கண்ணம்மா எனது குலதெய்வம்
ராகம் - புன்னாக வராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !
சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !
சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்)
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்)
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்)
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக ! (நின்)
கண்ணம்மா எனது குலதெய்வம் |
காரைக்குறிச்சி பி.அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசை.
18 comments :
நாதஸ்வரம் மயக்குகிறது, கண்ணம்மாவைப் போலவே. படமும் கொள்ளை அழகு.
நன்றி ராதா.
வழிமொழிகிறேன். :-)
எம்பெருமானே,
எனக்குயிர் குடுத்த எந்தை
என் அப்பா!
உன்னை மார்கழியில் இங்கு கண்டேன்! அங்கும் காண்பேன்!!
அல்லிக் கேணி ஆளும் ஆணழகா!
ராஜ கம்பீர நாடாளும் நாயகா!
நெடிது உயர்ந்து நிற்கும் வான மா மலையே!
உன் வென்றி வில்லும் வாளும் தண்டும்
சங்கோடு சக்கரமும்
இன்று வந்து என் கண்ணுள் நீங்காது!
என் நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!
உன் கோல நீள் கொடி மூக்கும்
தாமரைக் கண்ணும்
கனி வாயும்
நீல மேனியும்
நான்கு தோளும்
ஐய்யோ......வந்து என் நெஞ்சம் நிறைந்ததுவே!
@Radha: Thanks soo much!!!
Abroad and away from Thiruvallikeni now, the picture was amazing!!! :))
btw, ippo enna kaapu saathi iruppadhaal andha azhagaana meesai is hidden from everyone!!!
So, psp rest edukkatum!! After that...back to ogling!:)
@KRS: //உன் வென்றி வில்லும் வாளும் தண்டும்
சங்கோடு சக்கரமும்//
"சக்கரமும்" ???
! !
0-0
கவிநயா அக்கா & குமரன்,
இந்த நாதஸ்வரம் உங்களை மயக்காவிடில் மிகவும் ஆச்சர்யப்பட்டு இருப்பேன். எனக்கு கேட்ட முதல் தரமே "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !" என்று தான் தோன்றியது. கிட்டதிட்ட கண்களில் நீர் கோர்த்துவிட்டது...
இது ஐம்பது வருட முந்திய ரெக்கார்டிங்க்(1961). திரு.காரைக்குறிச்சி பி. அருணாச்சலம் அவர்களுக்கும் ஆல் இந்திய ரேடியோவிற்கும் நாம் நன்றி கடன்பட்டுள்ளோம். :-)
என்னிடம் ஒரு அழகான ராமர் பட்டாபிஷேகப் படம் ஒன்று உள்ளது. அதை இந்த நாதஸ்வர பின்னனியில் வலையேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்...கன்னையா தனக்கு என்று வாங்கிக் கொண்டான். :-)
//உன்னை மார்கழியில் இங்கு கண்டேன்! அங்கும் காண்பேன்!! //
இந்தியா வருகை ??
@ilwk,
no mention. :-) i am eagerly waiting for dec 31 to see brindavana krishna...the killer beauty sans moustache and ornaments... :-)
ராஜேஷ்,
என்ன சொல்கிறீர்கள் என்று சரியாகப் புரியவில்லை. இது ராதாவின் பதிவு என்பதால் "மிக அருமையாக இருக்கிறது" என்று பொருள் கொள்ளப்படுகிறது. :-) நன்றி. ;-)
அருமை.
//no mention. :-) i am eagerly waiting for dec 31 to see brindavana krishna...the killer beauty sans moustache and ornaments... :-)//
@Radha : :))
Same here...should be back in India by that time :) (by Gods grace)
btw, that is around the time He starts looking more like a "boy" than a "man"- cant wait! :D
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !" என்று தான் தோன்றியது.
DITTO!
Will u pl.upload following old tamil film song on Krishna.
Muralidhara hare Mohana Krishna,En kurai kelada hare Gokula Krishna
Srinivasan.g
நாதம் மனசை நிறைக்கிறது பாடல் படம் அனைத்தும் அருமை ராதா.(பார்த்தசாரதி கோயிலுக்கு உங்கமூவருடன் போனது நினைவுக்கு வந்தது!)
Dear Srinivsan Sir,
Do you mean this
old song ?
ரத்னவேல் சார், ஷைலஜா அக்கா,
பாடல்/இசை உங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.