Wednesday, February 23, 2011

கமலக்கண்ணன் பாதகமலத்துக்கு ..

கமலக்கண்ணன் பாதகமலத்துக்கு ..
--------------------------------------------------------

                                                                                                                                                               

         கண்ணா! என் கவிதைக்குக் கருவாகி வா ;
         மன்னா! எந்நெஞ்சத்து மருள் நீக்க வா ;
         பொன்னே! என் வாழ்வுக்குப் பொருள் கூற வா;
         அன்பே! என் அஞ்ஞான  இருள் போக்க வா ;
          எந்நாளும் எனைக்காக்கும்  அரணாக வா !
    ஆதரிக்கப் பாஞ்சாலி அழைத்த வேளை
     மாதவாநீ  அவளுக்கு அளித்தாய் சீலை;
     ராதையுடன் செய்தாய் நீ ராஸ லீலை;
     கோதையும் உன்மேனிக்கிட்டாள் மாலை ..இந்த
     பேதைமேல்மட்டுமேன் இரக்கமில்லை? (கண்ணா...)     நோக்கும் முகம் யாவும் நினதாகணும்;
    வாக்கெல்லாம் உனைவாழ்த்தும் துதியாகணும்;
    கேட்பதுந்தன் குழலொலியாகணும்;
    நீக்கமற நினைவெல்லாம் நீயாகணும்;..நெஞ்சில்
    பூக்கும் பாமலருன் பதம் சேரணும்.(கண்ணா..)
  

        

17 comments :

கோமதி அரசு said...

//நெஞ்சில்
பூக்கும் பாமலருன் பதம் சேரணும்.//
அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சிப்பேன் கண்ணா
அன்பான மனதால் உன்னை அர்ச்சிப்பேன் கண்ணா
என்பது போல்,

நெஞ்சில் பூக்கும் பாமலரால் கண்னன் பாதம்
அர்ச்சிக்கிறீர்கள்.

அழகான பாடல்,அழகான படம்.
நன்றி லலிதா.

Radha said...

அழகான பாடல். :-)
அருமையான படங்கள். :-)

sury said...

super song
சூப்பர் சாங். அதுக்கு சூப்பரா ஒரு மெட்டு போடனம்னு ஷண்முகப்ரிய அல்லது தேஷ் ஏதாவது ஒண்ணிலே இன்னும் கொஞ்ச நேரத்துலே போடறேன். my வாயஸ் மட்டும் கொஞ்சம் மோசம் தான். அதுக்காக பாடாம இருக்க முடியுமோ ?
சுப்பு ரத்தினம்

குமரன் (Kumaran) said...

அருமை அம்மா!

sury said...

http://www.youtube.com/watch?v=tf5CozLW1Qs
கண்ணன் என் கவிதைக்கு கருவாகி வா !!
வந்து பாத்தேன். அந்த கிழவன் இங்கு பாடுவதும் கேட்டேன்.
மீனாட்சி பாட்டி.

கவிநயா said...

அழகான படங்களுடன் இனிமையான பாடல், அம்மா!

சி.பி.செந்தில்குமார் said...

m m நல்லாருக்கு

Lalitha Mittal said...

கோமதி,
சூரியனுக்கு தீபாராதனை
செய்வது போல்,அவனருளிய சொற்களால் அவனைப்பாடும் மனமருளிய மாயவனுக்கு நன்றி;அதை ரசிக்கும் உங்களுக்கும் நன்றி !

Lalitha Mittal said...

Type a word in phonetic English and hit space to get it in Tamil. Click on a word to see more options.
1)ராதா,உன் பின்னூட்டத்துக்கும் ,என்னை உங்கள் குழுவில் ஒருவராக ஏற்றதற்கும் மனமார்ந்த நன்றி !
2)குமரன்,
பாட்டை ரசித்தற்கு நன்றி
3)கவிநயா,
ராதாவின் உதவியால் படம் பதிக்கவும் ஓரளவு கற்றுக்கொண்டுவிட்டேன் !

உங்கள் வரவேற்புக்கும் உத்சாகமூட்டி உதவியதற்கும்
உளமார்ந்த நன்றிகள்!எல்லாம் அவன் செயல்!!

Lalitha Mittal said...

செந்தில்,
நான் ஒரு ம.ம[மரமண்டை
அதாவது ட்யூப்லைட்]
உன் ம்.ம் க்கு என்ன பொருள்?

Lalitha Mittal said...

சுரிசார் ,
நான்பாடக்கேட்டால் உங்களை நீங்கள் மகாராஜபுரம் என்று எண்ண
வாய்ப்புண்டு![ர.கணபதியின் 'விநாயகுனி'
என்ற கட்டுரை நினைவுக்கு வரது]பாட்டைக்கேட்டபின் மறுபடியும் உங்களை சந்திப்பேன்.
மீனாட்சிப்பாட்டிக்கும்
உங்களுக்கும் என் நன்றிகளும் நமஸ்காரங்களும் !

Anonymous said...

அருமையான கண்ணன் பட்டுகள். கண்ணன் மேலும் மேலும் அருளட்டும். அம்மா தனலட்சுமி

In Love With Krishna said...

ஹாய். இது உங்க கே கே.
தமிழ்-ல டைப்பிங்!
:))
எனக்கு march 2-இல் இருந்து exams.
எனக்காக கண்ணனிடம் வேண்டிகோங்க pleez!! :))

Lalitha Mittal said...

ஹாய் கேகே ,
கண்டிப்பா உனக்காக கண்ணனிடம் வேண்டிக்கறேன் .டென்ஷன்
இல்லாம படி .கண்ணன் அருள்வான் .

Lalitha Mittal said...

சுரிசார்
பாட்டு கேட்டேன் .நல்லா இருந்தது .

sury said...

சுரி சார் இல்லை. சூரி எனது பெயர். சுரி என்றால்கத்தி. ( knife or sword not shouting ) இல்லையென்றால்
சுப்பு ரத்தினம் என்று கூப்பிடுங்கள். இப்படித்தான் என் திருச்சி கல்லூரியில் 1957 ல் எனது ப்ரோபசர் ஏற்ஹார்ட் சூரிய நாராயணன் என்பதை சூரியனா அரையணா என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

சுப்பு ரத்தினம்.

Radha said...

கே.கே,
கவலை வேண்டாம். :-)
ஸ்ரீ ருக்மிணி சமேத பார்த்தசாரதி சுவாமி துணை. :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP