சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
முன்னே ஒரு முறை இதே போல் கண்ணன் மேல் ஒரு காவடிச் சிந்து எழுதியிருக்கேன். இன்னொண்ணு எழுத திடீர்னு ஆசை வந்தது. தப்பில்லை தானே? இந்த பாடலை யாரேனும் பாடித் தந்தால் மகிழ்வோம் (கண்ணனும் நானும் :)
துள்ளித் துள்ளி வரும் கண்ணன்
தனை அள்ளி அள்ளிக் கொஞ்ச எண்ணும் - எந்தன்
கண்ணா மணி வண்ணா மலர் மன்னா கார் வண்ணா இங்கு
வாடா முன்னால் வாடா - கட்டி
முத்தம் ஒன்று தாடா!
ஓடி வரும் சின்னக் கண்ணன்
தனை நாடிச் செல்லும் நெஞ்சம் கொஞ்ச - செல்லக்
கண்ணன் அவன் கெஞ்சக் கெஞ்சக் கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சம் மிஞ்சி
மறைவான் ஓடி ஒளிவான் - பின்னர்
வருவான் இன்பம் தருவான்!
ஆரங்கள் மார்பினில் அசைய
மயிற் பீலியும் அதனுடன் இசைய - வண்ணக்
கண்ணன் அவன் மண்ணைத் தின்று அன்னை அவள் கண்ணீர் விட
சிரிப்பான் சீண்டிக் களிப்பான் - வாய்
திறப்பான் உள்ளம் நிறைப்பான்!
கன்னக் குழி தன்னில் வீழும்
மனம் கண்ணன் எழில் தன்னில் ஆழும் - அந்தப்
பொல்லாதவன் புல்லாங்குழல் துளை தன்னிலே இதழ் சேரவே
மலரும் நெஞ்சம் குளிரும் - உயிர்
உருகும் கண்கள் பெருகும்!
--கவிநயா
23 comments :
அருமையாக இருக்கிறது
இப்படியானவற்றை வாசிக்கும் சந்தர்ப்பம் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் கிடைக்கிறது...
வாழ்த்துக்கள்
கண்ணன் பாட்டுக்கு நல்வரவு-க்கா என்று அந்தக் கண்ணனும், இந்தக் கண்ணனும் சேர்ந்தே சொல்கிறோம்! வாங்க-க்கா! வாங்க! :))
ஆரம்பமே காவடிச் சிந்தோட வந்தாச்சா? அசத்தல்! Everybody Dance! :)
//சிரிப்பான் சீண்டிக் களிப்பான் - வாய்
திறப்பான் உள்ளம் நிறைப்பான்!//
சூப்பரு!
//கண்ணா மணி வண்ணா மலர் மன்னா கார் வண்ணா
இங்கு வாடா முன்னால் வாடா
கட்டி முத்தம் ஒன்று தாடா!//
டேய்! கண்ணப் பய புள்ள! திமிரா? அக்கா கேக்கறாங்க-ல்ல? கொடுறா!
கொடுத்துட்டு சீக்கிரம் வா! நாம கும்மியடிக்க இன்னொரு பதிவுக்குப் போவோனும்! :)
வாங்க அக்கா. நல்லா இருக்கு பாட்டு. பாடலாம்ன்னா எனக்கு இன்னும் மெட்டு பிடிபடலை.
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, திகழ்மிளிர் :)
வாங்க மயாதி. முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி :)
வருக கண்ணா. அதென்ன அப்படிச் சொல்லீட்டிங்க? ரெண்டாவது முறையால்ல வந்திருக்கேன், மறந்திடுச்சா? :(
பாட்டை ரசிச்சதுக்கு நன்றி :)
//கொடுத்துட்டு சீக்கிரம் வா!//
ம்ஹூம். அவரு வரேன்னாலும் நான் அனுப்பறதா இல்லை :)
வாங்க குமரா. நீங்க முன்னே ஒரு முறை பாடினீங்களே அதே மெட்டுதான். பதிவுல சுட்டி குடுத்திருக்கேன் பாருங்க. சமர்த்தா சீக்கிரம் பாடி அனுப்புங்க பார்ப்போம்... :)
மன்னிக்கணும் குமரா. தப்பா சொல்லிட்டேன். மெட்டு கொஞ்சம் வேற மாதிரிதான் வரும்.
http://www.youtube.com/watch?v=965sbx9rYb8
very good song ! :-)
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன்,
சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன்.
கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக
//itsSoldier said...
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன்,
சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன்.
கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக//
மிக்க நன்றி, உங்கள் முதல் வருகைக்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும்.
மெட்டு போட்டு கிடாரை கையில் எடுத்து பாடி பதிவு செய்து போட்டிருக்கிறேன். மிகுந்த நன்றி.
http://www.youtube.com/watch?v=mW0wbMJzLUk
// itsSoldier said...
மெட்டு போட்டு கிடாரை கையில் எடுத்து பாடி பதிவு செய்து போட்டிருக்கிறேன். மிகுந்த நன்றி.//
உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது. சிரத்தையாய் பாடி பதிந்தமைக்கு மிக்க நன்றி!
மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித்ரம், இந்தோனேசியா
//மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித்ரம், இந்தோனேசியா//
வருகைக்கு மிக்க நன்றி சித்ரம்.
பாடல் அருமை கவிநயா
நேரமிருந்தா நானும் பாட முயலுகிறேன்
//பாடல் அருமை கவிநயா
நேரமிருந்தா நானும் பாட முயலுகிறேன்//
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் அக்கா. காத்திருக்கேன்...
chinna chinna.patham vaitha kanana ni vava vava./.manivana ni vava vava
புல்லாங்குழல் ஊத தந்த கண்ணணே/// புல்லரிக்க வைத்த நிமிடங்கள் தான் எத்தனை ஐயா ///சித்ரம்/
//itsSoldier said... காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன், சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன். கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக// மிக்க நன்றி, உங்கள் முதல் வருகைக்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும்.