் கலிதீர வாராய் கல்கியுருவில் ?
[கண்ணா மண்ணை ...]

13 comments :

Radha said...

லலிதாம்மா,
ரவி சற்றே பிசியாக இருந்ததால் (தற்பொழுது வெளிநாடு பிரயாணத்தில் உள்ளார்) உடனடியாக பாடலை பதிவிட முடியாமைக்கு வருத்தம் தெரிவிக்க சொன்னார். கண்ணன் குழுவினர் சார்பாக அருமையான தசாவதார பாடலுக்கு நன்றியும் தெரிவிக்க சொன்னார். :-)
~
அன்புடன்,
ராதாமோகன்

குமரன் (Kumaran) said...

இப்பாடலைப் பதிந்ததற்கு நன்றி இராதா. எனக்கும் வேலை சரியாக இருப்பதால் இந்தப் பாடலைப் பதிக்க இயலவில்லை.

லலிதாம்மா, ஜெயதேவரின் அஷ்டபதியை நினைவூட்டுகிறது இந்தப் பாடல்! ஜய ஜகதீச ஹரே!

Narasimmarin Naalaayiram said...

ஏன் படைத்தாய் மானுடனாய்?

குழலாகிட வரங் கொடுத்திருந்தால் ,கண்ணன்
குமிழ்வாயில் குடி இருந்திருப்பேன்;....வண்ண
மயிலாகிட வாய்ப்பளித்திருந்தால் ,அவன்
முகுடத்தில் ஓரிடம் பிடித்திருப்பேன் .

தென்றலாய் அன்று தவழ்ந்திருந்தால் ,மண்ணைத்
தின்றவனைத் தொட்டு மகிழ்ந்திருப்பேன் ;..பசுங்
கன்றாய்அன்றே பிறந்திருந்தால் ,கண்ணன்
குழலிசையில் என்னை இழந்திருப்பேன்.

பாரதப்போரினில் அன்றவன் ஒட்டிய
பார்த்தனின் தேராய் இருந்திருந்தால்,..என்
சாரதி செப்பிய கீதையின் உட்பொருள்
ஓரளவாயினும் உணர்ந்திருப்பேன்.


'நான்' என்னும் அகந்தையில் நீ தந்த நேரத்தை
வீண்வம்புப்பேச்சில் விரயஞ்செய்யும்...ஈன
மானுடனாக இம்மண்ணில் மரித்திட
ஏனென்னைப் படைத்தனை,நான்முகனே

லலிதாம்மா உங்கள் கவிதைகளை படிப்பதுண்டு. முன்பு படித்து பார்த்தேன் . அதில் இவை மிகவும் பிடித்திருக்கிறது .
படித்ததும் ஒரு சில வினாடிகள்.....:... …………………

Narasimmarin Naalaayiram said...

கண்ணா நீ மண்ணை தின்றாயோ ஓ! சாரங்கபாணி

அசுரன் அபகரித்த மறைகளை மீட்கவே
மீனாய்ப்பிறந்து பட்டபாட்டால் களைத்தேநீ
அரவணையில் அயர்ந்தாயோ? அரங்கநாதா!
(கண்ணா...)

பலுக்கே பங்காராமன் ஏனா கோதண்டபாணி
என்ற பத்ராசல ராமதாஸ் கீர்த்தனை மெட்டிலும் ஓரளவு பொருந்துகிறது.

அருமை மிக்க நன்றி :)

Lalitha Mittal said...

1] Radha,
thanks for visiting my blog and informing me of posting my dhasavathaaram song.pl convey my thanks to krs for having posted mysong inspite of his busy schedule.thanks again for your wishes.
2]kumaran,
whenever i hear m.s.singing jaya jagatheesa hare,i used to feel that the same should be written and sung in thamizh.i tried my best to write the lyrics to fit in that tune;but the words were not appearing in my mind to suit that tune.thanks for yr comments.

Anonymous said...

தங்கத்தொட்டிலில் உன்னைத் தாலாட்ட நாங்களிங்கே
ஏங்கிஇருக்க தேவைதானோ பாம்புப்படுக்கை ?
எங்கள் கலிதீர வாராய் கல்கியுருவில் ?

these lines remind this paasuram

நடந்த கால்கள் நொந்தவோ * நடுங்க ஞாலம் ஏனமாய் *
இடந்த மெய் குலுங்கவோ * விலங்கு மால் வரைச் சுரம் *
கடந்த கால் பரந்த * காவிரிக் கரை குடந்தையுள் *
கிடந்தவாறெழுந்திருந்து பேசு * வாழி கேசனே!

Lalitha Mittal said...

N.N sir,
thanks for having visited my blog earlier and for quoting a song which you liked[that's my favourite too]
as you say 'paluke..'tune also appears to suit the present song!thank you for mentioning it!!

Kala BN said...

lalitha
தங்கத்தொட்டிலில் உன்னைத் தாலாட்ட நாங்களிங்கே
ஏங்கிஇருக்க தேவைதானோ பாம்புப்படுக்கை ?
எங்கள் கலிதீர வாராய் கல்கியுருவில் ?
[கண்ணா மண்ணை ...]
Arumaiyaana bakthi chuvaimikka karpanai vaLam.

கவிநயா said...

பாடல் அருமையாக இருக்கிறது, அம்மா.

//தங்கத்தொட்டிலில் உன்னைத் தாலாட்ட நாங்களிங்கே
ஏங்கிஇருக்க தேவைதானோ பாம்புப்படுக்கை ?//

குறிப்பாக இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடலை நினைவுபடுத்தியது :)

Lalitha Mittal said...

anonymous,
thanks for yr visit especially for the sweet paasuram!

Lalitha Mittal said...

hi srikala,
nee ithaip paadalaame!
by the by,did you listen to surysir's singing yr sairam bhajan?iam asking you this ,as i din't
find yr response for his comments in yr blog.

Lalitha Mittal said...

hi srikala,
nee ithaip paadalaame!
by the by,did you listen to surysir's singing yr sairam bhajan?iam asking you this ,as i din't
find yr response for his comments in yr blog.

Lalitha Mittal said...

kavinaya,
thanks.let us all beg HIM to wake
up and come down soon [send emergency call]!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP