Saturday, December 31, 2011

அன்புடன் ஒன்றாய் நாமும் யமுனைக்கரையில் சந்திப்போமே!

ஓ கிருஷ்ணா...

என்னாசை இராதா..
என்னன்பு இராதா...
என்றென்றும் நீயே என் ஜீவன் தானே...
கண்ணன் அழைக்கின்றேனே யமுனைக்கரைக்கு வா நீ...
என்னாசை கண்ணா...
என்னன்பு கண்ணா...
என்றென்றும் நீயே என் உயிர் கண்ணா...
இராதை அழைக்கின்றேனே யமுனைக்கரைக்கு வா நீ...
ஓ இராதா....
ஓ கிருஷ்ணா...
ஆதவன் நீ என்றால் ஒளிக்கதிர் நான் தானே...
விண்மீன்கள் நீ என்றால் முழுமதி நானே...
நம் வாழ்வின் இனிமேல் என்றும் ஆனந்தம் தானே...
(என்னாசை கண்ணா)
 
ஏழேழு ஜன்மமுமாய் உனக்கென்றும் நான் தானே...
என் வாழ்வில் எது வந்தாலும் எந்தன் துணை நீயே...

உன்னை விட்டு நானும் நொடியும் பிரிந்தே வாழ்ந்திட மாட்டேன்...
என்னாசை இராதா...
என்னன்பு இராதா...
என்றென்றும் நீயே என் தெய்வம் தானே...
அன்புடன் ஒன்றாய் நாமும் யமுனைக்கரையில் சந்திப்போமே! ஓ இராதா...
ஓ கிருஷ்ணா...

5 comments:

Rathnavel said...

அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கவிநயா said...

க்யூட் :)

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள், குமரன்!

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Radha said...

:-)
happy new year to everyone !

Post a Comment

கண்ணன் பாட்டில் தோன்றிய காணொளிகள்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP