கண்ணா என் கையைத் தொடாதே!
இன்னிக்கி ஒரு டமாஷான கண்ணன் பாட்டைக் கேட்போமா? பதிவர் ராதாவின் நேயர் விருப்பம்! :)
அப்படி என்ன டமாஷா?
கண்ணா என் கையைத் தொடாதே-வாம்!
அப்படின்னா, கண்ணா என் கையைத் தொடாதே, இதழைத் தொடு-ன்னு அர்த்தம்! :))
இதோ கேட்டுக்கிட்டே படிங்க! சுசீலாம்மாவின் வித்தியாசமான-கீச்கீச் குரலில்
நீல வண்ணக் கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே - மோகனக்
கண்ணா என் கையைத் தொடாதே!
தன்னந் தனியான என்னைத்
துன்புறுத்தல் ஆகுமோ?
நான் உனக்குச் சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ?
கண்ணைக் கண்ணைக் காட்டி என்னை
வம்பு செய்யல் ஆகுமோ?
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன் - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)
மல்லி என் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்!
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்!
கள்ளனே உன்னை எல்லோரும்,
பொல்ல பிள்ளை என்று சொல்லி - கண்டபடி பேசுவார்!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)
படம்: மல்லிகா
குரல்: பி.சுசீலா
வரிகள்: ஏ.மருதகாசி
இசை: டி.ஆர்.பாப்பா
ஹே, பொற்க்கீ! கண்ணா, என் கையைத் தொடாதே! :)
14 comments :
அருமையான பாடலுக்கு நன்றி.
மிகவும் பிடித்தப் பாட்டு.
ராதைக்கு நன்றி.
ரவிக்கும் நன்றி.
'antha naal gnaabagam vanthathe...
nanbane'! ethellaam venumbola irukko athaiyellaam vendaathathu
polakkoorum subtle guesture maruthakaasiyin varigalil nallaayirukku!
good one
பிடிச்சபாட்டு ஆனா கண்ணா என் கையைத்தொடாதே என்பதற்கு கேஆர் எஸ் தான் இப்படி மாத்தி சிந்திக்கமுடியும் மகா குறும்பு:)
//ஷைலஜா said...
பிடிச்சபாட்டு ஆனா கண்ணா என் கையைத்தொடாதே என்பதற்கு கேஆர் எஸ் தான் இப்படி மாத்தி சிந்திக்கமுடியும் மகா குறும்பு:)//
அக்கா! என்னை எதுக்கு வையறீங்க? நான் மாத்தியெல்லாம் சிந்திக்கலை! என் தோழன் இராகவனைப் போல் தான் சிந்திக்கறேன்! கடைசி வரியைப் பாருங்க!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே
- இப்படிச் சொல்லிட்டு, அப்பறமா கண்ணா என் கையைத் தொடாதே-ன்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்? நான் சொன்ன அர்த்தம் தானே? :))
@KRS: Nice post:))
indha post read panna vandhappo nalla "headache" enakku! :)
adhaiyum minji "smile" panna vechuteenga! :)
//இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!//
:))
நல்ல பாடல். நன்றி. :-)
@KRS: "Kanna ennai thodathe" title of song.
"Kannan-ai thottu, avan mel sayndhu irukkum gopi"-photo.
:))
மெட்டுக்கு எழுதுன பாட்டோ?
@குமரன்
எப்படி கரெக்ட்டா கண்டுபுடிச்சீங்க? :)
இதெல்லாம் மருதகாசி டெக்னீக்! :)
// @KRS: "Kanna ennai thodathe" title of song.
"Kannan-ai thottu, avan mel sayndhu irukkum gopi"-photo//
என்ன KK, லூசா நீ? :)
கண்ணா என் கையைத் தொடாதே-ன்னு தானே சொல்றேன்!
கண்ணா உன்னைத் தொட மாட்டேன்-ன்னு சொல்லலையே! :)
பாட்டுலு, செகண்ட் டைமு சூடண்டி! அர்த்தம் ஆயிந்தி காதா? :)
//Radha said...
நல்ல பாடல். நன்றி. :-)//
நல்ல பின்னூட்டம்! நன்றி! :)
//@KRS: Nice post:))
indha post read panna vandhappo nalla "headache" enakku! :)
adhaiyum minji "smile" panna vechuteenga! :)//
ஹா ஹா ஹா
Headache became Heartache-ஆ? :)
//இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!//
நீங்க சிரிப்பீங்க-ன்னு தெரிஞ்சி தான் அதை Bold பண்ணேன்! :)
நன்றி சமுத்ரா
நன்றி கோமதி-ம்மா
நன்றி லலிதா-ம்மா! கரெக்டா சொன்னீங்க! எதெல்லாம் வேணும் போல் இருக்கோ அதெல்லாம் வேணாம் வேணாம்-ன்னு சிணுங்குவது தான் காதல்! :)
அப்படிச் சிணுங்கும் போது, வேணாமா, சரி-ன்னு நகர்ந்தால் தெரியும், வேணுமா வேணாமா-ன்னு! :))