Sunday, March 07, 2010

மாநிலம் மயங்க கானம் பயில்வான் !




கண்டதுண்டோ கண்ணன் போல் - புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல  ! சகியே !

வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான் !
மாநிலம் மயங்க கானம் பயில்வான் ! (கண்டதுண்டோ)

ஆயர்பாடி தன்னில் ஆநிரைகள் மேய்ப்பான் !
நேயமாகப் பேசி நெஞ்சம் புகுவான் ! (கண்டதுண்டோ)

"கண்மணி நீ" என்பான் ! "கை விடேன்" என்பான் !
கணந்தான் ! கண்ணை இமைத்தால் காணான் !
"கண்ணா !!! " என்று நான் கதறிடும் போதினில்
["கண்ணா ! கண்ணா ! கண்ணா ! கண்ணா !"
 என்று நான் கதறிடும் போதினில்]
பண்ணிசைத்தே வருவான் - சகியே !

பாடலாசிரியர்: அமரர் கல்கி

பாடலை எம்.எஸ் அவர்களின் தேன் போன்ற குரலில் இங்கே கேட்கலாம்.

~
கிரிதாரியின்,
ராதா

10 comments :

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான பாடல் ராதா....ரொம்ப நாட்கள் கழித்து நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டது சௌம்யா பாடித் தான். அவர் பாடும் முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எம்.எஸ். பாடுவது இப்போது கேட்க வித்தியாசமாகத் தோன்றுகிறது. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Dankees Radha! :)
MS sings differently :) but soulfully!

//கண்ணா ! கண்ணா ! கண்ணா ! கண்ணா !"
என்று நான் கதறிடும் போதினில்]
பண்ணிசைத்தே வருவான்//

ஏன்டா...நான் கதறிடும் போதில்...உனக்குப் பண் கேக்குதா? பண் இசைக்கிறியா? இரு உன்னை இசைக்கிறேன்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாநிலம் மயங்க கானம் பயில்வான்//

பயில்வானா?

ஓ மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன்-ல்ல?
அதான் பயில்வான் கணக்கா உடம்பை வளர்த்து வச்சிருக்கான் போல! :))

Radha said...

//Dankees Radha! :)
MS sings differently :) but soulfully!//
No doubt about it.

//கண்ணா ! கண்ணா ! கண்ணா ! கண்ணா !
என்று நான் கதறிடும் போதினில்//
எப்படி ஒவ்வொரு முறையும் வித்யாசமா அழைக்கிறாங்கன்னு பாரேன்.

Radha said...

//அருமையான பாடல் ராதா....ரொம்ப நாட்கள் கழித்து நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள்//
yes. another gem from kalki !
நன்றிகள் அனைத்தும் கிரிதாரிக்கு அர்ப்பணம். :)

Radha said...

//எம்.எஸ். பாடுவது இப்போது கேட்க வித்தியாசமாகத் தோன்றுகிறது. :-)
//
நான் சௌம்யா பாடுவதை கேட்டால் வித்தியாசமாக இருக்கிறது என்பேன்.
i am huge fan of m.s amma. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆயர்பாடி தன்னில் ஆநிரைகள் மேய்ப்பான் !
நேயமாகப் பேசி நெஞ்சம் புகுவான்

ஆயர்பாடி கோபிகைக்களுக்குத்தான் என்ன ஒரு பாக்கியம். யார் நெஞ்சில் நாம் எல்லோரும் புகவேண்டும் என்று நினைக்கிறொமோ அவன் அவர்கள் மனதில் புகுவானாம். மஹான் தியாகய்யாவும் கண்ணனை பற்றிக் கூறுகையில்" சமயானிகி தகு மாடலானி" அதான் நேயமாகப் பேசி

நல்லதொரு பாட்டை மீண்டும் நினவுறுத்தியதற்கு நன்றி.

Radha said...

//ஆயர்பாடி கோபிகைக்களுக்குத்தான் என்ன ஒரு பாக்கியம். யார் நெஞ்சில் நாம் எல்லோரும் புகவேண்டும் என்று நினைக்கிறொமோ அவன் அவர்கள் மனதில் புகுவானாம்.//

ஆஹா ! அருமையாக சொன்னீர்கள் ஐயா !
கோபியர் அனைவரும் ராமர் காலத்தில் தண்டக ஆரண்யத்தில் வாழ்ந்த ரிஷிகள் என்று ஹரி கதைகளில் கேட்டுள்ளேன். எப்படி இருந்தாலும் மிகவும் பாக்கியம் செய்தவர்களே.

//மஹான் தியாகய்யாவும் கண்ணனை பற்றிக் கூறுகையில்" சமயானிகி தகு மாடலானி" //

இங்கே "சாதிஞ்சனே" கீர்த்தனையை சொல்கிறீர்களா? அல்லது இன்னும் வேறு ஏதாவது அருமையான கீர்த்தனையை சொல்கிறீர்களா?
மஹான் த்யாகையாவை நினைவுப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இங்கே "சாதிஞ்சனே" கீர்த்தனையை சொல்கிறீர்களா? அல்லது இன்னும் வேறு ஏதாவது அருமையான கீர்த்தனையை சொல்கிறீர்களா?//

ராதா
நம்ம திராச சார் சொல்லுறது சாதிஞ்சனே கீர்த்தனையே தான்!

போதிஞ்சின சன் மார்க்க வசனமுல
பொங்கு சேசிதா பட்டின பட்டு...
சமயானிகி தகு மாடலாடென!

தான் போதிச்ச சன்மார்க்க வசனத்தை எல்லாம் தானே பொய்யாக்கிட்டு, தான் சொல்லுறதையே பிடிச்சிக்கிட்டு வம்பு பண்ணறான்! பட்டின பட்டு! :)

சமயத்துக்கு ஏத்தா மாதிரி மாட்லாடுற டகால்ட்டி-ன்னு தியாகய்யர் சர்ட்டிஃபிக்கேட் கொடுக்கறாரு கிரிதாரிக்கு! :))

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP