Sunday, April 04, 2010

திலகா: கிருஷ்ண பள்ளி எழுச்சி!

கண்ணன் பாட்டில், குழுவினர் மட்டும் அல்லாது, பல வாசகர்களும் பதிவிடுவது வழக்கம்!

* தங்கள் படைப்புகளை அனுப்பி, இதையும் இடுங்களேன் என்று கேட்பவரும் உண்டு! = சித்ரம், திலகா, மலைநாடான் ஐயா போன்றோர்
* நேயர் விருப்பங்களைத் தருபவரும் உண்டு! = கானா பிரபா முதற்கொண்டு பலப்பலர்!
* அதை அவர்களாகவே எழுதி அனுப்புவோரும் உண்டு! = கோவி கண்ணன் முதலானோர்!
* பாடிக் கொடுப்போரும் உண்டு = வல்லியம்மா, மீனாட்சி சங்கரன், சூரி சார் போன்றோர்!
* நல்ல ஆலோசனைகளையும், படங்களையும் சுட்டிக் காட்டுவோரும் உண்டு = என் தோழன் ஜி.இராகவன் முதலானோர்!

இந்த ஊக்கம் என்றும் இனிது! இன்றும் இனிது!
அந்த வரிசையில், திலகா அவர்கள் எழுதி அனுப்பிய கிருஷ்ண சுப்ரபாதத்தைக் கேளுங்கள்!
இவரும், சித்ரம் ஐயாவும் அனுப்பிய பாடல்கள் எல்லாம் க்யூ வரிசையில் வேறு உள்ளன! :))

இதோ...கிருஷ்ணா சுப்ரபாதம்!

From கண்ணன் பாட்டு


யசோதையின் மைந்தா ஸ்ரீகிருஷ்ணா எழுந்தருள்வாய்!
யமுனையில் நீராடும் மாதவனே எழுந்தருள்வாய்!
கோபியர்கள் கொஞ்சிடும் கோபாலா எழுந்தருள்வாய்!
கோவர்தன மலை எடுத்த கோவிந்தா எழுந்தருள்வாய்!( )

அகிலத்தை தாங்கும் இறைவா எழுந்தருள்வாய்
ஆநிரை மேய்த்த கண்ணனே நீ எழுந்தருள்வாய்
இன்பங்கள் தந்திடும் இறைவா எழுந்தருள்வாய்
ஈசனும் வணங்கும் தேவா நீ எழுந்தருள்வாய் ( )

உலகளந்த பெருமாளே மாயவனே எழுந்தருள்வாய்
ஊனுக்குள் உயிராய் நிறைந்;தவனே எழுந்தருள்வாய்
எங்கும் நிறைந்த பரம்பொருளே எழுந்தருள்வாய்
ஏழுமலை வாழும் ஸ்ரீனிவாசா எழுந்தருள்வாய் ( )

- திலகா

27 comments :

Sri Kamalakkanni Amman Temple said...

திருப்பள்ளிஎழுச்சி பாடல் வரிகள் உள்ளதை TOUCH பண்ணுது

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இன்னொன்னு கவனிச்சீங்களா?
திலகா அ முதல் ஏ வரை உயிர் எழுத்துகளில் துவங்கி, ஒவ்வொரு வரியும் எழுதி இருக்காங்க!

ஐ, ஒ, ஓ, ஓள - இந்த நாலுக்கும் யாராச்சும் பாட்டை முடித்துக் கொடுங்களேன்! :)

குமரன் (Kumaran) said...

ஐயங்கள் தீர்த்தருளும் ஆதவனே எழுந்தருள்வாய்
ஐயங்கம் ஏற்றிடுவார் ஆண்டவனே எழுந்தருள்வாய்
ஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய்
ஓங்காரப் பொருளதனை உணர்த்திடுவான் எழுந்தருள்வாய்

ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய்
ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய் எழுந்தருள்வாய்
பையவே எழுந்தென்னைப் பார்த்திடவே எழுந்தருள்வாய்
பாகவதர் பலருன்னைப் போற்றிடவே எழுந்தருள்வாய்

Sri Kamalakkanni Amman Temple said...

ஐயப்பனின் தாயும் தந்தையும் ஆனவனே எழுந்தருள்வாய்!

ஒன்றாகி நின்ற பரம்பொருளே எழுந்தருள்வாய்!

ஓங்கி உலகளந்த உத்தமனே எழுந்தருள்வாய்!

ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்!

Radha said...

முதல் பகுதி, இரண்டாம் பகுதி இரண்டுமே அருமை.

THILAGA .I said...

'ஐ' முதல் 'ஒள' வரை பாடல் வரிகள் மிக அழகாக எழுதியிருக்கிறீர்களே..
அனைவருக்கும் நன்றி.

Radha said...

காசா? பணமா? ராதாவும் ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.
:)
ஐயனே ! ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அரங்கனே ! எழுந்தருள்வாய் !
ஒண் சுடரோனே ! ஒப்பிலி அப்பனே ! எழுந்தருள்வாய் !
ஓத நீர் வண்ணா ! வேதம் போற்றும் மன்னா ! எழுந்தருள்வாய் !
சௌமித்திரி பாக்கியமே ! கௌசலைக் கொழுந்தே ! எழுந்தருள்வாய் !

[ஓதம் - கடல்; சௌமித்திரி - சுமித்திரா மகன், லக்ஷ்மணன்]

Radha said...

ஐ முதல் ஔ வரை மற்றுமொரு முயற்சி....:)

வைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா !
மையல் செய்யும் மைவண்ணா ! வையம் கொண்ட வாமனா !
ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா !
போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க வா !
பௌழியா ! சௌசீலா ! சௌன முனிகள் செல்வமே !

இப்போ யாராவது அ முதல் ஏ வரை பூர்த்தி செய்வார்களாம். :)

[ ஒற்கம் - தளர்ச்சி; வெற்பை - மலை
போதம் - அறிவு;
சௌன முனிகள் - "சனத் குமரார்கள்" என்று அழைக்கப் பெறும் நான்கு பால முனிவர்கள்.

பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்.
ப்ருஹதாரன்யாக உபநிஷத்தால் குறிக்கப் பெறுபவன் என்று பொருள் சொல்வர்.]

Radha said...

//ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய் //
குமரன்,
அபிராமி அந்தாதி தாக்கம் நல்லா தெரியுது. :)
~
ராதா

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய்//

அப்படீன்னா என்ன குமரன்? :)

கவிக்கா, எங்கே இருந்தாலும் ஓடியாந்து, இந்தப் பாட்டை நீங்களும் முடிச்சிக் குடுங்க!
கமலக் கண்ணியார், குமரன், ராதா, கவிநயா - இவிங்கள்ள, யாரு எளியரோ, அவிங்கள நான் குருவா ஏத்துக்க காத்துக்கிட்டு இருக்கேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன் சொன்னதில் எனக்குப் பிடிச்ச வரி - ஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய்! இந்தச் சத்தியம் எனக்கு ரொம்ப பிடிச்சமானது! :)

கமலக் கண்ணியார் சொன்னதில் பிடித்தது - ஓங்கி உலகளந்த உத்தமனே எழுந்தருள்வாய்! ஓ-ன்னாலே ஓங்கி உலகளந்த ஞாபகத்துக்கு வர வேணாமா? :)

ராதா சொன்னதில் நாலு சீர் கவிதை, அஞ்சு சீர் ஆகிப் போச்சு! ஆனாலும்...
சௌமித்திரி பாக்கியமே ! கௌசலைக் கொழுந்தே ! எழுந்தருள்வாய் ! -ன்னு இலக்குவனைக் கூட்டியாந்தது Cute! :)
உம்பியும் நீயும் உறங்கேலோ ஸ்டைல்-ல...என் தோழி போலவே இருக்கு! :))

குமரன் (Kumaran) said...

அந்த வரி மட்டும் தான் புரியலையா இரவி? மிச்ச வரிகளுக்கும் இராதா கொடுத்த மாதிரி பொருளுரை கொடுக்கணும் போலத் தானே இருக்கு! இராதா, நீங்களே அடியேன் எழுதுன வரிகளுக்கும் பொருளுரை தந்துடுங்க.

ஹையா... நான் எளிமையா எழுதலையே. இராதாவும் எழுதலை. அதனால எங்கள் பரமகுருவா இருக்க யார் தகுதின்னு பார்க்க காத்திருக்கேன். இரவிக்கு குருன்னா எனக்கு பரமகுரு தானே! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க வா !//

ராதா - பாட்டுல நைசா முத்திரை எல்லாம் வைக்கற போல இருக்கு? :)

இவிங்க மட்டும் ஞான யோகம் பண்ணுவாங்களாம்!
ஆனா அவன் போதம் இன்றி வரணுமாமா? நல்ல போங்கா இருக்கே!! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நானும் ஐ,ஒ,ஓ,ஓள -க்கு எழுதலாம்-ன்னு பார்த்தேன்! வேணாம்! வெட்கமா இருக்கு! :)

இதே போல், கண்ணன் பாட்டில், அடியார்கள் பலரும், என்றும் கூடி இருந்து குளிர வேணுமாய் வேண்டுகிறேன்! வாழி வாழி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இரவிக்கு குருன்னா எனக்கு பரமகுரு தானே! :-)//

கிழிஞ்சுது....நான் குருவா? மீ ஒன்லி குருவாய் வருவாய் அருள்வாய் என் குகனே! எப்படிக்கு கோதைக்கு பெரிய பெருமாளே குருவோ, அதே போல எனக்கு என் முருகனே குரு! :))

குமரன் அண்ணா...
குரு-ன்னா அது என்றும் எம்பெருமானார் இராமானுசர் ஒருவரே!
ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி வரம்பு அறுத்தார் பின்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்//

பாசுரத்தைக் கொடுங்க
இல்லீன்னா சுரமே வந்துரும் எனக்கு! :)

//ப்ருஹதாரன்யாக உபநிஷத்தால் குறிக்கப் பெறுபவன் என்று பொருள் சொல்வர்.//

அப்பர் சுவாமிகளும் இப்படி பெளழியா-ன்னு கூப்புடுவாரு! :)

Sri Kamalakkanni Amman Temple said...

கண்ணன் பாட்டில், அடியார்கள் பலரும், என்றும் கூடி இருந்து குளிர வேணுமாய் வேண்டுகிறேன்! வாழி வாழி!::::))))))))))

நாமெல்லாம் கூடுவது எங்கே எங்கே!
நாமெல்லாம் கூடுவது இங்கே இங்கே!

ஆடுவதும் பாடுவதும் எங்கே எங்கே!
ஆடுவதும் பாடுவதும் இங்கே இங்கே!

ஆனந்தமாய் ஆடுவதும் பாடுவதும் எங்கே எங்கே!
ஆனந்தமாய் ஆடுவதும் பாடுவதும் இங்கே இங்கே!

ஒரு பஜனை பாடல். ராகத்தோடு பாடினால் தூக்கிட்டு போகும்.

Sri Kamalakkanni Amman Temple said...

பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்//

பாசுரத்தைக் கொடுங்க
இல்லீன்னா சுரமே வந்துரும் எனக்கு! :)

பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய், என்மனத்தே மன்னி நின்றாய்
மால்வண்ணா மழை போலொளி வண்ணா,
சந்தோகா!.பௌழியா!.தைத்திரியா!.
சாமவேதியனே. நெடுமாலே,
அந்தோ. நின்னடியன்றி மற்றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.
7.7.2
----

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

kamala kaNNiyaar in full form :)

Thanks Rajesh for the "பௌழியா" paasuram & your bhajan :)
Radha thaan usually our paasuram encyclopedia...Ippo neengaLum! :)

//சந்தோகா!.பௌழியா!.தைத்திரியா!.
சாமவேதியனே//

The Glory of Chaandogya Upanishad = சந்தோகா!
The Glory of BrihathaaraNyaka Upanishan = பௌழியா!
The Glory of Taithreeya Upanishad = தைத்திரியா!
The Glory of saama vEtham (a) tiru vaai mozhi = சாமவேதியனே!

Sri Kamalakkanni Amman Temple said...

yeasterday only i seen & read first time in this paasuram.
you explain paasuram nicely. thanks krs.

Radha said...

ராஜேஷ், மிக்க நன்றி. :)
ஆனா பாசுரம் தந்தால் பொருளும் தரணும்னு ஒரு பின்னூட்ட விதி வெச்சி இருக்காங்க தெரியுமா? :-)
இந்த முறை கே.ஆர்.எஸ் புண்ணியத்தில் எஸ்கேப் ஆயிடீங்க. :)
ரவி,
ஔதார்யம் - உதார குணம். வள்ளல் தன்மை.
பரம குரு எளிமையா எழுதறவங்க தான் அப்படின்னா பரம குரு கவிநயா அக்கா தான்.
எளிமை = கவிநயா அக்கா என்பதில் யாருக்கும் எதாவது சந்தேகம் இருக்கா என்ன? :)
~
ராதா

Radha said...

//ராதா - பாட்டுல நைசா முத்திரை எல்லாம் வைக்கற போல இருக்கு? :)//
அப்படியே நைசா என் கிரிதாரியையும் நுழைத்து இருக்கேன். அது கண்ணுல பட்டுச்சா இல்லையா? :)

பெரும்பாலான பதங்கள் திருவாய்மொழி பாசுரங்களில் இருந்து சுட்டது. :)

"ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா !" => கிரிதாரி. :)

"வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே."
(திருவாய்மொழி 1-8-4)

"வைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா !"

"வைகலும் வெண்ணெய் கைகலந்துண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே."
(திருவாய்மொழி 1-8-5)
"வையம் கொண்ட வாமனா(வோ) !" என்பதும் தி.வா திருட்டு தான். :)

Radha said...

"ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்! "
எனக்கு ராஜேஷ் கவிதையில் பிடித்த வரி இது தான். :)

Radha said...

//இவிங்க மட்டும் ஞான யோகம் பண்ணுவாங்களாம்!
ஆனா அவன் போதம் இன்றி வரணுமாமா? நல்ல போங்கா இருக்கே!! :) //

"ராதாவின் பூஜை அறிவுகெட்டத்தனமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் ஏற்க வா"
என்று பொருள் கொண்டால் சரியாய் வரும். :)
நமக்கு தான் போதம் இல்லாமை. இறைவன் "ஞானானந்த மயம்" :)

Radha said...

//ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய்//

ஞானம், பலம், ஐஸ்வர்யம்(ஈஸ்வரத்தன்மை), வீர்யம், சக்தி, தேஜஸ், சௌஷீல்யம் (நல்லொழுக்கம்), வாத்சல்யம், மார்தவம்(மிருதுத் தன்மை), ஆர்ஜவம் (நேர்மை), சௌஹார்தம் (நல்ல இதயம்/தோழமை), சாம்யம் (சமமான பார்வை), காருண்யம் (கருணை), மாதுர்யம் (இனிமை), காம்பீர்யம், ஔதார்யம் (உதார குணம்),...... என்று ஒரு பெரிய பட்டியலே இட்டு "கணக்கற்ற கல்யாண குணங்களின் கடல்" என்று அரங்கனை உடையவர் வர்ணிப்பார். (ரங்கநாத கத்யம்)
அதிகம் சொல்லிப் பயனில்லை. எம்.எஸ் குரலில் இதனை கேட்க வேண்டும். :)
[இன்று சுத்தமாக அலுவலக வேலை ஓடவில்லை. அதான் பின்னூட்டம் மேல் பின்னூட்டம். :)]

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அப்படியே நைசா என் கிரிதாரியையும் நுழைத்து இருக்கேன். அது கண்ணுல பட்டுச்சா இல்லையா? :)
"ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா !" => கிரிதாரி. :)//

தளர்ச்சி இல்லாமல் மலையைத் தூக்கிச் சொக்க வைத்த வித்தகன் = தென் இலங்கை கோமான் :)))

ராதா, உன் முத்திரைக்கு மட்டும் "ராதை"-ன்னு பேரு!
ஆனா என் கிரிதாரிக்கு அப்படியே அவன் பேரை முத்திரையில் வைக்காம...
ஒற்கமின்றி வெற்பன் வித்தகன்-ன்னு எல்லாம் டபாய்க்குற? என்ன அநியாயம்! ஆத்ம சாஷாத்காரம் கட்சிக்காரவுங்க எப்பமே தனக்கு மட்டும் தான் சரியான முத்திரை வச்சிக்குவாங்களோ? :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//"ராதாவின் பூஜை அறிவுகெட்டத்தனமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் ஏற்க வா"
என்று பொருள் கொண்டால் சரியாய் வரும். :)//

ஓ...போதம் இன்றி ராதா செய்யும் பூசையா அது?
ராதா செய்யும் பூசையை, போதம் இன்றி ஏற்க வா-ன்னு பொருளும் வருது! இப்படி பாட்டில் இரட்டுற மொழிதல் பண்ற "ராதை" முத்திரைக்காரர்களைத் தான் செந்தமிழில் டகால்ட்டி என்னுவது வழக்கம்! :))

//நமக்கு தான் போதம் இல்லாமை. இறைவன் "ஞானானந்த மயம்" :)//

அதே சமயம் எவ்வளவு ஞானம் இருந்தாலும்...நிர்மலமும் கூட! ஸ்படிக ஆக்ருதிம்! அதனால் தான் அவன் ஞானம் வெறுமனே ஞானமாய் இல்லாமல்..."ஞான-ஆனந்தமாய்" இருக்கு!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP