Friday, May 23, 2008

93. யேசுதாஸ் குரலில், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே!

பாடகர் யேசுதாஸ் பற்றியும் அவர் குரலில் குழைவு பற்றியும் பெரிதாக விளக்கித் தான் சொல்லவேண்டும் என்றில்லை! முருகன் பாடல்களில் எப்படி டி.எம்.எஸ் குழைவாரோ, அப்படிக் கண்ணன் பாடல்களில் யேசுதாஸ் குழைவார்!

பிரபந்தம், திருப்புகழ் போன்ற சில சந்தத் தமிழ் பாடல்களைப் பாடும் போது மட்டும் அவருக்கு உச்சரிப்பு கொஞ்சம் நாட்டியம் ஆடும்! :-)
மற்றபடி குருவாயூர் கண்ணனையும் உடுப்பி கண்ணனையும் யேசுதாஸ் அழைத்தால், கண்ணன் ஓடியே வந்திடுவான்!....கிருஷ்ணா நீ பேகனே...பாரோ!

நம்பூதிரிகள் வேண்டுமானால் அவரைத் தடுக்கலாம்! நம்புவோர் மனங்களில் தடுக்க இயலுமா? கண்ணன் மதங்களைக் கடந்து, மனங்களில் படர்வதை யார் தான் தடுக்க முடியும்?
இந்தப் பாடலைக் கேட்டு விட்டு, நீங்களே சொல்லுங்க! - சுவாமி ஐயப்பன் என்னும் படத்துக்காக, யேசுதாஸ் பாடுவது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய அழகிய இசைப்பாடல்!

ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஸ்ரீமன் நாராயணா என்று வரும்! அப்படியே யேசுதாஸ், பெருமாளிடம் டைரக்ட் லைன் போட்டுப் பேசுவது போலவே இருக்கும்! :-)

பாடலை இங்குக் கேட்கலாம்
இங்கே தரவிறக்கியும் கொள்ளலாம்!

SwamiAyyappan-Thir...
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்கு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்
அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ஸ்ரீமன் நாராயணா
ஸ்ரீபதி ஜெகன்னாதா
வருவாய் திருமாலே - துணை
தருவாய் பெருமாளே


படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
அடுத்த வாரம், கண்ணன் பாட்டில், கண்ணன் பாட்டு வலைப்பூ குழுவினர் அனைவரும் பங்கேற்கும் சிறப்புக் கச்சேரி! என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!
7 Runs to Century! :-)
Boys & Girls! Ready for Field Strategy! Get, Set, Go! :-)

9 comments :

மதுரையம்பதி said...

நல்ல பாடல்..ரொம்ப நாளாச்சு இதை கேட்டு....நினைவூட்டியமைக்கு நன்றி.

கண்ணன் வலைப்பூ மக்கள் எல்லோருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

ஷைலஜா said...

நம்பூதிரிகள் வேண்டுமானால் அவரைத் தடுக்கலாம்! நம்புவோர் மனங்களில் தடுக்க இயலுமா? கண்ணன் மதங்களைக் கடந்து, மனங்களில் படர்வதை யார் தான் தடுக்க முடியும்///

>>>>அதானே? 100%உண்மையாச்சே?

//அடுத்த வாரம், கண்ணன் பாட்டில், கண்ணன் பாட்டு வலைப்பூ குழுவினர் அனைவரும் பங்கேற்கும் சிறப்புக் கச்சேரி! என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!//

>>ஓ அப்படியா?:)

கவிநயா said...

நல்ல பாட்டு. ரொம்ப நாளாச்சு கேட்டு... இட்டதற்கு நன்றி கண்ணா.

//அடுத்த வாரம், கண்ணன் பாட்டில், கண்ணன் பாட்டு வலைப்பூ குழுவினர் அனைவரும் பங்கேற்கும் சிறப்புக் கச்சேரி! என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!//

எனக்கு தெரியாது :(

ச்சின்னப் பையன் said...

வாவ்! சூப்பர் பாட்டு. மறுபடி கேட்கவைத்ததற்கு நன்றி...

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by the author.
தி. ரா. ச.(T.R.C.) said...

மனதை இளக வைக்கும் பாடல் கேஆர்ஸ். பெருமாளே எழுந்து வந்திருவார் போல இருக்கு1 ஆனால் நம்ப பெருமாள் இன்னும் வரலையே?

Anonymous said...

யேசுதாஸ் கண்ணன் பாட்டு பாட கேக்க நாம எல்லாம் குடுத்து வச்சிருக்கணுமே. அப்படியே ஒரு பொழுதாகிலும் காணாமலாகாதே, குருவாயூரப்பா உன் எழில் வடிவம்' பாட்டு கிடைச்சா அதையும் போடுங்க

மதுரையம்பதி said...

/ஆனால் நம்ப பெருமாள் இன்னும் வரலையே?//

யார் உங்க பெருமாளுன்னு கொஞ்சம் தெளிவுபடுத்துங்க திரச...

G.Ragavan said...

இந்தப் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர் இல்லை. மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் மாஸ்டர் என்று நினைக்கிறேன். ஆனால் உறுதியாக மெல்லிசை மன்னர் கிடையாது.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP