Monday, January 31, 2011

#tnfisherman #தமிழ் மீனவர்கள் (AVM & பி.சுசீலா!)

கண்ணன் பாட்டு அன்பர்களே,
தமிழக மீனவர்களின் உயிர் காக்கும் முயற்சியாக, நிரந்தரத் தீர்வுக்கு, உங்கள் குரலையும் இங்கே கொடுங்கள்! மிகப் பெரும் இணைய முயற்சி ஒன்று நடந்து கொண்டிருக்கு - எட்டிப் பாருங்கள்!

எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போடுங்கள், உங்கள் கையெழுத்தை! கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!



இன்றைய கண்ணன் பாட்டுப் பாடல், மிக மிக சூப்பர் ஹிட் சுசீலாம்மா பாடல்!
அன்பே வா என்ற சூப்பர் ஹிட் படம் எடுத்த கையோடு,
ஏ.வி.எம் நிறுவனத்தார் எடுத்த அடுத்த வண்ணப் படம் = ஆன்மீகப் படம்! :)

ஐயோ! பலரும் வேண்டாம் என்றார்கள்! சூப்பர் ஹிட் எம்.ஜி.ஆர் படத்துக்குப் பிறகு, ஒரு ஆன்மீகப் படமா? ஃப்ளாப் ஆகி விடும் என்று பயமுறுத்தினார்கள்!
ஆனால் ஏவிஎம் எடுத்துக் காட்டினார்! தந்திரக் காட்சிகள் சூப்பர் ஹிட்! பி.சுசீலா பாடல் = நாராயண மந்திரம்....ஒலிக்காத பட்டி தொட்டியே இல்லை!
குழந்தைப் பிரகலாதனாக நடித்த குழந்தையை அனைவருக்கும் பிடித்துப் போனது!


பக்த பிரகலாதா = தெலுங்கு, தமிழ், இந்தி என்ற மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுத்தனர்!
தந்திரக் காட்சிகள் ஏ.வி.எம் புகழுக்கு எடுக்கப்பட்டன! தந்திரக் காட்சிப் புகழ் பாபுபாய் மிஸ்திரியின் உதவியாளர் ரவிகாந்த் எடுத்தார்!

இரணியன் = எஸ்.வி. ரங்காராவ்
அவன் மனைவி கயாது = அஞ்சலி தேவி
சிறுவன் பிரகலாதன் = பேபி ரோஜா ரமணி
நாரதர் = பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா

தெலுங்கு டப்பிங் என்பது தெரியாமல் இருப்பதற்காக, தமிழில் தனி நகைச்சுவை Track!
டி.எஸ்.பாலையா & ஏ.கருணாநிதி = இவர்களே பிரகலாதனின் ஆசிரியர்கள்!
ஓம் இரணியாய நம என்று சொல்லிக் கொடுத்து, கடைசியில் அவர்களே ஓம் நாராயணாய நம என்பதற்கு மாறி விடுவார்கள்! Class Room நகைச்சுவை சூப்பரா இருக்கும்! :)



அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள் என்ற மகா வாக்கியம்! வேதம்!
இதைத் தானே இரணியனும் சொன்னான்?
ஓம் இரணியாய நமஹ! நானே கடவுள்! :)
அப்போ அவன் தான் முதன்முதல் அத்வைத குருவா? :)

* அஹம் பிரம்ம ஆஸ்மி = நான் கடவுளாய் "இருக்கிறேன்"!
நானே கடவுள் அல்ல! நான் கடவுளின் வெளிப்படு பொருளாய் (வடிவமாய், உடம்பாய்) இருக்கிறேன்!
* தத் தவம் அஸி = அது நானாக இருக்கிறது!
கடவுள் நானாக என்னுள் இருக்கிறார்! இது தான் இவ் வேத வாக்கியங்களுக்குப் பொருள்! அதனால்....நான் தான் கடவுள்-ன்னு "ஞானத்தில்" ஓவராத் துள்ள வேண்டாம்! :)

நான் தான் "அதுவா"?
"அது" பண்ணுற வேலையை எல்லாம் என்னால் பண்ண முடியுமா? என்னைக் காப்பாத்திக்கவே எனக்கு வக்கில்லை! அப்பறம் எப்படி நான் மொத்த உலகத்தைக் காப்பாத்துவேன்? :)
மொதல்ல எனக்கு "கருணை"-ன்னு ஒன்னு வருமா? என்னை தாழ்த்திக் கொண்டாலும், அடியவர்களுக்காக இறங்கி வருகிறேன்-ன்னு சொல்லும் மனசு எனக்கு இருக்கா? அது வரட்டும்! அப்பறமா சொல்லிக்கலாம் "அஹம் பிரம்மாஸ்மி"-ன்னு! :)

ஓம் இரணியாய நம-ன்னு சொன்னான், ஊரையே சொல்ல வைத்தான் இரணியன்! -அதுவும் எட்டெழுத்து தான் பாருங்கள்!
ஓம்(1)+இரணியாய(5)+நம(2) = அஷ்டாட்சரம்! :)
அறிந்தோ அறியாமலோ அஷ்டாட்சரம் சொல்லி, குழந்தையின் அசைக்க முடியாத நம்பிக்கையால், உணரப் பெற்றான், அந்தப் பெற்றவன்! நாம பாட்டைப் பார்ப்போம் வாருங்கள்!

சுசீலாம்மாவின் அன்றைய சூப்பர் ஹிட் பாடல்! பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்! கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!



படம் : பக்த பிரகலாதா
குரல் : பி.சுசீலா
இசை: கேவி மகாதேவன்
வரி: கண்ணதாசன்

நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து....
பரமன் அருள் தரும் சாதனம்
...
(நாராயண மந்திரம்)

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)

ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)

நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா



எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போட்டு விட்டீர்களா, உங்கள் கையெழுத்தை? கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!

32 comments :

Radha said...

Ravi, I request you to post this in madhavipanthal also.

நாடி நாடி நரசிங்கா! said...

பக்த பிரகலாதன் திருவடிகளே சரணம்!
நரசிம்மர் திருவடிகளே சரணம்!
மீனவர்களுக்காக கையெழுத்து போட்டாச்சி . தகவலுக்கு நன்றி

நாடி நாடி நரசிங்கா! said...

நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்...
(நாராயண மந்திரம்)
நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்

என்னது இது! இந்த வரிகளுக்கே கண்ணதாசன் காலை புடிக்கலாம் :)

நாடி நாடி நரசிங்கா! said...

ஓம் இரணியாய நம என்று சொல்லிக் கொடுத்து, கடைசியில் அவர்களே ஓம் நாராயணாய நம என்பதற்கு மாறி விடுவார்கள்! Class Room நகைச்சுவை சூப்பரா இருக்கும்! :)


ஆமா ஆமா செம்ம காமெடியா இருக்கும் .:)))

அதே நேரத்துல எவ்வளவு விஷயம் படத்துல. எவ்ளோ கருத்துக்கள். ம்ம்ம் இப்பலா இந்த மாதிரி படம் எடுக்கா மாட்டேங்கறாங்க . ஒரே கும்மி ஜல்சா படமா போச்சி . வயசு பசங்க கெட்டு போறாங்க.

நாடி நாடி நரசிங்கா! said...

பக்த பிரகலாதன் படத்துல பிரகலாதன் பல இன்னல்களை சந்திக்கும் போதும் பெருமாள் வந்து காப்பாற்றுவார் . அதுல தொடர்ந்து ஒரு அழகான பாடல பாடுவான் அந்த பொடியன் .

என்ன பாடல் மறந்து போச்சே கொஞ்சம் சொல்லுங்க

நெருப்பு வரும்போது நெருப்பும் நாராயணா ! கடலில் தூக்கி எரியும் போது கடலும் நாராயண!

இந்த மாதிரி அர்த்தத்தில் வரும் என்ன பாடல் pl.tell me:)

நாடி நாடி நரசிங்கா! said...

என்னைக் காப்பாத்திக்கவே எனக்கு வக்கில்லை! அப்பறம் எப்படி நான் மொத்த உலகத்தைக் காப்பாத்துவேன்? :)

இந்த வரியை படித்தவுடன் ஒரு பாசுரம் ஞாபகம் வந்துச்சு

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே – சீரார்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.


பொருள்:_

யார் வேண்டுமானாலும் எதையாவது செய்து கொள்ளட்டும்; அகன்ற இப்பூமண்டலதை முழுவதையும் ஆராய்ந்து திருத்த நினைத்தால் அது நடக்குமோ? நானோவென்றால், சிறந்த எனது மனத்திலிருந்து கொடிய துன்பங்களை நித்யஸூரிகளின் தலைவனான கண்ணபிரானின் க்ருபையால் விடுவித்துக் கொண்டேன்:)

நாடி நாடி நரசிங்கா! said...

om namo narayana
nanri:)

நாடி நாடி நரசிங்கா! said...

நரசிம்மர் படம் அருமை:)

Radha said...

glory to bhaktha prahalada !!
glory to bhakthavatsala narasimha !!

In Love With Krishna said...

@Radha: where did ur post disappear? :))

@KRS:
//நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா//
:))
Superb!

In Love With Krishna said...

//ஓம் இரணியாய நமஹ! நானே கடவுள்! :)//
:))
@KRS:
Perfect timing for this post!
i have been thinking of something recently. i want ur views. :)
i was seeing scenes from "Baba" on tv, actually one scene where they say "neeyum kadavul, naanum kadavul"
---
i was thinking...
1)They say that one must give up all desires
2) But, to think of becoming capable to say "i am god" is a DESIRE by itself??
It's like, how you can never stop "doing". Even if consciously you give up work, unconsciously, you are sitting/standing, breathing, etc.
The same way...
To give up all desires, is a desire by itself?
It's not easy to be renunciate.
In the process of "giving up desires" you are taking steps to a "goal".
Goal=desirelessness
But, why work towards a goal?
coz, YOU HAVE A DESIRE FOR IT.
So, you have a desire for desirelessness!!
----
so, how is it practically possible to give up desires?
It's impossible.

In Love With Krishna said...

@KRS: "mayiliragu" vachirukkum Narasimmhara? :)))
Indha velai ellam Azhagiya Singar dhaan pannuvaar :))
i still remember, last year during His brahmottsavam, "chandra prabhai" vaaganam sevikka poyirindhen.
At that time, He had a beautiful peacock feather in His head :)

Lalitha Mittal said...

'perinbam'[per inbam =bliss emanating from the name] aswell as
pe....rinbam ,meaning immense bliss from the manthram.that is
KANNA dhasan!!perinbam vazhangiyatharku nanri!

நாடி நாடி நரசிங்கா! said...

//அஹம் பிரம்ம ஆஸ்மி = நான் கடவுளாய் "இருக்கிறேன்"!
நானே கடவுள் அல்ல! நான் கடவுளின் வெளிப்படு பொருளாய் (வடிவமாய், உடம்பாய்) இருக்கிறேன்!
//

yes

தூணில் இருப்பான் அவன் துரும்பில் இருப்பான்
எங்கும் இருப்பான் ஸ்ரீமன் நாராயணன்
உன்னிலும் இருப்பான் என்னிலும் இருப்பான்
எங்கும் இருப்பான் ஸ்ரீமன் நாராயணன்
:)

Radha said...

சில பேரு முள்ளை முள்ளால எடுத்துட்டு, எடுத்த முள் எடுக்க உதவிய முள் ரெண்டையும் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க...
மாதா நரசிம்ஹ பிதா நரசிம்ஹ !

Radha said...

//@Radha: where did ur post disappear? :))
//
ரவிக்கும் எனக்கும் பயங்கரமான சண்டை. he is showing the anger by making my post disappear ! wait and see...radha knows more magic than ravi...the post will reappear all of a sudden !!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா, @KK

இந்தப் பதிவை வெளியிட்டுக் கொண்டிருக்கும் போதே, ராதாவும் ஹிந்தி மீரா பஜன் பதிவை இட்டு விட்டார்!
ஆனால் இந்தப் பதிவில் மீனவர்களுக்கான விண்ணப்பம் - கையெழுத்துப் படிவம் திரட்ட வேண்டிய அவசரம் இருந்ததால், இதை இன்றே வெளியிட வேண்டிய கட்டாயம்! Thatz the reason for disappearance and it will come back tomorrow! I did email Radha & KK about this "need", before publishing this post!
So "சண்டை" என்றெல்லாம் கும்மி அடிக்காமல், பதிவில் உள்ள வேண்டுகோளுக்கு முக்கியம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்!

Radha said...

வோட்டு எல்லாம் எப்ப்வோ போட்டாகிவிட்டது. #3338 and #3403.
extra vote on behalf of giridhaari. :-)
[எல்லோரும் நிச்சயம் போட்டு இருப்பார்கள்.அவரவர் நிலையில் ஒரு பிரார்த்தனையும் செய்து இருப்பார்கள்.]

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கள்ள ஓட்டு போட்ட கட்டித் தங்கம் ராதா வாழ்க வாழ்க! :))

கையெழுத்தை மாற்றிப் போட்ட ராதா - பலப்பல கையெழுத்து நிபுணர் போலத் தெரிகிறதே!
பெற்றோரிடம் கையொப்பம் வாங்கப் பயப்படும் பள்ளி மாணவர்கள், உடனடியாக கண்ணன் பாட்டுக்கு வாங்க! நான் ராதாவின் அலைபேசி எண் தருகிறேன்! :)

குமரன் (Kumaran) said...

நேத்து தான் இந்தப் பாட்டைக் கேட்டேன். இன்னைக்கி மறுபடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவேண்டும் நாராயணா ஹரி நாராயணா

In Love With Krishna said...

//extra vote on behalf of giridhaari. :-)//
:))
//கையெழுத்தை மாற்றிப் போட்ட ராதா - பலப்பல கையெழுத்து நிபுணர் போலத் தெரிகிறதே!
பெற்றோரிடம் கையொப்பம் வாங்கப் பயப்படும் பள்ளி மாணவர்கள், உடனடியாக கண்ணன் பாட்டுக்கு வாங்க!//
:))))))))))
Avane oru thirudan!
Andha thiruttu Radhamohan PSP-kku "Nanbenda!" signature poda innoru Radhamohan!
Adhavudhu paravaillai, adhukku "PR" work paarkum, marketing professional "nanbenda" Kannabiran!
enna nadakudhu inga?????????
:))))
Indha "aal maraattam" ellam thooki kattunga! :))
Giridhari-yagiya PSP: en report card-il unga signature vendum!
Neenga dhaan vandhu podanum!!
Come PSP! Autograph podu!
Proper original signature poda vaango!!! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@KK
//they say "neeyum kadavul, naanum kadavul" i want ur views. :)//

கண்ணன் பாட்டில் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கு இனி ராதாவே விடையளிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :)) அப்பாடா! :))

Raghav said...

பக்த பிரகலாதனை காப்பாற்றிய நரசிம்மனே, நம் மீனவ நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும்..

வோட்டும் போட்டாச்சு..

நாடி நாடி நரசிங்கா! said...

Radha said...
சில பேரு முள்ளை முள்ளால எடுத்துட்டு, எடுத்த முள் எடுக்க உதவிய முள் ரெண்டையும் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க...
மாதா நரசிம்ஹ பிதா நரசிம்ஹ !
:)

i dont understand. this tatthuvam meaning,. :)

கோமதி அரசு said...

//எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!//

கையெழுத்து போட்டு விட்டோம்.

அருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல். ரோஜா ரமணியின் நடிப்பு, சுசீலா அவர்களின் குரல் எல்லாம் சேர்ந்து தெய்வீகமான சூழ்லலை ஏற்ப்டுத்தும்.

நன்றி ரவி.

Kavinaya said...

//நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்//

பேரின்பமான பாடல். நன்றி கண்ணா.

கையெழுத்து போட்டாச். கண்ணன் காப்பான் :)

நாடி நாடி நரசிங்கா! said...

சில பேரு முள்ளை முள்ளால எடுத்துட்டு, எடுத்த முள் எடுக்க உதவிய முள் ரெண்டையும் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க...
மாதா நரசிம்ஹ பிதா நரசிம்ஹ !
:)

i dont understand. this tatthuvam meaning,. :)

sorry. urjently one english mistake:


Radha i can't understand this thatthuvam . :))

Radha said...

ராஜேஷ்,
இது என்ன? கேள்விக்கு பதில் சொல்லலைன்னா "சரி! தெரியலே போல இருக்குன்னு" விட்டுடனும். :-)
இருக்கும் ஆசைகள் = காலை குத்திய முள்
எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்ற எண்ணம் = எடுக்க உதவும் முள்
கடைசியா ரெண்டையும் தூக்கி போட்டுட்டு...எங்க போவோம்னா "மாதா நரசிம்ஹா பிதா நரசிம்ஹா !" என்று இறைவனிடம் தான். எல்லாத்தையும் விட்டுட்டும் இறைவனை பிடிக்கலாம். இறைவனை பிடிச்சிட்டே எல்லாத்தையும் விட்டு விடலாம். அவரவர் இயல்பை பொறுத்த விஷயம்.
Once a person asked my master:
"What remains after renouncing everything?"
My master(Sri Ramakrishna Paramahamsa) replied - "Pure love of God"

நாடி நாடி நரசிங்கா! said...

அதெல்லாம் விட முடியாது ராதா
இந்த மாதிரி நல்ல விஷத்தை தொல்லை பண்ணியாவது தெரிஞ்சுப்போம்
நன்றி :))

Radha said...

//இந்த மாதிரி நல்ல விஷத்தை //
ஆரம்பத்துல நல்ல விஷயம் விஷம் மாதிரி தான் இருக்கும். :-)

Radha said...

ராஜேஷ்,
திருவல்லிக்கேணி கோயில் அருகே உள்ள நூலகத்தில் "ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்" இருக்கிறது. மேலே சொல்லியவை எல்லாம் அரைகுறையாக அதைப் படித்து தான்... :-)

ராம், said...

ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி,நாராயணா என்றாலே நலம் தரும் நாமம், நாராயணா என்றாலே வாழ்வு சுபிட்சமாகும் ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி🔔

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP