Tuesday, September 27, 2011

9ராத்திரி-01: காத்திருப்பான் கமலக் கண்ணன்!

உத்தம புத்திரன் என்ற படத்தில் இந்தப் பாட்டு மிகவும் பிரபலம்;
பி.லீலா அவர்கள் பாடுவார்கள்! அழகான நாட்டியமும், இசையும் சேர்ந்து இதை ஒரு கடந்த கால வசந்தம் ஆக்கி விட்டது!

sringara-lila

வேடிக்கையாய்ச் செய்வான்
அலங்காரம்
playing-vina
வீணைஇசைக்கச் சொல்லி
வேண்டுவான் - சிலநேரம்


காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!

கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்


ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென்மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்


கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்


தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்


வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்


பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் - வந்து


காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் !



வரிகள்: சுந்தர வாத்தியார்
குரல்: பி.லீலா
இசை: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன்

13 comments :

குமரன் (Kumaran) said...

எத்தனை கேட்டாலும் திகட்டாத பாடல். அதனால் தான் மீண்டும் மீண்டும் இங்கே இந்தப் பாட்டு வருகிறது போல. :-)

Lalitha Mittal said...

எல்லோரும் தன் தங்கையின் வெற்றித்திருநாள் கொண்டாடிவிட்டு
வருவார்கள் என்று காத்திருந்தான் கமலக்கண்ணன்;வந்துவிட்டோம்!
OLD IS GOLD! எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு!நன்றி KRS!

Lalitha Mittal said...

இன்று வேதாந்த தேசிகர் பற்றி பதிவு இருக்கும் என்று ஆவலுடன் வந்தேன்:((

In Love With Krishna said...

@KRS: i have never heard this song!
Ippa kooda unga post full-aa read pannala!
The first two pics that u have posted forced me to comment first-they were so good!!
engedhu pidicheenga indha pics?? :)

In Love With Krishna said...

//கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்//

btw...today thiruvonam..i came expecting the Lord of Seven Hills?? :(

கே. பி. ஜனா... said...

எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று...

ஸ்ரீராம். said...

அருமையான பாடல்.

இராஜராஜேஸ்வரி said...

அமுதகானப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

இதே படத்தில் வரும் 'முல்லை மலர் மேலே' கானடா பேஸ். இந்தப் பாடல் என்ன ராகம். கரகரப்ப்ரியா?

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

Lalitha Mittal said...

'கண்ணன் பாட்டு' குழுவினருக்கும் , கண்ணன் அன்பர்களுக்கும் என் இனிய

தீபாவளி வாழ்த்துக்கள்!

sakthi said...

என்னவன் கோகுல கண்ணன் அவன் மேல் உங்களுக்கும் தீராத காதலா !! அருமை

அன்புடன் ,
கோவை சக்தி

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். உங்களின் இன்னொரு தளத்தை போலவே இந்த தளமும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP