Thursday, August 04, 2011

எங்கெங்கும் என் கண்ணன்



கண்ணா கண்ணா என்றலைந்தேன்
கண்ணீராலே தினந் தொழுதேன்
கண்ணன் எங்கே என்றறியேன்
கண்ணால் காணும் வகையறியேன்

ஒரு நாள் கண்ணன் குழல் கேட்டேன்
குழல் வழியே அவன் குரல் கேட்டேன்
எங்கும் நானே இருக்கின்றேன்
ஏனோ கண்ணீர் எனச்சொன்னான்

காற்றாகி குழல் கலைக்கின்றான்
மழையாகி மனம் நனைக்கின்றான்
சேற்றிலும் அவனே இருக்கின்றான்
செந்தாம ரையாய் சிரிக்கின்றான்!

நேற்றாய் இன்றாய் நாளானான்
நாளும் பொழுதும் அவனானான்
கேட்கும் ஒலியில் இசையானான்
பார்க்கும் அனைத்தும் அவனானான்!

எங்கும் அவனாய் இருந்தாலும்
ஏக்கம் ஏனோ தீரவில்லை -

தொட்டுப் பிடித்து விளையாட
கட்டி யணைத்துக் கதை பேச
கணமும் என்னைப் பிரியாமல்
கண்ணுக்குள்ளே கண் பார்க்க...

எனக்கே எனக்காய் என்கண்ணன்
என்றன் முன்னே வருவானோ?
கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
தணியா இன்பம் தருவானோ?


--கவிநயா

27 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணுக்குள்ளே கண் பார்க்க...//

வெட்கமா இருக்கு, முருகா!:)

எனக்கே எனக்காய் என்முருகன்
என்றன் முன்னே வருவானோ?
கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
தணியா இன்பம் தருவானோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தணியா இன்பம் தருவானோ?//

தாகம்-ன்னா தணிய வேணாமா?
அது என்ன "தணியா" இன்பம்? ஒரு வேளை "தனியா" இன்பமோ? :)

ஆனாலும் எனக்குத் தணியா இன்பம் தான் வேணும்!
தணியனும், ஆனா தணியக் கூடாது!
நாளைக்கு மறுபடியும்...தணியனும், ஆனாத் தணியக் கூடாது!

முருகா, இந்தக் கவி-க்கா நான் நினைக்கிற மாதிரியெல்லாம் எழுதறாங்க! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பரிசு குடுப்போமா?:)

Radha said...

//கேட்கும் ஒலியில் இசையானான் //
எனக்கு மிகவும் பிடித்த வரி. :-)
ஏனெனில் இந்த ஒன்று தான் ஓரளவு அனுபவத்தில் உணர முடிகிறது.

In Love With Krishna said...

//தொட்டுப் பிடித்து விளையாட
கட்டி யணைத்துக் கதை பேச
கணமும் என்னைப் பிரியாமல்
கண்ணுக்குள்ளே கண் பார்க்க...//

My fav lines....my dear kanna, seekiram variya pls? :))

@kavi aunty: nethu kooda en friend kettaa...nee mattum olungo...bf-vf ellam kidaiyaadha-nnu...what to do?? psp is nt coming for dating!! how can i tell them??

oru velai unga kavithai kaamichu "ippo vareengla illaiya"-nnu ketta varuvaara psp??

In Love With Krishna said...

//எனக்கே எனக்கய் என்கண்ணன்
என்றன் முன்னே வருவானோ?
கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
தணியா இன்பம் தருவானோ?//

:)))

//எனக்கே எனக்காய் என்கண்ணன்//
@kavi aunty: indha line-ai suttuttaa kochipeengala??? :)

In Love With Krishna said...

@krs: //வெட்கமா இருக்கு, முருகா!:)//
@kavi aunty:
//தொட்டுப் பிடித்து விளையாட
கட்டி யணைத்துக் கதை பேச//

ungalukkaaga indha pic-ai dedicate panren (the first pic in that gallery):

http://allaboutkrishna.blogspot.com/2011/07/picture-says-it-all.html

Anonymous said...

siva arumaiyana kavithai i like very much

நாடி நாடி நரசிங்கா! said...

Nice ... Thanks:)

adithyasaravana said...

romba azhagaa irukku paattu...

/engum naanae irukkindraen
aeno kanneer ena sonnaan/

sari thaanae? aen kanneer?

திகழ் said...

அழகு

குமரன் (Kumaran) said...

Nice. :-)

பத்மநாபன் said...

பாட்டும் படமும் கொள்ளை அழகு....

Lalitha Mittal said...

பாட்டு பிரமாதம்!சுப்பு சாருக்காக [music] வெய்டிங்!

Radha said...

மீண்டும் படிக்கிறேன்...
நாயகி பாவம் என்றும் புரிந்ததில்லை. இன்றும் புரியவில்லை. :-)

Sankar said...

awesome poem akka.. sooper o sooper.. !! :)

Kavinaya said...

வருக கண்ணா.

உங்க முருகன் வருவான் :) ஆனா, எனக்கே எனக்காய் என் கண்ணன் வருவான் அப்படின்னு நீங்க சொல்லவே இல்லையே? :)

//தாகம்-ன்னா தணிய வேணாமா?
அது என்ன "தணியா" இன்பம்? ஒரு வேளை "தனியா" இன்பமோ? :)//

சரிதான். தாகம்னா தணியத்தான் வேணும். இன்பம் தணியத் தேவையில்லையே... :)

//முருகா, இந்தக் கவி-க்கா நான் நினைக்கிற மாதிரியெல்லாம் எழுதறாங்க! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பரிசு குடுப்போமா?:)//

எங்கே பரிசு? இன்னும் வரலை! :)

Kavinaya said...

//எனக்கு மிகவும் பிடித்த வரி. :-)
ஏனெனில் இந்த ஒன்று தான் ஓரளவு அனுபவத்தில் உணர முடிகிறது.//

நல்லது ராதா. நன்றி :)

//நாயகி பாவம் என்றும் புரிந்ததில்லை. இன்றும் புரியவில்லை. :-)//

ஹ்ம்... இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலையே... புரியும்போது அது ஒரு தனிச் சுகம்தான் :)

Kavinaya said...

//My fav lines....my dear kanna, seekiram variya pls? :))//

mine too :)

//oru velai unga kavithai kaamichu "ippo vareengla illaiya"-nnu ketta varuvaara psp??//

நிச்சயம் வருவான்! :)

////எனக்கே எனக்காய் என்கண்ணன்//
@kavi aunty: indha line-ai suttuttaa kochipeengala??? :)////

எனக்குமே ரொம்ப பிடிச்ச வரி. தானா வந்து விழும் வகைகளில் ஒன்று. ஆனா சுட்டுக்கறதுக்கு உங்களுக்கு special permission உண்டு :) just 'cos u r ILWK :)

மிக்க நன்றி கள்வனின் காதலி!

Kavinaya said...

//http://allaboutkrishna.blogspot.com/2011/07/picture-says-it-all.html//

கண்டு மகிழ்ந்தேன். பரிசுக்கு நன்றி கள்வனின் காதலி :)

Kavinaya said...

//arumaiyana kavithai i like very much//

மிக்க நன்றி அனானி!

Kavinaya said...

//Nice ... Thanks:)//

நன்றி ராஜேஷ்!

Kavinaya said...

///engum naanae irukkindraen
aeno kanneer ena sonnaan/

sari thaanae? aen kanneer?//

'ஏக்கம் ஏனோ தீரவில்லை' க்கு பிறகு இருக்கிற வரிகள்தான் இந்தக் கேள்விக்கான பதில் :)

//romba azhagaa irukku paattu...//

ரசித்தமைக்கு நன்றி, ஆதித்யசரவணா.

Kavinaya said...

//அழகு//

நன்றி திகழ்!

Kavinaya said...

//Nice. :-)//

நன்றி குமரா!

Kavinaya said...

//பாட்டும் படமும் கொள்ளை அழகு....//

மிக்க நன்றி பத்மநாபன்!

Kavinaya said...

//பாட்டு பிரமாதம்!//

மிக்க நன்றி லலிதாம்மா!

Kavinaya said...

//awesome poem akka.. sooper o sooper.. !! :)//

நன்றியோ நன்றி, சங்கர்! :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP