Wednesday, November 30, 2011

ரங்கா, கிருஷ்ணா - எனக்கு எதுவுமே தெரியாதுப்பா!



* ராமாயணம், பாரதம், பாகவதம் இப்படி எல்லாவற்றிலுமிருந்தும் சிறந்த பக்தர்களை மேற்கோள் காட்டி தாசர் பாடும் பாடல்.

* தியானம், காதல், பக்தி, நட்பு, பாட்டு இப்படி பல்வேறு விதங்களில் இறைவனை பக்தி செய்த பக்தர்களின் சிறப்புகளை பற்றி பாடும் பாடல்.

* அப்படி இந்த பக்தர்களுக்குத் தெரிந்த எதுவுமே எனக்கு தெரியாது. ஆனாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன். என்னை காப்பாற்று என்று ரங்கனை ஸ்ரீ புரந்தரதாசர் பாடும் பாடல்.

* இவ்வளவு விதமாக அந்த கிருஷ்ணனை வணங்கி வழிபடலாமென்று நமக்கு எடுத்துரைக்கும் பாடல்.

* தாயின் அன்பு, மனைவியின் காதல் - ஆகிய உணர்சிகளை வெகு அழகாக காட்டும் பாடல்.

* பக்தி மார்க்கத்தில் மிக மிக உன்னதமான நிலையை அடைந்த ஸ்ரீ புரந்ததாசரின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இந்த பாடலை குறிப்பிட்டு சொல்வார்கள்.

* ஸ்ரீ புரந்தரதாசர் எந்த அளவுக்கு இதை பக்தியுடன் படைத்துள்ளாரோ, அதற்கு சற்றும் குறையாத அளவில் (தவறாக ஒப்பிட்டிருந்தால் மன்னிக்க) நம் பீமண்ணர் பாடியுள்ளார் என்பதை, கீழேயுள்ள காணொளியை சொடுக்கி, கேட்டு,  அனுபவியுங்கள்.

* தாசர் இறைவனிடம் கேட்பது என்ன? பொன்னோ பொருளோ அல்ல. அப்புறம்? கீழே பாட்டில் இருக்கு. வாங்க பார்க்கலாம்.

***

கருணிசோ ரங்கா கருணிசோ

ஹகலு இருளு நின்னா
ஸ்மரணே மரெயேதந்தே (கருணிசோ)

அருள் செய்வாய், ரங்கா, அருள் செய்வாய்

பகலும் இரவும் உந்தன்
நினைவு மறக்காதிருக்க (கருணிசோ)


ருக்குமாங்கதனந்தே வ்ரதவ நானறியேனோ
சுகமுனியந்தே ஸ்துதிசலுஅறியே
பகவைரியந்தே த்யானவ மாடலறியே
தேவகியந்தே முத்திசலறீயேனோ ரங்கா (கருணிசோ)

ருக்குமாங்கதனைப் போல் விரதங்களை கடைப்பிடிக்க எனக்குத் தெரியாது
சுக முனிவரைப் போல் ஸ்லோகங்களைச் சொல்லி துதி செய்யத் தெரியாது
பகாசுரனின் பகைவன் [பீமன்] போல் தியானம் செய்யத் தெரியாது
தேவகியைப் போல் உன்னை கொஞ்ச தெரியாது (கருணிசோ)


கருடனன்ததி பொத்து திருகலு அறியே
கரெயலு அறியே கரிராஜனந்தே
வரகபியந்தே தாச்யவ மாடலறியே
சிரியந்தே நெரெது மோஹிசலறியேனு கிருஷ்ணா (கருணிசோ)

கருடனைப் போல் [என்] தோளில் [உன்னை] சுமந்து வரத் தெரியாது
கரிராஜன் [ஆதிமூலம் - யானை] போல் உன்னை கூப்பிடவும் தெரியாது
வரகபி [ஆஞ்சநேயர்] போல் உனக்கு சேவை செய்யவும் தெரியாது
ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் போல் உன் மேல் காதல் செய்யவும் தெரியாது கிருஷ்ணா (கருணிசோ)


பலியந்தே தானவ கொடலு அறியேனு
பக்தி சலவனு அறியே ப்ரஹ்லாதனந்தே
ஒலிசலு அறியே அர்ஜுனனந்தே சகனாகி
சலஹோ தேவர தேவா
புரந்தரவிட்டலா ஸ்ரீ (கருணிசோ)

பலிச் சக்கரவர்த்தியைப் போல் தானம் கொடுக்கத் தெரியாது
பிரகலாதனைப் போல் திடமான பக்தி செய்யவும் தெரியாது
அர்ஜுனனைப் போல் உன் மேல் நட்பு பாராட்டவும் தெரியாது
என்னை காப்பாற்று இறைவனின் இறைவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே (கருணிசோ)


***



***

கருணிசோ ரங்கா கருணிசோ

***

13 comments :

sury siva said...

பீம்சென் ஜோஷியின் பக்தி பரவசத்தைக் கண்டு மெய் சிலிர்த்தேன்.
பீமண்ணா என்று அன்புடன் அழைத்தது மட்டுமல்ல, பாட்டில் கீழே இருக்கிறது என்று சொன்னபொழுது
மயங்கி இது என்னவோ என குழம்பிய நான், உண்மையில் பாட்டைக் கேட்டபின் பாண்டு ரங்கனின்
பக்தியில் மதி மயங்கினேன் என்பது நிஜம்.

நீங்கள் சின்னப் பையனா !!
இல்லை !!
பெரிய பையன்.
பெரியாழ்வாருக்குச் சின்னப்பையன்.

சுப்பு ரத்தினம்
http://mymaamiyaarsongs.blogspot.com

Kavinaya said...

//ரங்கா, கிருஷ்ணா - எனக்கு எதுவுமே தெரியாதுப்பா!//

எனக்கும்தான்! அழகான பாடல்; பகிர்வு. மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

omg! பீம்சென் ஜோஷி கலக்கி இருக்காரு!
பாட்டை (தாசநாமாவை) இட்டமைக்கு நன்றி ச்சின்னப்பையரே!

தியாகராக கீர்த்தனையில், கடைசி பஞ்ச ரத்தினமான, எந்தரோ மகானுபாவுலு-வில், இதே போல பல பக்தர்களை வரிசையாகச் சொல்லுவாரு தியாகராஜர்! அதே போல்...இந்த தாசநாமா-வைக் கண்டு/கேட்டு அளவிலா ஆனந்தம் அடைந்தேன்! நன்றி!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தாசநாமா-வின் அதே மெட்டில்...நம் தமிழினிலே...

கருணிசோ ரங்கா கருணிசோ
= கருணைசெய் அரங்கா...கருணைசெய்
----------

ஹகலு இருளு நின்னா
ஸ்மரணே மரெயேதந்தே
(கருணிசோ)

அல்லும் பகலுமே உந்தன்
நினைவால் மறவா நினைப்பே
(கருணைசெய்)
----------

விரதமிருக்க நான் ருக்மாங்கதனோ?
விண்ணப்பிக்க நான் சுகமுனியோ?
அத்தவம் செய்திட நான்-அடல் பீமனோ?
முத்தங்கள் கொடுக்கநான் தேவகியோ?
(கருணைசெய் அரங்கா...கருணைசெய்)
----------

உன்னையே சுமந்திட நானொரு கருடனோ?
உருகியே அழைக்கநான் கஜேந்திரனோ?
திருவடி பற்றிட நானொரு அனுமனோ?
திகழ்ந்திட நானொரு திருமகளோ?
(கருணைசெய் அரங்கா...கருணைசெய்)
----------

தானங்கள் தந்திட நானொரு பலியோ?
பிறழாதிருக்க நான் பிரகலாதனோ?
நட்புடன் பழகிட நானொரு பார்த்தனோ?
நானில நாதா புரந்தர விட்டலா
(கருணைசெய் அரங்கா...கருணைசெய்)
----------

சின்னப் பையன் said...

நன்றி சுப்பு ரத்தினம் -> 'பீமண்ணர்' அல்லது 'பீமண்ணவர்' - கர்நாடக, மகாராஷ்டிர மக்கள் அவரை எப்போதும் அன்பாக விளிப்பது இப்படியே. தாசர் பாடல்கள் பாடி அவர் செய்த சேவை மகத்தானது.

நன்றி கவிநயா.

KRS -> அதே மெட்டில் மிக அருமையா வந்துள்ளது. வழக்கம்போல். :-) அனைத்தும் அந்த புரந்தர விட்டலனுக்கே சமர்ப்பணம்.

ஷைலஜா said...

//அப்படி இந்த பக்தர்களுக்குத் தெரிந்த எதுவுமே எனக்கு தெரியாது. ஆனாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன். என்னை காப்பாற்று என்று ரங்கனை ஸ்ரீ புரந்தரதாசர் பாடும் பாடல்///

ஆஹா எத்தனை அருமையான பாடல்! அளித்தமைக்கு நன்றி /

அப்புறம் கேஆர் எஸ்..


”ஹகலு இருளு நின்னா
ஸ்மரணே மரெயேதந்தே
(கருணிசோ)

அல்லும் பகலுமே உந்தன்
நினைவால் மறவா நினைப்பே
(கருணைசெய்)”
ஹகலு என்றால் பகல்
ஆனா உங்க அர்த்தம் பொருத்தமா இருக்கு ம்ம் கன்னடத்தில(யும்) கலக்கறீங்க!!!(முறைக்காதீங்க கண்ணன் பாட்டுல ரொம்பநாளா வரலேன்னு மார்கழிக்கு இந்த மாதின் பங்கு உண்டு கண்டிப்பா:):)

S.Muruganandam said...

அருமையான ஒரு பாடல், பதிவுக்கு நன்றி ச்சின்னப்பையன் ஐயா.

sury siva said...

Youtube

please look here

subbu rathinam
http://menakasury.blogspot.com

Lalitha Mittal said...

''கருணிசோ ரங்கா கருணிசோ''

Sankar said...

அருமையான பாடல், பதிவுக்கு நன்றி.. :) :)

In Love With Krishna said...

This song is soo beautiful...i have no words for how it strikes a chord almost instantly.
Simply Breathtaking!!!
Tnx for sharing :)

naveenam govindarajan said...

Nice song. Thanks for sharing and the meaning of the song.

Radha said...

அழகான பாடல். நன்றி சின்னப் பையன் ஐயா !

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP