Tuesday, January 25, 2011

பத்ம பூஷண் SPB: வான் போலே வண்ணம் கொண்டு, வந்தாய் கோபாலனே!

முதலில் பத்ம பூஷண் (தாமரை அணிகலன்) விருது பெற்றுள்ள SPB-க்கு இனிய வாழ்த்துக்களைச் சொல்லிப் பதிவைத் துவங்குவோமா?
பத்ம பூஷண் பாலு, கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!
போன வருசம் ராஜாவுக்கு! இந்த வருசம் உங்களுக்கு! இனிய வாழ்த்துக்கள்! :)

ஆனா இந்த விருதுகளையெல்லாம் தாண்டியும் உங்க சாதனை பேசப்படும்! இது சும்மா அடையாளம் மட்டுமே!
சங்கராபரணத்தில் தொடங்கி...உங்கள் சிரிப்பூ கலந்த பாடல்கள், பலர் நெஞ்சங்களைச் சிலர்க்க வைப்பவை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்லாது, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி-ன்னு கலக்கியவர் நீங்க! இசையமைப்பாளர், நடிகர் என்றும் வேறு வேறு முகங்கள் வேறு உங்களுக்கு!

கண்ணன் பாட்டு அன்பர்கள் சார்பாக, உங்களுக்கு வாழ்த்துக்கள் பாலு!
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்

- ஒன்று போதாதா நீங்கள் தந்த கண்ண-இன்பத்துக்கு! வாழ்க!



இன்றைய கண்ணன் பாட்டுப் பாடல் - SPB & அவர் தங்கை SP ஷைலஜா பாடுவது!

குரல்: SPB & SP ஷைலஜா
படம்: சலங்கை ஒலி
வரி: வைரமுத்து
இசை: இளையராஜா
ராகம்: மோகனம்

கேட்டுக்கொண்டே படியங்கள்! ஆரம்பக் குழலிசை ராஜா ஸ்டைல்! அழகான Opening Piece!

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே - பல விந்தைகள் செய்தவனே!
(வான் போலே)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே
அன்னை இன்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே

மோகனங்கள் பாடி வந்து, மோக வலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று, செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
(வான் போலே)


பெண்கள் உடை எடுத்தவனே
தங்க குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

கீதை என்னும் சாரம் சொல்லி, கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க, காலமெல்லாம் நிலைத்தாயே
மண்ணில் உந்தன் காதல் எல்லாம்
என்றும் என்றும் வாழும் கண்ணா!
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
!
(வான் போலே)


அன்பர்களுக்கு இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்!
Long Live the Republic! பாரத தேசம் என்று பெயர் சொல்லுவோம்!

53 comments :

In Love With Krishna said...

@KRS: Loved the song :)
But, lyrics kulappiteenga ninaikkiren!

In Love With Krishna said...

//கீதை என்னும் சாரம் சொல்லி, கீர்த்தியினை வளர்த்தாயே//
idhu namma aalu PSP :))

//மண்ணில் உந்தன் கானம் எல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணாவந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே//
:))

In Love With Krishna said...

btw, no offence, but i thought video was a big comedy-total laugh riot! :))
i was laughing all along :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@KK
//But, lyrics kulappiteenga ninaikkiren!//

Why, any mistake in lyrics?

//btw, no offence, but i thought video was a big comedy-total laugh riot! :))//

சினிமா-ன்னா அப்படித் தானே-ம்மா இருக்கும்? கண்ணனுக்கு கற்பூர தீபமா காட்டுவாங்க? :)
We should see Kannan in everything we see, in cinema too!

Radha said...

இரண்டாவது பாண்டுரங்கன் = மகர நெடுங்குழைக் காதன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரண்டாவது பாண்டுரங்கன் = மகர நெடுங்குழைக் காதன். :-)//

No No! He is my PaanRuk! :) Dont give big big names to him!

கானா பிரபா said...

எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் பத்ம பூஷண் பாலுவுக்கு பொருத்தமான வாழ்த்துப்பாடல்

Lalitha Mittal said...

'annai inrip piranthaaye' intha
variyil porutkutram theriyalaiyaa?
" netrikkannaith thiranthaalum kutram kutrame"enru koorum
thooya 'thamingilap'parambaraiyaich chernthaval naan!'annai inri
valarnthaaye' enrirunthaal
ponaapporathunnu mannikkalaam!
"ithu epdi irukku?"

In Love With Krishna said...

@Radha:
"//இரண்டாவது பாண்டுரங்கன் = மகர நெடுங்குழைக் காதன். :-)//
:))))))
oru pattu irukku (Thiruperai Nachiar Sobanam)
adhila lyrics varum:
"Bhaktargalai kaakum Kuzhaikaatha!
thiruperaiyarukku andha ranganatha!
Pillai kuzha vilaiyaataiyum, mahaajanangalaiyum,
Kaapay, thuyar theerpaay!"

In Love With Krishna said...

//சினிமா-ன்னா அப்படித் தானே-ம்மா இருக்கும்? //
ha ha
no, the way they were dancing....
i was laughing all over.
it's so hilarious.
That too, when Kamal is catching his coat and dancing, i was rolling off my chair with laughter! :)

In Love With Krishna said...

//Why, any mistake in lyrics?//
Yes, if u hear the song,
மோகனங்கள் பாடி வந்து, மோக வலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று, செய்த லீலை பல கோடி
வானில் உள்ள தேவரெல்லாம்
போற்றிப் பாடும் காதல்மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!

But, these lines are in 2 different stanzas in your lyrics :)

In Love With Krishna said...

//ராச லீலை புரிந்தவனே
ராச வேலை தெரிந்தவனே//
What is the difference?

In Love With Krishna said...

@Radha:
There is Laksharchanai for PSP the whole day today.
Please go see PSP today if u r free! :))
p.s: i cudn go as i have exams 2morrow! :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு வாழ்த்துப் பதிவில், கண்ணன் அன்பர்கள் வாழ்த்து கூடச் சொல்லாம, கோயில்/அர்ச்சனை-ன்னே பேசிக்கிட்டு இருந்தா எப்படி?
கண்ணனை-ல்ல தப்பா நினைப்பாங்க, இவன் ஆளுங்க நல்லது நடக்கும் போது, வாழ்த்து கூடவா சொல்ல மாட்டாங்க-ன்னு? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@காபி அண்ணாச்சி
உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு தெரியுமே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@லலிதா-ம்மா
//annai inri
valarnthaaye' enrirunthaal
ponaapporathunnu mannikkalaam!
"ithu epdi irukku?"//

:)
அன்னை இன்றி வளர்ந்தாயே-ன்னு சொல்ல முடியாது! ஓரிரவில் ஒருத்தி "மகனாய் வளர்ந்து" என்ற பாசுர வரிக்கு எதிராயிடும் அல்லவா?

ஆனா, அன்னை இன்றிப் பிறந்தாயே-ன்னு சொல்லலாம்! ஏன்-ன்னா இறைவன் கர்ப்ப வாசத்தில் "அடைபடுவதில்லை"! வந்து தங்குகிறான்! பிறப்பதில்லை! பிறவான்-இறவான்!

மேலும் தேவகி பெற்று ஒரு ஜாமம் கூட வைத்திருக்கவில்லை! அன்னையிடம் இருந்ததை விட, அப்பனிடம் இருந்த நேரமே அதிகம்! யசோதையிடம் வந்த பிறகோ, அவளுக்கே தெரியாது...கோகுலத்தில் பிறந்தான், ஆனால் அன்னை இன்றிப் பிறந்தான்! Poetic License!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//it's so hilarious.
That too, when Kamal is catching his coat and dancing, i was rolling off my chair with laughter! :)//

ஹா ஹா ஹா
அது கமல் ஒரு புதிய நடிகனாய் படத்தில் சான்ஸ் கேட்டு, அவருக்கு நடிக்க, இயக்குனர் சொல்லிக் கொடுக்கும் சீன்! இயக்குனர் மட்டமாகச் சொல்லிக் கொடுத்து, கமல் நன்றாகச் செய்யும் போது, தவறு-ன்னு சொல்லும் சீன்! செம காமடியா இருக்கும்!

//But, these lines are in 2 different stanzas in your lyrics :)//

Bcoz therez a small pause between these lines :)

//ராச லீலை புரிந்தவனே
ராச வேலை தெரிந்தவனே//
What is the difference?

ராச லீலை = கோபி லீலை
ராச வேலை = ராஜ வேலை = ராஜ தந்திரம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//p.s: i cudn go as i have exams 2morrow! :(//

Can the exams be conducted in PSP place? பாத்துக்கிட்டே தேர்வு எழுதுவது போல் ஏதாச்சும் வசதி உண்டா? :)

In Love With Krishna said...

@KRS: No, they are with different set of words.
Please check :)

In Love With Krishna said...

//ஒரு வாழ்த்துப் பதிவில், கண்ணன் அன்பர்கள் வாழ்த்து கூடச் சொல்லாம, கோயில்/அர்ச்சனை-ன்னே பேசிக்கிட்டு இருந்தா எப்படி? //
:))
Belated wishes!
btw, i really think i was more patriotic and excited about R-Day when i was not in India.
ippo ellam, edho oru holiday pol aayiduchu.
Enga school (abroad-la) kooda superb-aa kondaaduvaanga R-Day-vai.
Ippo celebrations ellam romba low-key aayiduchu (India-vil). :((

கோமதி அரசு said...

பதமபூஷண் பாலுவுக்கு வாழ்த்துக்கள்.

கோபாலன் பாடல் அருமை. அருமையான பாடலை கேட்க தந்த உங்களுக்கு நன்றி.

Sankar said...

Hey KRS.. Nice post.. My favorite song too.. :)

நாடி நாடி நரசிங்கா! said...

கண்ணனை-ல்ல தப்பா நினைப்பாங்க, இவன் ஆளுங்க நல்லது நடக்கும் போது, வாழ்த்து கூடவா சொல்ல மாட்டாங்க-ன்னு? :)


நல்ல இனிமையான பாடல்களை பாடிய தாமரை அணிகலன் வாங்கிய எஸ் பி பாலசுப்ரமணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்:)

Lalitha Mittal said...

[1] "oruththi maganaai valarnthu"enraal mattum annaiyidam valarnthathaai eduththukkollanumaanaal "oruththi maganaaip piranthu" enra[nee blackout panniya}variyai annaikkup piranthathaagaththaane eduththukkanum? [2]nee v.m kku
onnu vitta uravaa?...ippadi point pointaa kettu unnudan ondikku ondi
sandaipoda devaki,kosalai innum matra avathaarangalin annaiyargal
varinthu kattindu unnainokki
vanthindirukkaannu IB ilirunthu
tip kidaiththirukkaam;....jokes apart,'avanukku yonippirappu illai'
enbathai ariven .athanaal ippo 'ambel' solli jagaa vaangikkiren .santhoshamaa?

Radha said...

@லலிதாம்மா,
நமஸ்காரம் செய்து கொள்கிறேன்.
உங்கள் கேள்விகளையும் பதில்களையும் ரசித்தேன். :-)
//oruththi maganaaip piranthu" enra[nee blackout panniya}variyai annaikkup piranthathaagaththaane eduththukkanum? //

பாயிண்ட்ல பிடிச்சீங்க. :-)

Radha said...

@KK,
தகவலுக்கு நன்றி சகோ. PSP didn't have the privilege of having my darshan yesterday.

Radha said...

@All,
இங்கே ஒரு கண்ணன் பாடல் இருக்கிறது.
http://ramblings-of-radha.blogspot.com/
ஏற்கனவே இதனை கண்ணன் பாடலில் என் முதல் எதிரி (குமரன்) பதிவு செய்துவிட்டார். ஆனால் என்ன? its worth spamming all my blogs with this gem !! மெலடி கேட்க விருப்பமானவர் அனைவரும் கேட்டு மகிழ்வீர். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
லலிதாம்மா பாயிண்ட்டில் பிடிச்ச பாயின்ட்டைப் பிடிச்சிட்டியேப்பா! :)
எவ்ளோ மகிழ்ச்சி ராதாவுக்கு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோமதி-ம்மா
நன்றி...கோபாலன் பாட்டு ராஜா போட்டது, அருமையா இல்லாம இருக்குமோ? :)

@சங்கர்
உங்கள் விருப்பப் பாடலா! மகிழ்ச்சி! ஆனால் உங்களுக்கு ஆங்கிலத்தில்/தங்க்லீஷில் பின்னூட்ட அனுமதி இல்லை! KK/லலிதாம்மா-க்கு மட்டுமே விதிவிலக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாடும் நிலா பாலுவை வாழ்த்தியமைக்கு நன்றி ராஜேஷ்!

ராதாவைப் போல், வாழ்த்தே சொல்லாமல், விளம்பரம் மட்டுமே கண்ணாய் நீங்க இல்லை பாருங்க! அதுக்கு! :)
கண்ணனுக்கே பாக்கியம் இல்லையாம்! அப்பறம் தானே பாலுவுக்கு எல்லாம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@லலிதாம்மா

உங்கள் பின்னூட்டம் மிகவும் ரசித்தேன்!
ஆனா இப்போ ராதா வந்து என்னைப் பேச வைக்கி்றான்! இதன் பலா பலன் அவனுக்கே! :))

// "oruththi maganaaip piranthu" enra[nee blackout panniya}variyai annaikkup piranthathaagaththaane eduththukkanum?//

ஹா ஹா ஹா
ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்ற வரியில் சூட்சுமம் அதிகம்! = ஒருத்திக்கு மகனாய்ப் பிறந்து/ஒருத்தியின் மகனாய்ப் பிறந்து-ன்னு சொல்லலை பாருங்க!

ஒருத்தி மகனாய்ப் பிறந்தான்!
ஒருத்தி மகனாய் வளர்ந்தான்!

அன்னை இன்றி வளர முடியும்! ஆனால் அன்னை இன்றிப் பிறக்க முடியுமா? = மானிடர்களாகிய நாம்!

அன்னை இன்றிப் பிறக்கவும் முடியும், அன்னை இன்றி வளரவும் முடியும்! ஆனால் அன்னையின் வளர்ப்பிலே ஆட்படுத்திக் கொள்கிறான் = இறைவன்!

//pointaa kettu unnudan ondikku ondi sandai poda devaki,kosalai innum matra avathaarangalin annaiyargal
varinthu kattindu unnainokki
vanthindirukkaannu//

வாவ்! தேவகி, யசோதை எல்லாம் என்னை நோக்கி வர என்ன புண்ணியம் செய்தேனோ? ஒரு அம்மாவிடம் வெண்ணைய் வாங்கி உண்ணலாம்! இன்னொரு அம்மாவைப் பாட்டு பாடச் சொல்லி மடியில் தூங்கலாம்! தாய் மடியில் கன்றினைப் போல்...கேஆரெஸ்-உம் தூங்குகின்றான் தாலேலோ! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//,'avanukku yonippirappu illai'
enbathai ariven//

ஆகா! யோனிப் பிறப்பு என்பதில் தாழ்ச்சியே இல்லை! அவதாரங்கள் நம் பொருட்டு இப்படியெல்லாம் இறங்கி வர வெட்கப்படுவதும் இல்லை! நான் சும்மா உங்க கிட்ட விளையாடினேன்! Poetic License தான்! :))

//athanaal ippo 'ambel' solli jagaa vaangikkiren//

ராதா, நோட் திஸ் பாயிண்ட்! :)

In Love With Krishna said...

@KRS: u still didnt answer my comment.
Lyrics-ai unmayile kulappi irukeenga!
Pattu kettukitte read panni paarunga!

In Love With Krishna said...

@Lalitha Mittal @KRS:
//யோனிப் பிறப்பு//
Appadinna??

In Love With Krishna said...

//கண்ணனுக்கே பாக்கியம் இல்லையாம்! //
:))
//PSP didn't have the privilege of having my darshan yesterday.//
:)))
Yes, and u didnt have the privilege of His great kesari!
mmmmm....
i almost forgot i didnt get to see PSP when i was tasting the kesari :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//@KRS: u still didnt answer my comment//

ஹா ஹா ஹா
பாடல் வரிகளை இப்போ பாருங்க!
ரெண்டு பத்தியும் மாறி இருக்கு-ன்னு தெளீவாச் சொல்ல மாட்டீங்களா?

//Yes, and u didnt have the privilege of His great kesari//

சூப்பர்!
PSP-க்கு ராதா பாக்கியம் இல்ல! அது ஒன்னும் பெரிய நஷ்டமில்லை!
ஆனா ராதாவுக்கு கேசரி பாக்கியம் இல்லாமப் போயிருச்சே! ஐயகோ! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//#யோனிப் பிறப்பு//

யோனி = பிறப்பு உறுப்பு

அதை ஏதோ Allergetic/தாழ்ச்சி/போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதால் - யோனிப் பிறப்பு என்பது இறைவனுக்குக் கிடையாது! இறைவன் பிறக்க மாட்டான், "தோன்றுவான்" என்றெல்லாம் ஒரு சிலர் விளக்கம் அளிப்பார்கள்!

என் முருகப் பெருமானை இப்படித் தான் சொல்லுவார்கள், முருகனே அப்படி நினைக்காவிட்டாலும் கூட!

ஆனால் இதையெல்லாம் உடைக்கத் தானோ என்னவோ.....கண்ணன் கர்ப்பத்திலேயே வந்து தங்கினான்! இறைவன் நம் பொருட்டு, தன் நிலையில் இருந்து "இறங்கியும்" வருவான்! - இதைப் புரிந்து கொண்டால், இப்படியான மனப்பான்மை தோன்றாது!

In Love With Krishna said...

@KRS:
//தாய் மடியில் கன்றினைப் போல்...கேஆரெஸ்-உம் தூங்குகின்றான் தாலேலோ! :)//
:))
Neenga office chair-il saayndhu kondu type adipadhaal ithanai feelings-aa??

In Love With Krishna said...

@KRS:
////#யோனிப் பிறப்பு////
thanks :))

In Love With Krishna said...

//அன்னை இன்றிப் பிறந்தாயே//
aanalum, enakku innum indha line clear illai.
Annai indri pirakkavendum endraal, namma Narasimhar-ai pol thoonil irundho, thurimbil irundho, "Paramatma" vaaga vandhirupaaru!

Aanal, idhu namma PSP!
Pirandhu, Valarndhu, Meesai Valarthu, hmmm....

"Innoru janmam endraal, En kulandhaikku kulandhaiyagavendum-nnu solluvaanga (edho oru film dialogue idhu)
Andha madhiri dhaan Perumal-um.
Avarukku thaay paasam vendum.
That too, (thaay paasam) the whole square.
Evallavu naal "thaayum naane, thandhaiyum naane"? Romba bore adichu poi dhaan Ramar, Krishna-nnu avatarathil ellam "Mummy's boy" :)
Avar sandosham, adhai en "annai indri pirandhaaye"-nnu kedukkanum?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//
//அன்னை இன்றிப் பிறந்தாயே//
aanalum, enakku innum indha line clear illai//

As I said, itz just poetic license!
அன்னை இன்றிப் பிறந்தாயே = அன்னை இன்றி "கோகுலத்தில்" பிறந்தாயே!
இது என்ன ஆழ்வார் பாசுரமா? கவிஞர் வைரமுத்து-க்கு எல்லாம் இந்த ஆராய்ச்சியே போதும்! ஃப்ரீயா விடுங்க :))

Radha said...

@ரவி,
ராதா கொடுக்கற விளம்பரம் மீராவிற்கு. ஆனா நீங்க எனக்கு தர்ர விளம்பரத்த பார்த்தா ஏதோ நான் வாழ்த்து சொல்லாட்டி கண்ணன் அவங்களை அம்போன்னு விட்டுடுவான் ரேஞ்சுக்கு இருக்கு. :-)
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. :-)
எனக்கு பாலுவையும் தெரியாது. ராஜாவையும் தெரியாது.
கண்ணன் பாடல் பதிவு செஞ்சதுக்கு உங்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள் !! :-)

Sankar said...

@KRS: நான் பின்னூட்டம் எதையும் முழுசா படிக்கலை. இருந்தாலும், வைரமுத்து Sir, க்கு இந்த ஆராய்ச்சி போதும்னு சொல்லிருங்களே.. என் மனச அது கொஞ்சம் நெருடுது. எங்க அவரும் ஒரு படைப்பாளி இல்லையா.. அவர் எழுத ஆரம்பிச்ச காலத்துல சினிமா இல்லனா, அவரும் இறைவன பத்தி மட்டும்தான் எழுதிருப்பாரு. அதனால உங்க பார்வைய மறு பரிசீலன செய்யுங்க.. :)

நாங்களும் விவகாரமா பின்னூட்டம் கொடுப்போம் .. :P

Radha said...

********
//PSP didn't have the privilege of having my darshan yesterday.//
:)))
********
@KK,
எனக்கு தரிசனம் கிடைக்கலென்னு அவ்ளோ சந்தோஷமா ! என்ன ஒரு வில்லத்தனம் ! i shall be compensating for it by having multiple darshans tomorrow and during the weekend. and now here is a wish:
may you be blessed with more and more exams !! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//@ரவி,
ராதா கொடுக்கற விளம்பரம் மீராவிற்கு//

அதைக் கண்ணன் பாட்டிலேயே கொடுக்கலாமே? மீண்டும் மீண்டும் கொடுக்கலாமே! அது என்ன ராம்பிளிங்ஸ் ஆஃப் ராதா? :))

//ஏதோ நான் வாழ்த்து சொல்லாட்டி கண்ணன் அவங்களை அம்போன்னு விட்டுடுவான் ரேஞ்சுக்கு இருக்கு. :-)//

சேச்சே! கண்ணன் யாரையும் விடுவதில்லை! விட்டா விருது கிடைச்சிருக்கு! ஆனா, ஒரு சுப காரியத்தில் வாழ்த்துதல் முறை! அதைத் தான் சொன்னேன்!

//எனக்கு பாலுவையும் தெரியாது. ராஜாவையும் தெரியாது//

ஆமா...எனக்கு மட்டும் ரொம்ப தெரியும்! அவிங்க வீட்ல தான் நைட் டின்னர் வித் கேசரி சாப்பிடப் போறேன் பாரு! :) வாழ்த்து ராதா, வாழ்த்து! கிரிதாரியின் தோட்டத்தில் பாடும் பாலுவை வாழ்த்து :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Sankar said...
இருந்தாலும், வைரமுத்து Sir, க்கு இந்த ஆராய்ச்சி போதும்னு சொல்லிருங்களே.. என் மனச அது கொஞ்சம் நெருடுது//

:)
ஆராய்ச்சி தேவையே இல்லை-ன்னு சொல்லை! போதும்-ன்னு தான் சொன்னேன்!
ஆராய்ஞ்சது போதும், அனுபவிங்க-ன்னு தான் அவரே சொல்லுவாரு! :)

//எங்க அவரும் ஒரு படைப்பாளி இல்லையா..//

படைப்பாளி மட்டுமா? பேரரசர் அல்லவா!
ஆனா, "ஆழ்ந்த" பாசுரம் இல்லையே! அதான் அதிக ஆராய்ச்சி தேவை இல்லை என்று சொன்னேன்!

சங்கத் தமிழ் ஆய்வு மையம் என்று சொன்னால், அப்போ வைரமுத்து தமிழ் ஆய்வு மையம் என்று ஏன் துவங்கலை-ன்னு வைரமுத்துவே கேக்க மாட்டாரு! வம்பிழுக்க, சங்கர் முத்துக்கள் தான் இப்படியெல்லாம் கேப்பாய்ங்க! :)

//அதனால உங்க பார்வைய மறு பரிசீலன செய்யுங்க.. :)//

பரிசீலனை எல்லாம் ஆடிட்டருங்க செய்வாங்க! நாங்க பாட்டை அனுபவிக்க மட்டும் தான் செய்வோம்! :)

//நாங்களும் விவகாரமா பின்னூட்டம் கொடுப்போம் .. :P//

இதெல்லாம் வெவகாரமா? வெங்காயக் காரம் கூட இல்லை! :) எலே, நாங்கல்லாம் எம்புட்டு வெவகாரம் பார்த்து இருக்கோம்-ல்லே! :)

Radha said...

//அதைக் கண்ணன் பாட்டிலேயே கொடுக்கலாமே? மீண்டும் மீண்டும் கொடுக்கலாமே! அது என்ன ராம்பிளிங்ஸ் ஆஃப் ராதா? :))
//
இவ்ளோ சொல்லிட்ட பிறகு...இனிமே இது தான் அடுத்த பதிவு. :-)

Radha said...

கிரிதாரியின் தோட்டத்தில் பாடிய, பாடும், பாடவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாவ்!
இப்ப தான் Real Ramblings Of Radha - in Kannan's Garden named kaNNan paattu! :) அடுத்த பதிவைப் போடு ராதா! பிச்சித் தூக்கிடறோம்! உனக்கு மிஸ் ஆன கேசரியும் பார்சல் பண்ணிடறோம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு வழியா, வாழ்த்து சொன்ன ராதாவுக்கு வாழ்த்துக்கள்! :)

Sankar said...

I agree with watever you say now.. But, your previous comments sounded in a mild different tone. The colour of the word is bit subtle, that demanded clarification..

Btw.. I also believe in enjoying poems rather scrutinizing. Auditors also do have feels.. lolz.. :P :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//I agree with watever you say now..//

அப்படி வாங்க வழிக்கு! :))
cha cha, You can pin point any errors any time!
To err is divine, to forgive humane! :)

//But, your previous comments sounded in a mild different tone. The colour of the word is bit subtle, that demanded clarification//

பதிவுலகில்...
வாலி = கலைஞரின் கூலி
வைரமுத்து = திருவாரூர் ஒத்து
இப்படியெல்லாம் நண்பர்களே எழுதுவாங்க! பாலாழி பாய்ந்த பாதகன் கண்ணன்-ன்னு எல்லாம் பேசுவாங்க! அவிங்கள எல்லாம் யாரும் கேட்பதில்லை! விட்டுருவாங்க! (குமரன் உட்பட)!

ஆனா ஒத்தைச் சொல்லுக்கு என்னைய மட்டும் கரெக்ட்டா புடிச்சிப்பாங்க! முருகா! ஏன்-டா இப்பிடி? :))

rskumar said...

'தங்க குடை கொடுத்தவனே' அல்ல 'தங்கைக்குடை (தங்கைக்கு உடை) கொடுத்தவனே' என்றிருக்க வேண்டும் என நினைக்கிறஏன்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP