பி. சுசீலா - ஒரே பாட்டில் கண்ணன்+முருகன் பாட்டு!
முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ச்சியாக...
கண்ணன் பாட்டிலே, சுசீலாம்மாவின் ஒரு மோகனமான பாட்டு!
இந்தப் பாட்டில், சுசீலாம்மா, கண்ணனையும் முருகனையும் மாற்றி மாற்றிப் பாடி, இசைமாலை சூட்டுவார் மாயோனுக்கும் சேயோனுக்கும்!
அட, அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?
இருக்கே! கண்டு புடிங்க பார்ப்போம்! இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடல்...ரொம்பவே ஹிட்!
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!
நீ இல்லாமல் நானும் நானல்ல!
தெய்வத்தின் முன்னே...நீயும் நானும் வேறல்ல!
இந்தப் பாட்டை...இப்பல்லாம்...தினமுமே கேட்பதால்...அப்படியே தங்கி விட்டதா? அதான் டக்-குன்னு இந்த முருகன்+கண்ணன் பாட்டும் ஞாபகத்துக்கு வந்துருச்சி! சரி முருகனருள்-150 உற்சவத்துக்கு வசதியா இங்கு இட்டு விட்டேன்! :)
என்ன கண்டு புடிச்சாச்சா? :)
படம் = இதய கமலம்! சரி தான்! ரவிச்சந்திரன் - கே.ஆர்.விஜயா
எந்தப் பாட்டு? = மலர்கள் நனைந்தன பனியாலே!
இது அவர் பாடிய மற்ற பக்திப் பாடல்கள் போலவே இருக்காது! ஏதோ வசீகரமான காதல் பாட்டு போலத் தான் இருக்கும்! (ஒரு வேளை என் காதுக்குத் தான் இப்படித் தோனுதோ? :)
நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு-ன்னு சொல்லலாமே தவிர...
இந்த இனிய மோகன மெலடி...என் மனம் மயக்கும் காதல் பாட்டே தான்! சந்தேகமே இல்லை!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-ன்னு அவங்க கண்ணனைப் பாடும் போது, கண்ணாடி முன்னாடி போய் நின்னுக்குவேன், முருகனால் காயம் இருக்கா-ன்னு பார்க்கத் தான்! :)
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி-ன்னு அவங்க முருகனைப் பாடும் போது...என்ன சொல்ல.....முருகா, முருகா, நான் உன்னோடு இருப்பேன்! என்னிக்கும் இருப்பேன்! நீ இல்லாமல் நானும் நானல்ல!
* பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை! Prelude - Dont Miss!
* பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்! போராடி-நீராடி-கண்ணாடி-முன்னாடி! That Interlude - Dont Miss!
மயக்கும் மோகன ராகத்தில்...
மயக்கும் சுசீலாம்மா மெலடியை...
கேட்டுக்கிட்டே படிங்க!
படம்: இதயக் கமலம்
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
ராகம்: மோகனம்
ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)
மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!
சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)
இதே மெட்டில் வேற என்ன பாட்டெல்லாம் ஞாபகம் வருது-ன்னும் சொல்லுங்க பார்ப்போம்!
சாம்பிளுக்கு நான் துவங்கி வைக்கிறேன்!
* ஆஹா இன்ப நிலாவினிலே - மாயாபஜார்
* கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - இமயம்
பாட்டு நல்லா இருந்திச்சா?
இப்போ சொல்லுங்க,
சுசீலாம்மா பாடுவது...கண்ணன் பாட்டா? முருகன் பாட்டா? :)
27 comments :
மயக்குவது
மோகனம் .
சுசீலாவின்
குரலும்
குளிர் நிலவும், நாம்
காணாத ஸ்வர்க்கத்தை
காணச்செய்யும்
கண்ணன் தந்த
வாகனம். ..
சுப்பு ரத்தினம்.
சுசிலாம்மா குரலில் வரக் கண்ணனுக்கும் கண்தனுக்கும் கசக்குமா.
இதய கமல நாயகிக்கு ஆசை, தன் கணவன் வாழ்க்கை சிறக்க இருவரையுமே வேண்டுகிறாள்.
அச்சோ கொஞ்சும் பாடல்.. சோலைமலையில் கந்தனையும், கள்வனையும் நேத்து பாத்துட்டு வந்தா இங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்றாங்க..
//ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)//
தண்டாயுதபாணி கண்ணனே :)
தண்டாயுதபாணி ஒருத்தர் தான்; இன்னொருத்தர் மத்தாயுதபாணி! :-)
ஒருத்தர் பேரு தண்டாபாணி - அப்படின்னா குளிர்ந்த நீர்; நீர்ன்னா நாரம்; இன்னொருத்தருக்குப் பேரு நாரணன்; எப்புடி ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்காங்க பாருங்க. :-)
சென்னைக்கு வேலை செய்ய வந்த புதிதில் ஒரு வடநாட்டு நண்பர் 'தி.நகரில் கோல்ட் வாட்டர் தெரு இருக்கு'ன்னு சொன்னார்; 'கோல்ட் வாட்டர் ஸ்டிரீட்டா? எங்கே இருக்கு?'ன்னு கேட்டா 'அதான் தண்டா பாணி ஸ்டிரீட்'ன்னு சொன்னார்; நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்; அவருக்கு புரியலை. அப்புறம் விளக்கம் சொன்ன பிறகு புரிஞ்சு அவரும் கூட சிரிச்சார். அது நினைவுக்கு வந்துருச்சு இப்ப. :-) அவரு முன்னாடி 'முருகா, முருகா'ன்னு கூட சொல்ல முடியாது; வாங்கி சமைக்கலாமா வெளிய போயி சாப்புடலாமான்னு கேப்பார். :-)
@குமரன்
//தண்டாயுதபாணி ஒருத்தர் தான்; இன்னொருத்தர் மத்தாயுதபாணி! :-)//
கண்ணன் கையில் இருப்பது மத்தா?
அவ்ளோ பெருசா இருக்கே?
எங்க வீட்டுல தயிர் கடையற மத்து இருக்கு! பொறந்த கொழந்த உசரத்தை விடச் சிறுசாத் தானே இருக்கு??
ஆல்சோ, கண்ணன் கையில் எதுக்கு மத்து? அவன் ச-மத்து!
வெண்ணைய் திருடத் தான் தெரியும்! கடைய எல்லாம் தெரியாது! அடுத்தவங்க கடைஞ்சி வச்சா நொங்குறவன் கையில எப்படி மத்து வரும்? தரவு ப்ளீஸ்! :)
//ஒருத்தர் பேரு தண்டாபாணி - அப்படின்னா குளிர்ந்த நீர்;//
ஹிஹி!
என் முருகன் தண்டா-பானி யா?
ஏற்கனவே அவனைக் கோ-கோ-கோலா-ன்னு சொல்லி இருக்கேன்!
எனக்கு ரெண்டுமே பிடிக்கும்! ஸோ, அவனைக் குடிச்சிடறேன்! :)
//நீர்ன்னா நாரம்; இன்னொருத்தருக்குப் பேரு நாரணன்; எப்புடி ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்காங்க பாருங்க. :-)//
ஸ்பின் டாக்டர், ஸ்பின் டாக்டர்-ன்னு கேள்விப்பட்டு இருக்கீயளா? :)
சரி...தண்டபாணி தமிழ்ச் சொல்லா? அப்படீன்னா உங்க விளக்கத்தை ஒத்துக்க மாட்டோம்!
வடமொழிச் சொல்லு-ன்னா, அப்போ தண்ட பாணி, தண்டா பானியாகி விட்டது-ன்னு ஒத்துக்கறோம்! :))
//அவரு முன்னாடி 'முருகா, முருகா'ன்னு கூட சொல்ல முடியாது; வாங்கி சமைக்கலாமா வெளிய போயி சாப்புடலாமான்னு கேப்பார். :-)//
ஹா ஹா ஹா
சென்னா முருகி ஆயிட்டானா என் முருகன்? :)
இப்பவே செஞ்சி சாப்பிட்டாப் போச்சு! கொஞ்சம் பன்னீர் டிக்கா+சர்க்கரை போதுமே! :)
//sury said...
மயக்குவது
மோகனம்
கண்ணன் தந்த
வாகனம்//
ரைமிங்க்கா தான் பின்னூட்டம் போடறீங்க சூரி சார்! :)
இதே மெட்டில் வரும் மற்ற திரைப்பாடல்களைச் சொல்லுங்களேன்!
//வல்லிசிம்ஹன் said...
இதய கமல நாயகிக்கு ஆசை, தன் கணவன் வாழ்க்கை சிறக்க இருவரையுமே வேண்டுகிறாள்//
:)
அதே!
//வல்லிசிம்ஹன் said...
சுசிலாம்மா குரலில் வரக் கண்ணனுக்கும் கண்தனுக்கும் கசக்குமா.//
அப்போ வல்லியம்மா குரலில்?
அது மட்டும் கண்ணனுக்கும் கந்தனுக்கும் கசக்குமா என்ன?
நீங்க கண்ணன் பாட்டுக்கு பாடிய சோலை மலைக் கும்மி - மாயன் அழகு மலை மேலே பாட்டு...இன்னும் ஞாபகம் இருக்கு வல்லியம்மா! கொஞ்ச நாளாச்சு! அடுத்த பாட்டுக்கு உங்களையே பிடிக்கறேன்! :)
//Raghav said...
அச்சோ கொஞ்சும் பாடல்..//
யார் யாரைக் கொஞ்சும்? :)
//சோலைமலையில் கந்தனையும், கள்வனையும் நேத்து பாத்துட்டு வந்தா இங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்றாங்க..//
பாத்தீயா? நீ சொல்லாமப் போனாக்கூட என்ட்ட இருந்து தப்பீற முடியாது! கள்ளனும் கந்தனும் என்ட்ட காட்டிக் கொடுத்துருவாக! :)
//Raghav said...
//ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)//
தண்டாயுதபாணி கண்ணனே :)//
ராகவ்-ல்ல அந்த "ன்" இல்ல! அவங்க சொன்னா மட்டுமே நான் ஒத்துப்பேன்! :)
அது வரை குமரன் மத்துபாணி vs தண்டபாணி-க்கு தரவு கொடுப்பாரு! அதுல கேள்வி கேளு ராகவ்! :)
அன்பின் கேயாரெஸ்
மாமனும் மருகனும் ஒரே பாட்டிலா - பாடல் அருமை - கேட்டேன் ரசித்தேன்
நல்லதொரு இடுகை - 150க்கு நல்வாழ்த்துகள் கேயாரெஸ்
நட்புடன் சீனா
எல்லா பாடல்களுமே எனக்கும் பிடித்தவை.
உடுப்பி கிருஷ்ணனும்...பழனி முருகனும்...படம் அருமை.
மோகனம் எனக்கும் மிகவும் பிடித்த ராகம்.
"காற்று வெளியிடை கண்ணம்மா" மோகனம் என்று நினைக்கிறேன்.
மீரா படத்தில் "கிரிதர கோபாலா" பாடல் மோகனம்.
இப்போ தான் கவனிச்சேன்.
பழைய பாடல்களில் "கண்ணன் மன நிலையை...தங்கமே தங்கம்" இன்னும் பதிவாகவில்லை போல இருக்கே.
அதிசயம் அதிசயம். :)
//Radha said...
இப்போ தான் கவனிச்சேன்.
பழைய பாடல்களில் "கண்ணன் மன நிலையை...தங்கமே தங்கம்" இன்னும் பதிவாகவில்லை போல இருக்கே. அதிசயம் அதிசயம். :)//
பட்டியல் போட்டவுடனே பளிச்-ன்னு கண்ணுக்கு தெரியுது-ல்ல ராதா? இதுக்குத் தான் நாமளே பட்டியல் போட்டுக்க கூடாது-ன்னு சொல்லுறது! :)
"கண்ணன் மன நிலையை" எந்தக் கண்ணன் பாட்டு தங்கம் பதிவாப் போடுது-ன்னு பார்ப்போம்!:) சூப்பர் பாட்டு!
//Radha said...
எல்லா பாடல்களுமே எனக்கும் பிடித்தவை.//
அடப் பாவி! அதுக்குள்ள அத்தனை பழைய பதிவும் பாட்டையும் லுக்கு விட்டாச்சா? :)
//உடுப்பி கிருஷ்ணனும்...பழனி முருகனும்...படம் அருமை.//
இதெல்லாம் ஒத்துக்க மாட்டேன்! என் முருகனுக்கு, முருகனருள் வலைப்பூவில் வந்து வாழ்த்து சொல்லு! அதென்ன கண்ணன் பாட்டுக்கு மட்டும் தான் வருவியா? :)
//மோகனம் எனக்கும் மிகவும் பிடித்த ராகம்//
ஓ...அதான் கிரிதாரி-ன்னு இருந்த பேரை, ராதா மோகன்-ன்னு மாத்திக் கிட்டியா? :)
சினிமா பாடல்களில் கண்ணன் வலம் வரும் சில பாடல்கள்:
"கண்ணா ! கருமை நிறக் கண்ணா ! உன்னை காணாத கண் இல்லையே" (எனக்கு தான் கண் இல்லையா? இந்தப் பாடலை எப்படி யாரும் இன்னும் பதியவில்லை??? !!!)
"நீல வண்ண கண்ணா ! உன் எண்ணமெல்லாம் நான் அறிவேன்... கண்ணா என் கையை தொடாதே !" (படம்: ??)
"மதுரா நகரில் தமிழ் சங்கம்..." (படம்: பார் மகளே பார்)
"யமுனா நதி இங்கே, ராதை முகம் இங்கே. கண்ணன் போவதெங்கே?" (படம்: கெளரவம்)
"கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல" (படம்: வெண்ணிற ஆடை)
"ராதா ராதா நீ எங்கே? கண்ணன் எங்கே நான் அங்கே." (படம்: மீண்டும் கோகிலா)
"யமுனை ஆற்றிலே..." ( படம்: தளபதி)
"வான் போலே வண்ணம் கொண்டு வந்தான் கோபாலனே..." (படம்: சலங்கை ஒலி; இதுவும் மோகனம் என்று நினைக்கிறேன்.)
"வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி" (படம்: சிப்பிக்குள் முத்து)
"ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி" (படம்: மகாநதி)
"கண்ணா வருவாயா? மீரா கேட்கிறாள்..." (படம்: மனதில் உறுதி வேண்டும்)
"காற்றில் வரும் கீதமே ! என் கண்ணனை அறிவாயா?" (ஸ்ரீகாந்த் நடித்த படம்...பெயர் தெரியவில்லை.)
"முகுந்தா! முகுந்தா!" (படம்: தசாவதாரம்)
டிஸ்கி: நிறைய பாடல்கள் கேட்க மட்டும் நன்றாக இருக்கும். படமெல்லாம் பார்க்க முடியாது. :)
ராதா
கண்ணன் பாட்டில் நடு ராத்திரி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீக? :)
என்னைய குளிர் ஜூரத்திலும் டைப்படிக்க வைக்கறீங்களே? :)
//கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
காற்றில் வரும் கீதமே ! என் கண்ணனை அறிவாயா
முகுந்தா! முகுந்தா//
இதெல்லாம் போட்டாச்சே! :)
போடாத படமாச் சொல்லுங்க! இதுக்காகவே நிறைய சினிமா பாருங்க! :)
"கண்ணான கண்ணனுக்கு அவசரமா"-ன்னு கண்ணா-ன்னு ஒத்த லைன் வந்தாலே, அதைக் கண்ணன் பாட்டு-ன்னு போடற பையன் நான்! "டார்லிங் டார்லிங் டார்லிங்...ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ" கூட என்னைய பொருத்த வரை கண்ணன் பாட்டு தான்! :)
//பட்டியல் போட்டவுடனே பளிச்-ன்னு கண்ணுக்கு தெரியுது-ல்ல ராதா? //
பட்டியல் உண்மையாவே பட்டையை கெளப்புது. :) i like this organisation very much. :)
இப்போ கெளம்பறேன். நாளைக்கு முருகனருள் பக்கம் வரேன். :)
//இதெல்லாம் போட்டாச்சே! :) //
லிஸ்ட்ல போடாத பாட்டு நிறைய இருக்கு. பொறுமையாக பார்க்கவும். :)
//cheena (சீனா) said...
அன்பின் கேயாரெஸ்
மாமனும் மருகனும் ஒரே பாட்டிலா - பாடல் அருமை - கேட்டேன் ரசித்தேன்//
நன்றி சீனா சார்!
//நல்லதொரு இடுகை - 150க்கு நல்வாழ்த்துகள் கேயாரெஸ்//
150 முருகனுக்கு!
வாழ்த்து மட்டும் இங்ஙனயா?-ன்னு என் தலை உருளப் போகுது! :)
கண்ணன் பாட்டிலேயும், முருகனருள்-150ஐ கொண்டாடலாமே-ன்னு நினைச்சி தான் இந்த இடுகையைப் போட்டேன்! ஆனா அங்கன விட இங்கன பின்னூட்டம் அதிகமா வந்து, என்னைய மாட்டி விடுது! நான் என்ன தான் பண்ணுவேன் முருகா? :)
மயக்குபவர் என்றால் அது கண்ணனே!
பாடலை எழுதும் ஆசிரியரும் மயங்கித்தான் எழுதுவார்.
பாடலைப் பாடுபவரும் மயங்கித்தான் பாடுவார்
கேட்பவரும் மயங்கித்தான் கேட்பார்.
இம்மூவரில் கேட்பவர்தான் அதிகமாக மயங்குபவர்!
chennai super kings, radha-kku oru whistle pode! :)
"கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல" (படம்: வெண்ணிற ஆடை) -done
"யமுனை ஆற்றிலே..." ( படம்: தளபதி) -done
"வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி" (படம்: சிப்பிக்குள் முத்து) -done
"ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி" (படம்: மகாநதி) -done
"காற்றில் வரும் கீதமே ! என் கண்ணனை அறிவாயா?" (ஸ்ரீகாந்த் நடித்த படம்...பெயர் தெரியவில்லை.) - done
"முகுந்தா! முகுந்தா!" (படம்: தசாவதாரம்) -done
radha-kku oru whistle pOttu, meethi paattai ellam varisaiyaa podungappa, kannan paattu makkaLe! ethuna doubt irunthaa, kannan songs manager kumaran-ai chikkena pidinga!
கண்ணா ! கருமை நிறக் கண்ணா ! உன்னை காணாத கண் இல்லையே" (எனக்கு தான் கண் இல்லையா? இந்தப் பாடலை எப்படி யாரும் இன்னும் பதியவில்லை??? !!!) - sooper pattu
"நீல வண்ண கண்ணா ! உன் எண்ணமெல்லாம் நான் அறிவேன்... கண்ணா என் கையை தொடாதே !" (படம்: ??) - kaiyai thodaama enna cheyyarathaam?
"மதுரா நகரில் தமிழ் சங்கம்..." (படம்: பார் மகளே பார்) - wow! pbsrinivas & susheelamma
"யமுனா நதி இங்கே, ராதை முகம் இங்கே. கண்ணன் போவதெங்கே?" (படம்: கெளரவம்)
"ராதா ராதா நீ எங்கே? கண்ணன் எங்கே நான் அங்கே." (படம்: மீண்டும் கோகிலா) - sridevi is cho cute :)
"வான் போலே வண்ணம் கொண்டு வந்தான் கோபாலனே..." (படம்: சலங்கை ஒலி; இதுவும் மோகனம் என்று நினைக்கிறேன்.) - mohaname thaan - paadu nilave then kavithai mettu varuthe...
"கண்ணா வருவாயா? மீரா கேட்கிறாள்..." (படம்: மனதில் உறுதி வேண்டும்)
//இப்போ கெளம்பறேன். நாளைக்கு முருகனருள் பக்கம் வரேன். :)//
வார்த்தை தவறி விட்டாய் ராதா
வலைப்பூ துடிக்குதடா!
:)
// Radha said...
"கண்ணா ! கருமை நிறக் கண்ணா ! உன்னை காணாத கண் இல்லையே" (எனக்கு தான் கண் இல்லையா? இந்தப் பாடலை எப்படி யாரும் இன்னும் பதியவில்லை??? !!!)//
உங்கள் பேரைப் போட்டு பதிஞ்சாச்சி ராதா!
//SP.VR. SUBBAIYA said...
மயக்குபவர் என்றால் அது கண்ணனே!//
அடடா! வாத்தியாரே இப்படிச் சொன்னா எப்படி?
எப்படி இருக்கீக ஐயா? நெடுநாள் ஆச்சுது!
சரி, நான் என்னளவில் சொல்லட்டுமா?
* கண்ணன் மயக்குவது ஊருக்கே தெரியும்!
* முருகன் மயக்குவது என் மனசுக்கு மட்டுமே தெரியும்!
முருகனைக் காதலில் பரிபூர்ணமாக நம்பலாம்! என் நம்பிக்கைக்குரிய காதலன்! :)
ஆனால் ரொம்ப கிக்-கான காதலை, கண்ணன் காதலைத் தான் உலகம் சிலாகித்துப் பேசுகிறது போல!
//பாடலை எழுதும் ஆசிரியரும் மயங்கித்தான் எழுதுவார்.
பாடலைப் பாடுபவரும் மயங்கித்தான் பாடுவார்
கேட்பவரும் மயங்கித்தான் கேட்பார்//
:)
அது என்னமோ சரி தான்!
மாயம் செய்தால்?
என் முருகனுக்கு மாயம் செய்யத் தெரியாது! என் மனசோடு உறவாடவே தெரியும்!