தைப்பூசம்: முருகனும் பெருமாளும் என்னை வளைத்துக் கொண்டே...
இன்று தைப்பூசம்!(Jan-20-2011)! அதற்குத் தோதான பாட்டைப் பார்க்கலாமா?
தைப்பூசம் என்பது, திருமுருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் என்று சொல்லுவார்கள்!
என் முருகன் ஒய்யாரமாய் நிற்கும் பழனி மலையில், குன்றமெல்லாம் கொண்டாட்டம்! அலங்காரங்கள் மணக்கும்!
எது அலங்காரம்? = அகங்காரம் அழிப்பது எதுவோ, அது அலங்காரம்!
* நமக்கு மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணினால் = அகங்காரம்
* அதை முருகனுக்குச் சூட்டும் போது, அதே மனம், அதைக் கண்டு பொறாமை கொள்ளாமல், கண்டு களிக்கிறது அல்லவா! = அலங்காரம்!
அருணகிரி, முருகனுக்குச் செய்யும் அலங்காரம் = கந்தர் அலங்காரம்!
அதில் ஒரு பாடல், மிகவும் பிரபலம்!
கடைசி வரைக்கும் துணை வருவது வடிவேலும் மயிலும்-ன்னு வரும் பாடல்!
அதே போல் கண்ணனுக்கும் ஒரு பாட்டு இருக்கு, தெரியுமா? பலரும் அறியாத பாட்டு!
என் பிறந்த வீட்டுப் பாட்டையும், புகுந்த வீட்டுப் பாட்டையும், இன்னிக்கு தைப்பூசம் அதுவுமாய், கண்ணன் பாட்டில் ஒரு சேரப் பார்க்கலாமா? வாரீங்களா?
புகுந்த வீடு:
விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் - பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும், செங்கோடன் மயூரமுமே!
- கந்தர் அலங்காரம்
பிறந்த வீடு:
நாளும், பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும்,
தோளும், தொடர்ந்து எனையாளும் விழியும், துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு-ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே, தமியேனை வளைந்து கொண்டே!
- திருவரங்கத் திருவந்தாதி
34 comments :
arpudham.nanri.
iruvarukkum eththanai otrumai?maamanaar kothandapaani;maappillai dhandapaani!maaman petrathaayidam valaraamal yasothayidam valarnthaan.marugano kaarththigaippengalidam valarnthan.maaman rendu pendaattikkaaran[baamaa,rukmani];maappillaikum rendu!ippadi evvalavo?..aanaalum maappillaiyidame kalavaadiya muthal maaman kannanthaan!mayil iragaich chollaren!'[en bloggil
november maathap paattukkal ellaame ,almost,ungal pugunthaveettuppaattu thaan!pl go through on this thai ppoosam!
anaalum maappillaiyidame kalavaadiya muthal maaman kannanthaan:))
aamaam aamaam . athumaattumaa kannan oru onnaa number tirudan. nammaiyum tirudi paakettula pottukittu sarvamum naanthaan enru solraanunga enna pannalaam:))
ellarum tanglish la type panreenga. athaan naanum .
Thanks for the posting :)Azhaga vandhurukku :)
I take this opportunity to dedicate one of my poem written on Murugan. :) This poem is written, by got inspired on Lalgudi sir's Sivaranjani raga thillana. Thillanas basically give very little space for lyrical beauty.
I have heard (as a violin performance)this thillana in AIR, and started subtituting, words for the Jathis. The notes were actually arrayed in way that it expresses the mood of indignation. Surprisingly, I wrote this poem on murugan (which i don't usually). After few months, I came to know that, Lalgudi sir also composed this thillana, in praise of Lord Murugan only. It left me with so much of awe and happy. I would sincerely recommend you all to hear the thillana at least once. It can even melt a stubborn heart. Such is the value of ragam and the composer. Hats off to Lalgudi sir.
Pallavi:
கடைக்கண் காண காலம் இன்னும் கனியவும்
வேண்டுமா? குமரா..!
Anupallavi:
மாலைப் பொழுதினில் - வான்
நீல மயிலின் மிசை - பூக்
கோல குறமகளை
காதலிக்கும் கருணை .. (கடைக்கண்..)
Charanam:
குன்று தோறும் கோயில் கொண்டாள்பவனே
என்னையிங்கு ஆள மறந்தனையோ!
கடும் வெயிலிலும் உறை பணியிலும்
உனை காண ஏங்கித் தவிக்கின்றேன்!
துணையிங்கு நீயே ! துயர் தனை துடைப்பாயே ! (கருணை கடைக்கண்..)
அருமை. நன்றி கண்ணா.
சங்கர், உங்க கவிதையெல்லாம் சூப்பர். பகிர்தலுக்கு நன்றி.
தைப்பூசம் என்றால் அண்மைக்காலமாக வள்ளலார் நினைவு தான் வருகிறது. எனது நண்பர் கிருஷ்ணபிரேம் வள்ளலாரைப் பற்றி பேசும் போதெல்லாம் தைப்பூசம் பற்றி பேசுவதாலோ என்னவோ?! இங்கே பழனியில் நடக்கும் கொண்டாட்டத்தைப் படித்தவுடன் சிறு வயதில் அப்பா அம்மா தம்பியுடன் பழனியின் தைப்பூசம் தேர்த்திருவிழா பார்த்தது நினைவிற்கு வந்தது. தைப்பூசம் தான் மதுரையில் வண்டியூர் தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத் திருவிழாவும் என்று நினைவு. ஒவ்வொன்றாக நினைவிற்கு வருகிறது. :-)
முதல் பாட்டு எளிமையாகவும் ரெண்டாவது பாட்டு கொஞ்சம் கடினமாகவும் இருப்பது போல் தோன்றுகிறது. விளக்கம் சொல்லியிருக்கலாமே!
சங்கர்.
இந்தப் பாடலை முருகனருள் பதிவில் போடுங்கள்.
@ kala BN
நன்றி!
@ லலிதா
ஆமாங்க! இருவரும் மாயோனும்-சேயோனும் பண்டைத் தமிழ் நிலக் கடவுள் அல்லவா! அதான் இயற்கையோடு இயைந்த ஒற்றுமை! :)
நீங்க சொன்ன ஒற்றுமைகளும் சூப்பர்!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் அறுவர் மகனாய் ஒளிர்ந்து வளரும் கார்த்திகேயனா? :)
மயிலிறகு களவாடிட்டானா? சேச்சே! இருக்காது! கோகுலத்தில் பசுக்களும் உண்டு! மயிலும் உண்டு! அவை கொடுத்த தோகையா இருக்கும்! :)
@ ராஜேஷ்
//aamaam aamaam . athumaattumaa kannan oru onnaa number tirudan. nammaiyum tirudi, paakettula pottukittu//
ஓ...கண்ணனுக்குப் பாக்கெட் வேற இருக்கா? :)
அவன் பாக்கெட்டில் இருந்து, எனக்குக் கொஞ்சம் பணம் எடுத்துத் தாங்க ராஜேஷ்! அதிகமில்லை! சிறுத்தை படம் டிக்கெட் வாங்குற அளவுக்குப் பணம் எடுத்துக் கொடுத்தா போதும், இப்போத்திக்கு! :)
//ellarum tanglish la type panreenga. athaan naanum//
என்ன கொடுமை இது!
இனி கண்ணன் பாட்டில் யாரும் (KK தவிர) இப்படி தங்க்லீஷில் டைப் அடிக்கக் கூடாது-ன்னு உத்தரவு போட்டுறலாமா? :)
@ சங்கர்
//I take this opportunity to dedicate one of my poem written on Murugan. :)//
மிக்க நன்றி! நல்லா வந்திருக்கு! அதுவும் சிவரஞ்சனியிலா? சூப்பர்!
//நீல மயிலின் மிசை - பூக்
கோல குறமகளை
காதலிக்கும் கருணை//
ரொம்ப பிடிச்சி இருக்கு! :)
//Thillanas basically give very little space for lyrical beauty.//
தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா? - அந்தத் தில்லானாவையாச் சொல்றீக? :)
ஹிஹி! சும்மாச் சொன்னேன்! லால்குடியின் தில்லானாக்கள், அவர் நுணுக்கத்தை அப்படியே வெளிப்படுத்தும்! அவர் மாண்ட் ராகத் தில்லானா, எனக்கு ரொம்ப ஜாலியாப் பிடிக்கும்! :)
@சங்கர்
//Surprisingly, I wrote this poem on murugan (which i don't usually).//
அடிங்க! :)
இனி உன் கிட்ட மெட்டு கொடுத்து, முருகன் பாட்டை எழுதிக் கொடுக்கச் சொல்லணும்! :)
இந்தப் பாட்டினை முருகனருள் வலைப்பூவில் இட்டு, சுட்டி தருகிறேன்!
//கடும் வெயிலிலும் உறை பணியிலும்//
உங்க ஆபீஸ் வேலை அவ்ளோ உறைப்பா இருக்கா என்ன? :)
= உறை பனி!
//என்னையிங்கு ஆள மறந்தனையோ!
உனை காண ஏங்கித் தவிக்கின்றேன்!//
உம்ம்ம்ம்ம்...முருகா!
என்னை மறந்தாலும், என்னை ஆள மறக்காதே!
எனை ஆள ஆள, உன் ஆளுமை தான் கூடும்! :)
@கவிக்கா
குமரன் பொருள் கேக்குறாரு-க்கா! நீங்க ஹெல்ப் சேசண்டி ப்ளீஸ்! :)
தைப்பூசம் = வள்ளலார் ஜோதி
அது நினைவுக்கு வருதல், மிகச் சிறந்ததே!
தைப்பூசம் எப்படி வள்ளலாரோடு தொடர்பாச்சு-ன்னு சொல்லுங்க குமரன்!
//முதல் பாட்டு எளிமையாகவும் ரெண்டாவது பாட்டு கொஞ்சம் கடினமாகவும் இருப்பது போல் தோன்றுகிறது//
ஹா ஹா ஹா
அருணகிரியின் கொஞ்சமே எளிமையான பாடல்களுள் இதுவும் ஒன்னு!
மத்த அருணகிருப் பாட்டும் ஈசி தான்! ஆனா சந்தத்துக்காக, சீர் பிரிக்காம இருக்கும் போது, பலரையும் பயமுறுத்தும்! ஆனா என்னை அல்ல! :)
ரெண்டாம் பாட்டு, பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுதியது! அவரு ஈசியாத் தான் எழுதுவாரு! ஆனா, இந்தப் பாட்டு கொஞ்சம் நிறைச்சலா இருக்கு!
//விளக்கம் சொல்லியிருக்கலாமே!//
அதானே! குமரன் விளக்கம் சொல்லி இருக்கலாமே! :)
innum oru chinna[?] otrumai!arangan oru perumal[perum+aal] enraal,muruganaiyum arunagiri
thiruppugazhil 'perumaale!' enru thaan azhaikkiraar! sir enakku computer vishayaththil 'gnaana sooniyam' enra title kidaiththiruppathaal ennai mattum thamingilaththileye comment panna exemption koduththudungo .thamizhil panna enakku rommmmmba time aarathu! sr.citizenkku intha concession koodak kidaiyaathaa?
KRS .. I suggest one new Rules in kannansongs. its just my opinion.
1. பாசுரங்களுக்கு சிறு விளக்கம் சொல்லிடீங்கன்னா புதுசா வரவங்களுக்கு சுலபமா இருக்கும்.
அதனால் இனி கண்ணன் பாட்டில் பாசுரம் போட்டால் விளக்கம் கொடுக்கணும் (But comment-il பாசுரம் போட்டால் விளக்கம் தேவையில்லை)
2. கண்ணன் குழுவில் இருப்பவர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணன் பற்றி பதிவு போட வேண்டும் . இல்லையென்றால் பாரபட்சம் இல்லாமல் அவர்களின் பெயர் நீக்கப்படும். (குமரன் உள்பட)
3. பின்நூததில் முடிந்தவரை தமிழில் செய்ய வேண்டும் . படிப்பவர்கள் சிரமபடாமல் படிப்பார்கள். (or english)
@KRS: //கடும் வெயிலிலும் உறை பணியிலும்//
உங்க ஆபீஸ் வேலை அவ்ளோ உறைப்பா இருக்கா என்ன? :)
= உறை பனி!
He he.. Sorry everyone. Spelling mistake is regretted.
@Kavinaya akka: Thanks a lot akka :)
@Kumaran sir: Thanks sir. :) KRS, said he ll post it in the murugan arul blog. :)
waiting for it eagerly. :)
Neenga naraya yezhudha matengringannu complaints a irukke.. !! Gavanikka koodadha?
@சங்கர்,
உங்க ஊர் பெருமாள் பத்தி இங்கு குமரன் ஒரு தொடர் ஆரம்பித்து இருக்கார்.ஆர்வம் உள்ளோர் அனைவரும் சென்று படித்து உருக, களிப்புறுக - http://koodal1.blogspot.com/
இருபது வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், பள்ளி சிறுவர் சிறுமியர், மற்றும் தங்களை வயதானவர்களாக எண்ணிக் கொள்பவர்கள் மட்டுமே தாங்கிலத்தில் பின்னூட்டம் இடலாம். ஏனையோர் தாங்கிலம் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. :-)
சங்கர்,
உங்கள் கவிதை மிக அருமை.
//கண்ணன் குழுவில் இருப்பவர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணன் பற்றி பதிவு போட வேண்டும் . இல்லையென்றால் பாரபட்சம் இல்லாமல் அவர்களின் பெயர் நீக்கப்படும். (குமரன் உள்பட)
//
ராஜேஷ்,
இதெல்லாம் ரொம்ப ஆபத்தான சட்டம். நாளைக்கு என் மேல பாயும். அதனாலே இது அமுலுக்கு வர முடியாது. :-)
yeno raadhaa, intha poraamai ?
yaar thaan kannanaal mayangaathavaro?.....raadhe unakkuk kobam aagaathadi!...
inthath thallatha vayathil[61]
ennaith thalli vaikkappaarkkaathe!
thamingilam enathu pirappurimai!
exemtionukku ethaavathu form roppanumnaa anuppi vai.apply pannidaren!
லலிதாம்மா,
நீங்க உங்க இஷ்டப்படி பின்னூட்டம் இடலாம். அந்தப் பொருளில் முன்னர் எழுதி இருந்த பின்னூட்டம் இருக்கிறதாக நினைக்கிறேன். :-)
நன்றி ராதா.. ya .. படிச்சேன். படிச்சுட்டே இருக்கனும் போல இருக்கு. அவன் மட்டுமல்ல, அவனை பற்றியவைகளும் ஆரா அமுதம்தான்...
@All: tanglish-kku enakku vidhivilakku kudutha ellorkkum oru thanks :)
i am a bit busy, so not able to comment as often.
But, i have one doubt: how many songs did Aandal write in total?
Pls. yaaravudhu reply pannunga :)
//இருபது வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், பள்ளி சிறுவர் சிறுமியர் மற்றும் தங்களை வயதானவர்களாக எண்ணிக் கொள்பவர்கள் மட்டுமே தாங்கிலத்தில் பின்னூட்டம் இடலாம். ஏனையோர் தாங்கிலம் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. //
hee hee...
Radha, unga blog udaya title pic-la oru 17 year old azhagan irukkane, avanukkum vidhivilakku dhaane!? :))))
But, i almost forgot (hee hee), avan dhaan thalaivan aache!
Ellorum thalaivar-ai follow pannunga!
Thalaivar udaya followers ellorkkum..........
Thalaivar-agiya Radhamohan-kku Mr.Radhamohan kudutha exemption sellum :)))
Correct dhaane? :))
kannan pattu writers-kku oru request:
"thai friday" is quite famous in my kuladeivam temple: Irettai thirupathi..
Yaaravudhu nxt thai friday oru post podungalen pleez?
ஆண்டாள் பாடியவை:
திருப்பாவை = 30
நாச்சியார் திருமொழி = 143
திருப்பாவை ருக்மிணி பாவத்தில் பாடியது என்றும் நாச்சியார் திருமொழி சத்தியபாமா பாவத்தில் பாடியது என்றும் பெரியோர் சொல்வர்.
//Radha, unga blog udaya title pic-la oru 17 year old azhagan irukkane, avanukkum vidhivilakku dhaane!? :))))
//
கிரிதாரியே வந்து பின்னூட்டம் போடறான்னா எந்த மொழியானால் என்ன? :-) btw, we should cut the 1. He was only 7 when He lifted the Govardhana Hill. :-)
//Yaaravudhu nxt thai friday oru post podungalen //
தென் திருப்பேர் தானே? சரி. வெள்ளிக்கிழமை ஒரு பாசுரம் பதிவு செய்யலாம். :-)
அறம் பொருள் இன்பம் மூன்றும்
அறிவுடன் கடந்த அவன்
வீடு நோக்கிச் செல்வானாயின்
பிறந்த வீடும் புகுந்த வீடும்
வெவ்வேறாய் ஆகிவிடுமோ ?
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspsot.com
//தென் திருப்பேர் தானே? சரி. வெள்ளிக்கிழமை ஒரு பாசுரம் பதிவு செய்யலாம். ://
thenthiruperai vendam-nnu sollalai...
But, i said irettai thirupathi :)
it is also in Nava Tirupati.
Devarpiran (thambi)
Aravinda Lochanar with Karundhadangkanni thaayar and Thollaivillimangala Thaayar
@Radha:
//நாச்சியார் திருமொழி = 143//
yes, i had a doubt 243 or 143.
Aandal-e Tanglish use panni irukaanga.
Tamil pattu ezhudhi, English-la oru msg anuppirukaanga Kannan-kku...
Before people think i am mad for saying Aandal left a msg in English, i must tell them "143" is a codeword for....
143, PSP! (This is me)
143, PSP! (Aandal already said it, long before...)
what is 143??????
i love you:))))))
விழிக்குத் துணை விரிகடல் பாரளந்த பாதங்கள்; மெய்மை குன்றா
மொழிக்குத் துணை நாரணா என்னும் நாமங்கள்; முன்பு செய்த
பழிக்குத் துணை அடியார் பாடுமப் பல்லாண்டு; பயந்த தனி
வழிக்குத் துணை எம்பெருமான் வரிசங்கும் சக்கரமுமே!
@குமரன் - இந்தப் பாட்டு ஈசியா இருக்கா? :)
அருமை அனைத்துமே!