Monday, August 01, 2011

krs100: தோழி கோதை பிறந்தநாள்!

இன்று....

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)

உன்னோட கடைசிப் பாட்டு ரொம்ப தொல்லை குடுக்குதுடீ! வரவர தாங்க முடியல! நானும் உன்னைப் போலவே ஆயிருவேனோ-ன்னு பயமா இருக்கு! :(
இது கண்ணன் பாட்டிலே....KRS என்னும் சிறுவனின் 100வது இடுகையும் ஆகும்!
வாழ்விலே பல தருணங்கள், இவளை ஒட்டித் தான் எனக்கு அமைஞ்சிருக்கு!

* என் பிறந்த நாள் ஆகட்டும், வாழைப் பந்தல் கிராமத்துப் பள்ளிச் சேர்க்கை ஆகட்டும்,
* சென்னை திராவிடர் கழக வாசம் ஆகட்டும், TVS நிறுவன வேலை ஆகட்டும்,
* அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகட்டும், பந்தல் பதிவுகள் ஆகட்டும்....
* இனியது கேட்கின் ஆகட்டும்....எட்டாம் வகுப்பில் இவளைப் போலவே பெண் வேடமிட்டு, பள்ளியில் ஆடிய நடனப் புகைப்படம் ஆகட்டும்

...........ஒவ்வொன்றிலும் கோதையின் சாயல் வீசாம இருக்கவே இருக்காதோ? :)

இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!


வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!
ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!

சிங்கார வேலனே தேவா போல்.....ஜானகிக்கு அமைந்து விட்ட மிகப் பெரும் நல்லூழ் (அதிருஷ்டம்) என்று தான் சொல்லணும்!
ஏன்-ன்னா வேற யாரும் இதைச் சினிமாவில் முழுக்கப் பாடலை! ஏக்கம் இழையோடும் குரலில் கேட்டுக்கிட்டே பதிவை வாசியுங்கள்!


ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....கோயில் அரையர்கள் ஓதும் நடையில் இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!


நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!


** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே! அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!

** SPB, அதே கேளடி கண்மணியில் பாடுவது!

** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!

ஆண்டாள் கல்யாணத்துக்காக, ஷைலஜா அக்கா
பிரத்யேகமாக போட்டு அனுப்பிய, வண்ணக் கோலம் (தண்-மண்டலம்).

இவ்வளவு நாள், சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

* பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2042 (கர வருடம்), ஆடித் திங்கள் (Aug-02-2011), பூர நட்சத்திரம் கூடிய நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள் = திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாட்டுத் தலைவன், அமலன் ஆதிப் பிரான் = திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,

* ஆண்டாள்-அரங்கன் இன்னுயிர் இணைகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறு,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!



வாரணமாயிரம் பாசுரத்தில், "கனாக் கண்டேன்" என்னும் சொற்களை எழுத எனக்கு மனசு வரலை!

அவள் வாழ்க்கை வெறும் கனவு-ன்னு நினைச்சிப் பார்க்கக் கூட முடியலை! அதான் "கனாக் கண்டேன்" என்ற சொற்களை எழுதாமல்.....
அப்படியே நிகழ்வாகவே எழுதி விட்டேன்! பாசுரத்தில் கைவைத்து விட்டேன்-ன்னு தவறாக எண்ண வேண்டாம்! அன்பர்கள் மன்னிக்க!

பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!



வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்ட...


மத்தளம் கொட்ட, நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம், மாதவிப் பந்தல்கீழ்
மைத்துனன் முருகன், திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்ற...


இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன், எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்ட...

அவனுக்கே என்னை விதிக்கிற்றியே! - நாங்கடவா வண்ணமே நல்கு!!

18 comments :

Radha said...

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே !

Radha said...

கண்ணன் பாட்டில் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ! :-)))

In Love With Krishna said...

Thanks for the post! Tears in my eyes...

In Love With Krishna said...

U shud have seen Aandal yday...in psp koil ther..
she was wearing a yellow saree with green border...
yellow for psp and green for herself!!
while i thought she would defnitely be wearing green, she did this to show her Lord's fav colour is more important than her own! :)
Nethu appadi oru pragaasam Aandal mugathil...she was so happy...and the ther moved so fast...it wouldnt even stop at the difficult turninga (in my little experience, easiest to pull!)...appa dhaan purinjidhu..psp ellam chumma ooru suthuradhukaaga dhaan ther-kku varuvaar...but Aandal? ulle maalai maathanume ther mudinju?? so she was running!
ther nilaikku vandhadhukku apram, her face was dazzling!! Like a streak of sunlight that breaks through the dark night!
And then, when she came in front of psp....even the sun will become shy and disappear!! appadiye the brilliance on her face multiplied thousandfold...

In Love With Krishna said...

//மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள் = திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாட்டுத் தலைவன், அமலன் ஆதிப் பிரான் = திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,

* ஆண்டாள்-அரங்கன் இன்னுயிர் இணைகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறு,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.//
:))
//கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,//
is it actually possible krs?
"kannaara..."
kannu aaruma?
ekkam poguma?

In Love With Krishna said...

btw, @krs: keep your celebrations to a fixed limit...
manadhaala, kanaala, blog moolamaaga evvalavu venaalum kondaadikonga!
but...kothai per solli ice-cream ellam thineenga-na then i wont say anything..i'll ask kothai to take care of u!!!!

In Love With Krishna said...

//ஆண்டாள் கல்யாணத்துக்காக, ஷைலஜா அக்கா
பிரத்யேகமாக போட்டு அனுப்பிய, வண்ணக் கோலம் (தண்-மண்டலம்).//
super!!!
enakku solli thaangalen!
yday, aandal ther-adhuvuma enakku kolam kooda poda theriyala!! :((
all imported ignorance! :(

In Love With Krishna said...

@KRS:
//நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...//
explain?

Lalitha Mittal said...

ஒவ்வொரு வார்த்தையா வரி வரியா படித்து ரசித்து ருசித்து அனுபவித்தபடி வேறேதோ உலகத்துக்கு நான் சென்றுவிட்டநிலையில்,கடைசீயா பாத்தா திடீர்னு நம்ம'வள்ளியமுதன்'!!

அதுவும் அவளது மென் விரலுக்கு பொன்மெட்டி போடக் கால் பிடித்தபடி!!

"என்ன பார்வை உந்தன் பார்வை?''என்று என்னைக்கூட பாட வைத்துவிட்டான்!!

Kavinaya said...

//கண்ணன் பாட்டில் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ! :-)))//

ரிப்பீட்டேய்!

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

//"என்ன பார்வை உந்தன் பார்வை?''என்று என்னைக்கூட பாட வைத்துவிட்டான்!!//

:)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் இரவி. நன்றிகளும்.

இராஜராஜேஸ்வரி said...

திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)//

எங்களுக்கும் உணர்வுப்பூர்வமான தெய்மாய் தோழியாய் விளங்குபவள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தமிழ் said...

இரவியின் செஞ்சுரிக்கு வாழ்த்துகள்!

கோதைக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகள்!

திரு ஆடிப்பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!
வண் புதுவைநகர்க் கோதை மலர்ப்பாதங்கள் வாழியே!

vijayan said...

"பெரும் பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே "இராமானுசன் போல் ஒரு அண்ணன் கிடைக்க கோதை என்ன புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

நாடி நாடி நரசிங்கா! said...

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday maa, Kothai! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தோழியை வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி! பைய வாரேன்! இப்போ கருப்பூரம் நாறுமோ, தித்திருக்குமோ Romance ஓடிக்கிட்டு இருக்கு :)

Sankar said...

@KRS: awesome one.. !! கண்கள் பனிக்க படித்து முடித்தேன்.. அவள் அரங்கனோட சென்ற பிறகு, ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்! செங்கண் மால் தான் கொண்டு போனான்னு, அவளோட அப்பா விம்மர்த நெனச்சா தான் இன்னும் வருத்தமா இருக்கு!

Its my try to express Kothai's feel.. KRS

பல்லவி :
கனா ஒன்று அதி காலை பந்தற் கால்கள் நாட்டிட - இழைக்
கோலமென்ன செங்காவிஎன்ன எங்கும் மங்களம் பொங்கிட..
கனா ஒன்று அதி காலை கண்டேன் மாலை மாலவன் மாற்றிட..
கனா ஒன்று அதி காலை கண்டேன் ஊஞ்சலில் ஒன்றாய் ஆடிட..

அநுபல்லவி :
கண்ணும் கண்ணும் குறுஞ்செய்தி பகிர்ந்திட ..
காலினால் கிள்ளி விஷமங்கள் செய்திட..
நாணிச் சிவந்தது மேனி..
கனா ஒன்று அதி காலை கண்டேன் மாங்கல்ய தாரணம் செய்திட..

சரணம் :
ஹோமாத்து புகையில் வியர்வை வழிந்திட
திடுமென தழுவ வந்தான்..
நலங்கினில் பிடித்த கைகள் நள்ளிரவு வரையில்
விட்டதென நினைவுமில்லை ..
காலையில் எழுந்தேன் கண்டதும் அதிர்ந்தேன் - என்
கண்ணனை காணவில்லை
கனவில் நடந்தது நாடகமென்று - நான்
நம்பவும் துணியவில்லை ..

கனா ஒன்று அதி காலை கண்டேன்
மாலை மாலவன் மாற்றிட...
ஊஞ்சலில் ஒன்றாய் ஆடிட..
மாங்கல்ய தாரணம் செய்திட..!!!

Anonymous said...

திருவரங்கம் அரங்கனை பிரதிஷ்டை செய்தது எப்படி அகத்தியர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்
இங்கே

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP