94. தாயார் குளிக்கும் அழகு - வெள்ளிக்கிழமை நீராட்டம் காணுங்கள்!
குளிப்பதைக் காணலாமா? குளிர்விப்பதைக் காணலாமா?
இறைவன் இறைவிக்குச் செய்யும் திருமுழுக்கு (அபிஷேகம்), திருமஞ்சனங்கள் வெறுமனே குளிப்பாட்டும் செயல் அல்ல!
உலகையும் உலகைத் தாங்கி நிற்கும் அகண்ட பரிபூர்ண சக்தியையும் குளிர்விக்கும் செயல் அது! கண்ணாரக் கண்டு தரிசிக்க வேண்டிய காட்சி!
உங்கள் வீட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டும் காட்சியை எத்தனை பேர் ரசித்துப் பார்த்து இருக்கீங்க?
என்ன என்னவெல்லாம் பாப்பாவுக்கு வீட்டில் பண்ணுவாங்க?
முதலில் மிதமான இதமான வெந்நீரில் சுகந்தப் பொடிகள் தூவி, நீர் வார்த்து விளவி வைப்பாங்க! பின்பு எண்ணெய்க் காப்பு! பின்பு வாசனைத் தூள் சீயக்காய் சேர்த்து, பூசி நீராட்டுவாங்க!
குளித்து முடித்ததும், தலையும் மேனியும் துவட்டி, பஞ்சுத் துவாலையால் ஒத்தி ஒத்தி எடுப்பாங்க!
கூடைக்கு அடியில் சாம்பிராணிப் புகை போட்டு, பாப்பாவின் கூந்தலை கூடை இடுக்கில் காட்டி நறுமணம் சேர்ப்பாங்க! ஆகா...அந்தக் காட்சியே காட்சி அல்லவா? இப்பவும் யாராச்சும் கூடை-சாம்பிராணிப் புகை காட்டுறாங்களா?
பின்பு மேனியெங்கும் பவுடர் பூசி, நெற்றியில் திலகமிட்டு, கன்னத்தில் கருஞ்சாந்து பொட்டு வைத்து திருஷ்டி கழிப்பாங்க! பட்டாடை உடுத்தி, நவமணி நகைகள் பூட்டி, கண்ணே நவமணியே என்று கண்ணேறு கழிப்பாங்க! "நாரணா நீராட வாராய்"-ன்னு பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனின் நீராட்டுக்கு என்றே பல பாசுரங்கள் பாடியுள்ளார்!
குழந்தைக்குச் செய்வதையே தான், இங்கு தாயாருக்கும் செய்கிறார்கள்!
தாயார் யார்? யாருக்குத் தாயார்? - எனக்கா? உனக்கா? உங்களுக்கா?
அவனுக்கா? அவளுக்கா? தேவனுக்கா? அசுரனுக்கா? விலங்குக்கா?
அனைவருக்கும் தாயார் அவள்! உலகன்னை! ஜகன் மாதா! ஜன்ம மாதா!
நம்மை ஈன்ற தாய் இந்த ஒரு ஜன்மத்துக்கு மட்டும் தான் அன்னை ஆகிறாள்! ஆனால் இவளோ ஜென்ம ஜென்மத்துக்கும் அன்னை!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம் ஜீவனுக்குப் பாலூட்டிச் சீராட்டும் அம்மா!
அவளை நீராட்டும் திருமஞ்சனக் காட்சி கீழே! கீழ்த் திருப்பதி என்று சொல்லப்படும் திருச்சுகனூர்! (திருச்சானூர்).
அங்கே அன்னைக்குப் பார்த்து பார்த்துச் செய்யும் ஸ்நானாதி தூப தீப சேவை! கீழுள்ள வீடியோவில் கண்ணாரக் காணுங்கள்!
சிவாலயங்களில் அபிஷேகம் என்றால் பெருமாள் ஆலயங்களில் திருமஞ்சனம்...நீரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து நீராட்டுவதால் இந்தப் பெயர்! அவ்வளவு தான் இரண்டிற்கும் வித்தியாசம்! அந்த நீரில் சுகந்த பரிமள பொருட்களான பச்சைக் கர்ப்பூரம், ஏலக்காய், வெட்டிவேர், மலர்கள்,
எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிகப் பவித்திரமான துளசீ தளம்!
நீர்-பால்-தயிர்-தேன்-இளநீர் என்று பஞ்சாமிர்த முழுக்கு!
ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தூபம் காட்டி, பட்டுத் துணியால் ஒத்தி எடுப்பது வழக்கம்!
ஐந்து அபிஷேகங்களும் முடிந்த பின் மஞ்சள் காப்பு செய்து, குங்குமப் பூ இடுகிறார்கள்! ஆயிரம் துளைகள் கொண்ட தாம்பாளத் தட்டின் வழியாக, தாரை தாரையாக அபிஷேகம்! சஹஸ்ர தாரை என்று பெயர்!
Shower Bath என்று சொல்லலாமா? :-)
இசையரசி எம்.எஸ்.அம்மாவின் தேன் குரலில், அன்னமாச்சார்ய கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது! அதை எளிமையான தமிழாக்கம் செய்துள்ளேன்! பாட்டின் மெட்டு மாறாமல்!
படித்துக் கொண்டே பாடிப் பார்த்து தமிழாக்கம் எப்படி இருக்குன்னும் சொல்றீங்களா?
ஒலிச்சுட்டிகள் இதோ:
* இசையரசி எம் எஸ் அம்மா
* பாலமுரளி
* பம்பாய் சகோதரிகள்
* வீணை - காயத்ரி
ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி
நீரஜா லயகுனு நீராஜனம்
பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி
ஜலஜாக்ஷி மோமுனகு ஜக்குவ குசம்பு லகு
நெலகொன்ன கற்பூரப்பு நீராஜனம்
பங்கயக் கண்ணினள் பால்முலைத் தாயினள் - அவள்
நிலையழகு கற்பூரத் தீப ஆரத்தி
அளிவேணி துருமுனகு, ஹஸ்த கமலம் புலகு
நிலுவு மாணிக்யமுல நீராஜனம்
மட்டுவார் குழலிக்கு, அவள் பங்கயக் கைநலம்
மாணிக்க மணியினால் தீப ஆரத்தி
பகடு ஸ்ரீ வேங்கடேசப் பட்டப் புராணீயை
நெகடு சதி களல குனு நீராஜனம்
அழகனவன் வேங்கடவன் பட்டத்து அரசிக்கு
நற்குண நங்கைக் கொரு தீப ஆரத்தி
ஜகதி அலமேலு மங்கா சக்கதன முல கெல்ல
நிகுடு நிஜ ஷோபனபு நீராஜனம்
அவனி அலர்மேல் மங்கைச் செல்வ நாயகி அவள்
அழகான வடிவுக்கு ஒரு தீப ஆரத்தி
ஷீராப்தி கன்யககு நீராஜனம்!ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி நீராஜனம்!நீரஜா லயகுனு நீராஜனம்!
பாற்கடல் பாவைக்குத் தீப ஆரத்தி!
திரு மகாலட்சுமிக்குத் தீப ஆரத்தி!
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி!
பாடல்: க்ஷீராப்தி கன்யககு
ராகம்: குறிஞ்சி
தாளம்: கண்டசாபு
வரிகள்: அன்னமாச்சார்யர்
கண்ணன் பாட்டு இன்னும் சில நாட்களில் செஞ்சுரி அடிக்கப் போகிறது! நூறைத் தொடும் இந்த நல்வேளையில்,
அடுத்த வாரம் முழுதும் திருவரங்கப் ப்ரியா என்னும் பதிவரின் தலைமையில் சிறப்புக் கச்சேரிகள் இருக்கு! எல்லாரும் வந்து கொண்டாடி மகிழுங்கள்!
Stay Tuned! :-))
18 comments :
உள்ளேன் ஐயா!
ஆஜர் சார்...
நன்றி நன்றி. வெள்ளிக்கிழமை இங்க லீவு நாள். அடப் பெருமாளே எப்பத்திரும்பி வந்து உன்னை பார்க்கிறதுன்னு நினைச்சேன். தாயாரே வந்துட்டார்.
ஒண்ணு உலகத் தாயார். இன்னோண்ணு எமெஸ் தாயார்.
KRA Anna, Nice one. Recently I enjoyed Srivilliputtur Sri Aandaal Marghazhi Neerattu Uthsavam Dharisanam.
Ithu pondru oru arpudhamana, azhahana, ory vaibhavam verenghum kana kidaikkathu ..
I purchased the DVD of this and often watch in my iPod.
I am expecting more from you. Continue your beautiful works..
Raghavan
கொத்ஸ்
அட்டென்டன்ஸ் நோட்டட்!
குழந்தைக் குளிப்பாட்டு டெக்னீக்கை எல்லாம் எடுத்து வுடுவீங்கன்னு பாத்தா ஒன்லி உள்ளேன் ஐயா சொல்லுறீங்க?
@மெளலி அண்ணா
தோடா! நீங்களும் ஆஜரா?
சரி அது என்ன ஆஜர் பேஜர்? மறத்தமிழன் கொத்தனாரைப் போல் தமிழில் சொல்ல ஆகாதா உமக்கு? :-)
@வல்லியம்மா
பெருமாளை நினைச்சீங்க! தாயார் வந்துட்டாங்களா! ஹிஹி! எங்கேயும் ஒரே வீட்டிலக்கண விதி தான் போல இருக்கு! :-)
எமெஸ் தாயார் எங்களுக்கும் தாயார்!
எண்ணெய்க் குளியலையும் சாம்பிராணி மணத்தையும் நினைவு படுத்தி ஏங்க வச்சுட்டீங்க! வெள்ளிக்கிழமை காலையில் உலகநாயகியின் தரிசனமும், நீராஜனமும் மனதைக் குளிர்வித்தது. தமிழாக்கம் பற்றி சொல்வதற்கான அறிவு எனக்கில்லை. ஆனால் நீங்க தமிழ்ல தந்திருப்பது இனிமையாக இருக்கிறது :) நன்றி, கண்ணா!
அமரகோசம் சொன்ன லோகஜனனியின் திருமுழுக்காட்டைத் தெலுங்குப் பாட்டின் தமிழ் வடிவத்தைப் படித்துக் கொண்டே சேவித்துக் கொண்டேன். நன்றி இரவிசங்கர்.
//உங்கள் வீட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டும் காட்சியை எத்தனை பேர் ரசித்துப் பார்த்து இருக்கீங்க?
என்ன என்னவெல்லாம் பாப்பாவுக்கு வீட்டில் பண்ணுவாங்க?
முதலில் மிதமான இதமான வெந்நீரில் சுகந்தப் பொடிகள் தூவி, நீர் வார்த்து விளவி வைப்பாங்க! பின்பு எண்ணெய்க் காப்பு! பின்பு வாசனைத் தூள் சீயக்காய் சேர்த்து, பூசி நீராட்டுவாங்க!//
>>>எங்க வீட்டுல என் 2 குழந்தைகளுக்கும் குழந்தையா இருக்கறப்போ ஜோராக்குளிப்பாட்டியிருக்கேன்...
கொழுக்மொழுக்குனு அதுங்க கையும் காலும் எண்ணைதேய்க்கும்போது கொள்ளை அழகா இருக்கும்.அதை தாய் கண்ணே பட்டுவிடும் என்பார்கள்..வாசனைப்பொடித்தான் சீக்காப்பொடி கிடையாது! ஒரு தாய்க்கு
தன் குழந்தையை குளிப்பாட்டுவது பிடிச்ச விஷய்மதான்!!>>>
//இப்பவும் யாராச்சும் கூடை-சாம்பிராணிப் புகை காட்டுறாங்களா//
ஸ்ரீரங்கம்ல இதுக்குன்னே ஒரு கூடை இருக்கும் அதுல தலைமுடியை பரப்பி புகை போட்டுக்குவோம்...ஹ்ம்ம் அதெல்லாம் எங்களோடயே போயே போச்..இப்போ எங்க போறது அதுக்கெல்லாம்?:)
//கண்ணாரச் சேவித்துக் கைகூப்பி மகிழுங்கள்! நம்மைச் சிறுவயதில் குளிப்பாட்டிய அன்னைக்கு, இன்று நாம் செய்யும் திருமஞ்சனம்!
இசையரசி எம்.எஸ்.அம்மாவின் தேன் குரலில், அன்னமாச்சார்ய கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது! அதை எளிமையான தமிழாக்கம் செய்துள்ளேன்! பாட்டின் மெட்டு மாறாமல்!//
சேவித்தேன் கேட்டு மகிழ்ந்தேன்...பாடல்வரிகளுக்கு அர்த்தம் தெரியமலேயே இதுநாள் வரை இருந்த எனக்குஇன்று அர்த்தம்புரிந்தது..இனி ஒன்றிப்பாடலாம் நன்றி என் செல்லத்தம்பியே!
அழகான வர்ணனை. பாட்டும் அமர்க்களம். இது என்ன விநோதம் கண்ணா. நாம் குளிக்கும் போது யாரையும் பார்க்கவிடமாட்டோம் ஆனால் சாப்பிடும்போது யாரும் பார்க்கலாம். ஆனால் அன்னை குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறோம், சப்பிடும்போது(நைவேத்தியம்) யாரும் பார்க்கக்கூடாது
@ராகவன்
ஆண்டாள் நீராட்டு உற்சவமா? நேராகச் சென்று தரிசித்தீர்களா? இல்லை இணையத்திலா? சுட்டி தாங்க ராகவன்! சுட்டி! :-))
இன்னும் நிறைய தருகிறோம்! இப்போ தானே நூறு ஆகப் போகிறது! :-)
@கவி அக்கா
//தமிழாக்கம் பற்றி சொல்வதற்கான அறிவு எனக்கில்லை//
கவின் தமிழ்க் கவிதைகளை ஆக்கித் தமிழ்க் கடவுள் முருகன் மீது பாடும் கவிநயா-வா இப்படிப் பொய் சொல்வது!
கவிதைக்குப் பொய் அழகு! கவி அக்காவுக்கு அல்ல! :-))
//ஆனால் நீங்க தமிழ்ல தந்திருப்பது இனிமையாக இருக்கிறது :)//
நன்றிக்கா நன்றி!
ஹம் பண்ணிப் பாத்தீங்களா?:-)
@குமரன்
//அமரகோசம் சொன்ன லோகஜனனியின்//
அமரகோசமா? அப்படின்னா என்ன குமரன்? நூக்கோசம், நாக்கோசம்-னு தெலுங்கல சொல்லுவாங்க! அது மாதிரியா? மெளலி அண்ணா, ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா? :-)))
அமரகோசம் சொன்ன லோகஜனனி-ன்னு சொன்னீங்களே! நல்ல வேளை அமரகோசம் சொன்ன "ஒரே" லோகஜனனீ-ன்னு சொல்லாத வரை சூப்பர் தான்! :-)
//திருமுழுக்காட்டைத் தெலுங்குப் பாட்டின் தமிழ் வடிவத்தைப் படித்துக் கொண்டே சேவித்துக் கொண்டேன்//
குமரன், திராச சொல்லி இருக்காரு பாருங்க!
அபிஷேகம் காண்கிறோம்!
நிவேதனம் திரை போடுகிறார்கள்! - ஏன்னு தெரியுமா?
@ஷைலுக்கா
இந்த வாரம் முழுக்க நீங்க தான் கண்ணன் பாட்டில் கதாநாயகியாமே!
//ஒரு தாய்க்கு
தன் குழந்தையை குளிப்பாட்டுவது பிடிச்ச விஷய்மதான்!!//
தந்தைக்கும் தான்! :-))
//ஸ்ரீரங்கம்ல இதுக்குன்னே ஒரு கூடை இருக்கும் அதுல தலைமுடியை பரப்பி புகை போட்டுக்குவோம்...//
அட...குழந்தைக்குக் கூடை வாங்கச் சொன்னா, நீங்க புகை போட்டுப்பீங்களா?
எங்க கிராமத்தில் இப்பவும் இது உண்டுக்கா!
//பாடல்வரிகளுக்கு அர்த்தம் தெரியமலேயே இதுநாள் வரை இருந்த எனக்குஇன்று அர்த்தம்புரிந்தது..இனி ஒன்றிப்பாடலாம் நன்றி என் செல்லத்தம்பியே!//
மறுபடியும் கள்ளத் தம்பி செல்லத் தம்பி ஆனதன் காரணத்தை ஜி.ராகவேந்திர சுவாமிகள் அறிவாரோ? :-)))
@திராச
//நாம் குளிக்கும் போது யாரையும் பார்க்கவிடமாட்டோம் ஆனால் சாப்பிடும்போது யாரும் பார்க்கலாம். ஆனால் அன்னை குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறோம், சப்பிடும்போது(நைவேத்தியம்) யாரும் பார்க்கக்கூடாது/
நைவேத்தியத்துக்கு ஏன் திராச திரை போடுறாங்க?
வீட்டில் போடுவதில்லை!
ஆலயத்தில் மட்டும் ஏனோ?
கே.ஆர்.எஸ். அண்ணா, நேரிலும் தரிசித்தேன் வீடியோவும் உள்ளது. தங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாமா?.தாயார் புறப்பாடு கண்டருளி, மார்கழி நீராடி, சுவாமி மணவாள மாமுனிக்கு சேவை சாதிக்கும் வைபவம் அற்புதமானது.
- ராகவன்
@வல்லியம்மா பெருமாளை நினைச்சீங்க! தாயார் வந்துட்டாங்களா! ஹிஹி! எங்கேயும் ஒரே வீட்டிலக்கண விதி தான் போல இருக்கு! :-) எமெஸ் தாயார் எங்களுக்கும் தாயார்!