Wednesday, June 11, 2008

96. எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆகா...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி என்றாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"

"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அந்தக் கண்ணனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்! கிருஷ்ண பரமாத்மா!
சண்டை வேணாம்-னு தூது எல்லாம் போவாரே! ஆனாப் போயிட்டு வந்து சண்டையைச் சூப்பரா போடுவாரே! அவரு!"

"அடங்கொக்கமக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா"-ன்னு இசை அமைக்க...
இளையாராஜா, "பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, கொஞ்சம் இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதை எல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"இளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது, அப்போது!
வெகுஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை கொடுப்பாரு!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

இளையராஜா வீட்டு இட்லி சட்டி கூட இசை அமைக்கும்!
தோசைத் தட்டு கூடத் தோடி பாடும்! - அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!

எந்த ஒரு மகோன்னதமான இசை அமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல? எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி, கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்! ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா, எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்!
ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்! போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்! ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!

அந்தச் சமயத்தில் வந்த படம் தான் "மெல்லத் திறந்தது கதவு"!
ராஜா-விஸ்வநாதன் ஒற்றுமைக்காக - மெல்லத் திறந்தது கதவு!

இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப் பட்டது!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு! - கண்ணன் எம்பெருமானே ஒற்றுமைக்கு வழி வகுத்தான்!
* குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா மீனிங் தான் புரியலை!
* பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பாடல்களின் பின்னணிக்கு, துவக்கம் மற்றும் Interlude-களுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைப்பாரு!
இப்படி ஒரு ஜென்ட்டில் மேன் அக்ரீமென்ட்டு போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! படத்தில் மற்ற பாடல்களும் ஹிட் தான்!

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!
இன்னிக்கி 96th பதிவு! 100க்கு என்ன பண்ணலாம் மக்கா?


முதலில் MSV இசையமைக்க, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு! - இங்கு கேட்கலாம்!

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!

இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?
என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!
சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரிஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?
வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: ???
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)
படம்: மெல்லத் திறந்தது கதவு


இப்போ ரோல் சேஞ்ச்!
ராஜா இசையமைக்க, MSV பின்னணி!

** பாவன குரு பவன புரா! - இங்கே கேட்கலாம்!


பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே!
ஜீவன தர சங்காசம், கிருஷ்ணம் கோலோகேசம்!
பாவித நாரத கிரீசம், திரிபுவனா வனாவேசம்!!
(பாவன குரு-பவன-புராதி)

பூஜித விதி புரந்தரம், ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், அஜித முதாரம்!! - கிருஷ்ணா
ஸ்மர சத சுபகா (ஆ)காரம், நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், லலிதா சோதரம் பரம்!!

(பாவன குரு-பவன-புராதி)

(இந்தப் பாட்டின் மெலடி சூப்பரா இருக்குப்பா, தப்லா-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)


குரல்: சித்ரா (தானே ???)
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), எம்.எஸ்.விஸ்வநாதன் (பின்னணிக்கு),
படம்: மெல்லத் திறந்தது கதவு
ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா, நம்ம அமலா!
இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு பவன புரா"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!
என்றாலும்...படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)

50 comments :

கவிநயா said...

சும்மா சொல்லக் கூடாது. "பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே!" பாடல் வெகு இனிமை!

//அமலா! அமலா! அமலா! :-)//

ஆஹா. அமலான்னா அவ்ளோ இஷ்டமா :) இல்ல ஒரு வேள மாலனை சொல்றதா நினைச்சுக்கிட்டு மாத்தி சொல்லீட்டிங்களோ :))

(வ.வா.ச.அ. சிங்கம், கவனிக்கவும்!)

கானா பிரபா said...

kalakkal thala

கோவி.கண்ணன் said...

கேஆர்எஸ்,

அது என்ன சுசிலாம்மாவுக்கு மட்டும் சுசிலாம்மா ன்னு பெயர் போடுறிங்க, ஜானகி அம்மாவுக்கு மட்டும் ஏன் ஜானகின்னு போடனும் ?

:)

வந்தேன் வாசித்துவிட்டேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

enakkum romba romba pidiththa paadal ithu. :-)

மதுரையம்பதி said...

அண்ணா,

என்னால இப்போ பாடல்களை கேட்க முடியல்ல...ஆனா நினைவில் இருப்பதை வச்சு சொல்றேன்...

"ஈசம் ஆச்ரயே" இல்லை, கீதமாச்ரயே அப்படின்னு நினைக்கிறேன். யேசுதாஸ் பாடி கேட்டிருக்கிறேன்..எதுக்கும் சரிபாத்துக்குங்க...

Raghavan said...

எனது பாட்டி என் சிறு வயதில் அடிக்கடி ஒரு பாடல் பாடுவார்கள். சரியாக
ஞாபகமில்லை. தங்களுக்கு தெரிந்தால், தயவுசெய்து பதிவிடவும்.

"ராமா ராகவா !
கருணாமூர்த்தியே உன் கடைக்கண் பாராயோ !"

சின்ன அம்மிணி said...

இந்தப்படத்தில வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே கூட சூப்பரான பாட்டு, அமலாவுக்காகத்தான் இந்தப்படமே பாத்தது. அப்பறம் பாட்டுக்களுக்காக

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

பாவன குருபவனபுராதீசம் ஆச்ரயே பாடலுக்குப் பொருள் தெரியாமலேயா குருவாயூரப்பன் படத்தைப் போட்டிருக்கீங்க? நம்பிட்டேன். :-)

இது தான் கண்ணன் பாட்டுல வர்ற முதல் வடமொழிப் பாடலா?

குமரன் (Kumaran) said...

//"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அந்தக் கண்ணனா?"//

உண்மையை எப்பத் தான் ஒத்துக்கப் போறீங்க? உங்க பேரு கண்ணபிரானா இரவிசங்கரா? கண்ணன் ஐயாகிட்ட கண்ணபிரான்னு சொல்லிகிறீங்க - இந்தப் பக்கம் இராகவன் கிட்ட 'எங்கம்மா என்னை சங்கரா சங்கரான்னு தான் கூப்புடுவாங்க'ன்னும் சொல்லிக்கிறீங்க. இது எதுக்கு? :-)

கண்ணன் பாட்டில் வடமொழிப் பாடல்களுக்கும் அனுமதி உண்டென்றால் 'பாவன குருபவனபுராதீசம் ஆச்ரயே' பாடலை இன்னொரு இடுகையாக (103 அ 104) போட்டுப் பொருள் சொல்கிறேன். ஆனால் 'பாவித நாரத கிரிசம்' என்ற சொற்றொடருக்கு மட்டும் இரவிசங்கர் பொருள் சொல்ல வேண்டும். அப்போது தான் அவர் வீர சைவரா வீர வைணவரா என்று தெள்ளத் தெளிவாகத் தெரியும். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@குமரன்
//பாவன குருபவனபுராதீசம் ஆச்ரயே பாடலுக்குப் பொருள் தெரியாமலேயா குருவாயூரப்பன் படத்தைப் போட்டிருக்கீங்க? நம்பிட்டேன். :-)//

ஆகா...இவர் எப்படி தான் இப்படி ஒவ்வொன்னையும் நோட் பண்ணிடறாரோ?
ஓ...மருதையில சாமீ கூடயே வாதம் பண்ணவுங்க தானே இவுங்க? :-)

குமரன்,
குரு=குரு
பவன=வாயு
புரா=ஊர்
குரு-பவன-புரா=குருவாயூர்!
இவ்ளோ தாங்க எனக்குத் தெரியும்!

இந்தப் பாட்டை முன்னாடி கேட்டிருக்கேன், ஆனா இவ்வளவு உன்னிப்பா கேட்டதில்லை! இந்தப் பதிவுக்காகத் தான் திரும்பத் திரும்பக் கேட்டேன்! ஏதோ சுமராத் தான் புரிஞ்சுது! நான் தப்லா வாசிப்புல கொஞ்சம் மயங்கிட்டதால, பாட்டின் பொருளை ரொம்ப தேட முடியலை!

அதுவும் எனக்கு என்னாங்க பெருசா வடமொழி தெரியும்?
நீங்களோ மெளலி அண்ணாவோ தான் ஒதவிக்கு வரணும்!

வேண்டுகோள்:
இப்போ, பாட்டுக்கு லைட்டாப் பொருள் சொல்லுங்களேன்!
வரிக்கு வரி பொருள் 103ஆம் இடுகைல வச்சிக்கலாம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இது தான் கண்ணன் பாட்டுல வர்ற முதல் வடமொழிப் பாடலா?//

அச்சச்சோ! ஆமாம்! இதான் பர்ஷ்ட்டு!
நான் அதோட இத கலந்து தப்பு ஒன்னும் செஞ்சிடலையே ஜிரா? :-)

இதுக்கு முன்னாடி தெலுங்குப் பாட்டு ஒன்னு ரெண்டு நாளைக்கு முனாடி கண்ணன் பாட்டுல வந்திச்சி! ஆனா அதுவும் நம்ம மொழி! அதுனால ஓக்கே தான்!
ராகவனுக்கும் தெலுங்குன்னா உசுரு! ப்ராணா! ப்ரேமா :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உண்மையை எப்பத் தான் ஒத்துக்கப் போறீங்க? உங்க பேரு கண்ணபிரானா இரவிசங்கரா?//

யார் யார் என்னை எப்படி எப்படி அழைக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் நான் அப்படி அப்படித் தெரிவேன்! :-)

//கண்ணன் ஐயாகிட்ட கண்ணபிரான்னு சொல்லிகிறீங்க - இந்தப் பக்கம் இராகவன் கிட்ட 'எங்கம்மா என்னை சங்கரா சங்கரான்னு தான் கூப்புடுவாங்க'ன்னும் சொல்லிக்கிறீங்க. இது எதுக்கு? :-)//

வூட்டுல மொத்த குடும்பமும் சைவம்! அடியேன் மட்டும் தானே அசைவ வைணவம்! :-)

அம்மா, அத்தை, சொந்தக்காரவுக எல்லாரும் சங்கரா தான்!
ஆனா பாட்டி கூப்பிட்டது "கண்ணா"! (அப்பா பேரை அப்படியே கூப்புடுவாங்க)

வீடு வரை வரும் நெருங்கிய நட்பு வட்டத்துக்கும் இது தொத்திக்கிச்சு! அதான் கண்ணா என்பதும் கூடவே ஒட்டிக்கிச்சி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
enakkum romba romba pidiththa paadal ithu. :-)
//

மை ஃபிரண்ட் யக்கா...
எந்தப் பாட்டு-ன்னு தெளீவா ஜொள்ளனும்-ல?
குழலூதும் கண்ணனா?
இல்ல பாவன-குரு-பவன-புரா வா?

(பாவனா குரு-ன்னு படிக்காதீங்க! அது நானு! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கவி அக்கா
//ஆஹா. அமலான்னா அவ்ளோ இஷ்டமா :)//

நாகார்ஜூனா-ன்னு அம்புட்டு வெறுப்பு,
எனக்கும் இன்னொருத்தருக்கும்! :-)

//இல்ல ஒரு வேள மாலனை சொல்றதா நினைச்சுக்கிட்டு மாத்தி சொல்லீட்டிங்களோ :))//

நோ நோ நோ
ப்ர்ஷ்ட்டு அமலா! நெக்ஷ்ட்டு ஒன்லி மாலவா! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கவி அக்கா
//வ.வா.ச.அ. சிங்கம், கவனிக்கவும்!//

ச்சே ரிசானைப் போயி அசிங்கம்-ன்னு சொல்லிட்டீங்களே! அவன் ரேஞ்சு என்னா?
ரிசானு...நீ எதுக்கும் இன்னொரு மாப்பிள்ளைப் பதிவு போட்டுருப்பா ராசா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கா.பி அண்ணாச்சி
நன்றி தல; கலக்குனது MSV!
மொத பாட்டுல ட்யூன்
ரெண்டாம் பாட்டுல தபேலா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கேஆர்எஸ்,
அது என்ன சுசிலாம்மாவுக்கு மட்டும் சுசிலாம்மா ன்னு பெயர் போடுறிங்க, ஜானகி அம்மாவுக்கு மட்டும் ஏன் ஜானகின்னு போடனும் ?
வந்தேன் வாசித்துவிட்டேன்//

ஒங்க பேரு கோவி நாரதனா?

அதில்லண்ணா!
சுசீலாம்மா-ன்னு ஒரு தனி மரியாதை! அவங்க லெவல் அப்படி! மெலடி கிளாசிக்கல்-னு கொஞ்சம் பார்த்தா மரியாதை தான் வரும்!

ஜானகி அப்படி இல்ல! அவிங்களும் மூத்தவங்க தான்! ஆனா நேத்து ராத்திரி யம்மா-ன்னு எல்லாம் பாடுறதனால எங்களைப் போல இளசுங்க ஒரு தோழி மாதிரி நெனச்சிக்குவோம்! சோ ஒன்லி ஜானகி! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
"ஈசம் ஆச்ரயே" இல்லை, கீதமாச்ரயே அப்படின்னு நினைக்கிறேன்//

குமரனுக்குச் சொன்னதைப் பாருங்கண்ணா!
எனக்குப் புரிஞ்சதே அந்த ஒரு லைன் தான்! அதுலயும் கைய வைக்கறீங்களே!

குரு-பவன-புரா-ஆதி=குரு-வாயூ-ருக்கு
ஈசம் ஆஸ்ரயே=ஈசனை ஆச்ரயிக்கவும் (வணங்குங்க)

சரி தானா-ன்னு குமரனுக்கு வெயிட்டீஸ்!

குமரன் (Kumaran) said...

சுருக்கமாக....

தூய்மையான குருவாயூரப்பனை அடைகிறேன்
உயிரானவனே கிருஷ்ணா கோ லோகத் தலைவனே
நாரதரையும் சிவனையும் படைத்தவனே
மூவுலக வடிவானவனே

பிரம்மனாலும் இந்திரனாலும் வணங்கப்படுபவனே
குழலூதும் கண்ணனே
ஆய்ப்பாடியர்களுக்கு ஆனந்தம் தருபவனே
வெல்ல முடியாதவனே வள்ளலே கிருஷ்ணா

என்றும் எண்ணத்தக்க அழகான திருமேனி உடையவனே
அளவில்லாத கருணையால் நிறைந்தவனே
ராதையின் திருமுக சந்திரனுக்குச் சகோரம் போன்றவனே
லலிதையின் உடன்பிறந்தவனே பரனே

நிலாவொளியையே உண்டு வாழும் சகோரப்பறவையைப் பற்றிப் படித்திருப்பீர்கள்.

குமரன் (Kumaran) said...

ஸ்மர சத சுபக ஆகாரம் என்பதற்கு நூறு மன்மதர்களை ஒத்த வடிவுடையவனே என்னிலும் தகும். ஸ்மர என்பதற்கு எண்ணுதல், மன்மதன் என்று இரு பொருள் உண்டு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மிக்க நன்றி குமரன்!
உங்க பொருளுரையைப் படிச்சிட்டு ஆபீஸ்-ல இன்னொரு முறை பாட்டு கேட்டேன்! போர்ட்டோ ரிக்கோவும் வந்து என்ன கேக்கறேன்-ன்னு கேட்டாங்க! :-)

//நாரதரையும் சிவனையும் படைத்தவனே
//

போச்சு!
அம்பி, ஜிரா, மெளலி அண்ணா ஸ்டாம்ப்பு எடுத்துக்கிட்டு வாங்க!
:-)
சிவ சிவா!

குமரன் (Kumaran) said...

இது உங்க இடுகை. அப்படியே அவங்க எல்லாரும் ஸ்டாம்ப்பு எடுத்துக்கிட்டு வந்தாலும் வழக்கம் போல உங்களைத் தான் குத்துவாங்க.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இது உங்க இடுகை.//

இது உங்க வலைப்பூ! நீங்க தான் ஓனர்!

//அப்படியே அவங்க எல்லாரும் ஸ்டாம்ப்பு எடுத்துக்கிட்டு வந்தாலும் வழக்கம் போல உங்களைத் தான் குத்துவாங்க//

சொன்னது நீங்க! ஸ்டாம்பு எனக்கா?
உங்க போதைக்கு கேஆரெஸ் ஊறுகாயா?

குமரன் (Kumaran) said...

//இது உங்க வலைப்பூ! நீங்க தான் ஓனர்!
//

எப்பதில இருந்து?

இப்படி இன்னொருத்தரைச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க. அவரு என்னடான்னா சொல்லிக்காமலேயே கழண்டுக்கிட்டார். நான் இன்னும் நிறைய நாள் இந்த குழுப்பதிவுல இருக்கணும். அதனால நீங்களே ஓனரா தொடர்ந்துக்கோங்க. :-)

G.Ragavan said...

மிகவும் அருமையான பாட்டு. ஆனா ஒரு சிறு திருத்தம். மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் முதன்முதலா இசையில இணைச்சது தாய் மூகாம்பிகை. :-)

அன்னையின் அருள் வந்து மோதி அப்படிச் செஞ்சது.

ஆனாலும்....

ஆனாலும்....

ஆனாலும்....

ஆனாலும்....

அடுத்த பின்னூட்டத்தப் பாருங்க :)

G.Ragavan said...

ஆனாலும்...

ஆனாலும்...

நீங்க கண்ணன் அருள்னே சொல்லுங்க...

ஏன்னா... அதுல மெல்லிசை மன்னர் "நாரணன் தேவி திருமகளே..." அப்படீன்னுதான் பாடுவாரு. :)

அதாவது படத்தோட இறுதிப் பாட்டு பாலமுரளி கிருஷ்ணா, மெல்லிசை மன்னர், சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பாடுவாங்க.

பாலமுரளி கலைமகளுக்கும்
மெல்லிசை மன்னர் அலைமகளுக்கும்
சீர்காழி மலைமகளுக்கும் பாடியிருப்பாங்க.

அதுவுமில்லாம மெல்லிசை மன்னரோட இசையில் முதன்முதலில் இளையராஜா பாடியது கிருஷ்ணகானம் பாகம்-2க்காக. அந்தப் பாடல் கிடைக்காமல்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஏழிசை வேந்தர் பாடிய தேவதாருவே காமதேனுவே என்ற பாடல் மிக மிக அருமையாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

ஆகா. இப்படி இராகவனும் இரவிசங்கரும் ஒருவரை ஒருவர் வாரிவிட்டுக்கொள்ளாமல் பேசுவதைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறது. மனதிலேயே சுற்றிப் போட்டுவிட்டேன். :-)

G.Ragavan said...

மெல்லத்திறந்தது கதவு படத்திற்காக இசையமைக்கப்பட்ட முதற்பாடல் குழலூதும் கண்ணனுக்குப் பாடல் அல்ல. அது "வா வெண்ணிலா" பாட்டு.

மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் இணைத்த பெருமை சுந்தரராஜனையே சாரும். சுந்தரன்னா அழகன். அழகன்னா முருகன்தானே ;)

ஆர்.சுந்தர்ராஜன் முதன்முதலா சுகமான ராகங்கள் படத்துல மெல்லிசை மன்னர் இசையில இசைஞானியைப் பாட வெச்சாரு. அதோட தொடர்ச்சியாதான் மெல்லத்திறந்தது கதவுல அவரு இவங்க ரெண்டு பேரையும் ஒன்னா இசையமைக்க வெச்சது.

இருவரும் இசையமைக்க உட்கார்ந்த பொழுது இளையராஜா சொன்னாராம் மெல்லிசை மன்னரிடம்..."அண்ணே...சி.ஆர்.சுப்பாராமன் சண்டிராணியில ஒரு பாட்டு போட்டிருக்காருன்னே. அந்தப் பாட்டு மாதிரி ஓரு பாட்டாச்சும் போடனும்"

இவரும் சிரிச்சிக்கிட்டே "என்ன பாட்டு?"ன்னு கேட்டாராம்.

வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதேங்குற பாட்டு. பானுமதி பாடியிருக்காங்க.

அப்ப மெல்லிசை மன்னர் சொன்னாராம். அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பாராமனைத்தான் இசையமைப்பாளரா நியமிச்சிருந்தாங்களாம். ஆனா...திடீர்னு அவரு காலமாயிட்டாராம். இந்த சமயத்துல சண்டிராணி, தேவதாஸ் போன்ற படங்களுக்கு இசையமைக்கனும். ஆனா நியமிச்ச சுப்பாராமனும் போயிட்டாரு. அப்ப அவர் கிட்ட உதவியாளரா இருந்த இவரைக் கூப்டு இசையமைக்கச் சொன்னாங்களாம். இவரும் ஒத்துக்கிட்டாராம். அதுவும் ஒரு கண்டிசனோட. அதாவது இசை விஸ்வநாதன்னு போடாம குருவோட பேரான சி.ஆர்.சுப்பாராமன்னுதான் போடனும்னு சொன்னாராம். தேவதாஸ், சண்டிராணி படங்க அவர் பேர்ல வந்த காரணம் இதுதானாம்.

உடனே...இளையராஜா... அப்ப...அந்தப் பாட்டு மாதிரி ஒரு பாட்டு குடுங்கன்னு கேட்டாராம். அந்த பாட்டு மாதிரி ஏன்...அந்தப் பாட்டையே தர்ரேன்னு... அந்தப் பாட்டோட மீட்டரையே பயன்படுத்தி போட்ட மெட்டுதான் வா வெண்ணிலா பாட்டு.

அப்புறம் இன்னொரு திருத்தம். சக்கரக் கட்டிக்கு சித்திரக் குட்டிக்குப் பாட்டுல சித்ராவும் ஷைலஜாவும் கிடையாது. சசிரேகா மற்றும் குழுவினர். :)

கவிநயா said...

//ச்சே ரிசானைப் போயி அசிங்கம்-ன்னு சொல்லிட்டீங்களே! அவன் ரேஞ்சு என்னா? //

அச்சோ! :) ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! நீதானப்பா காப்பத்தணும்!

vishy said...

இந்த பாவன குரு பாடலை செம்பை வைத்திய நாத பாகவதர் எழுதிப் பாடினார். அவருடைய சிஷ்யரான ஜேசுதாஸ் தொடர்ந்து பாடி வருகிறார். (இவர்கள் கதை தான் கானம் என்றபெயரில் வந்த மலையாளத்திரைப்படம் என்று கூறக்கேட்டிருக்கிறேன்)

மெல்லிசை மன்னர் இந்த படத்திற்கு பிறகு இளையராஜாவிடம் உதவியாளராக இருந்தார் என்பது மற்றொரு செய்தி.

பதிவிட்டு பழைய நினைவுகளைக் கிளறிய கே.ஆர். எஸ்க்கு நன்றி.

அன்புடன் விச்சு

குமரன் (Kumaran) said...

ம்ம்ம். எங்க முருகன் அழகன் தான். அதில் ஐயமே இல்லை. ஆனால் எனக்குச் சுந்தரராஜன் என்றால் எங்கள் திருமாலிருஞ்சோலை அழகர் தான் நினைவுக்கு வருகிறார். அவர் பேரு தானே சுந்தரராஜபெருமாள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
ஆனா ஒரு சிறு திருத்தம். மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் முதன்முதலா இசையில இணைச்சது தாய் மூகாம்பிகை. :-)//

ஜிரா
தாய் மூகாம்பிகையில் அவர்கள் இசையில் இணையவில்லை!
அதுக்கு ராஜா தான் இசையமைப்பு!

MSV கடைசிப் பாட்டை ஒரு பாடகராத் தான் பாடுவாரு, அதுவும் க்ரூப் சாங்!MSV, பாலமுரளி, சீர்காழி, மலேசியா வாசுதேவன், ஜானகி-ன்னு கோரஸ்!

இருவரும் "இசையில்" இணைந்தது, (ஒரே உறையுள் இரு கத்திகளாக), மெல்லத் திறந்தது கதவில் தான்!

அதைத் தான் கண்ணன் அருள் என்று சொன்னேன்!

ஆனாப் பாருங்க, நீங்க சொன்னா மாதிரி,
MSV பாடகரா வந்த போதும் சரி,
ராஜா பாடகரா வந்த போதும் சரி,
அப்பவும் கண்ணன் பாடல் தான் இணைத்தது!

இசையிலும் கண்ணனே இணைத்தான்!
பாட்டிலும் கண்ணனே இணைத்தான்!
வேய்ங்குழல் தன்னில் இணைத்தான்!
இன்பென்று சொல்வதும் இதைத்தான்!

தமிழ்க்கடவுள் மாலவன் இப்படித் தமிழ் சினிமாவிற்குமா அருள்மழை பொழிந்தான்! வாழ்க! வாழ்க!! :-)

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...

ம்ம்ம். எங்க முருகன் அழகன் தான். அதில் ஐயமே இல்லை. ஆனால் எனக்குச் சுந்தரராஜன் என்றால் எங்கள் திருமாலிருஞ்சோலை அழகர் தான் நினைவுக்கு வருகிறார். அவர் பேரு தானே சுந்தரராஜபெருமாள். //

குமரன், உங்கள் திருமால் இருஞ் சோலையில் பெயர் சௌந்தரராஜப் பெருமாள். :) சுந்தரராஜன் இல்லை. அடுத்த வாட்டி கோயிலுக்குப் போறப்போ நல்லா கவனிச்சுப் பாருங்க.

கவிநயா said...

தெரியாத விஷயத்துல மூக்கை நுழைக்கிறேன். உடைச்சுக்க போறேன்னு பட்சி சொல்லுது.. இருந்தாலும்.. :)

சுந்தரர்னா மதுரையில இருக்காரே மீனாட்சி ஹஸ்பெண்ட். அவரில்லையோ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆனால் எனக்குச் சுந்தரராஜன் என்றால் எங்கள் திருமாலிருஞ்சோலை அழகர் தான் நினைவுக்கு வருகிறார். அவர் பேரு தானே சுந்தரராஜபெருமாள்//

நாகை அழகன் பேரும் சுந்தரராஜப் பெருமாள் தான்! நாகை அழகியார்-ன்னே அவருக்குப் பேரு!

சுந்தரம், செளந்தரம் எல்லாமே செளந்தர்யம் தான்! அழகு தான்!
சுந்தரராஜன்-னா அது என்னிக்குமே சுந்தரராஜப் பெருமாள் தான்! :-)

//சுந்தரன்னா அழகன். அழகன்னா முருகன்தானே ;)//

சுந்தரன்-னா முருகன் இல்லை!
சுந்தரன்-னா (அழகன்-னா) ஸ்கந்தன்!
இதுக்கு மட்டும் வடைமொழி கேக்குதாமா? :-)

குமரன் (Kumaran) said...

இல்லீங்கோ. 100% உறுதியாகச் சொல்கிறேன். அவர் பெயர் சுந்தரராஜ பெருமாள் தான். அடுத்த வாட்டி கோவிலுக்குப் போகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? கூகிளார்கிட்ட கேட்டாலே சொல்லிடுவாரே. கேட்டுப் பாருங்க.

குமரன் (Kumaran) said...

கவிநயா அக்கா. ஐயமே இல்லை. அவரும் சுந்தரர் தான். அவர் சுந்தரேஸ்வரர். தமிழ்ல சொன்னா சொக்கநாதர். :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கவி அக்கா, கையைக் குடுங்க!
இதையே தான் நானும் டைப்பறேன்! உங்க பின்னூட்டமும் வருது!

இன்னொரு சுந்தரன் சுந்தரேஸ்வரர்!
பாருங்க எங்க ஈசனும் சுந்தரன், மாலும் சுந்தரன்!
சுந்தரத்துக்கும் அழகுக்கும் ஏகபோக உரிமை எல்லாம் யாரும் கொண்டாடிக்க முடியாது! :-)

சுந்தரேஸ்வரர்! ஆனா அவரு சுந்தரராஜன் இல்ல! படத்தின் இயக்குனர் சுந்தரராஜன் தான்! ஆக இசை இமயங்களைச் சேர்த்து வச்சது சுந்தரராஜனே! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜிரா

குழலூதும் கண்ணனுக்கு MSV இசையமைச்ச பாட்டு!
அதை இப்போ வந்த சீனி கம் இந்திப் படத்துக்கு ராஜா யூஸ் பண்ணிக்கிட்டாருல்ல?

ச்சே என்ன பாட்டுப்பா அது? அமிதாப்பே பாடுவாரு! ஸ்ரேயா கோஷலும் பாடுவாங்க!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஆஹா. அமலான்னா அவ்ளோ இஷ்டமா :) இல்ல ஒரு வேள மாலனை சொல்றதா நினைச்சுக்கிட்டு மாத்தி சொல்லீட்டிங்களோ :)//

தெரியாதா கவிநயா?
அமலான்னா அவருக்கு அவ்ளோ இஷ்டம்.நல்லவேளை நாகார்ஜூனா கல்யாணம் பண்ணிட்டாரு.இல்லேன்னா இவர் பின்னால சுத்தி ஒரு அமலாயணமே எழுதியிருப்பாரு நம்ம பார்ட்டி:P

//(வ.வா.ச.அ. சிங்கம், கவனிக்கவும்!)//

சிங்கம் கவனிச்சிட்டுத்தான் இருக்கு.அந்த ஆண்ட்டி போட்டோ கிடைக்கல..இல்லேன்னா ரெண்டு பேர் போட்டோவையும் போட்டு செமத்தியா கும்மியிருக்கும்ன்னா நினைக்கிறீங்க..?

இல்லீங்க..இந்த மாச சிங்கத்தால அது முடியாது..ஏன்னா அது ரொம்ம்ம்ம்ம்ப அப்பாவிச் சிங்கம்.

கோபிநாத் said...

முருகன் - கண்ணன்

இளையராஜா - எம்.எஸ்.வி

ஜிரா - கே.ஆர்.எஸ் ;)

கலக்கல் கூட்டணி...சூப்பரு ;)

கோபிநாத் said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா

குழலூதும் கண்ணனுக்கு MSV இசையமைச்ச பாட்டு!
அதை இப்போ வந்த சீனி கம் இந்திப் படத்துக்கு ராஜா யூஸ் பண்ணிக்கிட்டாருல்ல?

ச்சே என்ன பாட்டுப்பா அது? அமிதாப்பே பாடுவாரு! ஸ்ரேயா கோஷலும் பாடுவாங்க!
\\

தல

அதான் நீங்களே முதல் வரி சொல்லிட்டிங்களே..சீனி கம்..சீனி கம்ன்னு தான் தொடங்கும்...அதுக்கு மேல எனக்கு தெரியல ;)

Raghavan said...

ஜி. ரா அண்ணா, நீங்க சொன்ன, "தேவதாருவே காமதேனுவே" பாட்டு என்கிட்ட இருக்கு. எவ்வாறு
அனுப்பலாம் ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மெல்லிசை மன்னர்-இசை ஞானி இணைப்பிற்கு இன்னொருவரும் சப்தமில்லாமல் பின்னணியில் உதவியிருக்கிறார். அவர் இசைஞானிக்கே ஒரு காலத்தில் குருவாக இருந்த ஜி.கே.வெங்கடேஷ்.

இதே மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் இசை ஆசிரியராக வருவாரே அவர்தான்..

திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் கடைசி காலத்தில் திணறிக் கொண்டிருந்த வெங்கடேஷ் ஸார்தான் அக்காலக்கட்டத்தில் இசைஞானி இசையமைத்த திரைப்படங்களுக்கு பின்னணி இசை சேர்ப்புப் பணியில் ஈடுபடுவார். இதை குருவுக்கு செய்யும் ஒரு உதவியாக இசை ஞானி செய்து வந்தார்.

இருவரும் இணைந்து இசையமைத்தால் எப்படி இருக்கும் என்கின்ற இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் ஆசைக்கு முதலில் தூது போய் பேசியவர் வெங்கடேஷ் ஸார்தான் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Raghavan said...
"தேவதாருவே காமதேனுவே" பாட்டு என்கிட்ட இருக்கு. எவ்வாறு
அனுப்பலாம் ?//

ராகவன்,
shravan.ravi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்! பாட்டைப் பதிவாகவே இட்டு விடுகிறேன்!
அப்ப்டியே "அன்னையிலும் சிறந்த"-ன்னும் அதே கிருஷ்ண கானத்தில் ஒரு பாட்டு வரும்! அதுவும் இருக்காப்பா?

Kailashi said...

கண்ணன் பாடலில் சொக்காதவர் யார் . நானும் சொக்கிப் போனேன்.

சீக்கிரம் நூறாவது பாடலை வெளியிடுங்கள்.

ஜெய தேவரின் அஷ்டபதி பாடல் MS அம்மாவின் குரலில் தமிழ் உரையுடன் பதிவிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

இரண்டுமே அருமையான பாடல்கள்.

அதிலயும் பாவன குரு,

ம்ம்ம்ம் சூப்பர்.
ஆனால் இந்தப் படம் ஒரு சோகம். அமலாவின் கண்களை மறக்க முடியாது. அழகி.:)

வல்லிசிம்ஹன் said...

"ஈசம் ஆச்ரயே" இல்லை, கீதமாச்ரயே அப்படின்னு நினைக்கிறேன். யேசுதாஸ் பாடி கேட்டிருக்கிறேன்..எதுக்கும் சரிபாத்துக்குங்க...//
நானும் யேசுதாஸ் சார் பாடித்தான் கேட்டு இருக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

வல்லிமா, ஈசம்தான் சரி.

இதை இம்புட்டு நாள் பார்க்காம விட்டுட்டேனே....

இலவசக்கொத்தனார் said...

வந்த நேரத்தில் 50 அடிச்சுக்கறேன்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP